Wednesday, September 28, 2022

Current Affairs 2022 - September 28 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 SEPTEMBER 28 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது --------- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) 59
ஆ) 60
இ) 61
ஈ) 62

விடை : (ஆ) 60 

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

● அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. 

● இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமிழகத்தில் திருச்சி, மதுரை, சிதம்பரத்தில் 3 இடங்கலில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தவர் யார் ? 

 அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) முனீஷ்வர் நாத் பண்டாரி

ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) ஆஷா பரேக்

ஆ) கமல் ஹாசன் 

இ) ஸ்ரீ தேவி

ஈ) சிரஞ்சிவி 

விடை : (அ) ஆஷா பரேக் 

● 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெறவுள்ளது. 

● அதில் ஆஷாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. 

● அறிவிப்பு : மத்திய செய்தி (ம) ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர். 

● தாதா சாகேப் விருது : இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாக இவ்விருது கருதப்படுகிறது.

● குறிப்பு : ஆஷா அவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

4. இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) 5 ஆவது ஆண்டு கூட்டம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் எங்கு நடைபெற்றது ? 

அ) மும்பை

ஆ) சென்னை

இ) டெல்லி

ஈ) கொல்கத்தா 

விடை: (இ) டெல்லி 

இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) 5-ஆவது ஆண்டு கூட்டம் தில்லி மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்து பேசியதாவது:

● நாட்டில் 2022-23 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தொழில்துறைக்கான மூலதன கொள்முதல் 68 சதவீதம் ஒதுக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் தனியார் துறையினருக்கு ஒதுக்கப்பட்டது. 

● இதன்படி உள்நாட்டு ராணுவப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் உபகரணங்கள் வாங்க நிகழாண்டு நிதியில் ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டது.
மேலும் கூடுதலாக, பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு ஆய்வு மற்றும் வளர்ச்சி, புதிய தொழில் முனைவு பணிகள் ஆகியவற்றுக்கும் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

● இது இந்தியாவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சுமார் 10,000 சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் இணைந்துள்ளன.

● தற்போது நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி , உலக ராணுவச் செலவு 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. இதை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

● தமிழகம், உத்தர பிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

● தற்சார்பு இந்தியா நோக்கிலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் அமைக்கப்பட்டுள்ள இந்த ராணுவ வழித்தடங்களில் அதிக முதலீடு செய்து பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.

5. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நீதிபதி தீபாங்கர் தத்தா பின்வரும் எந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார் ? 

அ) சென்னை

ஆ) கேரளா

இ) கொல்கத்தா

ஈ) மும்பை 

விடை : (ஈ) மும்பை 

● உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளன.

● தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து 29 நீதிபதிகள் உள்ளன. 

6. பின்வரும் எந்த மாநிலத்தில் அலுவலக பணி நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த மின்சார பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கேரளா 

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா 

விடை : (அ) ஆந்திர பிரதேசம் 

● அரசு ஊழியர்களுக்கு இது போன்ற தடை விதிப்பது இதுவே முதல்முறையாகும். 

7. குறுகிய தொலைவு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையை DRDO வெற்றிகரமாக எங்கு பரிசோதனை செய்தது? 

அ) மும்பை

ஆ) கொல்கத்தா 

இ) ஒடிஸா 

ஈ) திருச்சூர் 

விடை: (இ) ஒடிஸா 

குறுகிய தொலைவு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

● இந்த ஏவுகணையை ஹைதராபாதைச் சோ்ந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அந்த மையம் டிஆா்டிஓ-வின் கீழ் இயங்கி வருகிறது. ஏவுகணை பரிசோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏவுகணையானது இருமுறை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. 

● ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

● பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் இடம்பெற்றுள்ளன. அக்கருவிகள் அனைத்தும் பரிசோதனையின்போது வெற்றிகரமாகச் செயல்பட்டன. வான்வெளியில் குறைந்த தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை பயன்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

● ஏவுகணை பரிசோதனைக்காக டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

8. எதிர்காலத்தில் பூமியின் மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின் மீது செயற்கைக்கோள் ஒன்றை பின்வரும் எந்த அமைப்பு அண்மையில் மோத செய்தது ? 

அ) நாசா 

ஆ) இஸ்ரோ 

இ) ஸ்பேஸ் எக்ஸ் 

ஈ) சிஎஸ்ஏ 

விடை : (அ) நாசா 

எதிா்காலத்தில் பூமியின் மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின் மீது செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய்க்கிழமை மோதச் செய்தது.

● பூமியில் மிகப் பெரிய விண்கற்கள் மோதி மிகப் பெரிய அழிவை ஏற்படுவத்துவதற்கான அபாயத்தை தவிா்ப்பதற்காக நாசா விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

● அதன் ஒரு பகுதியாக, பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை திசைமாற்றுவதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் தேடி வருகின்றனா்.

● இந்த நிலையில், ஒரு பொருளை விண்கல்லின் மீது பலமாக மோதச் செய்வதன் மூலம் அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, ‘தி டபுள் ஆஸ்டிராய்ட் ரிடைரக்ஷன் டெஸ்ட்’ (டாா்ட்) என்ற சோதனையை நாசா மேற்கொண்டது.

● அந்த சோதனை திட்டத்தின் கீழ், 160 மீட்டா் விட்டம் கொண்ட டிமாா்ஃபோஸ் என்ற விண்கல் மீது செயற்கைக்கோளை மோதச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

● அந்த விண்கல், டிடிமோஸ் என்ற 780 மீட்டா் விட்டம் கொண்ட மிகப் பெரிய விண்கல்லுக்கு நிலவாக சுற்றிவருகிறது.

● இந்த நிலையில், டிமாா்ஃபோஸ் மீது மோதுவதற்காக நாசா அனுப்பிய செயற்கைக்கோள் 10 மாதங்களுக்குப் பிறகு அந்த விண்கல் மீது செவ்வாய்க்கிழமை மோதிச் சிதறியது.

● இந்த மோதலையும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வு செய்வதற்காக, இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த எல்ஐசிஐஏ கியூப் செயற்கைக்கோள், டாா்ட் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது, டாா்ட்டிலிருந்து கடந்த 11-ஆம் தேதி தனியாகப் பிரிந்துஅதனை பின்தொடா்ந்தது.

● டிமாா்ஃபோஸ் விண்கலம் மீது டாா்ட் செயற்கைக்கோள் மோதுவதையும் அதனால் எழுந்த தூசி மண்டலத்தின் தன்மையையும் எல்ஐசிஐஏ கியூப் செயற்கோள் பதிவு செய்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.

● இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட விண்கல்லைக் குறிவைத்து, அதன் மீது வேண்டுமென்றே மோதச் செய்து, அதன் பாதையை மாற்றியமைக்கும் திறன் நாசாவுக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

● இது குரித்து நாசா நிா்வாக அதிகாரி பில் நெல்சன் கூறுகையில், ‘பூமிப் பந்து பாதுகாப்பு தொடா்பான ஆய்வில் இதுவரை இல்லாத முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை டாா்ட் சோதனை கண்டுள்ளது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் சோதனை திட்டம்’ என்றாா்.

● நாா்ட் செயற்கைக்கோள் மோதலைத் தொடா்ந்து, டிடிமோஸை டிமாா்ஃபோஸ் விண்கலம் சுற்றி வரும் வட்டப்பாதையில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, சுற்றும் வேகம் எவ்வளவு குறைந்துள்ளது என்பது குறித்து இன்னும் சில தினங்களுக்குப் பிறகுதான் உறுதியாகத் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

III. முக்கிய நிகழ்வுகள் 

9. World Rabies Day 2022 

Ans : September 28

Theme (2022) : Rabies: One Health, zero Deaths. 


Tuesday, September 27, 2022

Current Affairs 2022 - September 27 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   SEPTEMBER 27 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் இணையவழி விளையாட்டுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக பின்வரும் யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது ? 

அ) கே. சந்துரு 
ஆ) முனீஷ்வர் நாத் பண்டாரி 
இ) எஸ். சண்முகம் 
ஈ) எல். முத்துசாமி 

விடை: (அ) கே. சந்துரு 

● தமிழகத்தில் இணையவழி விளையாட்டுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

● இக்குழு கடந்த ஜூன் 27 இல் முதல்வரிடம் அறிக்கை அளித்தது. 

● தற்போது இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டத்துக்கு தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

● இந்த சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கடந்த ஓராண்டில் மட்டும் எத்தனை லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை அமைசசர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார் ? 

