Sunday, May 29, 2022

Current Affairs 2022 - May 29 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ,இதைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது ?

அ) 31
ஆ)13
இ) 20
 ஈ) 25

2. இந்தியாவின் எந்த மாநில அரசு நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளது ?

அ) பிகார்
ஆ) தமிழ்நாடு
இ) ஆந்திர பிரதேசம்
ஈ) குஜராத்

3. அண்மையில் ஒரே நாடு ஒரு மருத்துவ நடைமுறை என்ற தலைப்பிலான மாநாடு எங்கு நடைபெற்றது ?

அ) மத்திய பிரதேசம்
ஆ) உத்தர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத்

4. 75 வது சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கண் விருது
பெற்ற இந்திய இயக்குநர் யார் ?

அ) அக்னியெஸ்கா 
ஆ) நதீம்
இ) மந்தாஸ் குவேதரவிசி 
ஈ) ஷௌனக் சென்

5. இந்தியாவில் எங்கு நாட்டின் முதல் லாவெண்டர் திருவிழாவை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்துள்ளார் ? 

அ) ஜம்மு காஷ்மீர் 
ஆ) உத்தர கரண்ட்
இ) ராஜஸ்தான்
ஈ) கேரளா

6. இங்கிலாந்தின் முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி யார் ?

அ) கிரேசியா ராம்
ஆ) ஜூலி பிரிட்னி
இ) மொஹிந்தர் கே மிதா 
ஈ) கென்யா பிரிட்டி 

7. சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய மொழி எழுத்தாளர் யார் ? 

அ) டெய்சி ராக்வெல்
ஆ) ரத்தினா பிரியா
இ) தரேகா ராவ்
ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

விடைகளும் / விளக்கமும்

1. (இ) 20

¤ தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 .
¤ 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்புகள் திருத்தச் சட்டம் 2022 விரைவில் அமல்படுத்தப்பட்டள்ளது.
¤ இதற்கான புதிய விதிகள் (ம) துணை விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து நகராட்சி நிர்வாக ஆணையர் பி. பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

2. (அ) பிகார்

¤ பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய தங்க இருப்பு குறித்த ஆய்வுக்கு அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது .
¤ இந்த முதல்கட்ட ஆய்வுக்கென மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளுடன் ஒரு மாத காலத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

3. (அ) மத்திய பிரதேசம்

¤ போபால், மத்திய பிரதேசத்தில் ஆரோக்கிய பாரதி சார்பில் நடைபெற்றது.
¤ மாநாட்டில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
¤ உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்துவருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

4. (ஈ) ஷௌனக் சென்

¤ 75 வது சர்வதேச திரைப்பட விழா , கேன்ஸ் நகர், பிரான்ஸில் நடைபெற்றது .
¤ ஆல் தேட் பிரீத்ஸ் என்ற ஆவணப்படத்துக்காக தங்க கண் விருது வழங்கப்பட்டுள்ளது.
¤ படத்தின் கரு : தில்லியை சேர்ந்த நதீம் , சவூத் ஆகிய இரு சகோதரர்கள் புலம்பெயர்த்து வரும் பருந்து உள்ளிட்ட பறவைகளை காற்று மாசு பாட்டிலிருந்து பாதுகாப்பது ஆகும் .

5. (அ) ஜம்மு காஷ்மீர்

¤ தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாகும். தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாவை இந்தியாவின் ஊதா புரட்சியின் பிறப்பிடமாக அமைச்சர் விவரித்தார்.
¤ இறக்குமதி செய்யப்பட்ட நறுமண எண்ணெய்களிலிருந்து உள்நாட்டு ரகங்களுக்குச் செல்வதன் மூலம் உள்நாட்டு நறுமணப் பயிர் சார்ந்த வேளாண் பொருளாதாரத்தை ஆதரிப்பதே இந்த பணியின்
 நோக்கமாகும். ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிட்டத்தட்ட அனைத்து 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் சாகுபடி நடைமுறையில் உள்ளது.

6. (இ) மொஹிந்தர் கே மிதா 

¤  இங்கிலாந்தில் ஈலிங் நகரசபை மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய வம்சாளியை சேர்ந்த மொகிந்தர் மிதா இங்கிலாந்தில் எதிர்கட்சியாக செயல்படும் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். தற்போது ஈலிங் கவுன்சிலில் உள்ள டோர்மர் வெல்ஸ் வார்டில் துணை மேயராக இருக்கும் இவர், லண்டனில் கடந்த 5ம் தேதி நடந்த நகரசபை தேர்தலில் இக்கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
¤ இது குறித்து தொழிலாளர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ``கவுன்சிலர் மொகிந்தர் மிதா ஈலிங் நகரசபை மேயராக அடுத்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் வரும் 2022-23ம் ஆண்டில் மேயராக பொறுப்பேற்பார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

7. (ஈ) கீதாஞ்சலி ஸ்ரீ

¤ இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ இலக்கியத்திற்காக வழங்கப்படும் புகழ்வாய்ந்த சர்வதேச புக்கர் பரிசை வென்றுள்ளார். இதன்மூலம், சர்வதேச புக்கர் பரிசை வெல்லும் முதல் இந்திய மொழி எழுத்தாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
¤ அவரது நாவலான 'ரெட் சமாதி' (Ret Samadhi) என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டூம் ஆஃப் சாண்ட்'க்கு (Tomb of Sand) இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு குடும்பக் கதை இது. இந்நாவல், கணவர் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணைப் பின்தொடர்கிறது.
¤ 50,000 பவுண்ட் பரிசுத்தொகை அடங்கியது சர்வதேச புக்கர் பரிசாகும். இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தி மொழி புத்தகமும் இதுவேயாகும்.¤ "புக்கர் பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இதனை வெல்வேன் என நினைக்கவில்லை," என கீதாஞ்சலி ஸ்ரீ தெரிவித்துள்ளார். "இது பெரிய அங்கீகாரம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் பணிவாகவும் உணர்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, May 28, 2022

Current Affairs 2022 - May 28 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழகத்தில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தவர் யார் ?

அ) வெங்கையா நாயுடு 
ஆ) நரேந்திர மோடி
இ) சோனியா காந்தி
 ஈ) மு.க. ஸ்டாலின்

2. தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தனை நாட்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது ?

அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஆறு 

3. தமிழக காவல்துறை , தீயணைப்புத்துறை , சிறைத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த எத்தனை பேருக்கு பதக்கங்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது ?

அ) 313
ஆ) 275
இ) 322
 ஈ) 401

4. வங்கதேசம் உருவாவதற்கு காரணமான இந்தியா - பாகிஸ்தான் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது ?

அ) 1971
ஆ) 1994
இ) 1998
 ஈ) 1985

5. பாரத் ட்ரோன் மஹோத்சளவ் 2022 என்ற மிகப்பெரிய ட்ரோன் திருவிழா எங்க தொடங்கப்பட்டுள்ளது ?

அ) டெல்லி
ஆ) உத்தர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத்

6. தமிழகத்தில் எத்தனை மாவட்ட பழங்குடியின மக்களுக்கு ரூ.17 கோடியில் அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது ?

அ) 31
ஆ) 13
இ) 15
ஈ) 11

7. நாடு முழுவதும் கடந்த 2020 ல் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ள மாநிலம் எது ?

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திர பிரதேசம் 
இ) உத்தர பிரதேசம்
ஈ) கேரளா

8. அண்மையில் எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது ?

அ) அமெரிக்கா
ஆ) ஆப்பிரிக்கா
இ) இந்தியா
ஈ) ரஷ்யா

9. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா வென்றுள்ள இடம் ?

அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது

10. உலகம் முழுவதும் 20 நாடுகளில்
எத்தனை பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது ?

அ) 100
ஆ) 1000
இ) 200
ஈ) 2000

11. உலக மாதவிடாய் சுகாதார தினம் ( World Menstrual Hygiene Day ) 2022 ? 

அ) மே 26
ஆ) மே 27
இ) மே 29
ஈ) மே 28

விடைகள் : 

1. (அ) வெங்கையா நாயுடு

¤ துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
¤ சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
¤ சிலை மீஞ்சூரில் உள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
¤ ரூ. 1.56 கோடி செலவில் , 16 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அந்த சிலையை வைப்பதற்காக 12 அடி உயர பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

2. (ஈ) ஆறு

¤ ஆறு நாட்கள் :
ஜனவரி 26 - குடியரசு தினம்
மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்
மே 01 - உழைப்பாளர் தினம்
ஆகஸ்டு 15 - சுதந்திர தினம்
அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி
நவம்பர் 01 - உள்ளாட்சிகள் தினம் 

3. (இ) 322

¤ பதக்கங்கள் : 
குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள்
தமிழ்நாடு முதல்வர் பதக்கங்கள்
¤ பதக்கங்கள் வழங்கியவர் : முதல்வர் மு.க. ஸ்டாலின்.

4. (அ) 1971

¤ 1971, இந்தியா - பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டில் வைக்கப்பட்டிருந்த தலைகீழாக வைத்த அமர் ஜவான் சின்னமான துப்பாக்கி (ம) தலைக் கவசம் தேசிய போர் நினைவிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
¤ இந்தியா கேட்டில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் தேசிய போர் நினைவிடம் உள்ளது.

5. (அ) டெல்லி

¤ தில்லி , பிரகதி மைதானத்தில் இரண்டு நாள் நடைபெறவுள்ளது.
¤ தொடங்கி வைத்தவர் : பிரதமர் நரேந்திர மோடி.

6. (ஈ) 11

¤ 11 மாவட்டங்கள்: 
திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி.
¤ இதற்காக ரூ. 17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
¤ இந்த நிதியை கொண்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

7. (அ) தமிழ்நாடு 

¤ இந்தியாவில் 2020 ல் பதிவான சாலை விபத்துகள் என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் .
¤ மொத்தமாக : 3,66,138 சாலை விபத்துகள்.
¤ 1,20,806 பேர் பலி ; 3,48,279 பேர் காயமடைந்தவர்கள்.
¤ அதிக சாலை விபத்துகள் முதலிடம் - தமிழகம் (45,484).
¤ அதிக உயிரிழப்புகள் முதலிடம் - உத்தரபிரதேசம் (19,149).

