Monday, January 22, 2024

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

 உலக முதலீட்டாளர் மாநாடு 2024

அறிமுகம்

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது.

நோக்கங்கள்

  • தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக தரம் உயர்த்துதல்.

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளா்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்.

  • சீரான, பரவலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, ஈா்க்கப்பட்ட முதலீடுகள் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்தல். 


அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகள்

1.சிங்கப்பூர், 

2.கொரியா,

3. இங்கிலாந்து,

4. ஜப்பான்,

5. பிரான்ஸ்,

6. ஆஸ்திரேலியா, 

7.ஜெர்மனி, 

8.டென்மார்க் 

9.அமெரிக்கா 

மேற்கண்ட 9 பங்குதாரர் நாடுகள்மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த தொழில் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

சிறப்பம்சங்கள்

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. 

  • இதனால், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.



துறைவாரியான முதலீடுகள்

  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை - ரூ.63,573 கோடி

  • எரிசக்தித் துறை - ரூ.1 ,35,157 கோடி

  • வீட்டுவசதி - நகா்ப்புற வளா்ச்சித் துறை - ரூ.62,939 கோடி

  • கைத்தறி - ஜவுளித் துறை - ரூ.572 கோடி

  • தகவல் தொழில்நுட்பவியல் துறை - ரூ.22,130 கோடி

  • தொழில் துறை - ரூ.3, 79 ,809 கோடி

  • மொத்தம்: ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி.


கொள்கைகள்

  • தமிழ்நாடு குறைக் கடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024.

  • முதலீடுகளை ஈா்ப்பதற்காக, தனியாா் மற்றும் அரசுத் துறைகளின் நடைமுறைகளை இணைத்து பொது-தனியாா் கூட்டாண்மைக் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.

  • 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை. 



உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

  • இதன் மூலம்நேரடியாகவும், மறைமுகமாகவும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது. 

  • அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெ நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

  • அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500 கோடி

  • அம்புஜாசிமெண்ட் ரூ.3,500 கோடி

  • அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடி, 

  • டோட்டல் காஸ் & சிஎன்ஜி ரூ.1,568 கோடி என அதானி குழும நிறுவனம் மொத்தம் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

  • செம்பகார்ப் நிறுவனம் ரூ.37, 538 கோடி 

  • டாடா எலெக்ட் ரானிக்ஸ் ரூ.12,082 கோடி 

  • ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 12,000 கோடி. 

  • ஹூண்டாய் நிறுவனம் ரூ.6,180 கோடி

  • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி 

  • செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி 

  • பெகாட்ரான் ரூ.1,000 கோடி.

புரிந்துணா்வு ஒப்பந்த செயலாக்கக் குழு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.

இலக்கை விஞ்சிய முதலீடு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட ரூ. 1.14 லட்சம் கோடி கூடுதல் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 


இதர முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள்

  •  “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபட்டது. 

  • ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

  • 2021ஆண்டில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 27 தொழிற்சாலைகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.

  • மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

  • சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 










தேர்தல் சீர்திருத்தங்கள் 2024 Current Affairs

 தேர்தல் சீர்திருத்தங்கள் 



  1. 61 வது சட்ட திருத்தம் 1984 இன் படி வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது


  1. 1989 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் அல்லது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடலாம் என்ற விதி கொண்டுவரப்பட்டது


  1. 1993 முதல் இந்திய முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது


  1. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கடைகள் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மது விற்க விநியோகிக்க தடை செய்யப்பட்டது


  1. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும்


  1. வேட்பாளர் அவரது மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள் சொத்து விவரம் குறித்து தகவல் அளிக்க வேண்டும்


  1. 2017 ஆம் ஆண்டு வட்டி இல்லா பத்திரமாக ,தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்,2000 ரூபாய்க்கு மேல் வழங்கும் நன்கொடையாளர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.


  1. 2010 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


  1. 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது


  1. 2013 ஆம் ஆண்டு முதல் வாக்காளர் பதிவை இணைய வழி மூலம் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது.


  1. 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி தண்டனை பெற்ற நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் முன்பு போன்று மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.


  1. 2019 மக்களவை பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டது அதன்படி கருத்துக் கணிப்பு முடிவுகள் கடைசி கட்ட தேர்தல் முடிந்த பின்னர் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும்



நன்றி : Manorama Tamil Year Book 2024

Manorama Year Book 2024 Purchase Link  : Click Here




Sunday, January 7, 2024

தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024 - GKSHANKAR Current Affairs


தமிழ்நாடு தென்னை நார் கொள்கை 2024

 அறிமுகம் 

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024”- தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ஜனவரி 4, 2024 அன்று வெளியிடப்பட்டது. 

தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும்,தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி உறுதி செய்யும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

தென்னை நார் தொழில்துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் 3000 கோடி முதலீட்டை ஈர்த்தல்.

தென்னை நார் தொழில்துறையில் 60,000 வேலை வாய்ப்புகளை 2030-ம் ஆண்டிற்குள் உருவாக்குதல்.

 தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது.

தென்னை நார் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உற்பத்தி செய்தலை ஊக்குவித்தல்.

நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழிற் நிறுவன சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்தல்.

கூட்டு அணுகு முறையின் மூலம், இத்தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடைவதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்தல்.

 தென்னை நார் தொழில் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் முன்னிருத்தலை ஊக்குவித்தல்

உலகத் தரத்திலான மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் அமைத்தல். 

தென்னை நார் தொழிலில் நிலையான, சுற்றுச்சூழல் நட்புடன் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட நடைமுறைகளை மேம்படுத்துதல்.

சிறப்பம்சங்கள் 


முதலீட்டு ஈர்ப்பு:

ஒற்றைச் சாளர முறை மற்றும் தொழில் முதலீட்டாளர்க்கான உகந்த சூழ்நிலை ஆகியவற்றின் மூலம் தென்னை நார் சார்ந்த தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்புகளுடன் கூட்டாண்மைக்கான அடித்தளத்தை இந்தக் கொள்கை அமைக்கிறது. 

இம்முயற்சிகள் தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு புதிய வழிகளையும், உலகளாவிய அறிதல் ஆகியவற்றை முன்னெடுக்கும்.

 தென்னை நார் சார்ந்த தொழில் துறையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இந்தக் கொள்கையின் மூலம் அடைய இயலும்.

சிறப்பு மையங்கள்:

 தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமான சிறப்பு மையங்களை உருவாக்குவது தென்னை நார் கொள்கையின் நோக்கமாகும். 

இம்மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் மண்ணில்லா வளர்ப்பு ஊடக பயன்பாடு, புத்தொழில்கள் மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடு, தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.


 சந்தை விரிவாக்கம்:

உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும். 

உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளுக்காக தென்னை நார் சார்ந்த நிறுவனங்கள் வர்த்தக் கண்காட்சிகளில் பங்கு பெறுவதை உறுதி செய்தல்.

சமச்சீர் தொழில்மயமாக்கல், சமூக சமபங்கு, சுழற் பொருளாதார நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏற்றுமதி வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசு திட்டங்களில் புவி விரிப்பு போர்வை (Geo Textiles) போன்ற தென்னை நார் பொருட்களின் பங்களிப்பின் வாயிலாக சந்தை விரிவாக்கத்தை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.


 உள்கட்டமைப்பு மேம்பாடு:

தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கிட கிடங்குகளை நிறுவுதல் மற்றும் குழும மேம்பாடு ஆகியவை தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும்.


 போட்டித்தன்மை மற்றும் தரக்கட்டுப்பாடு:

தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துதல், மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதி வணிக மேம்பாட்டிற்கான கருத்துப்பட்டறைகள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் மேம்படுத்தப்பட்ட போட்டித்தன்மையை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது.

 ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக மேம்படுத்த இக்கொள்கை வழிவகுக்கும்.

தென்னை நார் தொழில் துறை

தமிழ்நாட்டில் சுமார் 4.46 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டர் பரப்பளவில் 10,484 தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தென்னை நார் தொழில்துறையில் 5,331 கோடி மொத்தம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னை நார் தொழில்துறையின் நிகர மதிப்பு 5368 கோடி ஆகும்.

தென்னை நார் தொழில் துறையின் ஏற்றுமதி மதிப்பு 20186 கோடி ஆகும்.

தேசிய தென்னை நார் வாரியம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு தென்னை நார் தொழில் மேம்பாட்டு கழகம் ஆகஸ்ட் 5, 2022 இல் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.


முடிவுரை

“தென்னை நார் கொள்கை 2024”-கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தினை அதிகரித்தல் புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம் புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது




Tuesday, August 29, 2023

August Month GKS Current Affairs Purchase

 All the Newspaper cuts and the Current Affairs Pdf of August 2023 can be Purchased from here .,

Do make the Payment and then Share the Purchase Bill to our Whatsapp number 7358910548.


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...