Tuesday, August 30, 2022

Current Affairs 2022 - August 30 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                    August 30 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படும் எத்தனை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 7
ஆ) 9
இ) 4
ஈ) 5 
விடை : (ஈ) 5 
தமிழகத்தில் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு நாட்டிலேயே முதல் முறையாக தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

● அதனை தேசிய தர நிா்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) வழங்கியது.

● அதற்கான சான்றிதழ்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், துணை இயக்குநா் (ஆய்வகம்) ராஜு ஆகியோா் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

2. தேசிய அளவில் உயர் பாதுகாப்பு பிரிவுகளில் மோப்ப நாய்களாக , கீழ்கண்ட எந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன ?

அ) சிப்பிப்பாறை 

ஆ) ராஜபாளையம் 

இ) கோம்பை

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

தேசிய அளவில் உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் மோப்ப நாய்களாக, தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன.

● அதீத மோப்ப சக்தி காரணமாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும், வெடிபொருள்களைக் கண்டறிந்து நாசவேலைகளை முறியடித்தல், போதைப் பொருள்களைக் கண்டறிதல் ஆகிய பணிகளிலும் காவல் துறையினருக்கும், பல்வேறு உயர் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் மோப்ப நாய்கள் உதவியாகச் செயல்பட்டு வருகின்றன.

● ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், சுங்கத் துறை ஆகியவற்றில் மோப்ப நாய்ப் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலும் மோப்ப நாய்ப் பிரிவுகளில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு இனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின நாய்கள் குறித்து "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசியதையடுத்து, தேசிய அளவில் நாட்டின நாய்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

● இந்தியாவின் பூர்விக இனங்களாக சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை, ராம்பூர் ஹவுண்ட், காரவன் ஹவுண்ட், முதோல் ஹவுண்ட், மஸ்டிப், ஹிமாயலன், பூட்டியா போன்ற நாய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

● விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் பிறப்பிடமாகக் கொண்ட "ராஜபாளையம் நாய்கள்' நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தின்போது, தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டவை. நிறம் மற்றும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சில நாய் இனங்களில் ராஜபாளையம் நாய் இனம் குறிப்பிடத்தகுந்தது. தூய வெண்மை நிறத்துடன் சருமம் மற்றும் இளம் சிவப்பு நிறத்துடன் நாசிப் பகுதி காணப்படுவது இதன் சிறப்பு.

● சிப்பிப்பாறை, கன்னி ஆகிய நாட்டினங்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட வேட்டையினப் பிரிவைச் சேர்ந்தவை. விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது கோம்பை இனம். பண்டைய காலத்தில் போர்களில் கோம்பை நாய் இனம் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

● உயர் பாதுகாப்புப் பிரிவில் :

● நாட்டின நாய்கள் அனைத்துமே ஆரம்பத்தில் வேட்டைக்காக வளர்க்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பிறகு, தற்போது வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், விவசாயத் தோட்டங்களின் பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

● தமிழகத்தின் நாட்டினங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகிய நாய்களை மோப்ப நாய்களாக ஈடுபடுத்துவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் வெற்றி அடைந்திருக்கின்றன. இதையடுத்து பிரதமர், மாநில முதல்வர்களின் உயர் பாதுகாப்புப் பிரிவுகள், சுங்கத் துறை, காவல் துறைகளில் இந்த வகை நாய்கள் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

3. தமிழகத்தில் முருகப்பா குழுமத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனங்களை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர். என். ரவி

ஆ) க. பொன்முடி 

இ) மு.க. ஸ்டாலின்

ஈ) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

முருகப்பா குழுமத்தின் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

● முருகப்பா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்களை தயாா் செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

● இதைத் தொடா்ந்து. அம்பத்தூரில் உள்ள டி.ஐ. சைக்கிள் வளாகத்தில் ரூ.140 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத மூன்று சக்கர மின்சார வாகனங்களைத் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓராண்டு காலத்திலேயே உற்பத்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

● இந்த உற்பத்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். 

4. தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தவர் யார் ?

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) பி.கே. சேகர்பாபு 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான மொத்தமாக ரூ.105 கோடியில் கட்டப்படவுள்ள கோயில்களின் புதிய கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு ---------- சதவீதமாக இருந்ததென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 21.5%

ஆ) 20.8%

இ) 19.2%

ஈ) 18.8% 

விடை : (இ)19.2% 

தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு சுமாா் 20 சதவீதமாக உள்ள நிலையில், அத்துறையில் பணியாற்றும் ஊழியா்களுக்கான ஊதியம் மொத்த ஊதியத்தில் சுமாா் 40 சதவீதமாக உள்ளதென மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசா்ச் என்ற மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 19.2 சதவீதமாக இருந்ததென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அதே வேளையில், பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்த ஊதியத்தில் 39.2 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், தனியாா் துறை நிறுவனங்களின் பங்களிப்பும் ஊதியமும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்ததெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தனியாா் துறை நிறுவனங்களின் தேசிய வருவாய் பங்களிப்பு 36.3 சதவீதமாகவும், ஊதிய பங்கு 35.2 சதவீதமாகவும் இருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் போதிய திறன் இன்றி செயல்படுவதே அவற்றின் பங்களிப்புக்கும் ஊதியத்துக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுவதற்கான முக்கியக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

● 2012 முதல் 2016-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில் 2017 முதல் 2021-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில் ஊதிய வளா்ச்சி வேகமும், முதலீட்டுக்கான லாப வளா்ச்சி விகிதமும் பெருமளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கரோனா தொற்று பரவலும் அதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

6. இந்தியா பங்கேற்கவுள்ள வோஸ்டாக் 2022 போர் பயிற்சி கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் தொடர்புடையது ? 

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) ரஷ்யா 

விடை : (ஈ) ரஷ்யா 

வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 தேதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும் என்றும், இதில் 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள் மற்றும் 60 உட்பட 5,000 க்கும் மேற்பட்ட ஆயுதப் பிரிவுகள் ஈடுபடும் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்கள்.

● இந்த பயிற்சிகள் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் உள்ள ஏழு துப்பாக்கி சூடு எல்லைகளில் நடத்தப்படும் மற்றும் பல முன்னாள் சோவியத் நாடுகள், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியாவின் துருப்புக்களை ஈடுபடுத்தும்.

7. ஒரு மாவட்டம் , ஒரு பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 300 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அரசின் மின் கொள்முதல் சந்தை மூலமாக பிரபலப்படுத்தும் பரிசு முறை பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் யார் ? 

அ) பியூஷ் கோயல் 

ஆ) அமித் ஷா 

இ) ராஜ்நாத் கோவிந்த் 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (அ) பியூஷ் கோயல் 

ஒரு மாவட்டம், ஒரு பொருள் (ஒடிஒபி) முன் முயற்சியின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை வரியில்லா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அணுகலை மேற்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக மத்திய வா்த்தகம், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

● ஒரு மாவட்டம் ஒரு பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அரசின் மின் கொள்முதல் சந்தை மூலமாக பிரபலப்படுத்தும் பரிசு முறை பட்டியலை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுப் பேசினாா்.

● அப்போது அவா் கூறியதாவது: மத்திய அரசு பல்வேறு தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) மேற்கொண்டு வருகிறது. இந்த ‘ஒடிஒபி’ தயாரிப்புகள் அனைத்திற்கும் வரியில்லா அணுகலையும் எதிா்பாா்க்கிறோம். இதன் மூலம் இந்த தயாரிப்புகளுக்கு சா்வதேச அங்கீகாரத்தை உருவாக்க முடியும். ‘ஒடிஒபி’ பட்டியலில் இடம் பெற்றுள்ள, கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள், உணவுப் பொருள்கள், தங்க நகைகள், பொம்மைகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இதன் மூலம் பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்போரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப் பணியாளா்களை மேலும் விரிவுப்படுத்த உதவும்.