8. (ஆ) ஆப்பிரிக்கா

¤ பெரு, ஆப்பிரிக்காவில் ஆஸாங்கரோ நகருக்கு 13 கி.மீ. தொலைவில் , 218 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
¤ ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9. (ஆ) இரண்டாவது

¤ ஆர். பிரக்ஞானந்தா , தமிழ்நாடு( 52 வது கிராண்ட்மாஸ்டர் , 2018 ).
¤ இறுதிச்சுற்றில் உலகின் 2 ஆம் நிலை வீரரான டிங்லிரென,சீனா இடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

10. (இ) 200

¤ அறிவிப்பு : உலக சுகாதார அமைப்பு.
¤ இந்த தீநுண்மி வேகமாக பரவும் வகையில் தன்னை உருமாற்றம் செய்ததாகத் தெரியவில்லை .
¤ தடுப்பூசி (ம) மருந்துகளே இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடும்.

11. (ஈ) மே 28

இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2022 ஆண்டுக்கான இந்த தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நடைமுறைகளை வழங்கவும் உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
¤ Theme : Making Menstruation a normal fact of life by 2030 .
  


பக்தி இயக்கங்கள் Tnpsc Notes

 பக்தி இயக்கங்கள்

அறிமுகம்



  • பிற பண்பாட்டு மரபுகளைப் போலவே, மதமும் தனித்து இருப்பதில்லை. நிலவும் சூழ்நிலைகளோடு தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் சமூக, ஆன்மிகத் தேவைகளை நிறைவு செய்கிறது.

  • நீண்ட பண்பாட்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் நாடான இந்தியாவில், மதங்கள் பல்வகைப்பட்ட மரபுகளோடு தொடர்பு கொண்டு வளர்ந்துள்ளன. ஆரிய மொழி பேசிய மக்களின் வருகையோடு இந்தியா வந்த வேத மதம் சிந்துநாகரிகத்தின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டது.

  • பொது ஆண்டுகளுக்கு முந்திய முதலாயிரமாண்டின் (கி.மு. 1000) இடைப்பகுதியில் சிந்துகங்கைச் சமவெளியில் பௌத்தம், சமணம் எனும் இரு மகத்தான மதங்கள் உருவாயின

  • இதைப் போலவே பொது ஆண்டின் முதலாயிரமாண்டின் இடைப்பகுதியில் நாட்டின் தென்பகுதியில் பக்தி இயக்கம் எனும் வடிவத்தில் ஓர் உன்னதமான சமயமரபு செழித்தோங்கியது

  • ஒருமதக் கோட்பாடான பக்தியின் பொருள் ஆழமான பற்றுடன் அனைத்துக்கும் மேலான இறைவனைச் சரணடைந்து முக்தி பெறுதலாகும்.

  • பகவத்கீதை போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது பக்திமார்க்கத்தைப் பற்றி பேசினாலும் இக்காலப் பகுதியில்தான் இவ்வியக்கம் வலுப்பெற்றது

  • இக்காலப் பகுதியில்தான் பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்கநெறி, கடவுள் மறுப்புக் கோட்பாடுகளுக்கு எதிராகவே இவ்வியக்கம் தோன்றியது என வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.

  • ஆதிசங்கரர் புறமதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்துமதத்திற்குஅத்வைதம்எனும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார். அது அறிவார்ந்தவர்களின் நிலையில் செல்வாக்குப் பெற்றது

  • புகழ்பெற்ற சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் கோட்பாட்டிற்கு ஒருவடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர்

  • இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 10ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது.

தமிழ் பக்திவாதம்

  • தென்னிந்தியாவில் தோன்றிய பிராந்திய அரசியல், சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்ட அரசுகள் நிறுவப்படுவதை அவசியமாக்கியது.

  • இத்தருணத்தில் மதம் மட்டுமே மக்களை ஒன்று கூட்டும் புள்ளியாக இருந்திருக்கிறது

  • தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சிப் பல்லவரும் தென்பகுதியில் மதுரைப் பாண்டியரும் அதிகாரமும் பொருளாதார வளமும் பெற்றிருந்த வணிகவர்க்கத்தால் தலைமையேற்கப்பட்ட மதம் சார்ந்த பக்தி இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்

  • உள்ளூர் கோவில் இவ்வியக்கத்தின் மையமாக மாறியது. பக்தி மக்களின் மனங்களை உணர்வுபூர்வமாகத் தொட்டு அவர்களை அணிதிரட்டும் கருவியானது.

  • பக்தி இயக்கத்தின் ஒருமதம் சார்ந்த இயக்கமாக இடைக்காலத் தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவைத்தது

  • தமிழ் பக்தி இயக்கத்தின் வலுவான அலை பொ..ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நாடு முழுதும் வீசியது.

  • நாயன்மார், ஆழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களே தமிழ் பக்தி இயக்கத்தின் அடிப்படையாகும்

  • இச்சைவ, வைணவ அடியார்கள் தங்கள் பாடல்களோடு இசையைக் கலந்து அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்தினர்

  • இவர்களுள் ஆண்டாள் போன்ற பெண் அடியாரும் அடங்குவர். ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். கவிஞர் காரைக்கால் அம்மையார் (திலகவதியார்), பாண்டிய அரசி மங்கையர்கரசியர் போன்றோர் பெண் நாயன்மார்கள் ஆவர்

  • பக்தி இயக்க அடியார்களால் மறு வடிவம் செய்யப்பட்ட சைவமும், வைணவமும் பௌத்த சமணம் தங்களுக்கு வலுவான சவாலாக அமைந்தன

  • சற்றே கூர்ந்து நோக்கினால் பக்தி இயக்கத்தின் தாக்கத்தை நாம் இன்றும் தமிழகத்தில் காணமுடியும்.

சான்றுகள்

  • தேவாரம், நாலாயிரத் திவ்வியபிரபந்தம், திருத்தொண்டர்தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப் பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும்

  • கோவில்களும் கோவில் கல்வெட்டுகளும் சுற்றுப் பிரகாரங்களிலுள்ள சிறிய சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் சான்றுகளாகப் பயன்படுகின்றன.

பக்தி எனும் கருத்தியல்

  • பக்தி என்னும் சொல் பல துணைப் பொருளைக் கொண்டது. சேவை, நம்பிக்கை, வழிபாடு, மதப்பற்று போன்ற பொருள்களை அது தருகின்றது

  • அதை மனித உணர்வுகளால், அழகியலால், மாறுபடும் எண்ணங்களால் வடிவமைக்கப்படும் சட்டமாகும்

  • பக்திப் பாடல்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளன

  • கடவுளிடம் பேரன்பு கொள்வதே முதலாவதும் முக்கியமானதுமாகும்

  • தெய்வீக அமைதியையும் முக்தியையும் அடையும் வழிகள் தங்களுக்கு மட்டுமே என்கிறவை தீகபிராமணிய மனப்பாங்கை எதிர்த்தல் இரண்டாவதாகும்

  • மூன்றாவது நேரடியாக பௌத்தத்தையும் சமணத்தையும் மதப்பற்று இல்லாதவர்கள் என வன்மையாகக் கண்டிப்பதாகும்.

தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்

அறிமுகம்

  • ஒருபழங்குடிச் சமூகம் நன்கு கட்டமைக்கப்பட்ட சமூகமாக மாற்றம் பெறும்பொழுதும் அதிகாரமிக்க முடியாட்சி முறையிலான நிர்வாக முறை உருவாக்கும் போதும் தனது அதிகாரத்தை நியாயப்படுத்திக் கொள்ள அதற்கு ஏதாவது ஒரு மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.

  • பௌத்தமும் சமணமும் பெரும்பாலும் வணிக வர்க்கத்தினால் ஆதரிக்கப்பட்டன. அரசுகளும் அவற்றை ஆதரித்தின.

  • பக்தி இயக்கம் நிலவுடைமைச் சாதிகளிடையேயிருந்து தோன்றியதால் அது பௌத்தத்தையும் சமணத்தையும் விமர்சனம் செய்தது. இதன் விளைவாக அரசர்களின் ஆதரவைப் பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன.

 ஆழ்வார்கள்

  • ஆழ்வார்கள், வைணவப் பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்வியபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.

  • நாதமுனி திருவரங்கம் ரங்கநாதர்கோவிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர்.

  • ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியமன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார்.

  • கண்ணனின் குழந்தைப் பருவமே அவருடைய பாடல்களின் கருவாயிருந்தது. ஆண்டாள் பாடல்களின் பாட்டுடைத் தலைவனும் கண்ணனே. ஆண்டாளின் பாடல்கள் அவர் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன.

  • நம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர்.

  • திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை.

  • பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைணவப் பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய விளக்கவுரைகள் எழுதப்பட்டன.

நாயன்மார்கள்

  • சைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர்(அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.

  • தேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள்        சம்பந்தர் (1-3) அப்பர் (4-6) சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும்.

  • சேக்கிழாரின் பெரியபுராணம் என்பது சைவ நியதிகளின் பன்னிரண்டாவது திருமுறை ஆகும். இது அறுபத்து மூன்று நயன்மர்களின் ஒரு சுயசரிதை ஆகும், ஆனால் வரலாற்று தகவல்களின் அடித்தளமும் உள்ளது.

  • 12 புத்தகங்களின் இந்த தொகுப்புக்கு பன்னிருதிருமுறை என்று பெயரிடப்பட்டுள்ளது. பெரியபுராணம் நயன்மார்கள் பற்றிய பல கதைகளையும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான அத்தியாயங்களையும் தொடர்புபடுத்துகிறது.

தாக்கம்

  • பக்தி இயக்கம் மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டமாக பல கோவில்கள் நிறுவப்பட்டன. அக்கோவில்கள் தமிழ் நிலப்பரப்பில் பிரதான இடத்தை வகித்தன.

  • பிற்காலச் சோழர் காலத்தில் கோவில்கள் பெரும் சமூகப் பொருளாதார நிறுவனங்களாகின. அரசியல் தளத்தில் பக்தி இயக்கம் வட இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து அவர்களுக்குக் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசர்களைத் தூண்டியது.

  • அரச குடும்பத்தினரும், உள்ளாட்சி அமைப்புகளும் தனிப்பட்ட நபர்களும் கால ஒழுங்கில் கோவில்களில் விழாக்கள் கொண்டாடுவதைத் தொடங்கிவைத்தனர். அவ்விழாக்களின் செலவுகளைச் சந்திக்க அவர்களே அறக்கட்டளைகளை உருவாவதை இது துரிதப்படுத்தியது.

  • மேலும் கோவில் போன்ற நிறுவனங்களின் மூலம் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களை மதத்தின் கீழ் ஒருங்கிணைத்தது. நூற்றாண்டுகளின் போக்கில் பக்தி இயக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்துமதத்தில் பல மாற்றங்களை விளைவித்தது.