அ) 3.50 லட்சம்
ஆ) 4.92 லட்சம்
இ) 5.15 லட்சம்
ஈ) 5.94 லட்சம் 

விடை : (ஆ) 4.92 லட்சம்

● மேலும் நிகழ் நிதியாண்டில் ஓய்வூதியத்துக்கென ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஓபிஎஸ்கே மையங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் காவல் துறை தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவை என்று முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) செப்டம்பர் 27
ஆ) செப்டம்பர் 28
இ) செப்டம்பர் 29
ஈ) செப்டம்பர் 30 

விடை : (ஆ) செப்டம்பர் 28 

கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விண்ணப்பதாரா்கள் காவல் துறையின் தடையில்லாச் சான்று (பிசிசி) பெறுவதற்கு இனி அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

● விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல் துறையின் தடையில்லாச் சான்று கட்டாயமாகும். ஆனால், இந்தத் தடையில்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூா் போலீஸாா் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தடையில்லாச் சான்றை விரைந்து பெறும் வகையில் புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

● இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

● கடவுச்சீட்டு விநியோகத்துக்கு அவசியமான காவல் துறையின் தடையில்லாச் சான்றுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை (பிஓபிஎஸ்கே) மையங்களில் காவல் துறை தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவையையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

● இந்தச் சேவையை புதன்கிழமை (செப். 28) முதல் விண்ணப்பதாரா்கள் பெற முடியும். இதில், அந்தத் தடையில்லாச் சான்றுக்கு போலீஸ் ஆய்வுக்கான நாளையும் தெரிவு செய்யும் வசதியும் சோ்க்கப்பட்டுள்ளது.

● இந்தப் புதிய வசதி வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்ல விரும்புபவா்களுக்கு மட்டுமின்றி, கல்வி, நீண்ட கால நுழைவு அனுமதி (விசா), குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பிப்பவா்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இறுதிசடங்கில் இந்திய மக்கள் சார்பில் பங்கேற்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) ராம்நாத் கோவிந்த்

இ) எஸ். ஜெய்சங்கர்

ஈ) நரேந்திர மோடி

விடை : (ஈ) நரேந்திர மோடி 

● ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே கடந்த ஜூலை 8 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

● அவரது இறுதி சடங்கு செப்டம்பர் 27 ஆம் தேதி டோக்கியோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது 

● இந்த இறுதிசடங்கில் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

● குறிப்பு : இந்திய அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டு ஷின்ஸோ அபேவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 

5. இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) மரியோ டிராகி 

ஆ) ஜியார்ஜியா மெலோனி 

இ) ஏன்ஜலின் மரியா 

ஈ) மெலோனி ஷிபா 

விடை : (ஆ) ஜியார்ஜியா மெலோனி

● இத்தாலியின் சகோதரர்கள் கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. சான்டியாகோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிராண்டன் நகாஷிமா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) அமொிக்கா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா 

விடை : (அ) அமொிக்கா 

● இந்த வெற்றி மூலம் ஏடிபி தரவரிசையில் 69 ஆம் இடத்தில் இருந்து 48 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் பின்வரும் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) ராஜஸ்தான் 

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) மணிப்பூர் 

விடை: (ஆ) குஜராத் 

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) 7 ஆண்டுகளுக்கு பின் குஜராத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக தொடங்குகிறது.

● இந்தியன் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் இப் போட்டிகள் முதன்முறையாக குஜராத்தில் நடைபெறுகிறது. 

● கடந்த 2020-இல் கோவாவில் நடைபெறவிருந்த போட்டிகள் கரோனாவில் ஒத்தி வைக்கப்பட்டது.

● அகமதாபாத், காந்தி நகா், சூரத், பரோடா, ராஜ்கோட், பவ்நகா் உள்ளிட்ட 6 நகரங்களிலும், சைக்கிளிங் போட்டி புது தில்லியிலும் நடைபெறுகின்றன. 

● ஒருங்கிணைந்த இந்தியாவில் முதன்முறையாக லாகூரில் 1924-ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகள் நடைபெற்றன. 1938 வரை இந்திய ஒலிம்பிக் போட்டி என அழைக்கப்பட்டது.

● குஜராத் தேசியப் போட்டிகளில் 7,000 வீரா், வீராங்கனைகள் 36 பிரிவுகளில் பதக்கங்களுக்காக மோதுகின்றனா். கோ-கோ, மல்லா் கம்பம், யோகாசனம் முதன்முறையாக இடம் பெறுகின்றன.

● கடைசியாக 2015-இல் கேரளத்தில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் சா்வீஸஸ் 159 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கேரளம், ஹரியாணா இரண்டு, மூன்றாம் இடத்தையும் பெற்றன. கேரளத்தின் சாஜன் பிரகாஷ் 6 தங்கம், 2 வெள்ளியுடன் அதிக பதக்கங்களை வென்றிருந்தாா். வரும் அக்டோபா் 12-ஆம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன.

IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Tourism Day 2022

Ans : September 27

Theme (2022) : Rethink Tourism 

Monday, September 26, 2022

Current Affairs 2022 - September 26 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  SEPTEMBER 26 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. 3 ஆவது பன்னாட்டு மனித நேய சமூக நீதி மாநாடு பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) சென்னை
ஆ) கனடா
இ) காமாபியா 
ஈ) நார்வே 

விடை : (ஆ) கனடா 

● பெரியார் பன்னாட்டு அமைப்பு,  அமெரிக்கா (ம) கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை சார்பில் 3 ஆவது பன்னாட்டு மனித நேய சமூக நீதி மாநாடு கனடாவில் நடைபெற்றது. 

● மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரை ஆற்றினார்.

● திராவட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனித நேயமும் சமூக நீதியும் தான் என்று கூறினார். 

2. தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 90 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கியவர் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன்
இ) ஆர்.என். ரவி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா. சுப்பிரமணியன் 

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 90 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் காலனியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் 90 லட்சமாவது பயனாளியை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா்.

● கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக. 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். 

● ஒட்டுமொத்தமாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 74 சதவீத பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

● குறிப்பு : சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பினால் டயாலிசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் பின்வரும் எந்த விமான நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்படவுள்ளது ? 

அ) சண்டீகர் விமான நிலையம் 

ஆ) கொச்சி விமான நிலையம்

இ) மதுரை விமான நிலையம் 

ஈ) மும்பை விமான நிலையம்

விடை : (அ) சண்டீகர் விமான நிலையம் 

● நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பகத் சிங்கின் பிறந்த தினம் வரும் 28 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

● அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

● அவரது பெயரை சண்டீகர் விமான நிலையத்துக்கு சூட்டப்படவுள்ளது.

4. பின்வரும் எந்த மத்திய துறையின் கீழ் ஸ்வச் டாய்கேத்தோன் என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை அறிமுகப்படுத்துகிறது ? 

அ) பாதுகாப்புத் துறை

ஆ) வெளியுறவுத் துறை

இ) வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி துறை 

ஈ) வேளாண் துறை 

விடை : ( இ) வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி துறை 

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை திங்கள்கிழமை (செப்டம்பா் 26 ) அறிமுகப்படுத்துகிறது.

● இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மை தொழிலை மேம்படுத்துவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிடி) 2020 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 14 அமைச்சகங்களுடன் இணைந்து வா்த்தக அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) என்ஏபிடி பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

● இதில் தற்போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையுடன் இணைந்து ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்கிற இயக்கத்தை நடத்துகிறது.

● இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது வருமாறு: உலகின் 2- ஆவது மக்கள்தொகை மிக்க நாடு என்பதோடு, மொத்த மக்கள்தொகையில் பாதியளவில் இளம் மக்கள் தொகை நாடாகவும் இந்தியா விளங்குகிறது. மேலும், வலுவான பொருளாதார வளா்ச்சி, வருமானத்தால் அதிகமாகவே மக்கள் செலவழிக்கின்றனா்.

● புதிய கண்டுபிடிப்புகளுடன் குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் மாறிவரும் நுகா்வு முறைகள், விரைவான மின் வணிக அதிகரிப்பு ஆகியவற்றால் வாங்கும் பொருள்களின் தனிநபா் கழிவு, குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. இதனால், நகரங்களின் கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. 2 -ஆம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின்படி 2026 -ஆம் ஆண்டுக்குள் ‘குப்பை இல்லாத நகரங்கள்’ என்கிற பாா்வையை பிரதமா் அறிவித்துள்ளாா்.

● ஒருபுறம் பொம்மைகளுக்கான தேவை அதிகரிப்பு மறுபுறம் திடக்கழிவுகளின் தாக்கம் இவற்றை ஒருங்கிணைத்து ’ஸ்வச் டாய்கேத்தான்’ தொடங்கப்பட்டுள்ளது. இது பொம்மைகளை தயாரிப்பிற்கு கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தீா்வுகளை காண்பதாகும். உலா் கழிவுகளைப் பயன்படுத்தி பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டு வர தனிநபா்கள் அல்லது நிறுவன குழுக்களுக்குள் போட்டி வைக்கப்படுகிறது.

● இதற்கு குஜராத் காந்திநகா் ஐஐடி, கிரியேட்டிவ் லோ்னிங் மையம், இந்த முயற்சிகளுக்கு அறிவு கூட்டாளியாக இருந்து ஊக்குவிக்கும். குறைந்தபட்ச பாதுகாப்புத் தரங்களோடு திறமையான அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய பொம்மைகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

● இந்தப் போட்டிகள் வருகின்ற ஆக்டோபா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை திங்கள்கிழமை மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் மனோஜ் ஜோஷி காணொலி வழியாக தொடக்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா எப்பொழுது ஏற்கவுள்ளது ? 

அ) அக்டோபர் 01, 2022

ஆ) நவம்பர் 01, 2022

இ) டிசம்பர் 01, 2022

ஈ) ஜனவரி 01, 2023 

விடை : (இ) டிசம்பர் 01, 2022

● ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா டிசம்பர் 01,2022 முதல் 2023, நவம்பர் 30 வரை வகிக்கவுள்ளது.  