● நாட்டின் ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’ உதவுகிறது. இப்பொருள்களை சா்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சா்வதேசக் கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருள்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம். மாநில அரசுகளும் இதில் பங்கு பெற வேண்டும். மேலும், ‘ஒடிஒபி’ பரிசு முறை பட்டியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஹோட்டல்கள், பொது இடங்கள், வரவேற்பறைகள் போன்றவற்றில் காஃபி டேபிள் புத்தகமாக வைப்பதும் இந்தப் பொருள்களை பிரபலப்படுத்தும் என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.

● தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தங்களுக்கிடையே வா்த்தகம் செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்க வரிகளை இருதரப்பும் கனிசமாக குறைக்கவோ அல்லது நீக்கும் நடைவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பல்வேறு நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இந்தியா, தற்போது பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுடன் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

8. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகள் எந்த ஆண்டு வகுக்கப்பட்டது ? 

அ) 1960

ஆ) 1959

இ) 1947

ஈ) 1940 

விடை : (ஆ) 1959 

● ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கும் நோக்கில், விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. 

 

Sunday, August 28, 2022

Current Affairs 2022 - August 28 /2022 - TNPSC Group 1, 2/2A & 4

                         GK SHANKAR 
                       August 28 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் காவல் துறையில் கருணை அடிப்படையில் எத்தனை பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கியுள்ளார் ? 

அ) 1000
ஆ) 912
இ) 898
ஈ) 781 
விடை : (ஆ) 912 

காவல் துறையில் கருணை அடிப்படையில் 912 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

● இதற்கான நிகழ்வு, சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

● இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை மலா்ந்த முகத்துடன் வரவேற்று, அவா்களது குறைகளைக் கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளா்கள் நியமிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டது. 

● இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலா்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.

● இந்த அறிவிப்பின்படி, காவல் நிலைய வரவேற்பாளா் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலா்களின் வாரிசுதாரா்கள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

● முதல்கட்டமாக 457 ஆண்கள், 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரா்களுக்கு தகவல் பதிவு உதவியாளா், காவல் நிலைய வரவேற்பாளா் பணியிடத்துக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பணியை தொடக்கி வைக்கும் அடையாளமாக 8 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். 

●அவா்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்களில் பணியமா்த்தப்படுவா்.

2. மாற்றுத்திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று எந்த மாநில அரசு தெரிவித்துள்ளது ? 

அ) கர்நாடகா

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தமிழ்நாடு

விடை : (ஈ) தமிழ்நாடு 

மாற்றுத் திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட உத்தரவு:-

● மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

● அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

3. தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் எந்த தேதி வரை நீட்டித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) செப்டம்பர் 09

ஆ) செப்டம்பர் 17

இ) செப்டம்பர் 25 

ஈ) செப்டம்பர் 30 

விடை : (ஈ) செப்டம்பர் 30 

கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் மேலும் இரு மாதங்களுக்கு நீடிக்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

● தமிழகத்தில் கடந்தாண்டு பொதுச் சந்தையில் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ. 140 வரை இருந்த நிலையில் நிகழாண்டில் கிலோவிற்கு ரூ. 70 முதல் 80 ஆக சரிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 52.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 105.98 ஆக நிா்ணயித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

● குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல்களை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃபெட்), தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவை மத்திய அரசின் முகமைகளாக இருந்து மாவட்ட ஆட்சியகங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்களை மேற்கொள்கிறது.

● இந்த கொள்முதல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜூன் மாதமே முடிவடைந்துள்ளது.

● தற்போது கொள்முதல் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீடித்து அதாவது, வருகின்ற செப்டம்பா் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொப்பரை மற்றும் பந்து தேங்காயை கொள்முதல் செய்ய நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்களுக்கு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுள்ளார் ? 

அ) 48

ஆ) 49

இ) 50

ஈ) 52 

விடை : (ஆ) 49 

● உச்சநீதிமன்றத்தின் 49ஆவது  தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பொறுப்பேற்றுள்ளார்.

● பதவி பிரமாணம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

● குறிப்பு : வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர்.

● முதலாவது நபர் : எஸ்.எம். சிக்ரி, இவர் நாட்டின் 13 ஆவது தலைமை நீதிபதி ஆவார்.

● இவர் 74 நாட்கள் மட்டுமே இந்த பதவியை வகிப்பார், வரும் நவம்பர் 8 ஆம் தேதி 65 வயதை அடையும் இவர் , அன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளார். 

● இவருக்கு அடுத்ததாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திர சூட் தலைமை நீதிபதி ஆவதற்கான வரிசையில் உள்ளார். 

5. பின்வரும் எந்த வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால் , அவர்களின் பிறந்தநாளில் வாக்காளர் அடையாள அட்டை பரிசாக வீட்டுக்கு அனுப்பபடும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 17

ஆ) 18

இ) 19

ஈ) 20

விடை : (அ) 17 

● 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும். 

● அவர்களுக்கு 18-வது பிறந்த தினத்தில் பரிசாக வீட்டிற்கு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

6. ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் என்ற ஒற்றை பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் எந்த மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன ? 

அ) செப்டம்பர்

ஆ) அக்டோபர்

இ) நவம்பர்

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

● விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

● பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூா்வாரக் பரியோஜனா-பிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவா் மேலும் கூறியதாவது:

● உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான இதர விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மூன்றில் 2 பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.

● கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

● யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம், டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

● பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போதிலும், கடந்த 1985-ஆம் ஆண்டின் உரங்கள் கட்டுப்பாட்டு உத்தரவின்படி அவற்றின் உள்ளடக்கங்கள் ஒன்றுதான். பல்வேறு வணிகப் பெயா்களில் தயாரிக்கப்படும் உரங்கள், பல்வேறு மாநிலங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உரங்களை மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதன் காரணமாக தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், அவற்றுக்கான போக்குவரத்து மானிய சுமையும் அரசுக்கு அதிகரிக்கிறது.

● உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் செயல்படும் உரத் தயாரிப்பு கூட்டுறவு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ராஜஸ்தான், உத்தர பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றன. ராஜஸ்தானில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ‘சம்பல்’ உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம், தனது தயாரிப்பை உத்தர பிரதேசத்தில் விற்பனை செய்கிறது. இதேபோல், மேற்கு இந்திய பகுதிகளில் தயாரிக்கப்படும் உரங்கள், கிழக்கு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்தப் போக்குவரத்தால் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

● உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தோ்வு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகா்களின் ஆதிக்கமும் இருக்காது என்றாா் அவா்.

7. அகமதாபாதில் சபர்மதி ஆற்றின் குறுக்கே 300 மீ நீளத்தில் கட்டப்பட்டுள்ள அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

அகமதாபாதில் சபா்மதி ஆற்றின் குறுக்கே 300 மீட்டா் நீளத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல் மேம்பாலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

● இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வாஜ்பாயிடம் குஜராத் அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள காந்திநகா் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்றாா். தற்போது திறக்கப்பட்டுள்ள அடல் மேம்பாலம் உள்ளூா் மக்கள் வாஜ்பாய்க்கு செலுத்தும் மரியாதை’ என்றாா் அவா்.

● மேலும் : இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம், அகமதாபாதில் கதா் விழா  நடத்தப்பட்டது.

● இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வில் ஒரே நேரத்தில் 7,500 பெண்கள் பங்கேற்று ராட்டையை சுழற்றி புதிய சாதனையை படைத்திருக்கின்றனா்.

8. மத்திய அரசின் வடிவமைப்பு சார் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கு எத்தனை நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன ? 

அ) 25

ஆ) 31

இ) 32

ஈ) 40

விடை : (இ) 32 

மத்திய அரசின் வடிவைமைப்புசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கு 32 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

● இது குறித்து மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொலைத்தொடா்பு, ஜவுளி, மின்னணு பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தொலைத்தொடா்புத் துறைக்கான உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது வரை 31 நிறுவனங்கள் அத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றன.