ஆதிசங்கரர் (788-820 கி.மு)

  • பக்தி இயக்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவனரைத் தொண்டு, சரணடைதல், தியாகம் என்னும் குறிக்கோள்களின் மூலம் ஒன்று திரட்டி மைய நீரோட்ட அரசியலோடு ஒருங்கிணைத்தது

  • படிப்பறிவில்லாதவரும் கூட இக்குறிக்கோள்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் பக்தி இலக்கியங்கள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருட் செறிவோடு இசைபட கருத்துகளை முன்வைத்தன

  • ஆதிசங்கரரின் வருகையோடு இக்கருத்துக்கள் குறித்த விவாதங்கள் சமஸ்கிருத மொழியில் பேசப்பட்டதால் ஒரு சிலர் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.

  • மாயை கோட்பாடு குறித்துப் பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களோடு விவாதம்  செய்து வென்றார்

  • அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதத் தத்துவங்களில் வேரூன்றி இருந்தது

  • பௌத்த மதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்த மடங்களை நிறுவ அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய இடங்களில்; மடங்கள் உருவாயின. பிராமண மடாதிபதிகள் அவற்றிற்குத் தலைமை தாங்கினர்.  

  • சங்கரர் சைவ, வைணவ வழிபாடுகளைச் சம அளவில் முக்கியத்துவம் கொண்ட வேத மதத்தின் கூறுகளாகவே கருதினார்.

  • சங்கரரின் சிந்தனைப்பள்ளி, துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல், சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது.

ஸ்ரீ ராமானுஜர் (1017-1138 கி.மு)

  • ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஸ்ரீராமானுஜர் காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட யாதவபிரகாசரிடம் தத்துவப் பயிற்சி பெற்றார்

  • தனது குருவின் கருத்துக்களை ஏற்க மறுத்த இளம் ராமானுஜர் யமுனாச்சாரியாரின் திருரங்கத் தத்துவப் பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்

  • ஒரு முறை காஞ்சியில் அவரைக் கண்ட யமுனாச்சார்யா அவரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்தார் ராமானுஜர் திருவரங்கத்திற்குச் சென்ற சில நாட்களில் யமுனாச்சாரியார் இயற்கை எயதினார்

  • இதனைத் தொடர்ந்து ராமானுஜரே திருவரங்கம்மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். கோவிலையும் மடத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த அவர் பல பிரிவினரை ஒருங்கிணைத்தார். கோவில் சடங்குகளை மாற்றியமைத்தார்

  • ராமானுஜர் ஓர் சிறந்த ஆசிரியர், சீரதிருத்தவாதி, திட்டமிட்டு செயல்பட்டார். அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார். வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார்.

  • அத்வைதத்திற்கு மாற்றாக அவர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் சிந்தனையாளர்களிடம் செல்வாக்குப்  பெற்று தனிமரபாக வளர்ச்சி பெற்றது

  • அவருடைய இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரைப் பின்பற்றுவோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் தலைமையில் இரு பிரிவுகள் தோன்றின

  • ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடமும் பக்திக் கோட்பாட்டைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டார்

  • கோவில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு அதன் மூலம் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒருமுறையாவது கோவில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்

  • தங்கள் மதநம்பிக்கைகளுக்கும் இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இராமானுஜர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என நம்பப்படுகிறது.

பக்தியும் கலைகளும்

  • கிராமிய நடனங்களின் தோற்றம் பெற்று கோவில் நடனங்களில் ஆடற்கலை ஒழுங்குகள் மாறி மதம் சார்ந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு இறுதிநிலையை எட்டியது.

  •  பல்லவர்காலம் முதலாகப் பயிற்சியளிக்கப்பட்ட நடனக் கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களால் பராமரிக்கப்பட்டன

  • புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற முக்கியக் காட்சிகள் கோவில் சுவர்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டன.இவை கல்லிலும் செம்பிலும் சிலைகளாக வடிக்கப்பட்டன.

  • யாழ் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட இசைக் கருவியாக இருந்திருக்க வேண்டும்

  • பொ.. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழுக்குப் பதிலாக வீணை பயன்பாட்டிற்கு வந்தது

  • இதனைத் தொடர்ந்து இசை, நடனம் போன்ற கவின்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கலைஞர்கள் அரசின் ஆதரவுடன் கோவில்களோடு இணைக்கப்பட்டனர்

மோதல்கள்

  • பல்லவர் காலத்தில்தான் முதன்முதலாகச் சைவமும் வைணவமும் ஒருபுறமாகவும் சிரமணப் பிரிவுகளான சமணம், பௌத்தம் மறுபுறமாகவும் இருந்து மோதிக்கொண்டன.

  • முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் சமணத்தைப் பின்பற்றியதால் ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தினார்

  • அப்பர் தொடக்கத்தில் சமணராக, தர்மசேனன் எனும் பெயருடனிருந்தார். பின்னர் தனது தமக்கையின் செல்வாக்கால் சைவமதத்தைத் தழுவினார்

  • மரபுசார்ந்த ஒரு கதையின்படி சம்பந்தர் இறையியல் வாதங்களில் சமணர்களை வென்றதால் தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்

  • கூன் பாண்டியன் எனவும் அறியப்பட்ட மாறவர்மன் அரிகேசரி(640-670) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிய பின்னர் சம்பந்தருடைய செல்வாக்கால் மீண்டும் சைவரானார்

  • ஒரு சைவக் கதையின்படி, இவர் சைவத்திற்குத் திரும்பிய பின்னர் மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் சமணர்கள் பலரை கொலை செய்ய ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது.

  • சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்குகின்றன.

  • பக்தி இலக்கியங்களும் திருத்தொண்டர்களைப் பற்றிய நூல்களும் மோதல்கள் ஏற்பட்ட நிகழ்வுகளையும் புறச்சமயத்தார் தோற்கடிக்கப்பட்டதையும் விளக்குகின்றன. அவ்வாறான மோதல்கள் இறுதியில் வன்முறை சார்ந்ததாக மாற்றம் பெற்று பல சமணத் துறவிகள் கழுவில் ஏற்றப்பட்டதில் முடிந்ததெனக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன

  • தத்துவம் சார்ந்த வாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் பக்தி இயக்கம் மன்னர் ஆதரவைப் பெற்றிருந்ததன் விளைவாக பௌத்தமும் சமணமும் தோல்வியைச் சந்தித்தன.

  • சமண பௌத்த கோவில்களும் கருவறைகளும் பெரும்பாலும் சிதைக்கப்பட்டன,இன்றைய அளவிலும் தமிழ்நாட்டின் பலபகுதிகளில் தலைப்பகுதி உடைக்கப்பட்ட புத்தர், சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைக் காணமுடிகிறது

  • பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக்கருத்தான துறவறத்தை சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன.

  • பௌத்தம், சமணம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக வேதமதங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாயின.

வட இந்தியாவில் பக்தி இயக்கம்

அறிமுகம்

  • தமிழகத்தில் பக்தி இயக்கம் ஏழாம் நூற்றாண்டிலேயே செழித்தோங்கி இருந்த நிலையில் வடஇந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டில்தான் அது முழு வேகத்தைப் பெற்றது. இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பக்திப் பாடல்கள் எழுதப்பட்டன.

  • சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள்ஒதுக்கி வைத்தல்பல கடவுள்களை வணங்கும் முறை, உருவ வழிபாடு போன்றவற்றால் ஏற்பட்டிருந்த சமூகப் பின்னடைவுகளுக்கு எதிராக வடஇந்தியாவில் பக்தி இயக்கம்  குரல் கொடுத்தது. மதச் சான்றோர்கள் மூட நம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் விமர்சித்தனர்.

  • வைணவ பக்தி இயக்கத்தோடு இணைந்து ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைத்தவர்கள்.

  • அன்றைய அளவில் முக்கிய மதங்களாகத் திகழ்ந்த இந்து மதம்இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து விலகி சுதந்திரப் பாதையைப்  பின்பற்றினர். இவ்விரு மதங்களிலிருந்த மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தையும் விமர்சித்தனர்

  • துருக்கியப் படையெடுப்போடு கூடிய இஸ்லாமின் வருகை வேத மதங்களுக்கும் குருமார்களுக்கும் பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

  • பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. அதிகமான இந்தியர்கள் முஸ்லீம்களாயினர்.

  • இஸ்லாம் அரசு அதிகாரத்தோடு சமத்துவத்தை முன்வைத்தது  இந்தியச் சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தோரைக் கவர்ந்தது.

  • புதிய  அரசியல் சமூகச் சூழல் பிரதான மதங்களின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஓர் இயக்கமாக்கியது. இவ்வியக்கம் சாதி முறைக்கு எதிரானதாகவும், வேதங்களுக்கும் புராணங்களுக்கும் எதிரானதாகவும் உருவானது

  • பண்பாட்டுத் தளத்திலும் இவ்வியக்கம் பிராந்திய மொழிகளின் வளர்ச்சி இந்துஸ்தானி இசையின் வளர்ச்சி போன்ற தாக்கங்களை ஏற்படுத்தியது

  • முஸ்லீம்களின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான இந்துக்களின் எதிர்வினை பன்முகத் தன்மை கொண்டதாய் இருந்தது

  • ஒருபுறம் புதிய மதத்திற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டிருந்தபோதும், இந்து மதத்திற்குள் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உணர்வும் தோன்றியது

சூபியிஸம்

  • சூபி எனும் சொல்சுப்எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும்.அதன் பொருள் கம்பளி ஆகும்.

  • சூபிக்கள் சொர சொரப்பான முரட்டுக் கம்பளியாலான உடைகளை அணிந்ததால் சூபிக்கள் என அழைக்கப்பட்டனர்.

  • சூபியிஸம் அடிப்படையில் இஸ்லாமியத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மீது இந்து, பௌத்த (மகாயான ) சமயக் கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தது.

  • உலேமாக்களின் கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிஸம் மறுத்தது.

  • மடாலய வாழ்க்கையை ஒத்த துறவு வாழ்வை மேற்கொண்ட சூபிக்கள் சமுதாயத்திற்கு வெளியே செயல்பட்டனர்.

  • யோகப்பயிற்சி தோற்ற அமைவுகள், இந்திய இசை, நடனம் ஆகியவற்றையும் சூபியிஸம் கைக்கொண்டது.

  • சூபியிஸத்தை பின்பற்றியோர் இஸ்லாம், இந்து ஆகிய இரு சமயங்களையும் சேர்ந்தவர்ளாக இருந்தனர்.

சூபியிஸத்தின் தாக்கம் 

  • சிந்துவை அராபியர் கைப்பற்றிய காலத்தில் சூபியிஸம் இந்தியாவிற்குள் பாதம் பதித்தது.