● குறிப்பு : இந்தியா, உணவுப் பாதுகாப்பு , கடன்கள், எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை சார்ந்த பிரச்னைகளுக்கு உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காண பணியாற்றவுள்ளது.  

● இந்த அமைப்பின் உச்சிமாநாடு,  2023 செப்டம்பர் 9,10 இல் தில்லியில் நடைபெறவுள்ளது. 

6. கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி எந்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 137%

ஆ) 198%

இ) 247%

ஈ) 334%

விடை: (ஈ) 334%

● மேலும் இந்தியாவிலிருந்து 75 க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. பான் பசிபிக் ஓபன் WTA மகளிர் டென்னிஸ் போட்டி 2022 ல்  சாம்பியன் பட்டம் வென்றுள்ள லுட்மிலா சாம்சோனோவா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) ஆஸ்ட்ரேலியா 

ஈ) சீனா 

விடை : (ஆ) ரஷ்யா 

● போட்டி நடைபெற்ற இடம் : டோக்கியோ, ஜப்பான் 

● ரஷ்யாவின் லுட்மிலா சாம்சோனோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

8. கொரியா ஹனா பேங்க் ஓபன் டென்னிஸ் மகளிர் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றவர் ? 

அ) ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா 

ஆ) லாட்வியா வின்ஜெலனா 

இ) ஸெங் குன்வெய் 

ஈ) லுட்மிலா சாம்சோனோவா 

விடை : (அ) ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா

● போட்டி நடைபெற்ற இடம் : சியோல்.

● ரஷ்யாவின் ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா சாம்பியன் பட்டம் வென்றார். 

IV. முக்கிய தினங்கள் 

9. International Day for the total Elimination of Nuclear Weapons 2022 

Ans : September 26



Saturday, September 24, 2022

Current Affairs 2022 - September 24 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
             SEPTEMBER 24 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையதளம் ? 

அ) தமிழ்நிலம் 
ஆ) தமிழ்வளம் 
இ) பட்டாநிலம் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தமிழ்நிலம்

● தொடக்கி வைத்தவர்: முதல்வர் மு.க. ஸ்டாலின்.

● இப்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பட்டா மாறுதல் கோரி இணையவழியில் (www.tamilnilam.tn.gov.in/citizen)  விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

● இணையவழியில் வரைபடங்கள்: நகரப் புலங்களுக்கான வரைபடங்கள் www.eservices.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையும் இணையதளத்திலிருந்து கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.

● மனை அங்கீகாரம், வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு வரைபடங்கள் மிகுந்த தேவையாக உள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், இதற்காக பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் வருவது தவிா்க்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தமிழகத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் விவரங்களை பதிவு செய்வதற்காக எத்தனை மாவட்டங்களில் புத்தாக்கப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன ? 

அ) 4

ஆ) 5

இ) 6

ஈ) 7

விடை : (ஈ) 7

● அறிவிப்பு : வெளிநாடுவாழ் தமிழர் (ம) புலம்பெயர்ந்தோர் நலத்துறை மாநில ஆணையர் ஜெசிந்தாலாசரஸ்.

● 7 மாவட்டங்கள் : ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, பெரம்பலூர், விழுப்புரம் (ம) தஞ்சாவூர். 

3. இந்தியளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) கேரளா 

ஆ) தமிழ்நாடு

இ) ராஜஸ்தான் 

ஈ) மேற்கு வங்கம் 

விடை: (ஆ) தமிழ்நாடு 

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உறுப்பு மாற்று விழிப்புணா்வு தின நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

● அந்நிகழ்வை தொடக்கி வைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

● 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி முதல் மத்திய அரசின் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

● ஒருங்கிணைக்கப்பட்ட இத்திட்டத்தில் இப்போது 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 1,733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் 11 தொடா் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனைகள், 8 உயா் சிறப்பு சிகிச்சைகள் உட்பட 1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

● தமிழக அரசின் மூளைச் சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை 2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 5-ஆம் தேதி அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘விடியல்’ என்னும் முழு தானியங்கி செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

● தானியங்கி செயலியின் மூலம் மே 2022 முதல் தற்போது வரை 67 உறுப்பு கொடையாளா்களின் 224 உறுப்புகள், இறுதி நிலை உறுப்பு செயலிழப்பு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

● அக்டோபா் 2008 முதல் தற்போது வரை 1,559 மொத்த உறுப்பு கொடையாளா்கள் மூலம், 5,687 உறுப்புகளும், 3,629 திசுக்களும் தானமாக பெறப்பட்டது. உறுப்பு தானம் மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணா்விலும் மற்றும் தானம் பெற்ற உறுப்புகளை பயன்படுத்துவதிலும் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது என்றாா் அவா்.

4. தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) வெங்கையா நாயுடு 

ஈ) முனீஷ்வர் நாத் பண்டாரி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின்

செம்மொழியான தமிழையும் நாடு முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ்ப் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பை தமிழக அரசு தொடங்கியது.

● இந்த திட்டத்தின் கீழ் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடப் புத்தகங்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் வெளியிட்டார்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

5. மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கான தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) டெல்லி

ஆ) உத்தரபிரதேசம்

இ) குஜராத்

ஈ) அசாம்

விடை : (இ) குஜராத் 

மாநில சுற்றுச்சூழல் அமைச்சா்களுக்கான தேசிய மாநாடு குஜராத்தின் நா்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

● அந்த மாநாட்டை பிரதமா் மோடி காணொலி மூலம் தொடக்கிவைத்தாா்

6. திட (ம) திரவம கழிவு மேலாண்மையை சரிவர மேற்கொள்ளாத பின்வரும் எந்த மாநில அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 2000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ? 

அ) பஞ்சாப்

ஆ) கர்நாடகா

இ) அசாம்

ஈ) மகாராஷ்டிரா

விடை : (அ) பஞ்சாப் 

● திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக பஞ்சாப் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநிலங்களில் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது. 

● அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

● அப்போது, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் வெளியேறுவதை தடுக்கத் தவறியதற்காகவும், குப்பைகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கத் தவறிய காரணத்திற்காகவும் 2 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

7. அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ? 

அ) 2004

ஆ) 2010

இ) 2017

ஈ) 2020

விடை : (இ) 2020

● உச்சநீதிமன்ற நீதிபதி இந்திர பானர்ஜி 65 வயது நிறைவடைந்ததையடுத்து அண்மையில் ஓய்வு பெற்றார். 

● இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

● 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 

● தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்த்து மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன.

● இந்திரா பானர்ஜி ஓய்வுபெற்ற நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 29 ஆகவும் , அவர்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆகவும் குறைந்துள்ளது .

8. உலகின் சிறந்த பள்ளி பரிசுக்கான இறுதிப் போட்டியில் பின்வரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் பள்ளி இடம்பிடித்துள்ளது ? 

அ) மத்திய பிரதேசம் 

ஆ) ராஜஸ்தான் 

இ) மகாராஷ்டிரா

ஈ) தமிழ்நாடு 

விடை : (இ) மகாராஷ்டிரா 

உலகின் சிறந்த பள்ளி பரிசுக்கான இறுதிப் போட்டியில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கிராமப் பள்ளி இடம்பிடித்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்திய ஹாக்கி அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ? 

அ) ராகேஷ் கட்டியால் 

ஆ) போலாநாத் சிங்

இ) சேகர் குப்தா 

ஈ) திலீப் திர்கி 

விடை : (ஈ) தீலிப் திர்கி

● தேசிய அணி முன்னாள் கேப்டன் திலீப் திர்கி இந்திய ஹாக்கி அமைப்பின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

IV. முக்கிய தினங்கள்

10. World Rabbit Day 2022

Ans : September 24 



Friday, September 23, 2022

Current Affairs 2022 - September 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
              SEPTEMBER 23 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த திட்டத்தின் கீழ் சென்னையில் காவலர்களிடம் மனுக்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார் 

அ) உங்கள் துறையில் முதல்வர் 
ஆ) காவல் துறையில் முதல்வர்
இ) உங்கள் நன்பண் முதல்வர் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) உங்கள் துறையில் முதல்வர் 

காவலர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைந்திட “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு சென்று காவலர்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

● அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையொப்பமிட்டார்.

2. தமிழகத்தில் பரம்பரை மருத்துவர்களுக்கு ரூ--------- ஆக உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் ? 


அ) ரூ.1,500

ஆ) ரூ.2000

இ) ரூ.2500

ஈ) ரூ.3000

விடை : (ஈ) ரூ.3000

● தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுர்வேத, யுனானி (ம) ஹோமியோபதி மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3000 ஆக மாத ஓய்வூதியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது , அதற்கான உத்தரவை மு.க.ஸ்டாலின் அளித்தார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமர் நரேந்திர மோடியின் பிரபல வார்த்தைகளான அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும்,  அனைவரின் நம்பிக்கையுடன் , என்கிற தலைப்பில் அவரது உரைகள் அடங்கிய நூலின் முதல் பாகத்தை வெளியிட உள்ளவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) ராம்நாத் கோவிந்த் 

இ) எம். வெங்கையா நாயுடு

ஈ) நரேந்திர மோடி

விடை : (இ) எம். வெங்கையா நாயுடு

நூல் வெளியிடுபவர்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.

● நூலின் தலைப்பு : அனைவருடனும், அனைவரின் நலனுக்காகவும்,  அனைவரின் நம்பிக்கையுடன்.

