Monday, January 22, 2024

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

 உலக முதலீட்டாளர் மாநாடு 2024

அறிமுகம்

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது.

நோக்கங்கள்

  • தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக தரம் உயர்த்துதல்.

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளா்ச்சிக்கு அடித்தளம் அமைத்தல்.

  • சீரான, பரவலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, ஈா்க்கப்பட்ட முதலீடுகள் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்தல். 


அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகள்

1.சிங்கப்பூர், 

2.கொரியா,

3. இங்கிலாந்து,

4. ஜப்பான்,

5. பிரான்ஸ்,

6. ஆஸ்திரேலியா, 

7.ஜெர்மனி, 

8.டென்மார்க் 

9.அமெரிக்கா 

மேற்கண்ட 9 பங்குதாரர் நாடுகள்மற்றும் 50 நாடுகளைச் சார்ந்த தொழில் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

சிறப்பம்சங்கள்

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. 

  • இதனால், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.



துறைவாரியான முதலீடுகள்

  • குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை - ரூ.63,573 கோடி

  • எரிசக்தித் துறை - ரூ.1 ,35,157 கோடி

  • வீட்டுவசதி - நகா்ப்புற வளா்ச்சித் துறை - ரூ.62,939 கோடி

  • கைத்தறி - ஜவுளித் துறை - ரூ.572 கோடி

  • தகவல் தொழில்நுட்பவியல் துறை - ரூ.22,130 கோடி

  • தொழில் துறை - ரூ.3, 79 ,809 கோடி

  • மொத்தம்: ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி.


கொள்கைகள்

  • தமிழ்நாடு குறைக் கடத்தி (செமிகண்டக்டர்) மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024.

  • முதலீடுகளை ஈா்ப்பதற்காக, தனியாா் மற்றும் அரசுத் துறைகளின் நடைமுறைகளை இணைத்து பொது-தனியாா் கூட்டாண்மைக் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது.

  • 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எய்துவதற்கான செயல்திட்ட அறிக்கை. 



உலக முதலீட்டாளர் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடிக்கான 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

  • இதன் மூலம்நேரடியாகவும், மறைமுகமாகவும் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கஉள்ளது. 

  • அதிகபட்சமாக டாடா குழுமத்தின் டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி லிமிடெ நிறுவனம் ரூ.70,800 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

  • அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500 கோடி

  • அம்புஜாசிமெண்ட் ரூ.3,500 கோடி

  • அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடி, 

  • டோட்டல் காஸ் & சிஎன்ஜி ரூ.1,568 கோடி என அதானி குழும நிறுவனம் மொத்தம் ரூ.42,768 கோடி அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

  • செம்பகார்ப் நிறுவனம் ரூ.37, 538 கோடி 

  • டாடா எலெக்ட் ரானிக்ஸ் ரூ.12,082 கோடி 

  • ஜேஎஸ்டபிள்யூ குழுமம் 12,000 கோடி. 

  • ஹூண்டாய் நிறுவனம் ரூ.6,180 கோடி

  • டிவிஎஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி 

  • செயின்ட் கோபைன் நிறுவனம் ரூ.3,400 கோடி 

  • பெகாட்ரான் ரூ.1,000 கோடி.

புரிந்துணா்வு ஒப்பந்த செயலாக்கக் குழு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.

இலக்கை விஞ்சிய முதலீடு

  • உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட ரூ. 1.14 லட்சம் கோடி கூடுதல் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 


இதர முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகள்

  •  “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக, ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தபட்டது. 

  • ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது.

  • 2021ஆண்டில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 27 தொழிற்சாலைகளை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.

  • மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

  • சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 










No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...