  • பத்து, பதினொன்று நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான்களின் ஆட்சியின் போது அது முக்கியத்துவம் பெற்றது

  • 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிஸம் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது

  • இந்து மதத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு இணையாக இஸ்லாம் மதத்தில் அதைப் போன்ற கருத்துக்களை சூபியிஸம் கொண்டிருந்தது.

  • சூபி

  • வாலி

  • தர்வீஷ்

  • பக்கீர், ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பதாகும்இவர்கள் தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்களாவர்.

  • இடைக்கால இந்தியாவைச் சேர்ந்த சூபிக்கள் மூன்று முக்கிய அமைப்பினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர் அவை,

  • சிஸ்டி

  • சுரவார்டி

  • பிர்தௌசி, என்பனவாகும்.

  • சூபியிஸம் இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த உள்முகமான, ஆச்சரியமான மற்றொரு பக்கமாகும்

  • மதம், சமூக வேறுபாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணிசெய்தனர்.

  • தத்துவ ஞானிகளான இவர்கள் தங்கள் பரந்த மனப்பான்மைக்காகப் பெயர் பெற்றனர்.

  • இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் என சூபிகள் கருதினர். அவ்வழகைக் கண்டு ஆச்சரியப்படல் வேண்டும், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல் வேண்டும், முழுக்கவனத்தையும் இறைவன்மேல் குவித்தல் வேண்டும் என்றனர்

  • அவர்கள் கடவுளை மஸ்க் (நேசிக்கப்படவேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர்.

  • பின்னாளில் சூபியிஸம் பலசில்சிலாக்கள்அல்லது பிரிவுகளைக் கொண்டதாக மாறியது.

  • சூபியிஸத்தின் முக்கியப்  பிரிவுகள்

  • சிஸ்டி

  • சுரவார்டி 

  • குவாதிரியா

  • நஸ்பந்தி, ஆகியனவாகும்.

  • சூபியிஸம் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் வேர்கொண்டது. சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது

  • சூபியிஸம் அனைத்து விதமான மதச்சம்பிரதாயம், பழமைவாதம், வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது. ஆன்மீகப் பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசைகொண்டது.

  • அரசியல் அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதே இயல்பாக இருந்த ஒரு சூழலில், போர்களாலும் போட்டிகளால் சூழல் பாழ்பட்டுக்கிடந்த நிலையில் சூபிகள் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப் பணியாற்றினர்.

  • சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்பின் கூரிய முனைகளை மழுங்கடித்து அவர்களிடையே சகோதரத்துவத்தையும்  ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்.

பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள் 

  • பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர்

  • பிறப்பு இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபடமுடியும் என நம்பினர்.இறைவனிடம் ஆழமான பற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் எனும் கருத்தை முன்வைத்தனர்

  • இறைவனுடைய அருளைப் பெற அர்ப்பணிப்பை வற்புறுத்தினர்

  • குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்

  • உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்

  • உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்

  • ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாடவேண்டுமென வலியுறுத்தினர்

  • மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைக்கும் சாதி முறையைக் கண்டனம் செய்தனர்

  • சடங்குகள், சம்பிரதாயங்கள், புனிதயாத்திரைகள், நோன்புகள் ஆகியவற்றைக் கண்டனம் செய்தனர்

  • எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதவில்லை.மக்களின் மொழிகளில் பாடல்கள் இயற்றினர்.

பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள்

கபீர்

  • இடைக்கால இந்தியாவின் மிக முக்கியமான பண்பாட்டு ஆளுமையாகக் கபீர் கருதப்படுகிறார்.

  • அவர் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  • கபீர் ஓர் இஸ்லாமியராக இருந்த போதிலும் வாராணாசியை இருப்பிடமாகக் கொண்ட இராமாநந்தரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார்.

  • பிரபலமான, தஸ்கிரா--ஆலியா-இஹிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எனும் நூல் அவரை சூபி துறவியான ஷேக்தகி என்பவரின் சீடராகச் சித்தரிக்கிறது.

  • முற்போக்கான மதச் சிந்தனைகளைக் கொண்ட கபீர் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினைவாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார்.

  • அவரின் கருத்துக்கள் இந்து சமூகத்தில் குறிப்பாக கீழ்நிலை சாதிகளைச் சேர்ந்தோர்க்கு ஏற்புடையதாய் அமைந்தன.

  • இருந்தபோதிலும் பல்வேறு சமயப்பிரிவுகள் கடவுளுக்கு வெவ்வேறு பெயர்களையும் வடிவங்களையும் கொடுத்திருந்தாலும் கடவுள் ஒருவரே என்றும், வடிவமற்றவர் என்றும் கபீர் நம்பினார்.

  • சமயம், சாதி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளை அவர் கண்டனம் செய்தார். பொருளற்ற சடங்கு முறைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

  • உருவவழிபாடு, பலகடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார்.

  • அதே சமயத்தில் இஸ்லாமிலிருந்த சம்பிரதாயங்களையும் கடுமையாக விமர்சித்தார்.

  • கடவுளின் மேல் உண்மையான பற்றுதலைக் கொண்டிருந்த அவர் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் தடைகளை உடைக்க முயன்றார்.

  • கடவுளை அடைய அவர் கண்டடைந்த பாதை கீழ்நிலையில் உள்ளோர்க்கும் மேல்நிலையில் உள்ளோர்க்கும் ஏற்புடையதாயிருந்தது.

  • அவருடைய பாடல்கள் இன்று வரை இந்தியாவின் பலபகுதிகளில் பாடப்பட்டு வருகின்றன.

  • கபீரின் பாடல்கள் போஜ்புரி மொழியோடு உருதுமொழி கலந்து எழுதப்பட்டவையாகும்.

  • கபீரின் கிரந்தவளி, பைஜக் ஆகிய நூல்கள் அவருடைய கவிதைகளின் தொகுப்புகளாகும்.

ரவிதாஸ்

  • ரவிதாஸ் 15, 16ஆம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தைச் சேர்ந்த கவிஞரும் துறவியுமாவார்.

  • அவர் தோல் பதனிடுவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

  • பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களால் வணங்கப்படுபவர்.

  • இவர் பக்தி இயக்கத் துறவியும் புலவருமான இராமானந்தரின் சீடர்களின் ஒருவராவார்.

  • சீக்கியரின் மதப்பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  • சாதி அடிப்படையிலான சமூகப்பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகப் பேசினார். ஆன்மீக விடுதலையைப் பெறும் முயற்சியில் ஒற்றுமையை ஊக்குவித்தார்.

  • மீராபாய் ரவிதாஸின் சீடராவார்.

குருநானக்

  • கடவுள் வடிவமற்றவர் என குருநானக் போதித்தார். தன்னைப் பின்பற்றுவோர் அமைதிக்காகவும், வீடுபேற்றிற்காகவும் கடவுளை நினைத்து தியானம் செய்யும்படி கூறினார்.

  • அவர் சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.

  • பல புனிதத் தலங்களுக்குச் சென்று வந்த அவர் இறுதியில் லாகூருக்கருகே கர்தார்பூரில் குடியேறினார்.

  • அங்கேயே அவர் 1539இல் இயற்கை எய்தினார்

  • அவருடைய 550வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு நடைபாதை ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது. அந்நடைபாதை குர்தாஸ்பூரிலுள்ள நானக்கோவில், பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப் இரண்டையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது.

  • வேதச்சடங்குகள் சாதிப்பாகுபாடுகள் ஆகியவை மீது அவர் பெரும் வெறுப்புக்கொண்டிருந்தார்.

  • குருநானக்கின் போதனைகளே பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்ட சீக்கியமதத்தின் மூலக்கோட்பாடாக அமைந்தது.

  • குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் ஆகும்.

  • குருநானக், அவருக்குப் பின் வந்தோர் ஆகியோரின் போதனைகள் தொகுக்கப்பட்டு குருகிரந்சாகிப் என்றழைக்கப்பட்டது. அதுவே சீக்கியர்களின் புனித நூலாகும்.

  • கீர்த்தனை எனப்படும் பாடல்கள் பாடும் இசைக் குழுக்கள் மூலமாக குருநானக்கின் போதனைகள் பரப்புரை செய்யப்பட்டன.

  • இவருடைய பக்தர்கள் தர்மசாலைகள் எனப்படும் ஓய்வு விடுதிகளில் ஒன்று கூடினர். இவைகளே காலப்போக்கில் குருத்வாராக்கள் ஆயின.

  • குருநானக் லேனா என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.

  • இந்த முன் உதாரணத்தைப் பின்பற்றி ஒவ்வொரு சீக்கிய குருவும் தங்களுக்கு அடுத்த குருவை நியமித்தனர்.

  • குருகோவிந் சிங் காலத்தில் பாகல் எனப்படும் திருமுழுக்கு (குறுவாளால் கிளறப்பட்ட இனிப்பான நீரைக்கொடுத்தல்) செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

  • இவ்வாறு திருமுழுக்கு பெற்றவர்கள் கால்சா(தூய்மை) எனப்பட்ட முறைப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினராயினர்.

  • இவர்களுக்கு சிங் (சிங்கம்) என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

  • கால்சாவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஐந்து தனித்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்

  • அவை,

  • கேஷ் (வெட்டப்படாத முடி)

  • கன்கா (சிகைக்கோல்)

  • கிர்பான் (குறுவாள்)

  • கடா (இரும்புக்காப்பு)

  • கச்சேரா(உடலின் கீழ்ப்பகுதியில் அணியும் உள்ளாடை) ஆகியனவாகும்.

  • குருகோவிந் சிங்கிற்குப் பின்னர் புனித நூலான குருகிரந்தசாகிப் குருவாகக் கருதப்பட்டது. அதன் கருத்துக்களை கால்சா அமைப்பு பரப்பியது.

  • ஒரு கடவுள் கோட்பாட்டைக் கொண்ட சீக்கியமதம் கடவுள் ஒருவரே என்ற கருத்தையும், ஒழுக்கநெறிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டுமென்பதையும் வலியுறுத்திக் கூறியது.

  • இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய குருக்களின் தலைமையில் சீக்கியமதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது.

  • சீக்கிய மதப்போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின.

  • அக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கி அடக்குமுறைக்கு வழிவகுத்து இறுதியில் குருக்களின் உயிர்த்தியாகத்தில் முடிந்தது

  • குருகோவிந்த சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார்.

  • அவருக்குப் பின்னர் குருகிரந்தசாகிப் (புனிதநூல்) குருவாகக் கருதப்பட்டது.

  • ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், இராமானந்தர், சைதன்யர், நாமதேவர், கபீர், ஷேக்பரித் போன்ற பக்தி இயக்க கவிஞர்களின் சூபி துறவிகளின் போதனைகளும் ஆதிகிரந்தத்தோடு சேர்த்து குருகிரந்தசாகிப் எனப்படுகிறது.

சைதன்யர் (1485-1533)

  • சைதன்யர் மாதாவாச்சாரியாரின் (வேதாந்தத்தில் துவைதக் கொள்கையை முன்னிறுத்தியவர்)தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.

  • இயக்கத் துறவிகளின் போதனைகளிலிருந்து அவர் வேறுபட்டார்.

  • சைதன்யர் ஏனைய கடவுள்களைக் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் எனக்கொண்டார்.

  • சைதன்யருடைய இயக்கம் ஒருமைப்பாட்டிற்கான இயக்கமல்ல, மாறாக இது ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகும். விஷ்ணுவின் பலவடிவங்களில் பரவசத்தைத் தரும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்குத் திரும்புவதாகும்.

  • வங்காள வைணவர்கள் இந்து மதத்தைச் சீர்திருத்த முயலவில்லை, மாறாக விஷ்ணுவின் மேல் பக்தி கொள்ள வற்புறுத்தினர்.

  • இருந்த போதிலும் பல சமூகங்களிலிருந்து சைதன்யருக்குச் சீடர்கள் உருவாயினர்.

  • சைதன்யர் இறைவழிபாட்டில் குழுவாகக் கூடிப் பாட்டிசைத்து அத்துடன் பரவசத்தை ஏற்படுத்தும் நடனமாடும் பழக்கத்தைப் பிரபலமாக்கினார்.

  • அவருடைய இயக்கம் வங்காளத்திலும் ஒரிசாவிலும் பிரபலமானது.

நாமதேவர்

  • தையல் கலைஞரின் மகனாகப் பிறந்தார் நாமதேவர்.

  • மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் நரஸ்-வாமணி எனும் கிராமத்தில் வாழ்ந்தார்.

  • ஜனதேவர் எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்.

  • பந்தர்பூரிலுள்ள விட்டலாவின் (விஷ்ணு அவதாரம்) மேல் தீவிர பக்தி கொண்ட நாமதேவர் தன் சீடர்களுடன் பெரும்பாலான நேரத்தை இறை வழிபாட்டிலும் தானே இயற்றிய பாடல்களைப் பாடுவதிலும் கழித்தார்.

  • மராத்திய, இந்திமொழிகளில்அபங்க’ (மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்து மத குருமார்கள் இறைவனைப் புகழ்ந்து எழுதியபாடல்கள்) என்றழைக்கப்பட்ட பாடல்களை எழுதினார்.

  • அவர் பஞ்சாப் வரை பயணம் மேற்கொண்டார். பஞ்சாபிலும் அவருடைய போதனைகள் பிரபலமாயின. பின்னர் அவை குரு கிரந்தத்தில் சேர்க்கப்பட்டன.

  • முழுமையான இதயத்தோடு இறைவனை வணங்குங்கள், மதப்பணி சார்ந்த வாழ்வை வாழுங்கள். உறுதியான பக்தியுடன் அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள் என்பனவே அவருடைய செய்திகளின் சாரமாகும்.

இராமானந்தர்

  • ராமானந்தா ராமானுஜரின் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்.

  • பிரயாகையில்(அலகாபாத்) பிறந்த இராமானந்தர் காசியில் இந்து மதத் தத்துவத்தில் உயர் கல்வியைக் கற்று இராமானுஜரின் பள்ளியில் போதகராகப் பணியிலமர்ந்தார்.

  • வடஇந்தியாவின் புனிதத்தலங்களுக்குச் சென்று வந்த அவர் வைணவத்தை போதித்தார்.

  • இராமர் சீதை ஆகியோரிடம் பக்தி வைத்தல் என்று தானே உருவாக்கிய புதிய கோட்பாட்டின் அடிப்படையில் வைணவத்தில் முற்போக்கான மாற்றங்களை அறிமுகப்படுத்தினார்.

  • கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையைப் போதித்தார்.

  • சாதி முறையை நிராகரித்த அவர் குறிப்பாக இந்து மதத்தின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தார்.

  • சமூகத்தின் அடித்தளத்தைச் சேர்ந்த மக்கள் இவரைப் பின்பற்றினர்.

  • ரவிதாஸ், கபீர் மற்றும் இரண்டு பெண்கள் அவருடைய பன்னிரண்டு சீடர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

  • பிராந்திய மொழியான இந்தியில் தனது கொள்கைகளை போதித்தவர்களில் முதலாமவர் இராமானந்தரே.

  • இதன் காரணமாகவே அனைத்துத் தரப்பு மக்களாலும் அறியப்பட்டவரானார்.

  • இவருடைய சீடர்கள் மிதவாதிகள், முற்போக்கர்கள் என இரு பிரிவாகப் பிரிந்தனர்.

  • வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் இராமாநந்தர் ஆவார்.

மீராபாய்

  • மீராபாய் ராஜஸ்தானில், மேர்தா மாவட்டத்தில் குத் எனும் ஊரில் பிறந்தார்.

  • ஜோத்பூர் அரசை நிறுவிய ராணா ஜோதாஜியின் கொள்ளுப் பேத்தி ஆவார்.

  • இவர் மேவாரின் அரசனான ராணா சங்காவின் மகன் போஜ ராஜன் என்பாரை மணந்தார்.

  • கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய அவர் அரண்மனையை விட்டுவெளியேறி, அன்பே கடவுளை அடையும் வழியென போதனை செய்யவும் பஜனைப் பாடல்களைப் பாடவும் தொடங்கினார்.

  • அவ்வம்மையார் ரவிதாஸ் என்பவரின் சீடராவார்.

  • கடவுளை கிருஷ்ணர் எனும் பெயரில் வணங்கவேண்டுமென்றும், பிறப்பு, செல்வம், வயது, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் கிருஷ்ணருடைய அருள் யாருக்கும் மறுக்கப்படக்கூடாது எனப் போதித்தார்.

  • அவருடைய பக்திப்பாடல்களும் இசைப்பாடல்களும் வளமான பண்பாட்டு மரபாகும்.

  • அவருடைய போதனைகள் தெய்வீக பக்தி என்னும் செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்றது.

சூர்தாஸ்

  • அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்த சூர்தாஸ் ஆக்ராவின்பார்வைத் திறனற்ற பாடகன்எனப் பலராலும் அறியப்பட்டவர்.

  • சூர்தாஸ் தில்லி சுல்தானியர் காலத்து, வைணவப் போதகரான வல்லபாச்சாரியாரின் சீடர் என நம்பப்படுகிறது.

  • வல்லபாச்சாரியார் புஷ்திமார்க்கத்தை (அருள்பாதை) நிறுவியவராவார்.

  • சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடிருப்பதையும் போதித்தார்.

  • கடவுள் கிருஷ்ணரைக் குறித்து இந்திமொழியில் உணர்வு பூர்வமான பாடல்களை இயற்றினார்.

  • சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடையபாலலீலாமுக்கியக் கருப்பொருளாக விளங்கியது.

  • அவருக்குக் கிருஷ்ணர் தெய்வீகமானவர். அவரைப்பொருத்த அளவில் காதல் என்பது உணர்வுபூர்வமான கருப்பொருளாகும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் மீது கோபியர் கொண்ட கட்டுப்படுத்த இயலாத காதலை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார்.

  • கோபியர் வெளிப்படுத்திய காதலின் தீவிரம் என்பது ஒரு தெய்வீக ஆன்மாவின் மேல் மனித ஆன்மா கொண்டிருக்கும் இயற்கையான கவர்ச்சியின் வெளிப்பாடென்றார்.

  • சூர்சாகர்

  • சூர்சரவளி

  • சாஹித்யலஹரி, ஆகியன அவருடைய முக்கியப்படைப்புகளாகும்.

  • அவருடைய மாபெரும் படைப்பான சூர்சாகர் அல்லது சூர்சமுத்திரம் கிருஷ்ணர் பிறந்ததிலிருந்து மதுராவுக்கு புறப்படும் வரையிலான கதைகளைக் கொண்டுள்ளது.

துக்காராம்

  • துக்காராம் 1608ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார்.

  • சத்ரபதி சிவாஜி, ஏக்நாத், ராம்தாஸ் போன்றோரின் சமகாலத்தவர்.

  • தொடக்கத்தில் ஒரு வணிகராக இருந்த இவர் பின்னர் தனக்குப் பிரியமான கடவுளான பந்தர்பூர் விட்டலாவின் புகழைப்பாடும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டார்.

  • மகாராஷ்டிராவில் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள பந்தர்பூர் அல்லது பண்டரிபுரத்தில் வித்தோபா/பாண்டுரங்கா கோவில் உள்ளது.

  • துக்காராம் கடவுள் வடிவமற்றவர் என நம்பினார்.

  • அவரைப் பொருத்த அளவில் உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தைத் துய்க்க முடியாது எனக் கூறினார்.

  • வேதவேள்விகள், சடங்குகள், புனிதப்பயணங்கள், உருவ வழிபாடு ஆகியவற்றை நிராகரித்தார்.

  • கடவுள்பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி ஆகியவற்றைப் போதித்தார்.

  • சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய செய்திகளைப் பரப்பினார்.

  • இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார்.

  • அவர் தன்னுடைய அபங்கா அல்லது கீர்த்தனைகளை மராத்தி மொழியில் எழுதினார்.

பக்தி இயக்கத்தின் தாக்கங்கள்

  • முக்தி என்பது வர்ணாஸ்ரமக் கொள்கையின் படி முதல் மூன்று படிநிலைகளைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நம்பிக்கையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது. பக்தி இயக்கம் பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியைக் காட்டியது.

  • பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் தத்துவ ஞானத் துறையில் சிறந்து விளங்கி துவைதம், அத்வைதம் ஆகிய தத்துவக்கோட்பாடுகளை வழங்கினர்.

  • சாதி முறையும் சமூக ஏற்றதாழ்வுகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின.

  • இக்காலத்தில் பிராந்திய அளவில் நடைமுறையிலிருந்த பண்பாட்டுப் பழக்கங்களான, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுவது பண்டிகைகள், விழாக்கள் நடத்துவது, புனிதப் பயணங்கள் செல்வது, சைவ, வைணவச் சடங்குகளை செய்வது ஆகியன இன்று வரை நடைமுறையில் உள்ளன.

  • பக்தி இயக்கம் சாமானிய மக்களின் இயக்கமாகும். அவ்வியக்கம் தனது பக்தி இலக்கியங்களை எழுத அம்மக்களின் மொழியையே பயன்படுத்தியது. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்கள் எண்ணிக்கையில் பெருகின.

  • சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமஸ்கிருத மொழி இந்து அரசுகளின் அரசர்கள் நல்கிய ஆதரவால் தக்கவைக்கப்பட்டது.

  • இக்காலப் பகுதியில் உயிர் துடிப்புடன் விளங்கிய ஒரே பழமையான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் தமிழ் இலக்கியத்தின் பொதுப்பண்பு இடைக்காலத்தில் மாறிவிட்டது. செவ்வியல் காலத்தில் அன்றாட வாழ்க்கையையும் அதன் இன்ப துன்பங்களையும் தமிழ் இலக்கியம் சித்தரித்துவந்தது. ஆனால் பக்தி இயக்கக் கோட்பாடுகளின் தாக்கத்தின் விளைவாய் அது சமயங்களுக்கும் சமய இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது.

  • இந்து சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டப்பட்டது. அதனால் அது இஸ்லாமின் தாக்குதல்களிலிருந்து காக்கப்பட்டது.

  • இஸ்லாமியத் தத்துவக் கூறுகளான கடவுள்ஒருமைப்பாடு, உலக சகோதரத்துவம் போன்றவை பக்தி இயக்கச் சான்றோர்களால் வலியுறுத்தப்பட்டு அமைதியும், இணக்கமும் வளர்ந்தன.


சமூக மற்றும்  மத சீர்திருத்த இயக்கங்கள்

அறிமுகம் 

  • இந்தியா பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் காலப்பகுதியில் ஆங்கில நிர்வாகத்துடனும் ஆங்கில வர்த்தகத்துடனும் நெருக்கமான தொடர்புடைய ஆங்கிலக்கல்வி பயின்ற சிறிய அறிவுஜீவிகளின் கூட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது

  • கிறித்தவ சமயப்பரப்பாளர்களின் பணிகளும் சிந்தனைகளும் ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன

  • ஆங்கிலேயச் செல்வாக்கின் தாக்கத்திற்கு ஆட்பட்ட முதல் மாகாணம் வங்காளமாகும். அதனால் பல சீர்திருத்தக்கருத்துக்கள் அங்கிருந்தே உருவாயின

  • ஆங்கில நிர்வாகம், ஆங்கிலக்கல்வி, ஐரோப்பிய இலக்கியங்கள் ஆகியவை புதிய சிந்தனை அலைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தன. அவை மரபு சார்ந்த அறிவுக்குச் சவால் விடுத்தன.  

  • பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட நன்னெறிச் சிந்தனைகள் மனித இனத்தின் பரிணாமம், வளர்ச்சி குறித்த சிந்தனைகள், அறிவொளியோடு தொடர்புடைய இயற்கை உரிமைகள் கோட்பாடு ஆகிய சிந்தனைகள் இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன

  • அச்சுத்தொழில், நுட்பம், சிந்தனைகள் பரவுவதில் முக்கியப்பங்கை வகித்தது.

சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி

  • சமூகம் மூடநம்பிக்கை, சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு எனும் நச்சுச் சூழலில் சிக்கியுள்ளது என ஆங்கிலேயர் விளக்கினர்

  • அவர்களின் கண்ணோட்டத்தில் உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் வைதீகத்திற்கு வலுவேற்றி, அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மக்களைத் தூண்டியவை ஆகும்

  • அதற்கு இணையாகச் சமூகச் சூழலும் உயிரோட்டமில்லாமல் தாழ்ந்த நிலையில் இருந்தது. மேலும் பெண்களின் நிலையும் இரங்கத்தக்க நிலையில் இருந்தது

  • உடன்கட்டை(சதி) ஏறும் பழக்கம் மிகவும் கண்டனத்திற்கு உள்ளானது. பிறப்பின் அடிப்படையிலான சமூகப்பிரிவுகளும் அதன் விளைவான சாதி முறையும் விமர்சனம் செய்யப்பட்டது.

  • மிக முக்கியமாக ஆங்கிலேயர், தங்களின் தலையீடு இல்லாமல் இத்தகைய தீமைகளிலிருந்து இந்தியர் விடுபட வாய்ப்பில்லை என வாதிட்டனர்

  • இது ஆங்கில ஆட்சியை நியாயப்படுத்துவதற்காகக் கிறித்துவ மதப்பரப்பாளர்களும் பயனெறி முறைபண்பாட்டாளர்களும் முன்வைத்த கருத்தென்பதைச் சொல்லத் தேவையில்லை.

  • பயனெறிமுறை (Utilitarians): மிக அதிக எண்ணிக்கையிலானவர்களின் அதிகப்பட்ட மகிழ்ச்சியைக் கோரிய நவீனச் சிந்தனையாளர்கள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா மிகப்பெரிய, மிகவும் சிக்கலான பல்வகைப்பட்ட தன்மைகளைக் கொண்ட நாடாக இருந்தது. இடத்திற்கு இடம் நிலைமை மிகவும் மாறுபட்டிருந்தன

  • காலந்தோறும் சமூகப்பண்பாட்டுத் தீமைகளுக்கு எதிராக இந்தியச் சீர்திருத்தவாதிகள் போராடியிருந்தனர். ஆனால் ஆங்கிலேயரின் அறிவொளிச் சிந்தனைகளுடன் கூடிய வரவு சந்தேகத்திற்கிடமின்றிப் புதிய சவாலை முன்வைத்தது

  • மேற்கத்தியப் பண்பாடு, சிந்தனைகள் ஆகியவற்றின் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபு சார்ந்த நிறுவனங்கள் தங்களை உயிர்த்துடிப்புள்ளனவாக மாற்றிக் கொள்ளக்கட்டாயப்படுத்தின

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எதிர்ப்புகளின் வெளிப்பாடுகளும், மாற்றத்திற்கான வேட்கையும் பல்வகைப்பட்ட சீர்திருத்த இயக்கங்களின் மூலம் வெளிப்பட்டன

  • இவ்வியக்கங்கள் இந்திய மக்களின் மதக்கண்ணோட்டத்தையும் சமூக நிறுவனங்களையும் சீர்திருத்துவதையும் ஜனநாயகப்படுத்துவதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன

  • புதிய பொருளாதார சக்திகளின் தோற்றம், கல்வியின் பரவல், தேசிய மனப்பான்மையின் வளர்ச்சி, நவீன மேற்கத்திய சிந்தனைகள்-தத்துவங்கள்- பண்பாட்டின் செல்வாக்கு, ஐரோப்பாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை சீர்திருத்தங்களின் அவசியத்திற்கு வலுசேர்த்தன.

  • இச்சீர்திருத்த இயக்கங்களுக்குக் கருத்தொற்றுமை வழங்கியது பகுத்தறிவு, மனிதநேயம், உலகளாவிய மத உணர்வு ஆகியனவாகும்

  • இக்கண்ணோட்டம் மரபு சார்ந்தவற்றைப் பகுத்தறிவோடு அணுகவும் சமகால சமூக-சமய நடைமுறைகளைச் சமூகப்பயன்பாடு எனும் பரிமாணத்தில் பார்க்கவும் உதவின

  • எடுத்துக்காட்டாக பிரம்ம சமாஜத்தில் ராஜா ராம்மோகன்ராய் வேதங்களில் தவறே இருக்க முடியாது எனும் கருத்தைப் புறக்கணித்தார். அலிகர் இயக்கத்தின் போது சையது அகமது கான் மதம் சார்ந்த சிந்தனைகள் மாற்றப்பட முடியாதவை என்பதை மறுத்தார்

  • எங்களுடைய நிலை அனைத்து மதங்களிலும் உண்மைகள் இருந்தாக வேண்டும் என்பதல்ல, ஆனால் உலகத்தில் நிறுவப்பட்ட அனைத்து மதங்களும் உண்மையானவையேஎனக் கேசவ்சந்திர சென் கூறினார்.

  • இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு நீரோட்டத்தை உள்வாங்கிக் கொண்ட இவ்வியக்கங்கள் மொழி, மதம், கலை, தத்துவம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின

  • விரிந்தகண்ணோட்டத்தில் இச்சீர்திருத்த இயக்கங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்

  • சீர்திருத்த இயக்கங்கள் 

  • மீட்பியக்கங்கள்.

  • இவ்விருவகைப்பட்ட இயக்கங்களும் தாங்கள் மீட்டெடுக்கவுள்ள மதம் இழந்துவிட்ட தூய்மையைப்பற்றி மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருந்தன

  • ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றொன்றுக்குமான வேறுபாடு, இவை ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு மரபுகளைச் சார்ந்திருந்தன என்பதைப் பொறுத்தே அமைந்தது

  • அடிப்படையில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதச்சீர்திருத்தங்களோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே இருந்தது. ஏனெனில் சமூகத்தீமைகளான சாதியும், ஆண் பெண் சமத்துவமின்மையும் தங்களின் இருப்பிற்கான நியாயத்தை மதங்களிடமிருந்தே பெற்றன

  • தொடக்கத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒரு குறுகலான சமூக அடித்தளத்தைக் கொண்டிருந்தன. சமூகத்தின் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டை சேர்ந்த அவ்வியக்கங்கள் தங்களின் நவீன சிந்தனைகள் நிலவிவரும் சமூக எதார்த்தங்களோடு இணைந்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டன

  • அதன் பின்னர் சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை மறுகட்டமைப்பு செய்வதென்பது சமூகத்தின் கீழ் அடுக்குகளுக்குள்ளும் கசியத்து வங்கின

  • பொது விவாதங்கள், ஆய்வுக்கட்டுரைகள், பத்திரிகைகள் ஆகிய வடிவங்களில் அறிவுஜீவிகளிடையே நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்கள், புதிய சிந்தனைகளை மக்களிடையே கொண்டு செல்வதிலும் பழைய சிந்தனைகளைப் புதிய வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் பெரும் பங்கு வகித்தன

  • தொடக்கத்தில் சமூகப்பேரவை, இந்தியப் பணியாளர்கள் போன்ற அமைப்புகளும், கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களுமே சமுகச் சீர்திருத்த இயக்கங்களை துரிதப்படுத்தக் காரணங்களாய் இருந்தன. அதற்குத் தெளிவான அறிவுத்திறன் கொண்டபல தனி நபர்களும் துணை நின்றனர். அவர்களைப்பற்றி வர இருக்கிற பக்கங்களில் நாம் பார்க்கவுள்ளோம்

  • பின்வந்த வருடங்களில், குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய இயக்கம் சமூக சீர்திருத்தத்திற்கான தலைமையையும் அமைப்பையும் வழங்கியது.