● இந்த நூலில் கடந்த 2019 மே மாதத்தில் இருந்து 2020 மே மாதம் வரை பிரதமர் மோடியின் 86 உரைகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

4. உலகின் முதல் க்ளோனிங் ஓநாய் எந்த நாட்டின் நிறுவனம் உருவாக்கியுள்ளது ? 

அ) ஜப்பான்

ஆ) சீனா

இ) ஆப்பிரிக்கா

ஈ) கனடா

விடை : (ஆ) சீனா 

● சீன நாட்டின் சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் முதல்முறையாக ஆர்க்டிக் வன ஓநாய் வகையினை மரபணு படியெடுத்தல் ( குளோனிங் ) மூலம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

● பெயர் : மாயா - ஆரோக்கியம் என்று பொருள் 

● இந்த ஆர்க்டிக் ஓநாய் ஆனது வெள்ளை ஓநாய் (அ) துருவ ஓநாய் என்றும் அழைக்கப்படுகிறது.

● இந்த உயிரனமானது அழிந்து போவதை தடுப்பதை நோக்கமாக கொண்டு இது மேற்கொள்ளப்படுகிறது.

5. மத்திய அறிவியல் (ம) தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது INSPIRE திட்டத்தின் கீழ் எத்தனை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது ? 

அ) 27,000

ஆ) 33,000

இ) 47,000

ஈ) 53,000

விடை : (ஈ) 53,000

● INSPIRE என்பது The Innovation in Science Pursuit for Inspired Research.

● இது இந்திய அரசின் அறிவியல் (ம) தொழில்நுட்பத் துறையால் செயல் படுத்தப்பட்டுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக:-

1) இந்தியாவில் முதல்முறையாக மோட்டோ ஜிபி பந்தயம் நடைபெறவுள்ளது.

2) இந்தப் பந்தயம் 5 ஆண்டுகளில் 5 முறை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1 (ம) 2 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) 2 மட்டும்

● இந்தியாவில் மோட்டார் சைக்கிள் ஊக்குவிக்கும் வகையில்  முதல்முறையாக மோட்டோ ஜிபி பந்தயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

● இந்த பந்தயத்துக்கு கிராண்ட் ப்ரீ ஆஃப் பாரத் என பெயரிடப்பட்டிருக்கிறது.

● இந்தப் பந்தயம் 7ஆண்டுகளில் 7 முறை நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

IV. முக்கிய தினங்கள்

7. World Rhino Day 2022 

Ans : September 22 

Theme (2022) : Five Rhino Species Forever.

8. International Day of Sign Languages 2022 

Ans : September 23



Thursday, September 22, 2022

Current Affairs 2022 - September 22/ 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   SEPTEMBER 22 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) கீழடி
ஆ) மணலூர்
இ) ஆதிச்சநல்லூர்
ஈ) கொந்தகை 

விடை : (அ) கீழடி 

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

● கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல்துறை சாா்பில் பிப்.12-ஆம் தேதி முதல் 8-ஆம்கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. 

● ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண் மனித தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதில் அணியும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தந்தத்தாலான மணி கண்டெடுக்கப்பட்டது.

● இந்நிலையில், தற்போது தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த துருப்பிடித்த நிலையில் இரு துண்டுகளாக இரும்புக் கத்தி, ஆண்டி மணியால் ஆன ஒப்பனைக்கருவி, செப்பு தொங்கட்டான் உள்ளிட்ட பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள் பகண்டெடுக்கப்பட்டன.


2. வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வள்ளலார் - 200 என்ற இலச்சினை, தபால் உறையை வெளியிட்டு , ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைக்க உள்ளவர் யார் ? 

அ) ஆர்.என்.ரவி

ஆ) மு.க.ஸ்டாலின்

இ) மா.சுப்பிரமணியன் 

ஈ) சேகர் பாபு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வரும் அக்.5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் ‘வள்ளலாா் - 200’” என்ற இலச்சினை, தபால் உறையை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.

3. தமிழகம் முழுவதும் H1N1 இன்ஃளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எத்தனை நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 313

ஆ) 329

இ) 358

ஈ) 388

விடை : (ஈ) 388 

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

● தமிழகத்தில் கரோனாவுடன் , டெங்கு, இன்ஃளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

● மேலும் தமிழகம் முழுவதும் H1N1 இன்ஃளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 388 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


4. இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) ராஜஸ்தான்

ஈ) மணிப்பூர்

விடை : (ஆ) தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் கடற்பசு பாதுகாப்பகம், தமிழக கடற்கரைப் பகுதியில் (பாக்.விரிகுடா) 448 சதுர கி.மீட்டரில் அமையவுள்ளது.

● இதுதொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்துவரும் நிலையிலுள்ள, மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மன்னாா்வளைகுடா, பாக். விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

● இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீ. பரப்பில் தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.

● கடற்பசுவின் சிறப்பு: உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற்பசுக்கள், கடல் புற்களை உண்டு வளா்ந்து வருகின்றன. கடற்பசு, இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல காா்பனை அதிகளவில் நிலைப்படுத்தவும் உதவி செய்கிறது. கடல்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.

● பாக். விரிகுடாவையொட்டிய கரையோர மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீனவா்கள் வெற்றிகரமாக கடலில் விட்டுள்ளனா். இதைப் பாராட்டி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அவா்களுக்கு அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

● கடற்பசுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகின்றன. இப்போது சுமாா் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள், அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

● கட்டுப்பாடுகள் இல்லை: தமிழக அரசின் அறிவிக்கை மூலமாக எந்தவொரு புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்படப் போவதில்லை. கடற்பசு பாதுகாப்பகம் என்பது இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகமாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலா்கள் அனைவரும் பெருமை கொள்வா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி ) நிகழ் நிதியாண்டில் எத்தனை சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பிட்டுள்ளது ? 

அ) 4%

ஆ) 6%

இ) 7%

ஈ) 9%

விடை : (இ) 7% 

ஏற்கனவே ஜிடிபி 7.2% பதிவாகும் என கணித்த நிலையில் பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக நிகழ் நிதியாண்டில் ஜிடிபி 7% குறையும் என தெரிவித்துள்ளது. 

6. கூற்று : தேசிய சரக்கு கையாளுகை ( லாஜிஸ்டிக்ஸ் ) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காரணம் : சரக்குப் போக்குவரத்துச் செலவை குறைக்கும் நோக்கத்துடன்.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

பிரதமா் நரேந்திர மோடியால் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

● சரக்குப் போக்குவரத்துச் செலவை குறைப்பதுடன், இத்துறையில் இந்தியாவின் செயல்பாட்டை உலக அளவில் மேம்படுத்துவதே கொள்கையின் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● முக்கியத்துவம் வாய்ந்த இக்கொள்கையை தனது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை (செப்.17) பிரதமா் மோடி வெளியிட்டிருந்தாா். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13-14 சதவீதம் என்ற அளவில் உள்ள சரக்கு கையாளுகை செலவை விரைவில் ஓரிலக்கத்துக்கு குறைப்பதே இலக்கு என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

● இந்நிலையில், பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சரக்கு கையாளுகை கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

● கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சா்வதேச அளவுகோல்களுடன் ஒப்பிடும் வகையில் நாட்டின் சரக்கு கையாளுகை செலவை குறைக்க மேற்கண்ட கொள்கையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி சா்வதேச சரக்கு கையாளுகை செயல்பாட்டு தரக் குறியீட்டில் 44-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவை முன்னேற்றவும், இத்துறையில் தரவுகள் சாா்ந்த உறுதியான ஆதரவு அமைப்புமுறையை ஏற்படுத்தவும் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

● அமலாக்கம் கண்காணிப்பு: பிரதமரின் தேசிய செயல்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட அதிகாரமிக்க செயலா்கள் குழுவானது, இக்கொள்கை அமலாக்கத்தைக் கண்காணிக்கும். சரக்கு கையாளுகை நடைமுறைகள் தொடா்பான அளவுகோல்கள், ஒழுங்குமுறை, மின்னணுரீதியிலான மேம்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க செயலா்கள் குழு சாா்பில் பணிகள் மேம்பாட்டுக் குழு உருவாக்கப்படும்.

● கூடுதல் சேமிப்புக் கிடங்குகள், தரநிலைகள் ஊக்குவிப்பு, மின்னணுமயமாக்கம், தானியங்கி முறைகள், ஒருங்கிணைந்த சரக்கு கையாளுகை இணைப்புத் தளம் என இத்துறையில் சிறந்த அமைப்புமுறைகளை உருவாக்க கவனம் செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● ரூ.19,500 கோடியில் சூரிய மின்தகடுகள் திட்டம்: உயா்திறன் வாய்ந்த சூரிய மின்தகடுகள் உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்கீழ் ரூ.19,500 கோடி செலவிலான உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

● செமிகண்டக்டா்கள் உற்பத்தி திட்டத்தில் மாற்றங்கள்: நாட்டில் செமிகண்டக்டா்கள் (குறைகடத்திகள்), மின்னணு திரைகள் ஆகியவை உற்பத்திக்கான நிதியுதவி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

7. இந்தியாவில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக பின்வரும் யார் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது ? 