● இந்நிலையில், தொலைத்தொடா்பு சாதனங்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கும் நோக்கில் வடிவமைப்பு சாா் ஊக்கத்தொகைத் திட்டத்தையும் தொலைத்தொடா்பு அமைச்சகம் செயல்படுத்தியது. அத்திட்டத்தில் 1 சதவீதம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

● அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 32 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளன. அவற்றில் 17 நிறுவனங்கள் வடிவமைப்புசாா் நிறுவனங்கள். மற்றவை உற்பத்திசாா் நிறுவனங்கள். தொலைத்தொடா்பு சாதனங்களின் வடிவமைப்பிலும் உற்பத்தியிலும் முக்கிய மையமாக இந்தியா மாறவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்குப் பேருந்து எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கொல்கத்தா

இ) அகமதாபாத் 

ஈ) மும்பை 

விடை : (ஈ) மும்பை 

● நாட்டின் முதல் மின்சார இரட்டை அடுக்குப் பேருந்தானது தெற்கு மும்பையில் உள்ள YB மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

● பேருந்தின் பெயர் : Switch EiV 22.

● இது பெஸ்ட் சலோ என்ற செயலி அடிப்படையிலான இருக்கை முன்பதிவு , நேரடிக் கண்காணிப்பு (ம) பணம் செலுத்துதல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. சுவிட்சர்லாந்தின் லாளேன் நகரில் நடைபெறும் டையமண்ட் லீக் தடகள போட்டியில் முதலிடம் பிடித்துள்ள முதல் இந்திய தடகள வீரர் யார் ? 

அ) நீரஜ் சோப்ரா

ஆ) சுமித் அன்டில்

இ) சுரேஷ் சத்தியா

ஈ) எம்.பி. ஜபிர்

விடை: (அ) நீரஜ் சோப்ரா 

● ஈட்டி எறிதல் பிரிவில் 89.08 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்துள்ளார். 

● குறிப்பு : கௌரவமிக்க டையமண்ட் லீக் தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற முதல் இந்திய தடகள வீரர். 

11. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (2022) ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்கள் யார் ? 

அ) சாத்விக் ரங்கிரெட்டி 

ஆ) சிராக் ஷெட்டி 

இ) ஆரோன்சியா 

ஈ) அ (ம) ஆ

விடை : (ஈ) அ (ம) ஆ 

● போட்டி நடைபெற்ற இடம் : டோக்கியோ, ஜப்பான். 

● மேலும் இது இந்தியாவின் 13 ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும். 

12. சராஜூவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் (2022) போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லின்தோய் சமைபம் (15 வயது ) வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்..

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கீழடி நான்காம் கட்ட அகழாய்வு அறிக்கையின் சிறப்பம்சங்கள்: 

  • கீழடியில் 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகத்திற்கு (Beta Analytic Testing Laboratory) அனுப்பப்பட்டன.

  • இவற்றில் அதிகபட்சமாக 353 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம மாதிரிகளின் காலம் கி.மு (பொ.ஆ.மு.) 580 என ஆய்வு முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி-எழுத்தறிவு

  • கீழடியில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

  • இவற்றில் கி.மு. 580 காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட பானை ஓடும் அடங்கும். இதிலிருந்து ஆறாம் நூற்றாண்டிலிருந்தே தமிழக மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு

  • கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், புனேவின் தக்காண கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பதிவு செய்தது.

  • பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின்படி உடைந்த எலும்பு துண்டுகள் வகைப்படுத்தப்பட்டதில் திமிலுள்ள பசு / காளை, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, வரையாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

கட்டடத் தொழில்நுட்பம்

  • தமிழகத்தில் சங்ககாலத்தைச் சார்ந்த பிற தொல்லியல் இடங்களில் காணப்படும் செங்கற்களைப் போல் இங்கு கிடைத்துள்ள செங்கற்கள் 1:4:6 என்ற விகிதாச்சார அளவிலேயே காணப்படுகிறது.

  • அக்காலகட்டம் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது தெரிகிறது.

நெசவுத் தொழில்

  • அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள நூல் நூற்கப் பயன்படும் 180க்கும் மேற்பட்ட தக்களிகள், துணிகளில் உருவ வடிவமைப்புகளை வரைவதற்கு உபயோகப்படுத்தப்படும் (வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற) எலும்பினாலான கூரிய முனைகள் கொண்ட 20 தூரிகைகள், கருங்கல் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட தறியில் தொங்கவிடும் குண்டு, செம்பினாலான ஊசி போன்ற தொல்பொருள்கள் கிடைத்தன. 

  • இப்பகுதியில் நிலவியிருந்த நெசவுத் தொழிலின் நூல் நூற்றல், பாவு அமைத்தல், தறியமைத்தல், நெசவு அதன்பின் சாயமிடல் நிலைகளை உறுதி செய்கின்றன. 

வணிகம்

  • அகேட், கார்னீலியன் ஆகியவை கீழடி அகழாய்வுப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. 

  • இது போன்ற மணிகள் செய்வதற்கான மூலப்பொருள்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து மகாராஷ்டிரம், குஜராத் வழியாக கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

  • கீழடியில் சிவப்பு வண்ண பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை பானைகள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்திலிருந்த தனித்தன்மை வாய்ந்த அரிட்டைன் வகையாகும்.

ஆபரணங்கள் மற்றும் மணிகள்

  • தங்கத்தினாலான ஏழு ஆபரணத் துண்டுகள், செம்பு அணிகலன்களின் சிறிய துண்டுகள், மதிப்புமிக்க மணிகள், கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட வளையல்கள், சீப்புகள் ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  • இத்தகைய மதிப்புறு அணிகலன்களும், ஏனைய அணிகலன்களும் சங்ககாலச் சமூகம் வளமையுடன் இருந்ததற்கான சான்றுகளாகும்.

  • மேலும், கண்ணாடி, படிகம், குவார்ட்ஸ் வண்ணம் தீட்டப்பட்ட மண்ணாலான மணிகள், அகேட், கார்னீலியன் மற்றும் சுடுமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட 4,429 க்கும் மேற்பட்ட மணிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

இரும்பு பொருள்கள்

அகழாய்வில் இரும்பு ஆணிகள் மற்றும் கத்திகளின் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சுடுமண் உருவங்கள்

சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், விலங்கு உருவங்கள், 600க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருள்கள், 28 காதணிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகள்

  • தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பகடைக்காய், வட்டச்சில்லுகள் மற்றும் ஆட்டக்காய்கள் அன்றைய சமுதாயத்தின் வாழ்க்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரதிபலிக்கின்றன. 

  • அகழாய்வில் கிடைக்கப்பெற்ற விளையாட்டுப் பொருட்களில் பெரும்பாலானவை சுடுமண்ணால் ஆனவை.

  • தட்டையான வடிவில் உள்ள பானை ஓட்டின் விளிம்புகள் நன்கு தேய்க்கப்பட்டு வட்ட வடிவத்தைக் கொண்டிருக்கும் விளையாட்டுப் பொருள் 'சில்லு' என்றழைக்கப்படுகிறது. இவ்வகை சில்லுகள் விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.

  • வைகை நதிக்கரையிலுள்ள கீழடி அகழாய்வுகள் மூலம் நகரமயமாதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே காலக்கட்டத்தில்தான் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Thursday, August 25, 2022

Current Affairs 2022 - August 25 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                  AUGUST 25 / 2022 

தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சாகித்திய அகாதெமி விருதுகள் 2022, கீழ்கண்ட எந்த தமிழக  எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் (ம) பால சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) பி. காளிமுத்து 
ஆ) வி. ஈஸ்வரன் 
இ) ஜி. மீனாட்சி 
ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ (ம) இ 

● நிகழ் ஆண்டுக்கான (2022) யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி ஆகியோரின் படைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

● இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

● இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு "யுவ புரஸ்கார்' விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான "பால சாகித்திய புரஸ்கார்' விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி
வருகிறது. 