பிரம்ம சமாஜம் & பிரார்த்தனை சமாஜம்

இராஜா ராம்மோகன் ராய் (1772-1833)

  • ராஜா ராம்மோகன் ராய் 1772ல் வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்தார்.

  • இவர் மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப் பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்த வாதிகளில் ஒருவராவார்.

  • பெரும் அறிஞரான அவர், தனதுத் தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.

  • ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள்” (Precepts of Jesus Christ), “அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி” (The Guide to Peace and Happiness) போன்றவை குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும்.

  • ராம்மோகன் ராய் வங்காள மொழியில் வெளிவந்த முதலாவது வார இதழானசம்வாத் கௌமுதியை தொடங்கினார். பாரசீக வார இதழான மீரத்-உல்-அக்பர் என்பதற்கும் ஆசியராகத் திகழந்தார்.

  • ராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச்சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்த போதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார்

  • தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒரு கடவுள் கோட்பாடு, உருவ வழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார்

  • உபநிடதங்களுக்குத் தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒருகடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.

  • அவர்இந்தியாவின் முதல் நவீன மனிதர்என்று கருதப்படுகிறார்

  • அவர் நவீன இந்தியாவில் சமூக-மத சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக இருந்தார்

  • 1818 இல் அவர் எழுதியகைம்பெண்களை உயிரோடு எரிக்கும் பழக்கத்தை ஆதரிப்போருக்கும் எதிர்ப்போருக்குமிடையே நடைபெற்ற விவாதம்எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில் எந்த மதமும் கைம்பெண்களை உயிரோடு எரிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை புனித நூல்களைச் சுட்டிக்காட்டி நிரூபித்தார்

  • ஆளுநர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் சதி தடை சட்டத்தை 1829 இல் ரத்து செய்வதில் இவரது பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்தது.

  • கம்பெனி 1829இல் ஒரு சட்டத்தை இயற்றி அதன் மூலம் உடன்கட்டை ஏறுதல் குற்றம் என அறிவித்ததன் மூலம் அவருடைய முயற்சிகள் வென்றன.

  • ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1814 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார்

  • அவர் 1815ல் ஆத்மிய சபையை நிறுவினார்

  • பின்னர் 1828ல் இந்த சபை பிரம்ம சமாஜமாக வளர்ச்சி பெற்றது

  • இந்த அமைப்பின் மூலம்கடவுள் ஒருவரேஎன்று ராம் மோகன் ராய் பிரச்சாரம் செய்தார்.

  • உபநிடதங்கள், விவிலியம், குர்ஆன் போன்ற சமய நூல்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து பல்வேறு சமயத்தினரிடம் ஒற்றுமையேற்படுத்த அவர் முயற்சித்தார்

  • ஆத்மிய சபையின் பணியை மகரிஷி திபேந்திரநாத் தாகூர் மேற்கொண்டார். (ரவிந்திரநாத் தாகூரின் தந்தை). இவர் தான் பிரம்ம சமாஜம் என்று இச்சபைக்கு பெயர் மாற்றம் செய்தார்

  • இந்தியாவின் தலைசிறந்த சமூக அமைப்பாக பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார்.

  • 1817ல், சமயப்பரப்பாளரான டேவிட் ஹேர் என்பருடன் இணைந்து கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை (இதுவே தற்போதைய கல்கத்தா மாநிலக் கல்லூரி) நிறுவினார். பெண்களுக்கான பள்ளிகளையும் அவர் நிறுவினார்.

  • ராஜா ராம்மோகன் ராய் 1828 பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை.

  • இங்கு எந்த ஒரு மதத்தையும் ஏளனமாகவோ, அவமானமாகவோப் பேசக்கூடாது அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார். பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது.

  • முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஒய்வு ஊதியத்தை உயர்த்திப் பெற இங்கிலாந்து சென்றார்

  • இவருக்கு முகலாய மன்னர் "இராஜாஎன்ற பட்டத்தை வழங்கினார்

  • இவர் நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டார். (Herald of New age in India)

  • இவர்இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ (Father of Indian Renaissance) என்றும் அழைக்கப்பட்டார்.

  • பிரெஞ்சு புரட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ராம்மோகன் ராய் ஐரோப்பாவுக்குச் சென்று 1833 இல் பிரிஸ்டலில் இறந்தார்.

பிரம்ம சமாஜம் (1828)

  • ராஜா ராம்மோகன் ராய் இந்து மதத்தை தூய்மைப்படுத்துவதற்கும் ஏகத்துவத்தை போதிப்பதற்கும் ஆகஸ்ட் 1828 இல் கல்கத்தாவில் பிரம்ம சமாஜை நிறுவினார்.

  • பிரம்ம சமாஜத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறலாம்

  • பல தெய்வவழிபாடு, உருவ வழிபாடு, தெய்வ அவதாரங்கள் மீதான நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படையாகக் கண்டனம் செய்தது

  • சாதி முறை, மூட நம்பிக்கைகள், ஆகியவற்றைக் கண்டனம் செய்தது

  • குழந்தைத் திருமணம், பர்தா முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும் எனக்கோரியது

  • கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தது.

  • இருப்பினும், ஆரம்பத்தில் இருந்தே, பிரம்ம சமாஜின் வேண்டுகோள் புத்திஜீவிகள் மற்றும் அறிவார்ந்த வங்காளிகளுக்கு மட்டுமே இருந்தது.

  • அவர் இறப்பிற்கு பிறகு தக்கசமயத்தில் தேவேந்திரநாத் தாகூர் (ரவீந்திரநாத்தாகூரின் தந்தையார்) புத்துயிர் ஊட்டினார்.

  • அவருக்குப்பின் 1857 முதல் கேசவ்சந்திர சென் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்

  • இவ்வமைப்பின் வலுவை 1865இல் அது பெற்றிருந்த 54 கிளைகளின் எண்ணிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். (வங்காளத்தில் 50 கிளைகள், வடமேற்கு மாகாணத்தில் 2, பஞ்சாப்பில் 1, தமிழ்நாட்டில் –1 என மொத்தம் 54 கிளைகள்

  • காலப்போக்கில் பிரம்மசமாஜம் இரண்டாகப் பிரிந்தது. அவை தேவேந்திரநாத்தாகூரின் தலைமையில் இயங்கியஇந்திய பிரம்மசமாஜம்’, கேசவ்சந்திர சென்னுடையசதாரன் பிரம்ம சமாஜம்என்பனவாகும்

  • தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளரான சைதை காசி விஸ்வநாத முதலியார் சமாஜத்தின் கருத்துகளை விளக்கபிரம்ம சமாஜ நாடகம்எனும் தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்

  • கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக்கட்டுரையையும் எழுதினார். 1864இல் இதே நோக்கத்திற்காகத்தத்துவபோதினிஎனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

மகரிஷி தேவேந்திரநாத்தாகூர் (1817-1905)

  • ராஜா ராம்மோகன்ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் ரவீந்திரநாத்தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத்தாகூர் (1817-1905) தொடர்ந்தார்

  • அவர் நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன்வைத்தார்

  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்

  • அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை

  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்தபிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது

  • அவரை நம்புவதென்பது, நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

கேசவ் சந்திர சென் (1838-84)

  • தேவேந்திர நாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர்

  • அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ்சந்திர சென் (1838-84), 1857இல் சபையில் இணைந்தார்

  • கிறித்தவ மதத்தால் பெருமளவில் கவரப்பட்ட அவர் கிறித்தவ மதத்தின் சாரத்தை நம்பினார்

  • 1886இல் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்

  • இதன் பின்னர் தேவேந்திரநாத்தாகூரின் அமைப்புஆதி பிரம்மசமாஜம்என அழைக்கப்படலாயிற்று

  • குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்த போதும் அதற்குமாறாக கேசவ்சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜம் எனும் அமைப்பை நிறுவினர். இவ்வமைப்பு கிறித்தவ எதிர்ப்பு மனப்பாங்கினை வளர்த்தது.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891)

  • வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார். ராஜா ராம்மோகன்ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலை நாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடியபோது வித்யாசாகர் இந்து மறைநூல்களே முற்போக்கானவை என வாதிட்டார்

  • விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடைசெய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறைநூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார்

  • அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார்

  • பெண் கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்

  • இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார்

  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது

  • இச்சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்க வேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

  • 1860இல் முதல்முறை திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது

  • அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது

  • ஆனால் கவலைக்குரியவிதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது

  • நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.

பிரார்த்தனை சமாஜம் (1867)

  • 1867ல் பம்பாயில் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் (1823-98) என்பவரால் பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.

  • இது பிரம்ம சமாஜத்திலிருந்து உதயமானதாகும்

  • இந்து சமயத்திற்குள்ளேயே சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். சமபந்தி, கலப்பு மணம், விதவைகள் மறுமணம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு போன்றவற்றில் இந்த இயக்கம் அதிக கவனம் செலுத்தியது

  • 1870ல் நீதிபதி எம்.ஜி.ரானடே, ஆர்.ஜி. பண்டார்க்கர் இருவரும் இதில் சேர்ந்து இந்த இயக்கத்திற்கு மேலும் வலிமை சேர்த்தனர்.

  • ரானடேயின் (1852-1901) முயற்சியால் உருவாக்கப்பட்ட தேசிய சமூக மாநாடு என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று முடிந்தவுடன் கூடும்.

  • ஆழமான அறிவும் கூர்மைத் திறனும் கொண்ட நீதியரசர் ரானடேயின் வழிகாட்டுதலில் பிரார்த்தனை சமாஜம் மேற்கிந்தியப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தின் செயலூக்கமானது.

ரானடே (1842-1901)                                 

  • விதவைமறுமணச் சங்கம் (1861), 

  • புனேசர்வஜனிக் சபா (1870) & 

  • தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

  • மேற்குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தவாதிகள் மேல் சாதியினர்க்கிடையே பணியாற்றிய அதே வேளையில் ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

  • அவருடைய புத்தகமான குலாம்கிரி (‘அடிமைத்தனம்’) ஒரு முக்கிய நூலாகும். அந்நூல் சாதிய ஏற்றதாழ்வுகளைக் கண்டனம் செய்தது.

  • ரானடே 1901இல் இயற்கை எய்திய போது சந்தரவர்க்கர் தலைமைப் பொறுப்பேற்றார்.

ஆரிய சமாஜம் 

  • ஆரிய சமாஜத்தை உருவாக்கியவர் தயானந்த சரஸ்வதி (1824-1883) ஆவார்

  • குஜராத்தை சேர்ந்த அவர் துறவியாகும் எண்ணத்தில் இளமையிலேயே வீட்டைவிட்டு வெளியேறினார்

  • பதினேழு ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றியலைந்தார்

  • 1863இல் பல ஊர்களுக்குச் சென்று தனது கருத்துக்களைப் போதித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் சில கல்வி நிலையங்களையும் நிறுவினார்.