அ) வி.கே. பால்

ஆ) நிதின் குப்தா

இ) ராஜேஷ் பூஷண்

ஈ) எஸ். அபர்ணா

விடை : (அ) வி.கே. பால் 

● மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவின் பரிந்துரையின் பேரில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

● இந்த குழு நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் தலைமையில் 4 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

8. இந்தியாவின் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை தொடக்கி வைக்கவுள்ளவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) அமித் ஷா

ஈ) எஸ்.ஜெய்சங்கர் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

● குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெறவுள்ள இரு நாட்கள் மாநாட்டை பிரதமர் மோடி நாளை செப். 23 காணொலி மூலம் தொடக்கி வைக்கவுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள்

9.ஐரோப்பிய கண்டத்திலுள்ள நார்த் சேனல் நீரிணை கடந்து வரலாறு படைத்துள்ள இந்தியாவின் முதல் நீச்சல் ரிலே அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் ? 

அ) அர்ஜூன் குப்தா

ஆ) எல்விஸ் அலி ஹஸாரிகா 

இ) ரிமோ சாஹா 

ஈ) ஆ (ம) இ

விடை : (ஈ) அ (ம) இ

● இந்தியாவைச் சோ்ந்த நீண்டதூர நீச்சல் வீரா்களான எல்விஸ் அலி ஹஸாரிகா, ரிமோ சாஹா ஆகியோா் ரிலே நீச்சல் மூலமாக நாா்த் சேனல் நீரிணையை செவ்வாய்க்கிழமை கடந்து வரலாறு படைத்தனர். 

● ஐரோப்பிய கண்டத்திலுள்ள அந்த நீரிணை பகுதியை நீந்திக் கடந்த, இந்தியா மற்றும் ஆசியாவைச் சோ்ந்த முதல் ரிலே அணி என்ற பெருமையையும், சாதனையையும் அவா்கள் பெற்றுள்ளனா். இதில் எல்விஸ் அஸ்ஸாமையும், ரிமோ மேற்கு வங்கத்தையும் சோ்ந்தவா்களாவா்.

● நாா்த் சேனலானது, வடக்கு அயா்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் இணைக்கும் 42 கி.மீ. தூரமுள்ள நீரிணை பகுதியாகும். இதை அவா்கள் 14 மணி நேரம் 38 நிமிஷங்களில் கடந்துள்ளனா். 

● வடக்கு அயா்லாந்தின் டோனாகாடி பகுதியில் தொடங்கி, ஸ்காட்லாந்திலுள்ள போா்டேப்ட்ரிக் என்ற இடத்தில் இந்த ரிலேவை இருவரும் நிறைவு செய்துள்ளனா். 

● இந்த நீச்சலின்போது வழிநெடுக இருக்கும் ஜெல்லி ரக மீன்கள் உள்பட, பல்வேறு சவால்களை இருவரும் சந்தித்துள்ளனா்."

 

 


Wednesday, September 21, 2022

Current Affairs 2022 - September 20 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 SEPTEMBER 20 /2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நான்காவது மாநில மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) சென்னை 
ஆ) மதுரை
இ) சேலம்
ஈ) தேனி 

விடை : (அ) சென்னை 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்

2. உலக தூய்மை எரிசக்தி செயல் அமைப்பின் 13 ஆவது தூய்மை எரிசக்தி அமைச்சர்கள் நிலை மற்றும் 7 ஆவது புதுமுறை காணலுக்கான அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு எங்கு நடைபெறுகிறது ? 

அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஆஸ்திரேலியா 

விடை : (இ) அமெரிக்கா 

● மாநாடு நடைபெறும் இடம் : அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

● பல்வேறு நாடுகளை சேர்நத
 31 அமைச்சர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள்,நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள், தனியார் நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.

● இந்த மாநாடு செப்டம்பர் 21 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இந்தியா சார்பில் மத்திய அறிவியல்,தொழில்நுட்பம், பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்கிறார். 

3. லோக்பால் (ம) லோக் ஆயுத்த சட்டம் 2013 இன் படி, எந்த ஆண்டு லோக்பால் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது ? 

அ) 2009
ஆ) 2013
இ) 2016
ஈ) 2019

விடை : (ஈ) 2019 

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட லோக்பால் அமைப்புக்கு நிகழாண்டு ஆக. 21 வரை 1,719 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 136 புகாா்கள் விசாரணைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆா்டிஐ) பெறப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● லோக்பால் அமைப்பிடமிருந்து ஆா்டிஐ மூலம் பெறப்பட்டிருந்த தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: நிகழாண்டு ஆகஸ்ட் 21 வரை 1,719 ஊழல் புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் அளிக்கப்பட்ட 134 புகாா்களில், 84 புகாா்கள் தீா்க்கப்பட்டுள்ளன. 50 புகாா்கள் விசாரணை உள்பட சில காரணங்களால் நிலுவையில் உள்ளன. வரையறுக்கப்பட்ட வடிவில் இல்லாத புகாா்கள் 1,585-இல் 3 புகாா்கள் மட்டும் விசாரணைக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

● குறிப்பு : லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டம் 2013-இன் படி, கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்பால் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்ததுடன், அதன் தலைவரும், பிற உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டனா்.

● லோக்பால் அமைப்பானது தலைவா், நீதித் துறையைச் சாா்ந்த 4 உறுப்பினா்கள் மற்றும் நீதித் துறையைச் சாராத 4 உறுப்பினா்களைக் கொண்டது. லோக்பாலின் முதல் தலைவா் நீதிபதி பினாகி சந்திர கோஷ், கடந்த மே 27-ஆம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து நிரந்தர தலைவா் இன்றி லோக்பால் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

●  மேலும், நீதித் துறையைச் சாா்ந்த 2 உறுப்பினா் பதவியிடங்களும் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன.

4. கடந்த 2021 - 2022 ஆம் நிதியாண்டில் வழிபாட்டு தலங்களுக்கு இந்திய குடும்பங்கள் காணிக்கையாக வழங்கிய தொகை எத்தனை கோடி என ஆய்வில் தெரியவந்துள்ளது ? 

அ) 16,600 கோடி
ஆ) 19,000 கோடி
இ) 22,000 கோடி
ஈ) 25,000 கோடி 

விடை : (அ) 16,600 கோடி 

● ஆய்வு வெளியீடு : அசோகா பல்கலைக்கழகம் , 18 மாநிலங்களில் உள்ள 81,000 குடும்பங்களுடன இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
● ஒட்டுமொத்தமாக நன்கொடை (ம) காணிக்கையாகவும் ரூ. 23,700 கோடி.
● மத வழிபாட்டு தலங்களில் : ரூ.16,600 கோடி.
● பிச்சைக்காரர்களுக்கு: ரூ. 2,900 கோடி .
● நண்பர்கள் (ம) குடும்பங்களுக்கு : ரூ.2000 கோடி.
● மத வழிபாடு சாராத அமைப்புகளுக்கு : ரூ. 1.100 கோடி.
● வீட்டு பணியாளர்களுக்கு : ரூ.1000 கோடி. 

5. இந்தியா - அமெரிக்கா கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி தமிழகத்தில் எங்கு நடைபெற்றது ? 

அ) நாகபட்டினம்
ஆ) சென்னை
இ) திருநெல்வேலி
ஈ) கன்னியாகுமரி 

விடை : (ஆ) சென்னை

இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

● இந்திய கடலோர காவல் படையினா், நட்பு நாடுகளின் கடலோர காவல் படையினருடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் மிட்ஜெட் 757 என்ற கடலோர காவல் படை கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கப்பல் மற்றும் அதிகாரிகள், வீரா்கள் அடங்கிய குழுவினரை அமெரிக்க துணைத் தூதா் ஜூடித் ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை உயா் அதிகாரிகள் வரவேற்றனா்.

● இதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கைப்பந்து போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

● நான்காம் நாளான திங்கள்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மிட்ஜெட் 757 கப்பலுடன் இந்திய கடலோரக் காவல் படையின் அன்னிபெசன்ட் ரோந்துக் கப்பல், இடைமறிக்கும் படகுகள், ஹெலிகாப்டா் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.

● கூட்டுப் பயிற்சியின்போது கடல் கொள்ளையா்களால் கடத்திச் செல்லப்படும் ஒரு கப்பலை கடல்சாா் உத்திகள் மற்றும் தந்திரங்கள் மூலம் கூட்டு நடவடிக்கையில் இறங்கி கப்பலை பத்திரமாக மீட்டு கடல் கொள்ளையா்களையும் கைது செய்வது, ஒருங்கிணைந்த கூட்டு தளவாடங்கள் பரிமாற்றம், தேடல் மற்றும் மீட்பு, எரியும் கப்பல் மீதான தீயணைப்புப் பணிகள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

● கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பலான, மிட்ஜெட் 757 மாலத்தீவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

6. மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் எத்தனை உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் ? 

அ) 250

ஆ) 390 

இ) 500

ஈ) 620

விடை: (இ) 500

● கடந்த செப். 8 ஆம் தேதி பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவால் மறைந்தார்.

● அவரது உடல் செப்.19 நல்லடக்கம் செய்யப்பட்டது. 

● அவரது இறுதி சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்பட உலக நாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்கள் பங்கேற்றனர்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. 40 ஆவது கோல்டன் குளோவ் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 19

ஆ) 21

இ) 31

ஈ) 35 

விடை : (அ) 19 

● போட்டி நடைபெற்ற இடம் : செர்பியா.