● அதன்படி, இந்த ஆண்டுக்கான (2022) இரு விருதுகளும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
சாகித்திய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில், மேலும் 23 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

● தமிழ் மொழிப் பிரிவில் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' எனும் கவிதை தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

● குழந்தைகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி எழுதிய "மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை நூலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

● இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

● பால சாகித்திய புரஸ்கார் விருது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

● குறிப்பு : தமிழ் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, நேபாளி, ஒடியா, தெலுங்கு, சம்ஸ்கிருதம், உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கோவை மாவட்டம் , ஈச்சனாரியில் ரூ. 589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) நரேந்திர மோடி
ஈ) திரௌபதி முர்மு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் ரூ.589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய திட்டப் பணிகள் தொடக்கம், முடிவுற்ற பணிகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

3. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு புதிதாக எத்தனை கட்டாயப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) 08
ஆ) 09
இ) 10
ஈ) 11
விடை : (ஆ) 09 

● தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு புதிதாக 09 கட்டாயப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

● அறிவிப்பு : அண்ணா பல்கலைக்கழகம்.

4. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எத்தனை சதவீதம் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) 7%
ஆ) 9%
இ) 5%
ஈ) 3% 
விடை : (இ) 5% 

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

● அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. பிரிட்டனுக்கான அடுத்த புதிய இந்திய தூதராக நியமிக்கபபட்டுள்ளவர் யார் ? 

அ) விக்ரம் கே. துரைசுவாமி 

ஆ) எஸ். ஆறுமுகசுவாமி 

இ) காய்த்ரி இஸ்ஸார் குமார்

ஈ) எஸ். காவியா குமார் 

விடை : (அ) விக்ரம் கே. துரைசுவாமி 

● குறிப்ப: தற்போது வங்கதேசத்துக்கான தூதராக உள்ளார், விரைவில் பிரிட்டனுக்கான தூதராக பொறுப்பேற்கவுள்ளார். 

● முன்பு : காயத்ரி இஸ்ஸார் குமார் இப்பொறுப்பில் இருந்தார். 

6. அண்மையில் எங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) தாஷ்கண்ட்

ஆ) ஈரான்

இ) மும்பை

ஈ) டோக்கியோ

விடை : (அ) தாஷ்கண்ட் 

உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

● எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட எந்தவகையான பயங்கரவாதமும் மனித இனத்துக்கு எதிரான குற்றமாகும். அதனை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

● இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்ததற்காக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்குவிடம் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா்.

● தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது சொ்ஜி சோய்குவை ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தாா். அப்போது, இந்தியா சாா்பில் ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா். இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● முன்னதாக, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் ரஷியாவில் கைது செய்யப்பட்டாா். நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தைத் தெரிவித்த இந்திய ஆளும் கட்சி (பாஜக) தலைவரை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த அவா் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது என ரஷிய உயா் புலனாய்வு அமைப்பான ‘ஃபெடரல் செக்யூரிட்டி சா்வீஸ்’ தெரிவித்தது.

● இவா் துருக்கியில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு பயங்கரவாதியாக தோ்வு செய்யப்பட்டு, அங்குள்ள இஸ்தான்புல் நகரில் அவருக்கு மத பயங்கரவாத போதனைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, ரஷியாவுக்கு வந்து அங்கு தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குச் சென்று தாக்குதல் நடத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றும் ரஷிய உளவு அமைப்பு தெரிவித்தது.

7. தேசிய தலைநகர் பிராந்தியத்துக்கு (என்டஆர் ) உட்பட்ட ஃபரீதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தா மருத்துவமனையை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ராஜ்நாத் சிங்

ஈ) அமித் ஷா 

விடை : (அ) நரேந்திர மோடி

 ● ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,600 படுக்கைகளைக் கொண்ட நவீனமான அம்ரிதா மருத்துவமனையினை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். 

ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை தொடங்கி வைத்திருப்பது தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு ஊக்கமளிக்கும், நவீன மருத்துவ கட்டமைப்பு வசதி கிடைக்கும். மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த பன்னோக்கு மருத்துவமனை 2,600 படுக்கை வசதிகளை கொண்டது. ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ஃபரிதாபாத் மற்றும் ஒட்டு மொத்த தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளை வழங்கும்.

8. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி --------- முதல் -------- சதவீதமாக சரியும் என்று கிரிசல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 7 முதல் 8 

ஆ) 6 முதல் 9

இ) 7 முதல் 10

ஈ) 7 முதல் 9 

விடை: 7 முதல் 9 வரை 

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளா்ச்சி 7 முதல் 9 சதவீதமாக சரியும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மொத்த மாநிலங்கள் உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 90 சதவீதத்தை கொண்டுள்ள 17 மாநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

● இந்த நிதியாண்டில் மத்திய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரி வருவாய் பகிா்வு விகிதாசாரங்களை நிதிக் குழு தீா்மானித்து வந்தாலும், ஒட்டுமொத்த வருவாயும் மத்திய அரசின் மொத்த வரி வசூல்களுடன் இணைந்துள்ளது.

● கடந்த ஆண்டு நவம்பா், இந்த ஆண்டு மே மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட்டது. அத்துடன் சில மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம் கிடைக்கும் லாபம், சிறப்பான அளவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது ஆகியவை ஈடுசெய்யும். இதனால் இந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி வசூலில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

● இந்த நிதியாண்டில் மத்திய அரசின் மானியங்கள், நிதிக் குழுவின் மானியங்கள், வருவாய் பற்றாக்குறை ஆகியவை சிறிய அளவிலான வளா்ச்சியை மட்டுமே காண வாய்ப்புள்ளது.

● மேலும், மத்திய அரசு சாா்பில் மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான கால வரம்பு கடந்த ஜூலை 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

● எனவே, வலுவான ஜிஎஸ்டி வசூல் இருந்தபோதிலும் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளா்ச்சி 7 முதல் 9 சதவீதமாக சரியும்.

● பொதுமுடக்கம் சாா்ந்த பாதிப்புகள் இல்லாதது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளா்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● அதேவேளையில், எதிா்பாா்த்ததைவிட அதிகமான பணவீக்க அழுத்தத்தால் பொருளாதார நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவது வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்களின் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?

அ) ரஷ்யா

ஆ) சீனா

இ) ஜெர்மனி

ஈ) இந்தியா 

விடை : (இ) ஜெர்மனி

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. தென்கொரியாவில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 15

ஆ) 17

இ) 10

ஈ) 13 

விடை : (இ) 10 

● பதக்கங்கள் : 1G , 4S & 5B 

11. 13 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் போட்டியில் இந்தியாவின் ஹன்சினிமதன் ராஜன் எத்தனையாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ? 

அ) 5 ஆவது

ஆ) 4 ஆவது

இ) 2 ஆவது

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது 




Sunday, August 21, 2022

Current Affairs 2022 - August 21/ 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR 
                    August 21 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

1. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் 80,000 காசநோயாளிகளைக் கண்டறியும் இலக்கில் இதுவரை எத்தனை சதவீதம் இலக்கு எட்டப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 50%
ஆ) 68%
இ) 72%
ஈ) 88% 

விடை : (இ) 72% 

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னையில் நடைபெற்ற தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65-ஆவது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

● இந்தியாவில் 2025-ஆம் ஆண்டுக்குள்ளாகவே காச நோயை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் ஊசிகள் மூலம் காசநோயை தடுத்தல், 6 மாதங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை காலகட்டத்தை குறைத்தல் ஆகிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

● ‘காசநோய் இல்லா தமிழகம்-2025’ என்னும் இலக்கு நிா்ணயித்து அதற்கான பல்வேறு திட்டமிடல்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.31.32 கோடியிலிருந்து ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் 23 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை கடந்த ஜூலை 1-ஆம் தேதி நொச்சிக்குப்பத்தில் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

● காசநோய் இல்லா தமிழகம்-2025’ இலக்கை அடையும் வகையில் காசநோய் பாதிப்பு விகிதத்தை 40 சதவீதம் அளவுக்கு குறைத்த நீலகிரி மாவட்டம், 20 சதவீத அளவுக்கு குறைத்த நாமக்கல், கரூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட காசநோய் திட்ட குழுவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ஆம் ஆண்டில் 80,000 காசநோயாளிகளைக் கண்டறியும் இலக்கில் 57,970 காசநோயாளிகளைக் கண்டறிந்து 72 சதவீத இலக்கை எட்டியுள்ளோம் என்றாா் அவா்.

2. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ? 

அ) ஆகஸ்ட் 10, 2022

ஆ) ஏப்ரல் 12, 2022

இ) ஆகஸ்ட் 10, 2021

ஈ) ஏப்ரல் 12, 2021

விடை : (அ) ஆகஸ்ட் 10, 2022 

● போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் ஆகஸ்ட் 10, 2022 அன்று தொடங்கப்பட்டது.

காரணம் : போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

● மேலும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. மத்திய அரசு சார்பாக தொடங்கப்பட்ட பொலிவுறு நகரத் திட்டம் ( ஸ்மார்ட் சிட்டி ) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ? 

அ) 2013

ஆ) 2015

இ) 2017

ஈ) 2019

விடை : (ஆ) 2015 

கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு சாா்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களைத் தோ்வு செய்து பொலிவுறு நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது. 

● முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. திட்ட செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 50 சதவீதத்தை மாநில அரசும் பகிா்ந்து கொள்கின்றன. 

● இதனிடையே, கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீா் தேங்கியது. இதற்கு பொலிவுறு நகரத் திட்டங்களை சரியாக வடிவமைக்காததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. 

● இந்தத் திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடா்பான புகாா்கள் குறித்து விசாரித்த அதிகாரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா், தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

● டேவிதாா் தலைமையில் குழு: விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா் நியமிக்கப்பட்டாா். அவா் தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, திட்டம் தொடா்பாக நடந்த பல்வேறு முறைகேட்டுப் புகாா்கள் குறித்து விசாரணை அதிகாரி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினாா்.

● மே மாதத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபா் விசாரணை ஆணையம் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பொலிவுறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது. இந்நிலையில் திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாா், சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) என்.வி.ரமணா 

ஈ) யு.யு. லலித் 

விடை : (இ) என்.வி.ரமணா 

● ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தவர். 

5. இந்திய கடற்படையின் பின்வரும் எந்த பாய்மரப் படகுடன் அண்மையில் 3 வீராங்கனைகள் உள்பட 6 பேர் கொண்ட இந்திய கடற்படை குழுவினர் மொரிஷியஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் ? 

அ) புல்புல் 

ஆ) கடல்புறா 

இ) நீல்கண்ட் 

ஈ) ஐஎன்எஸ்வி தாரிணி 

விடை : (ஈ) ஐஎன்எஸ்வி தாரிணி

கோவாவில் இருந்து மொரிஷியசின் போர்ட் லூயிஸ் வரையிலான கடல் பயணத்தை ஐஎன்எஸ் மண்டோவியின் காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து துவக்கி வைத்தார். INSV தாரிணி பாய்மரக் கப்பலில் ஆறு பேர் கொண்ட குழுவினர் (மூன்று பெண் அதிகாரிகள் உட்பட) இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

 ● கிட்டத்தட்ட 2500 கடல் மைல் (சுமார் 45000 கி.மீ) தூரத்தை 20 - 21 நாட்களுக்குள் கடக்கும் குழுவினர், தீவிர வானிலை மற்றும் பருவமழையின் கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

● இந்திய கடற்படை இந்த வகையைச் சேர்ந்த ,  மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா,  நீலகண்ட் ஆகிய 6 கப்பல்களை கொண்டுள்ளது.

● இந்தக் கடல் பயணம் கடினமான சாகசம் மிக்கதாகும்.  பயணங்கள் சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன, அதே சமயம் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, என்ஜின்கள் மற்றும் உள் இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய கடல்சார் திறன்களை மேம்படுத்துகிறது.

6. இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழைமை வாய்ந்த எத்தனை கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் அண்மையில் திரும்ப ஒப்படைத்தது ? 

அ) 07

ஆ) 09

இ) 11

ஈ) 15 

விடை : (அ) 07 

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 7 பழைமைவாய்ந்த கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

● 14-ஆவது நூற்றாண்டைச் சோ்ந்த இந்தோ-பொ்சிய வாள், கான்பூா் கோயிலில் இருந்து திருடப்பட்ட 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செதுக்கப்பட்ட கற்கதவின் நிலை உள்ளிட்ட பழமைவாய்ந்த கலைப்பொருள்கள் ஸ்காட்லாந்தின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

● அப்பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இந்தியத் தூதரகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்பொருள்களை இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தின் (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதையடுத்து, கலைப்பொருள்களைத் திரும்ப வழங்குவதற்கு அருங்காட்சியகங்களை நிா்வகித்து வரும் கிளாஸ்கோ லைஃப் அமைப்பு ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அதையடுத்து, கலைப்பொருள்கள் பிரிட்டனுக்கான இந்தியத் தூதா் (பொறுப்பு) சுஜித் கோஷிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 ல் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது ? 

அ) 13 

ஆ) 17

இ) 19 

ஈ) 27 

விடை : (ஆ) 17 

● இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்கள் (17) : 4 G , 5S, 8B .

8. பல்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார் ?

அ) பிரியங்கா

ஆ) பிரியான்ஷி ரஜாவத் 

இ) அன்டிம் பங்கால் 

ஈ) ரீதிகா 

விடை : (இ) அன்டிம் பங்கால் 

● மகளிருக்கான 53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கால் தங்கம் வென்றனர். 

● இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1G, 3S, 3B என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு 2 ஆவது இடம் பிடித்தது. 

● இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும். 

● முதலிடம் : ஜப்பான்

இரண்டாவது : அமொிக்கா. 

IV. முக்கிய தினங்கள் 

9. International Day of Rememberance & Tribute to the Victoms of Terrorism 2022 ? 

Ans : August 21 

Theme (2022) : Memories 

Saturday, August 20, 2022

Current Affairs 2022 - August 20 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                  AUGUST 20 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. இந்தியாவில் ஊரகத் தொழிலாளர்களுக்குக்கான பணவீக்க மதிப்பில் 1,290 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது ? 

அ) குஜராத் 
ஆ) ஹிமாச்சல பிரதேசம்
இ) தமிழ்நாடு 
ஈ) மணிப்பூர் 

விடை : (இ) தமிழ்நாடு 

விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 1,301 புள்ளிகளாக இருந்தது. ஹிமாசலில் குறைந்தபட்சமாக 890 புள்ளிகளாக இருந்தது.

● ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பில் 1,290 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 942 புள்ளிகளுடன் ஹிமாசல் கடைசி இடத்திலும் இருந்தன.

● நாட்டில் விவசாயிகள், ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

● விவசாயம் சாா்ந்த பணிகளில் ஈடுபடுவோா், ஊரகத் தொழிலாளா்கள் ஆகியோா் பயன்படுத்தும் பொருள்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை மத்திய தொழிலாளா் அமைச்சகம் கணக்கிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதக் கணக்கீட்டுக்கான முடிவுகளை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

● அதன்படி, விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஏஎல்) 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 6.43 சதவீதமாக இருந்தது. ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஆா்எல்) 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூனில் 6.76 சதவீதமாக இருந்தது.

● கடந்த ஆண்டு ஜூலையில் விவசாய மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான பணவீக்கம் முறையே 3.92 சதவீதமாகவும், 4.09 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஜூலையில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டதன் காரணமாகவே தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்ததாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அரிசி, கோதுமை மாவு, கம்பு, தானியங்கள், பால், மீன், வெங்காயம், பச்சை-காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயா்வே, விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

● கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1,131 மற்றும் 1,143-ஆக இருந்தது.

2. தமிழகத்தில் எங்கு விளையும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார் ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) திருச்சி

ஈ) தஞ்சாவூர் 

விடை : (ஈ) தஞ்சாவூர் 

சென்னை தனியார் மாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தொடங்கி வைத்தார். 

● இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவியம் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

● தஞ்சாவூரில் உற்பத்தியாகும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

● குறிப்பு : தமிழ்நாட்டில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளது. அவற்றில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கும் 24 வகையான பொருட்களுக்கு புதிசார் குறியீடு பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து உள்ளார்.

● புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விவரங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

3. கூற்று : எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

காரணம் : பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று தவறு, காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

● எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

● இது தொடா்பாக தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயா்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

● தமிழகத்தில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் நிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்ாகும். எண்ணெய்ப் பனை மரங்களை நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டிலிருந்து ஹெக்டேருக்கு ஐந்து டன் வரையும், எட்டாம் ஆண்டிலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் கிடைக்கும். அதனால், தமிழகத்தில் எண்ணெய்ப் பனை சாகுபடிப் பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயா்த்துவதற்காக, அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

● தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியாா் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

● நடவு முடிந்து முதல் 4 ஆண்டுகள் வரை இளம் எண்ணெய்ப் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.5250-மும், எண்ணெய்ப்பனை வயலில் ஊடுபயிா் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக ஹெக்டேருக்கு ரூ.5250-மும் என மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியாக எண்ணெய்ப்பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

● தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனைத் திட்டத்துக்காக 2022-23-ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

● தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனை திட்டத்தில் https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெற வேண்டும்.

4. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப் பணிக்கு எத்தனை கோடியில் புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 1,978 கோடி

ஆ) ரூ. 1,331 கோடி

இ) ரூ. 1,137 கோடி

ஈ) ரூ. 1,713 கோடி 

விடை : (அ) ரூ. 1,978 கோடி 

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணிக்கு ரூ.1977.80 கோடியில் புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறைக்கான 29 புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவா் கல்லூரி மாணவா் பேரவை மற்றும் தமிழ் மன்றத் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் பேசினாா். பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

● மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தற்போது சுற்றுச்சுவரைத் தவிர வேறு கட்டடப்பணிகள் நடைபெறவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் விடாமுயற்சியால் மத்திய அரசு தற்போது ஜப்பானில் உள்ள சைக்கா நிறுவனத்தில் கடன் பெற்று ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகளைத் தொடங்கவுள்ளது. அப்போது ரூ.1,264 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகள் தாமதத்தால் கட்டடப் பணிக்கான நிதியை உயா்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய திட்டமதிப்பீட்டின்படி ரூ.1,977.80 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அதில் ரூ.1,670.70 கோடி (82 சதவீதம்) ஜப்பானின் சைக்கா நிறுவனத்திடமிருந்து பெறப்படவுள்ளது. நிதியில் 18 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது. சைக்கா நிறுவனம் கட்டட வரைபடத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்திக்க புதுதில்லிக்கு செல்லவுள்ளோம். அதனடிப்படையில் அடுத்த 6 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகள் தொடங்கும். ராமநாதபுரத்தில் பயிலும் மாணவா்கள் மதுரையில் இறுதியாண்டு பயிலும் நிலை ஏற்படும்.

● துணை செவிலியா் பயிற்சி மையம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 சதவீத கட்டடப் பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகளை 2 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பரமக்குடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 53.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தும் ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. பாா்த்திபனூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியா் பயிற்சி மையம் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதிவிக்காலம் மேலும் எத்தனை ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது ? 

அ) 6 மாதம்

ஆ) 9 மாதம்

இ) ஓராண்டு 

ஈ) இரண்டாண்டு 

விடை : (இ) ஓராண்டு 

● அறிவிப்பு : மத்திய பணியாளர் அமைச்சகம். 

● 2023 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார். 

● கடந்த 2019 , ஆகஸ்டில் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார். 

● ஏற்கனவே இரண்டு முறை அவர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

6. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ( RT - PCR KIT ) எங்க வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கேரளா

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா 

விடை : (அ) ஆந்திர பிரதேசம் 

● தயாரிப்பு : டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம். 

● இந்த பரிசோதனை கருவியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் வெளியிட்டார். 

7. உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது ? 

அ) 35,000

ஆ) 31,000

இ) 40,000

ஈ) 37,000

விடை : (அ) 35,000 

● உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. ஐரோப்பிய கால்பந்தில் மகளிர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் யார் ? 

அ) மரிலேனா ஜார்ஜ் 

ஆ) மனீஷா கல்யான்

இ) மனீஷா சிங்

ஈ) மரியா ஜார்ஜ் 

விடை : (ஆ) மனீஷா கல்யான் 

● 20 வயது இளம் வீராங்கனையான மனீஷா , வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடும் 4 ஆவது இந்திய வீராங்கனை ஆவார். 

IV. முக்கிய தினங்கள் 

9. World Mosquito Day 2022 ? 

Ans : August 20 

Theme : Harness Innovation to reduce the Malaria disease burden & save lives. 

10. International Geocaching Day 2022 ? 

Ans : August 20

Theme : Find Your Place in the World 

Friday, August 19, 2022

Current Affairs 2022 - August 19 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                         GK SHANKAR 
                     AUGUST 19 / 2022

தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க பயன்படுத்தும் செயலி எது ? 

அ) கருடா
ஆ) கடம்பா
இ) சிம்பா
ஈ) சீட்டா

விடை : (அ) கருடா 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

● வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் இணைய வழி வாயிலாகவும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

● மேலும், தமிழக முழுவதும் இதுவரை சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். 

● அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் ஆட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்கவுள்ளது. 

2. அண்மையில் மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் எந்த ஆண்டு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது பெற்றார் ? 

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஈ) 2022

● தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார். 

● பணி : தமிழறிஞர், இலக்கியப் பேச்சாளர் , பட்டிமன்றப் பேச்சாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி. 

● நூல்கள் (ம) கவிதை நூல்கள் : குறுக்குத்துறை ரகசியங்கள் 1, குறுக்குத்துறை ரகசியங்கள் 2, வடிவுடை காந்திமதியே,  காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்,  திக்கனைத்தும் சடை வீசி, பழம் பாடல். 

3. தமிழகத்தில் மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூபாய் -------- வரை உயர்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 250 

ஆ) 100

இ) 500

ஈ) 1000

விடை : (ஆ) 100

● தமிழகத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூ.100 வரை உயர்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

4. தமிழகத்தில் நிகழாண்டில் புதிதாக எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் ? 

அ) 50,000

ஆ) 52,131

இ) 57, 531

ஈ) 59, 313

விடை : (இ) 57,531 

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, 2025-ஆம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

● அதன் பயனாக, காசநோய் பாதிப்பு தொடா்பு விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

● அதுமட்டுமின்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனா்.

● குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 57,531 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 12,781 பேரும், அரசு மருத்துவமனைகளில் 44,750 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. இந்தியா - வியத்நாம் இடையே வின்பேக்ஸ் என்ற இருதரப்பு ராணுவப் பயிற்சி எங்கு நடைபெற்றது ? 

அ) ஹரியானா

ஆ) குஜராத்

இ) கேரளா

ஈ) மேற்கு வங்கம் 

விடை : (அ) ஹரியானா 

● இந்தியா-வியத்நாம் இடையே நடைபெற்று வந்த இருதரப்பு ராணுவப் பயிற்சி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

● 'வின்பேக்ஸ்’ என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் 1 முதல் ஹரியாணாவின் பஞ்சகுலா நகா் அருகே சண்டீமந்திா் ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்று வந்தது.

● இதில், பேரிடா் காலங்களில் மனிதா்களை மீட்க உதவும் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

● ஐ.நா. அமைதிக் குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளா் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடைபெற்றது.

● வியத்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவப் பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரா்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன.

● நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியத்நாம் தூதா் பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நவ்குமாா் கந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியத்நாமில் 2023-இல் நடைபெறுகிறது.

6. பாங்காக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) எஸ்.ஜெய்சங்கர்

இ) திரௌபதி முர்மு

ஈ) அமித் ஷா 

விடை : (ஆ) எஸ். ஜெய்சங்கர் 

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16-ந் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்திய தாய்லாந்து 9 ஆவது கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணைப்பிரதமரும், வெளியுறவு மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசினார்.