  • 1872இல் கல்கத்தாவில் பிரம்மசமாஜ உறுப்பினர்களைச் சந்தித்தார்.

  • 1875இல் ஆரிய சமாஜத்தை நிறுவிசத்யார்த்தபிரகாஷ்எனும் தனது முக்கிய நூலை வெளியிட்டார். அவருடைய கருத்தின்படி சமகாலத்து இந்து மதம் சீர்கேடு அடைந்துவிட்டது.   

  • ஆகவே அவர் புராணங்கள், பல கடவுள் வழிபாடு, உருவவழிபாடு, பிராமண அர்ச்சகர்களின் நடவடிக்கைகள், புனித யாத்திரைகள் ஆகியவற்றை நிராகரித்தார். விதவைத் திருமணத்திற்கான தடையை எதிர்த்தார்

  • சமஸ்கிருத மொழியில் சிறந்த புலமை பெற்றிருந்த அவர்வேதங்களை நோக்கித் திரும்புகஎன அழைப்பு விடுத்தார்

  • வேதங்களை அடிப்படையாக கொண்டு சமூகத்தை வடிவமைக்க விரும்பிய அவர் அதே சமயம் புராணங்களைப் புறக்கணித்தார்

  • ஏனைய சீர்திருத்தவாதிகளைப் போலவே பெண் கல்வி, கைம்பெண் திருமணம் ஆகியவற்றை ஊக்குவித்தார்

  • சுவாமி தயானந்த சரஸ்வதி பஞ்சாப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தார்

  • அங்கிருந்தகத்ரிஎனப்படும் வணிகச் சமூகம் காலனிய காலத்தில் மகத்தான வளர்ச்சியைப் பெற்றிருந்தது

  • ஆனால் பஞ்சாபில் இந்து, முஸ்லீம், சீக்கியரிடையே பெருமளவில் வகுப்புவாத மோதல் நடைபெற்று வந்தது

  • தயானந்தரின்சுத்தி’ (புனிதபடுத்துதல்) இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்று பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது

  • ஆரிய சமாஜம் ஒரு மீட்டெடுப்பு இயக்கமாகக் கருதப்படுகிறது. தயானந்தா ஆங்கிலோ வேதப் பள்ளிகளும் (DAV) கல்லூரிகளும் நிறுவப்பட்டதின் மூலம் தயானந்தரின் செல்வாக்கு இருபதாம் நூற்றாண்டில் தொடர்ந்தது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் 

  • கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேசுவரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்ச்சகரான இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடுவதைப் போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்

  • புனிதத் தாயான கடவுள் காளியின் தீவிர பக்தரான அவர் அக்கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்

  • அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும்

  • ஜீவன்என்பதே சிவன்எனவும் அவர் கூறினார் (வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே). 

  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்

இராமகிருஷ்ணா மிஷன் 

  • சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியபோது அதில் வங்காளம் தீவிரமாகப் பங்கேற்றது.

  • அதன்தொடர்ச்சியாக வங்காளத்தில் இராமகிருஷ்ண பரம்ஹம்சரின் நினைவாக இராமகிருஷ்ண மிஷன் உதயமானது

  • அனைத்து மதங்களிலும் இயல்பாக உள்ள உண்மைகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு சமயப் பணிகளை மேற்கொண்டு அம்மதங்கள் சார்ந்த நம்பிக்கைகளைச் சோதித்துப் பார்த்தார்

  • அவரைப் பொருத்த அளவில்அனைத்து மதக் கருத்துக்களும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள்என்பதாகும்

  • இராமகிருஷ்ணருடைய பரந்த பார்வையும், இறைநிலை சார்ந்த உள்ளுணர்வும், ஆன்மீகப் பெருவிருப்பமும் பெருவாரியான மக்களைக் கவர்ந்தன

  • தன் கருத்துகளை கதைகள் மற்றும் வியக்கத்தக்க உவமைகள் மூலமாக விளக்கினார்

  • அவர்மேல் வியப்புற்ற ஒருவர் இவையனைத்தையும்இராமகிருஷ்ண காதாமிர்தா’ (ஸ்ரீராமகிருஷ்ணரின் நற்செய்தி) எனும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார்

  • அவருடைய சீடர்களுள் மிகவும் புகழ்பெற்றவர், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்த இளைஞர் நரேந்திரநாத் தத்தா என்பவராவார். இவரே சுவாமி விவேகானந்தர் (1863-1902) எனப் புகழடைந்தார்

  • கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பைப் பின்பற்றி விவேகானந்தர் இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்

  • இராமகிருஷ்ணா மிஷன் சமயச் செயல்பாடுகளோடு மட்டும் தனதுப் பணிகளை நிறுத்திக் கொள்ளவில்லை

  • மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது, மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப் பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டது

  • அவர் தன் குருவின் கருத்துகளை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சென்றார்

  • அவருடைய கல்வியறிவும் பேச்சாற்றலும், ஆன்மீக தோற்றமும், அவருடைய வியத்தகு ஆளுமையும் அவருக்கு நாடு முழுவதும் சீடர்களை உருவாக்கியது. அவர்களில் பலர் தேசிய இயக்கத்திலும் இணைந்தனர்

  • விவேகானந்தர் 1893இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உலகச்சமய மாநாட்டில் பங்கேற்று அங்கு கூடியிருந்தோர் மேல் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் 

  • பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா (1863-1902) இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்

  • படித்த இளைஞரான அவர் இராமகிருஷ்ணரின் கருத்துகளால் கவரப்பட்டார்

  • மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாதஅவர், நடைமுறை வேதாந்தமான மனித குலத்திற்குத் தொண்டு செய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார். மதத்தோடு தொடர்புடையது எனும் ஒரே காரணத்திற்காக அனைத்து நிறுவனங்களையும் பாதுகாக்கும் மனப்பாங்கினை அவர் கண்டனம் செய்தார்

  • பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்

  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலை நாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுவதாய் அமைந்தது

  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்தி மார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது

  • இந்து சமயச் சடங்குகளில் கலந்துகொள்ளக் கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில் கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்

  • விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்தியக் கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது

  • வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்.

  • இவ்வியக்கம் பள்ளிகள், மருத்துவமனைகள் ஆதரவற்றோர்க்கான இல்லங்கள் ஆகியவற்றையும் நிறுவியது.

  • சுவாமி விவேகானந்தர் இளமை, தைரியம் ஆகியவற்றின் மறுவடிவமாவார். நவீன இந்தியாவின் விடிவெள்ளி எனக் குறிக்கப்படுகின்றார்

  • வாலன்டைன் சிரோல் என்பாரின் வார்த்தைகளில்தனது ஆளுமைத் திறனால் வெளிநாடுகளில் இந்தியாவின் பாரம்பரியமிக்க நாகரிகத்திற்கும் அதனுடைய புதிதாகப் பிறப்பெடுத்துள்ள தேசம் எனும் உரிமைக் கோரிக்கைக்கும் கண்கூடான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த முதல் இந்தியர்ஆவார்.

பிரம்மஞான சபை 

  • ரஷ்யாவைச் சேர்ந்த பிளாவட்ஸ்கி அம்மையார் (1831-1891) மற்றும் அமெரிக்கா கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (1832-1907) ஆகியோரால் பிரம்ம ஞானசபை (“தியோஸ்என்றால்கடவுள்என்றும்சோபாஸ்என்றால்அறிவுஎன்றும் பொருள்படும்) 1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.

  • 1879இல் இந்தியா வந்த அவர்கள் 1886இல் அமைப்பின் தலைமையிடத்தைச் சென்னை அடையாரில் அமைத்தனர்.

  • 1893இல் இந்தியாவிற்கு வந்த அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்ம ஞானசபை வலுப்பெற்று குறிப்பாகப் பல தென்னிந்திய ஆதரவாளர்களைப் பெற்றது

  • இன, நிற, சமயப்பாகுபாடுகள் இன்றி உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதும் பண்டைய சமயம் மற்றும் தத்துவங்களை ஆய்வு செய்வதும் அவர்களது முக்கிய நோக்கங்களாகும்.

  • திருமதி. அன்னி பெசன்ட் மதன் மோகன் மாளவியாவுடன் இணைந்து பனராசில் மத்திய இந்துப்பள்ளியை நிறுவினார். பின்னர் அது பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது.

  • பிரம்ம ஞானசபை இந்து செவ்வியல் நூல்களைக் குறிப்பாக உபநிடதங்கள், பகவத்கீதை ஆகியவற்றைப் படிப்பதற்கு உற்சாக மூட்டியது

  • இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்ம ஞானசபை முக்கியப் பங்காற்றியது. இந்து மறை நூல்களின் மீது மேலைநாட்டவர் காட்டிய ஆர்வம், படித்த இந்தியர்களிடையே தங்கள் பாரம்பரியம், பண்பாடு குறித்த அளப்பரியப் பெருமிதத்தை ஏற்படுத்தியது.

  • பல முரண்பாடுகளுக்கு உள்ளானாலும் இவ்வமைப்பு இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் முக்கியப் பங்கு வகித்தது.

  • முற்போக்குச் சிந்தனையாளரான அயோத்திதாச பண்டிதர், ஹென்றி ஆல்காட்டுடன் கொண்ட தொடர்பின் காரணமாக நவீன பௌத்தத்திற்கு அறிமுகமானார்

  • ஆல்காட் அயோத்திதாசரை இலங்கைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் புகழ்பெற்ற மீட்பு வாதிகளான அனகரிகா தர்மபாலா, ஆச்சாரிய சுமங்களா உட்பட பல பௌத்த பிட்சுக்களைச் சந்தித்தார்

அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு 

  • ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னி பெசன்ட் (1847-1933) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கம் மேலும் செல்வாக்குப் பெற்றது.

  • அடையாறில் ஒரு நூலகத்தை நிறுவி பழமையான சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்து வந்தார்.

  • இந்திய தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்ற அவர் தன்னாட்சி இயக்கச் சங்கத்தை அமைத்து அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதைப் போல இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்படவேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

  • அன்னிபெசன்ட் பிரம்ம ஞானக் கருத்துக்களைத் தன்னுடையநியூ இந்தியா’ (NEW INDIA), ‘காமன் வீல்’ (COMMONWEAL) எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்.

  • இச்சபை இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக ஓர் முன்னோடி இயக்கமாகச் செயல்பட்டது.

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...