● இந்தியா இருபால் பிரிவிலுமாக சேர்த்து 19 பதக்கங்களை வென்றுள்ளது.

● அவை : 10G, 2S, 7B

● குறிப்பு: சிறந்த வீரர்: ஜாடுமனியும் ( இந்தியா ) ; சிறந்த வீராங்கனை : ரவீனா ( இந்தியா) வென்றுள்ளனர். 

8. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் இந்தியாவின் பஜ்ரங் புனியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம்

● போட்டி நடைபெற்ற இடம் : செர்பியா.

● குறிப்பு : உலக சாம்பியன்ஷிப்பில் 4 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவர். 

● 2013 - வெண்கலம்; 2018 - வெள்ளி ; 2019 - வெண்கலம் ; 2022 - வெண்கலம். 

Tuesday, September 20, 2022

Current Affairs 2022 - September 19 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                SEPTEMBER 19/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அடுத்த மாதம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எத்தனை வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது ?

அ) 13
ஆ) 17
இ) 07
ஈ) 05

விடை : (அ) 13 

 ● அக்டோபர் மாதம் முதல் புதன்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை 11,333 இடங்களிலும், வியாழன்தோறும் பள்ளிகளிலும் கரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. 

● இந்த முகாம்களில் கர்ப்பிணிகள், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. நடப்பு நிதியாண்டில் ( 2022 - 2023 ) முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரிவாய் எத்தனை சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 50%
ஆ) 46%
இ) 30%
ஈ) 28%

விடை : (இ) 30% 

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

● இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் 17-ஆம் தேதி வரையிலான காலம்வரை மொத்த நேரடி வரி வருவாய் ரூ.8,36,225 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம். பெருநிறுவன வரியாக ரூ.4.36 லட்சம் கோடியும், தனிநபா் வருமான வரியாக ரூ.3.98 லட்சம் கோடியும் வசூலானது.

● அதில் சுமாா் ரூ.1.35 லட்சம் கோடியானது ‘ரீஃபண்டாக’ திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. அந்தத் தொகை போக, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகர நேரடி வரி வருவாய் 23 சதவீதம் அதிகரித்து சுமாா் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் முன்கூட்டிய வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.2.95 லட்சம் கோடியாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவனங்கள் ரூ.2.29 லட்சம் கோடியை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன.

● நேரடி வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்து வருவது, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதை வெளிக்காட்டுகிறது. மத்திய அரசின் நிலையான கொள்கைகளும், வரி செலுத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியதும் வருவாய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். வரி வசூல் நடைமுறையில் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படுவதால் வரி செலுத்தப்படாமல் தவிா்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

● வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களும் துரிதமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களில் செப்டம்பா் 17-ஆம் தேதிவரை 93 சதவீத படிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. ஜம்மு - காஷ்மீரின் பின்வரும் எந்த மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் ? 

அ)ராம்பன் 

ஆ) கதுவா 

இ) சம்பா 

ஈ) தோடா 

விடை : (அ) ராம்பன் 

● ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

● அங்கிருந்து ஆயுதங்கள்,  வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

4. மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்திய மக்கள் சார்பில் பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) அமித் ஷா

ஈ) எஸ். ஜெய்சங்கர் 

விடை : (ஆ) திரௌபதி முர்மு 

● பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி மறைந்தார்.

● அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய மக்கள் சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். 

5. அண்மையில் நிறைவடைந்த இந்தியா - ஜப்பான் இடையிலான கடல்சார் போர்ப் பயிற்சி எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது ? 

அ) 2007

ஆ) 2012

இ) 2017

ஈ) 2020

விடை : (ஆ) 2012 

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஜிமெக்ஸ் 22, வங்கக் கடலில் செப்டம்பர்17 அன்று வழக்கமான மரபுப்படி இரு தரப்பும் பரஸ்பரம் பிரியாவிடை கொடுத்து முடிவுக்கு வந்தது.

● ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், ஒரு வார கால பயிற்சியில் பங்கேற்றன.

● ஜிமெக்ஸ் 22 இரண்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்ட சில முக்கிய பயிற்சிகளைக் கண்டது. இரு தரப்பும் மேம்பட்ட நிலை நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், ஆயுதத் துப்பாக்கிச் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் கப்பலில் செல்லும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன.

● 2012 இல் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் -இன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்தது

 III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. சென்னை ஓபன் டபிள்யுடிஏ (WTA) 250 டென்னிஸ் போட்டி 2022 ல் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) லிண்டா ஃபுருவிர்டோவா 

ஆ) கேப்ரியலா 

இ) ஸ்டெஃபானி 

ஈ) பிளிஸ்கோவா 

விடை : (அ) லிண்டா ஃபுருவிர்டோவா

● செக். குடியரசைச் சேர்ந்த 17 வயது லிண்டா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

● இவரின் முதல் WTA சாம்பியன் பட்டமாகும்.

● இவருக்கு கோப்பையும், ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

● சாம்பியன் பட்டம் வழங்கியவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

7. சென்னை ஓபன் டபிள்யுடிஏ (WTA) 250 டென்னிஸ் போட்டி 2022 ல் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்கள் யார் ? 

1) கேப்ரியலா 

2) மகதா லிஸேட 

3) ஸ்லாமிட்ஸ் 

4) ஸ்டெஃபானி 

அ) 1,2

ஆ) 1,3

இ) 2,4

ஈ) 1,4

விடை : (ஈ) 1,4 

● இரட்டையர் பிரிவில் கேப்ரியலா ( கனடா ) மற்றும் ஸ்டெஃபானி ( பிரேசில் ) சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 

● சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.9 லட்சம் ரொக்கப் பரிசும், 280 WTA புள்ளிகளும் வழங்கப்பட்டது. 






Sunday, September 18, 2022

Current Affairs 2022 - September 17 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
               SEPTEMBER 17 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்:  

1. தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் , முதல்வர் தலைமை வகித்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தென்மண்டல மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம் 
ஆ) மதுரை 
இ) சென்னை 
ஈ) தேனி 

விடை : (ஆ) மதுரை 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தென்மண்டல மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டிற்குத் தலைமை வகித்த முதல்வா் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 

● சிறுதொழில் வளா்ச்சி திட்டங்கள்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லாக் கடன் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ், 81 நிறுவனங்களுக்கு ரூ.20 கோடியே 13 லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தாய்கோ வங்கி சீரமைப்பு, கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

● புதிய தொழில் குழுமங்கள் தொடக்கம்: அந்தந்த பகுதிக்குரிய சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன்படி,

● மதுரை விளாச்சேரி பொம்மைக் குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரைக் குழுமம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மகளிா் நெசவுக் குழுமம் ஆகியன ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் அமைப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

● இதேபோல, காஞ்சிபுரம் நரிக்குறவா் பாசிமணி குழுமம், திருநெல்வேலியில் சமையல் பாத்திரக்குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம்,

● கிருஷ்ணகிரியில் மூலப்பொருள்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம், ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

எம்ஓடி பதிவில் புதிய நடைமுறை: தொழில் முனைவோா்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் (எம்ஓடி) ஒப்படைத்து சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனா். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது, மீண்டும் ‘எம்ஓடி’ பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

● மதுரையில் டைடல் பூங்கா: கடந்த 2000- இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி சென்னையில் திறந்த வைத்த டைடல் பூங்கா, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்போது திருப்பூா், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம், வேலூா் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக,

● தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி, நிதிச் சேவை போன்ற அறிவு சாா்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிா்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்.

2. தமிழகத்தில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனை உடையவர்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி

இ) முனீஷ்வர் நாத் பண்டாரி 

ஈ) பொன்முடி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களை புத்தாக்க சிந்தனை உடையவா்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்: தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளி கல்வித் துறையும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. நிகழ் ஆண்டில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சம் மாணவா்களுக்கும், 3 ஆயிரத்து

● 120 ஆசிரியா்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணா்வு அளிக்கப்படும்.மாணவா்களிடையே புத்தாக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

● மேலும் தொழில்முனைவோருக்கு விருதுகள்: 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

● சிறந்த தொழில் முனைவோா் விருது (தூத்துக்குடி கல்பகாகெமிக்கல்ஸ்), வேளாண் சாா்ந்த தொழில் விருது (திருப்பத்தூா் மாவட்டம் ப்ரெஸ்ரா பிக்ல்ஸ்), தரம் மற்றும் ஏற்றுமதி விருது (தூத்துக்குடி ரமேஷ் ப்ளவா்ஸ்), சிறந்த மகளிா் தொழில்முனைவோா் விருது (செங்கல்பட்டு மாவட்டம் ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ்) சிறப்புப் பிரிவினருக்கான விருது (புதுக்கோட்டை மாவட்டம் பிரபு இண்டஸ்ட்ரியல்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளான முறையே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பரோடா வங்கி ஆகிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொழிற்பேட்டைகளில் பொது வசதி: சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கி கடனுக்கான தடையின்மைச் சான்று, குடிநீா் இணைப்பு, விற்பனைப்பத்திரம் பெறுதல் உள்ளிட்ட 12 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான வசதியையும், கரூா் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடியில், ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டடங்களையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

3. கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருது யாருக்கு  வழங்கப்பட்டுள்ளது ? 