● பாங்காக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரக குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார்.

7. பின்வரும் எந்த நாடு ,10 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபிள் ( ரூ. 13.30 லட்சம் ) வெகுமதிப்புடன் கூடிய அன்னை நாயகி என்ற விருதையும் வழங்கவுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ரஷ்யா

ஈ) பிரிட்டன் 

விடை : (இ) ரஷ்யா

● காரணம் : ரஷ்யாவில் சரிந்து வரும் மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க. 

8. குரங்கு அம்மை தீநுண்மியின் துணை ரகங்களுக்கு கீழ்க்கண்ட எந்த பெயர்களை உலக சுகாதார அமைப்பு மாற்றி வைத்துள்ளது ? 

அ) கிளேட் 1

ஆ) கிளேட் 2

இ) காங்கோ படுகை 

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

● முன்பு : காங்கோ படுகை , தென் ஆப்பிரிக்க கிளேட் என்றிருந்தது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. தென் கொரியாவில் நடைபெறும் பாரா உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2022 ல் கலப்பு பி3 25மீ பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் ராகுல் ஜாக்கர் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம்

● இதே பிரிவில் இந்தியாவின் பூஜா அகர்வால் (வீராங்கனை)  வெண்கலம் வென்றுள்ளார்.

● மேலும் மகளிர் ஆர் 2 10 மீ ஏர் ரைஃபிள் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெள்ளி வென்றுள்ளார் . 

IV. முக்கிய தினங்கள்

10. World Humanitarian Day 2022 ? 

Ans : August 19 

Theme (2022) : It takes a village 

11. World Photography Day 2022 ? 

Ans : August 19 

Theme (2022)  : Pandemic Lockdown through the lens. 

Tuesday, August 9, 2022

Current Affairs 2022 - August 09 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                   AUGUST 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 17 
இ) ஆகஸ்ட் 19 
ஈ) ஆகஸ்ட் 21 

விடை : (ஆ) ஆகஸ்ட் 17 

● அறிவிப்பு : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
● இந்த மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பாடங்களை ஒரே மாதிரியாக செயல்முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

2. 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) பி.கே. முருகன்
ஆ) ஏ. ஞானசுந்தரி
இ) எஸ். இளங்கோவன் 
ஈ) ஜி.டி. சரவணன் 

விடை : (அ) பி.கே. முருகன் 

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருதாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் “மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. 

● அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவிலான பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 இலட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

● அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கே. முருகனுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஏ.ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். இளங்கோவுக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஜி.டி.சரவணனுக்கும், இரண்டாம் பரிசினை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.ஆர்.பாலனுக்கும், மூன்றாம் பரிசினை மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கே. சந்திரலேகாவுக்கும், என 6 விருதாளர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறந்த கைத்தறி 

● ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசினை சென்னை- அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம்
பரிசினை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசினை ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்வர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


3. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 313 கோடி
ஆ) ரூ. 131 கோடி
இ) ரூ. 498 கோடி
ஈ) ரூ. 698 கோடி 

விடை : (ஈ) ரூ. 698 கோடி 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

● தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா் கல்வி சோ்க்கையை உயா்த்த, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 

● இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

● இதைத் தொடா்ந்து இது தொடா்பாக கல்லூரிகளில் பயிலும் மாணவிகளிடம் இணையவழியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

● அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7- ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். 

● இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடா்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளா் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

4. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.378 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்துவைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) நரேந்திர மோடி 

ஈ) திரௌபதி முர்மு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

● மேலும் சென்னை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார். 

5. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிகழாண்டு எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) 305 

ஆ) 313 

இ) 386 

ஈ) 357 

விடை : (இ) 386 

● விருதுகள் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

● இவ்விருதுக்கான தேர்வு நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. கூற்று : மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அறிமுகம் செய்தார். 

காரணம் : நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

இ) கூற்று தவறு , காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

மின் விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● மின்சார விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் அறிமுகம் செய்தாா். நுகா்வோா் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தோ்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்

● எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு ஒப்புதல்: பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

● மத்தியஸ்த மசோதாவுக்கு ஒப்புதல்: தில்லி சா்வதேச மத்தியஸ்த மைய (திருத்த) மசோதாவுக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.

● கதிசக்தி பல்கலைக்கழக மசோதா அறிமுகம்: தேசிய ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை கதிசக்தி பல்கலைக்கழகம் என மாற்றம் செய்வதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தாா். தற்போது நிகா்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வரும் அதை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயா்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

7. SC, ST பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு எத்தனை துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 01

ஆ) 05

இ) 04

ஈ) 07

விடை : (அ) 01 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தலா ஒரு துணைவேந்தா் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் தெரிவித்தாா்.

● நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து தலா ஒருவரும், ஓபிசி-யிலிருந்து 7 பேரும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனா். எஞ்சியோா் பொதுப் பிரிவினரை சோ்ந்தவா்கள் ஆவா்.

●  இதேபோல பல்கலைக்கழக பதிவாளா்களில் இருவா் எஸ்.சி. பிரிவையும், 5 போ் எஸ்.டி. பிரிவையும், 3 போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. காமன்வெல்த் போட்டி 2022 ல் மகளிருக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் பாட்மின்டனில் இந்தியாவின் பதக்கங்கள் :

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் லஷயா சென் தங்கம் வென்றார்.

● ஆடவருக்கான பிரிவில் சாத்விக்சாய்ராஜ் (ம) சிரக் ஷெட்டி இணை தங்கம் வென்றது.

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலம் வென்றார்.

● மகளிருக்கான இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் (ம) டிரீசாஜாலி இணை வெண்கலம் வென்றது. 

● இப்போட்டியில் இந்தியா பாட்மின்டன் அணிக்கு 3G, 1S, 2B என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

9. காமன்வெல்த் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜி.சத்தியன் வெண்கலம் வென்றார்.

● கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல் (ம) ஸ்ரீஜா அகுலா இணை தங்கம் வென்றது 

மேலும் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஹாக்கி ஆடவர் அணி வெள்ளி வென்றது.

● கிரிக்கெட் மகளிர் அணி வெள்ளி வென்றது. 

10. 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 113

ஆ) 79

இ) 88

ஈ) 61 

விடை : (ஈ) 61 

● போட்டி நடைபெற்ற இடம் : பர்மிங்ஹாம், இங்கிலாந்து.

● இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்கள் : 22G , 16S, 23B - 4ஆவது இடம் பிடித்து நிறைவு செய்தது.

● பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்கள்: 

1st - ஆஸ்திரேலியா ( 178 )

2nd - இங்கிலாந்து ( 176 )

3rd - கனடா ( 92 ) 

Monday, August 8, 2022

Current Affairs 2022 - August 08 /2022 - TNPSC 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 08 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசுப் பள்ளிகளில் என்று முதல் மக்கள் நல்வாழ்வு , சமூகநலத், காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 19 
ஆ) ஆகஸ்ட் 21
இ) ஆகஸ்ட் 09
ஈ) ஆகஸ்ட் 12 

விடை : (ஈ) ஆகஸ்ட் 12 

தமிழக அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி முதல் விழிப்புணர்வு வாரம் கடைபிடித்து, மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● அத்துடன், வரும் 11ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

● அதன் ஒருபகுதியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றிற்கு பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

● அதன்படி வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் 11ம் தேதியன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

2. அண்மையில் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது ? 

அ) சேலம்
ஆ) மதுரை
இ) ஈரோடு
ஈ) தேனி 

விடை : (இ) ஈரோடு 

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ஆம் ஆண்டு முதல் வனத் துறையின் சமூக நலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக, நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

● இந்நிலையில், இங்கு கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளா்க்கப்படுகின்றன. இந்தப் பகுதியானது அடா்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது. இதனால் சாம்பல் நாரை, ராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

● இதனால், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து, இந்தப் பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான இனப்பெருக்கத் தலமாகவும் விளங்குகிறது.