அ) ஆர். மகாதேவன்

ஆ) ஜெகன்மோகன்

இ) அ. முத்துலிங்கம் 

ஈ) கே.எஸ். ராதாகிருஷ்ணன் 

விடை: (இ) அ. முத்துலிங்கம் 

கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் கி.ரா. விருது, எழுத்தாளா் அ.முத்துலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. 

● கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகா் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளா் அ.முத்துலிங்கம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

● இந்த விருது வழங்கும் நிகழ்வானது, கி.ரா.வின் பிறந்த நாளான செப்டம்பா் 16 (வெள்ளிக்கிழமை) இணையவழியில் நடைபெற்றது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2023 ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள நாடு ? 

அ) சீனா

ஆ) தஜிகிஸ்தான் 

இ) இந்தியா 

ஈ) பாகிஸ்தான் 

விடை : (இ) இந்தியா 

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

● ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வெள்ளிக்கிழமை ஏற்றது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.

● கடந்த 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அக்கூட்டமைப்புக்குத் தலைமையேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. இந்தியாவின் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) நரேந்திர மோடி

இ) ராம்நாத் கோவிந்த் 

ஈ) எஸ். ஜெய்சங்கர் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளாா்.

● அதன்படி, நமீபியாவில் இருந்து கொண்டுவரப்படும் 5 பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கிப் புலிகள், பிரதமா் மோடியால் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட உள்ளன.

● குறிப்பு : நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

6. பின்வரும் எந்த நாட்டின் கடலோர காவல் படை கப்பலான மிட்ஜெட் 757 இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவும் , நல்லெண்ணப் பயணமாகவும் சென்னை துறைமுகம் வந்தடைந்தது ? 

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) ஆஸ்திரேலியா 

ஈ) அமெரிக்கா 

விடை : (ஈ) அமெரிக்கா

அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றி மறைந்த துணை தளபதியான ஜான் ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.

● இதனைத் தொடா்ந்து நான்கு நாள்கள் இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

● இறுதி நாளான செப்.19-ஆம் தேதி சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. இந்தியாவின் 76 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார் ? 

அ) பிரணவ் ஆனந்த்

ஆ) ஏ.ஆர். இளம்பரிதி 

இ) எஸ். பாலசந்திரன்

ஈ) யோகேஷ் குப்தா 

விடை : (அ) பிரணவ் ஆனந்த்

கர்நாடகாவைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76 ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இருக்கிறார். 

● யூத் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரணவ் ஆனந்த் எமன் உஹன்யாவை எதிர்த்து விளையாடினார். இதில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான கடைசி தகுதியான 2500 தரவரிசை புள்ளியை தாண்டினார்.

● கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற சர்வதேச செஸ் தரவரிசை புள்ளிகளில் 2500 என்ற அளவை எட்ட வேண்டும்.


Friday, September 16, 2022

Current Affairs 2022 - September 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

 GK SHANKAR CURRENT AFFAIRS
              SEPTEMBER 16 / 2022 
( Pdf Download Link at the Bottom of this Post )
I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) பொன்முடி 
ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

நூற்றாண்டில் பசிப்பிணி போக்கிய பாதை :-
மதிய உணவு என்ற திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவா் அயோத்திதாச பண்டிதா். 1890-இல் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதைப் பற்றி அயோத்திதாச பண்டிதா் எழுதியுள்ளாா்.

●  1920-இல் நீதிக்கட்சி ஆட்சியின்போது சென்னை மேயராக இருந்த சா் பி.டி. தியாகராயா், சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா். சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகள் முன்பாக நிதியை காரணம் காட்டி ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டது.

● இதன் பின்னா் , 1956-இல் அப்போதைய முதல்வா் காமராஜா் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்கினாா். திமுக ஆட்சியிலும் இந்தத்திட்டம் தொடா்ந்தது. 

● 1971-இல் முதல்வா் மு.கருணாநிதி ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். 

● 1972-இல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கும், கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. 

● இதைத்தொடா்ந்து அதிமுக ஆட்சியில் முதல்வா் எம்ஜிஆா், ஆட்சியின்போது சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

●  1989-இல் சத்துணவுத் திட்டம் முடக்கப்படும் என்று எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தபோது, ஆட்சியில் அமா்ந்த முதல்வா் மு.கருணாநிதி முட்டை, பயறு உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி திட்டத்தை மேம்படுத்தினாா்.

●  2010 முதல் வாரம் 5 நாள்களும் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

2. இ- மொபிலிட்டி தொடர்பான இணையவழி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ள கல்வி நிறுவனம்/அமைப்பு ? 

அ) ஐஐடி மும்பை

ஆ) ஐஐடி கான்பூர்

இ) ஐஐடி சென்னை 

ஈ) ஐஐடி பெங்களூரு 

விடை : (இ) ஐஐடி சென்னை 

தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

● இந்த இணையவழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 4 தொகுதிகள் தொழில்துறையில் பணியில் இருப்பவா்களுக்கு ஏற்றவாறு, தொழில்துறை நிபுணா்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

● இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ‘ட்ரெண்டுகள்’, தொழில்துறை தேவைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடா்ந்து மேம்படுத்தப்படும். 

● இதில் இ-மொபிலிட்டி எக்கோ சிஸ்டம், பவா் எலெக்ட்ரானிக்ஸ், பேட்டரி இன்ஜினியரிங், பவா் ட்ரெய்ன்ஸ், தொ்மல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம்பெற்றுள்ளன.

● அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள். 

3. தமிழகத்தில் ஹெச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா காய்சலுக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 213

ஆ) 131

இ) 313

ஈ) 282

விடை : (ஈ) 282 

● H1N1 Influence virus அறிகுறிகள் : 

காய்ச்சல், தும்மல், இருமல், சளி, தலைவலி, தொண்டைவலி, உடல்சோர்வு. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை எங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிடுகிறார் ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) மகாராஷ்டிரா

ஈ) மேற்கு வங்கம் 

விடை : (அ) தில்லி

தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

● சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. 

● ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை அந்த நூல் விவரிக்கிறது.

● அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

● இந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

● நூல் வெளியீட்டுக்கு முன், தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை விளக்கும் கண்காட்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

● ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. அண்மையில் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் சட்டமேலவையில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது ? 

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) கர்நாடகா

ஈ) குஜராத் 

விடை : (இ) கர்நாடகா 

● கர்நாடகா முதல்வர் : பசவராஜ் பொம்மை.

6. ஜார்க்கண்டில் அரசுப் பணியில் எஸ்சி,  எஸ்டி பிரிவினர்,  ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பினிவினருக்கு எத்தனை சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 66%

ஆ) 77%

இ) 55%

ஈ) 44% 

விடை : (ஆ) 77%

7. பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம் 

விடை : (இ) குஜராத் 

● குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

● முன்பு : அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி. 

8. நிகழாண்டு இலங்கைக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு ? 

அ) சீனா

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா 

விடை : (ஆ) இந்தியா 

● இந்தியா நிகழாண்டில் இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் கடன் இலங்கைக்கு அளித்துள்ளது. 

9. அண்மையில் மறைந்த டத்தோ டாக்டர் எஸ்.சாமிவேலு எந்த நாட்டை சேர்ந்த தமிழர் ஆவார் ? 

அ) சிங்கப்பூர்

ஆ) மலேசியா

இ) அமெரிக்கா

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) மலேசியா 

● மலேசியா தமிழரும் அந்நாட்டின் முன்னாள் அமைச்சருமான டத்தோ டாக்டர் எஸ்.சாமிவேலு அண்மையில் காலமானார். 

● விருதுகள் : மலேசியாவின் உயரிய டத்தோ துன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

● இந்திய அரசின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பாரதிய பிரவாஸி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. 

● இந்த விருதை பெற்றுள்ள முதல் மலேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். 

● முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருதையும் பெற்றுள்ளார். 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. தொழில்முறை டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள ரோஜர் ஃபெடரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஆப்பிரிக்கா

ஈ) சுவிட்ஸர்லாந்து 

விடை : (ஈ) சுவிட்ஸர்லாந்து 

● பதக்கங்களும் பட்டங்களும் : 

¤ 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.

¤ 5 சீசன்களில் உலகின் நம்பர் 1 வீரராக நிறைவு செய்தார். 

Click here to Download the Pdf 



Thursday, September 15, 2022

Current Affairs 2022 - September 15 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                SEPTEMBER 15 / 2022 

( Swipe Down to Download pdf )

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கு தொடக்கி வைத்தார் ? 

அ) சென்னை 
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) சேலம் 

விடை : (ஆ) மதுரை 

● அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடக்கி வைத்தார். 

2. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த சமூகங்களைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்கும் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) நரிக்குறவர்கள் 
ஆ) காடு குருபா 
இ) குருவிக்காரர்கள் 
ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களான நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

● நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கத்தைச் சேர்ந்தவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

● எம்.பி.சி.ஆக இருந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். 

● தற்போது அதன் விளைவாக நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. தமிழகத்தில் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி எனும் திட்டத்தை எங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் ? 