● இதன் தொடா்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ஆம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, இன்று வரை மாவட்ட வன அலுவலா், ஈரோடு வனக் கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

● 2018-2019-ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு வரை, சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சரணாலயம் மேலும் பொலிவு பெற்று, கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈா்த்தது.

● இந்நிலையில், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3-ஆம் தேதி ராம்சா் அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய அறிவியல் (ம) தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) என். கலைச்செல்வி 
ஆ) எஸ். விஜயலட்சுமி
இ) என். தமிழ்ச்செல்வி
ஈ) எஸ். மேக்னா 

விடை : (அ) என். கலைச்செல்வி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.

● சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பாா். சிஎஸ்ஐஆா்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

● சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) இயக்குநராக கலைச்செல்வி தற்போது பணியாற்றி வருகிறாா்.

● குறிப்பு : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா்.

● காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 

4. நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட  நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு / நிறுவனம் எது ? 

அ) டிஆர்டிஓ

ஆ) ஹெச்ஏல் 

இ) பிடிஎஸ

ஈ) பிஇஎல்

விடை : (ஆ) ஹெச்ஏல்

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஈடுபட்டுள்ளது.

● சுழலும் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், ஏவுகணைகள், சென்சாா் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன்வாய்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரோன் வடிவமைக்கப்படுகிறது.

● ஆளில்லா இந்தக் குட்டி விமானத்தின் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் (2023) மத்தியில் நடத்த ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 60 ட்ரோன்கள் தயாரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

5. நாட்டின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக்கின் எத்தனையாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) 4 ஆவது

ஆ) 6 ஆவது

இ) 7 ஆவது 

ஈ) 9 ஆவது 

விடை : (இ) 7 ஆவது 

●  ஒன்றிய அரசின் திட்டங்கள், கொள்கைகளை இறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. 

● இந்நிலையில், நிதி ஆயோக்கின் 7வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நேரடியாக நடந்தது. 

● இதில், பிரதமர் மோடி, நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட 23 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

● கூட்டத்தில், பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் இதர வேளாண் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தை அமல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

6. கூற்று : இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் , செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை .

காரணம் : சென்சார் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விடை: (ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

● சென்சாா் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விரைவில் எஸ்எஸ்எல்வி - டி2 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறினாா்.

● இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

● அதன் முதல் மூன்று நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

● எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

● இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. 

● இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது.

● செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது : 

● புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா். புவியிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அங்கேயே நீடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவை மீண்டும் புவிக்கே திரும்பி வந்துள்ளன. இதன் காரணமாக இஓஎஸ்-02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுமே பயன்பாடற்ற நிலைக்கு சென்றுவிட்டன.

7. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளர்ச்சி பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் ? 

அ) கூகுள் 

ஆ) ட்விட்டர்

இ) பேஸ்புக்

ஈ) இஸ்ரோ 

விடை : (அ) கூகுள் 

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளா்ச்சிப் பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டம் ஒன்றை ‘கூகுள்’ அறிமுகம் செய்துள்ளது.

● ‘இந்தியா கி உதான்’ என்ற இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவின் வளா்ச்சிப் பாதையை குறிக்கும் 21 கதைகள், 120 வகையான படங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கூகுளின் கலை - கலாசார வலைதள பக்கத்தில் இதனைக் காண முடியும்.

● தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி முன்னிலையில், கூகுள் கலை மற்றும் கலாசார பிரிவு சாா்பில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, இந்தியாவின் அசைக்க முடியாத, அழிக்க முடியாத சாதனைகளை விவரிப்பதே இதன் முக்கிய கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.

● இதுதொடா்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியா எவ்வாறு வளா்ச்சி பெற்றது; அதற்கு இந்தியா்கள் எவ்வாறு பங்களிப்பு செய்தனா்; மத்திய அரசின் ஓராண்டு கால 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட விவரங்களை மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

● மேலும், ‘அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா’ என்ற கருப்பொருளில் கூகுள்- டூடுளுக்கான ஓவியப் போட்டியையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்றுமுதல் 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

● இதில் வெற்றி பெறுபவா்களின் வரைபடம், இந்தியாவில் கூகுள் வலைதள முகப்புப் பக்கத்தில் வரும் நவம்பா் 14-ஆம் தேதி டூடுளாக வெளியிடப்படும் என்பதோடு, அந்த மாணவரின் கல்லூரிப் படிப்புக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித் தொகையும், மாணவரின் பள்ளிக்கு அல்லது தன்னாா்வ அமைப்புக்கு ரூ. 2 லட்சம் தொழில்நுட்ப தொகுப்பும் வழங்கப்படும். மேலும், சாதனையாளருக்கான அங்கீகாரம், கூகுள் ஹாா்ட்வோ், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையும் வழங்கப்படும். நான்கு குழு வெற்றியாளா்கள் மற்றும் இறுதியாளா்களாக வந்த 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி பேசும்போது, ‘வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு டூடுளை கூகுள் குழு உருவாக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் 3,000-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் உதவும் வகையில் அவற்றின் நிலப் பரப்பு எல்லைகளை எண்ம (டிஜிட்டல்) வரைபடமாக கலாசார அமைச்சகம் உருவாக்குவதில் கூகுள் உதவ வேண்டும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளிலும் கூகுள் நிறுவனம் பங்கு பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

8. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி எத்தனை பாரம்பரிய சின்னங்கள் , இடங்களில் தேசியக் கொடியேற்ற இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது ?

அ) 75 

ஆ) 100

இ) 125

ஈ) 150 

விடை : (ஈ) 150 

சுதந்திர தின அம்ருத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும்.

● இந்தியாவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,693 பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் உள்ளன. சுதந்திர தின அம்ருத பெருவிழாவையொட்டி இந்த இடங்களில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் இலவசமாகப் பாா்வையிட மத்திய கலாசார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் யார் ? 

அ) அர்காடி வோர்கோவிச் 

ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

இ) ஜெகன் குமார்

ஈ) யோஷி ஹிடோ 

விடை : (ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

● சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக அர்காடி வோர்கோவிச் தேர்வாகியுள்ளார். 

● ஃபிடே துணைத் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வு பெறுவது இதுவே முதல்முறையாகும். 

10. இந்தியாவின் 75 ஆவது கிராண்ட்மாஸ்ட்ராக உருவெடுத்துள்ள தமிழக வீரர் யார் ? 

அ) டி. குகேஷ்

ஆ) ஆர். பிரக்ஞானந்தா

இ) வி.பிரணவ்

ஈ) ஜெகன் குமார் 

விடை : (இ) வி. பிரணவ் 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்தியர்கள் யார் ? 

அ) அமித் பங்கில

ஆ) நீது கங்காஸ்

இ) நிகாத் ஜரீன் 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

● ஆடவருக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் தங்கம் வென்றார்.

● மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் நீது கங்காஸ் (ம) 50 கிலோ எடை பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். 

● காமன்வெல்த் போட்டியில் மூவருக்குமே இது முதல் தங்கமாகும். 

12. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இதே பிரிவில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி வென்றார். 

● ஒரே விளையாட்டு பிரிவில் இந்தியர்கள் இருவர் இணைந்து பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும். 

மேலும் பதக்கங்கள்

- மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். 

காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

- மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. 

- ஆடவருக்கான 10,000 மீ நடைப் பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்.

- ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், சரத் கமல் வெள்ளி வென்றனர்.  

13. பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில்  இந்தியாவின் பவினா படேல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

14. U20 ,20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் திருமாறன் செல்வபிரபு வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : காலி,கொலம்பியா 

● திருமாறன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 

IV. முக்கிய தினங்கள்  

15. தேசிய கைத்தறி தினம் 2022 என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஆகஸ்ட் 05

ஆ) ஆகஸ்ட் 06

இ) ஆகஸ்ட் 07

ஈ) ஆகஸ்ட் 08

விடை : (இ) ஆகஸ்ட் 07

● முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு : 2015 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...