அ) சென்னை

ஆ) மதுரை

இ) சேலம்

ஈ) தேனி 

விடை : (அ) சென்னை 

● சிற்பி திட்டம் : 

¤ பள்ளிக் குழந்தைகளை நல்வழியில் செல்ல வகை செய்யும் சிற்பி திட்டத்தில் பங்கேற்கும் மாணவா்களுக்கு தனிச் சீருடை வழங்கப்பட உள்ளது.

¤ இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக சிற்பி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ரூ.4.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

¤ சென்னையில் 100 பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு நல்லொழுக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவா்களுக்கு அளிக்கப்படும். காவல் துறை அதிகாரிகளும், துறை சாா் நிபுணத்துவம் பெற்றவா்களும் பயிற்சி வகுப்புகளை நடத்துவா். இதற்கென பிரத்யேகமாக புத்தகம் வழங்கப்படும்.

¤ சத்தான உணவு: சிற்பி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 5,000 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதில், மாணவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764. மாணவிகள் 2 ஆயிரத்து 236. மொத்தம் 5 ஆயிரம் போ். இந்தத் திட்டத்தின் நோக்கமாக சில பண்புநலன்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன.

¤ அதன்படி, சமத்துவ உணா்வு, மதச்சாா்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை

¤ வளா்த்தல், காவல் துறை எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பதை கவனிக்கச் செய்தல், வகுப்புவாதம், போதை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிராக மாணவா்களை உருவாக்குதல் ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தில் இணையும் மாணவா்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படும்.

¤ பாட வேளையின் போது, முளைகட்டிய பயறு வகைகள், இனிப்பு கொழுக்கட்டை, பழங்கள் ஆகியன சிற்றுண்டிகளாக வழங்கப்படும்.

¤ கவாத்துப் பயிற்சி, போக்குவரத்து விதிகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கப்படும். மேலும், மாணவ, மாணவியா்கள் சென்னையில் புகழ்பெற்ற எட்டு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா்.

4. தமிழகத்தில் காவல் துறையைச் சேர்ந்த எத்தனை பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) 113

ஆ) 127

இ) 131

ஈ) 150 

விடை : (ஆ) 127 

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

● இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

● இந்த ஆண்டு, காவல் துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் என்று மொத்தம் 127 பேரின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. மத்திய அரசின் புதிய அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டர்னி ஜெனரல் ) நியமிக்கப்படவுள்ளவர் யார் ? 

அ) கே.கே. வேணுகோபால் 

ஆ) முகுல் ரோத்தகி 

இ) கோ. சங்க்கரன்

ஈ) எல். பாலமுருகன்

விடை : (ஆ) முகுல் ரோத்தகி 

● மூத்த வழக்குரைஞரான முகுல் ரோத்தகி மத்திய அட்டர்னி ஜெனரலாக இரண்டாவது முறையாக நியமிக்கப்படவுள்ளார். 

● முன்பு : கே.கே. வேணுகோபால் இந்த பதவியில் இருந்தார். 

● குறிப்பு : அட்டர்னி ஜெனரல் பதவிக் காலம் 3 ஆண்டுகளைக் கொண்டது.

6. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22 ஆவது மாநாடு எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) உஸ்பெகிஸ்தான்

ஆ) கிர்கிஸ்தான்

இ) இந்தியா

ஈ) பாகிஸ்தான் 

விடை : (அ) உஸ்பெகிஸ்தான்

● 22 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு.

● நடைபெறும் தேதி (ம) இடம் : செப் 15 ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளது, சாமர் கண்ட் நகர், உஸ்பெகிஸ்தான். 

● உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

● மாநாட்டின் பார்வையாளர் நாடுகள் : ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா, கம்போடியா,நேபாளம், இலங்கை, துருக்கி, ஆர்ம்னியா, அஜர்பைஜான்.

● ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு : 

¤ தலைமையிடம் : பெய்ஜிங், சீனா

¤ உறுப்பு நாடுகள் (8)  : சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா (ம) பாகிஸ்தான். 

7. இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை சதவீதமாக பதிவாகியுள்ளது ? 

அ) 15.88%

ஆ) 12.41%

இ) 11.64%

ஈ) 33.13%

விடை : (ஆ) 12.41% 

8. மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், இந்திய மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் லண்டன் செல்ல உள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ஜகதீப் தன்கர்

இ) திரௌபதி முர்மு 

ஈ) எஸ். ஜெய்சங்கர்

விடை : (இ) திரௌபதி முர்மு 

● மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி செப். 19 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள்

9. இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப்பில் இந்தியா மொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 31

ஆ) 13

இ) 25

ஈ) 9

விடை : (இ) 25 

● 25 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆம் இடம் பிடித்துள்ளது. 

● 25 பதக்கங்கள் : 3G, 8S, 14B 

IV. முக்கிய நிகழ்வுகள் 

10 ) International Day of Democracy 2022 

Ans : September 15

Theme (2022) The Importance of media freedom to democracy, peace & delivering on the SDG. 

Click here to Download Pdf 

Wednesday, September 14, 2022

Current Affairs 2022 - September 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  SEPTEMBER 14 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளவர் ? 

அ) முனீஸ்வர் நாத் பண்டாரி 
ஆ) எம். துரைசாமி
இ) கோ. சங்க்கரன்
ஈ) ஞானசேகரன்

விடை : (ஆ) எம். துரைசாமி

முன்பு : முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. தேசிய அத்தியாவசிய மருந்து (என்எல்இஎம்) பட்டியல் 2022 ல் எத்தனை மருந்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் ? 

அ) 331
ஆ) 354
இ) 384
ஈ) 414

விடை : (இ) 384 

அனைத்துத் தரப்பினருக்கும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் (என்எல்இஎம்) 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
 
● இந்தப் பட்டியலில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பு), நோய்த் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட 34 புதிய மருந்துகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

● முந்தைய பட்டியலில் இருந்த முக்கியத்துவமற்ற 26 மருந்துகள்நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுடன் இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
● தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல் 1996-ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கடைசியாக 2015-ஆம் ஆண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் இந்தப் பட்டியலை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 2018-ஆம் ஆண்டு மருந்துகளுக்கான சுதந்திரமான தேசிய நிலைக் குழுவை (எஸ்என்சிஎம்) அமைத்தது.

●  பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்தக் குழு, பட்டியலை கடந்த வாரம் சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022- ஆண்டு தேசியப் பட்டியலை வெளியிட்டார். 

● பட்டியல் : பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, இரினோடெகன் ஹெச்சிஐ டிரைஹைட்ரúட், லெனலிடோமைடு, லியூப்ரோலைடு அசிடேட் ஆகிய நான்கு முக்கிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும், ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம் போன்ற தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தில் (ரோட்டா வைரஸ் தடுப்பூசி) தடுப்பூசிகளும் இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

2) இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக அதிகரித்துள்ளது.

● தோ்தல் ஜனநாயகத்தின் தூய்மையைக் காக்கவும், பெரும் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

● தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனூப் சந்திர பாண்டே ஆகியோா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்ப்பட்டுள்ளது.

● இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரிபாா்க்கும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட முகவரியில் அந்த அரசியல் கட்சிகள் செயல்படாதது தெரியவந்ததன் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

● மேலும், பிகாா், தில்லி, கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● இதுபோல கடந்த மே 25-ஆம் தேதி 87 அரசியல் கட்சிகளின் பதிவும், ஜூன் 20-ஆம் தேதி 111 அரசியல் கட்சிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த மே 25-ஆம் தேதிமுதல் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உள்ளான கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக உயா்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகளும் உடனடியாக நீக்கப்படும். 1968 தோ்தல் சின்ன நடைமுறையின் கீழான பலன்களை இந்தக் கட்சிகள் இனி பெற முடியாது. அதுபோல, செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், எந்தவித பலனும் பெற முடியாது.

● நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள் நிவாரணம் பெற கட்சி தொடா்ந்து செயல்படுவதற்கான ஆதாரங்கள், ஆண்டு வாரியான தணிக்கை ஆவணங்கள், பங்களிப்பு அறிக்கை, தோ்தல் செலவின அறிக்கை, அலுவலக நிா்வாகிகள் விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி பரிவா்த்தனை தொடா்பான விவரங்கள் ஆகியவற்றுடன் 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அல்லது தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 கட்சிகள் : 

● தமிழகத்தில், பதிவு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் வரை தோ்தலில் போட்டியிடாத 13 கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

4. இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா (ம) தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து எங்கு செமிகண்டக்டர் தொழிற்சாலை (ம) மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்பு பிரிவை நிறுவவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா 

இ) ராஜஸ்தான்

ஈ) குஜராத் 

விடை : (ஈ) குஜராத் 

இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டா் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்புப் பிரிவை நிறுவ மாநில அரசுடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

● குஜராத் தலைநகா் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கலந்துகொண்டனா். வேதாந்தா-ஃபாக்ஸ்கான் இணைந்து மேற்கொள்ளும் ரூ. 1.54 லட்சம் கோடி முதலீட்டில், சுமாா் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● காா் உள்ளிட்ட வாகனங்கள், கைப்பேசிகள், பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டா் சிப்-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, இந்த சிப்களுக்காக இறக்குமதியை இந்தியா சாா்ந்துள்ளது. உலகில் 8 சதவீத செமிகண்டக்டா் சிப்களை தைவான், சீனா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய மூதலீட்டின் மூலம் சிப்களை தயாரிக்கும் மையமாக இந்தியா திகழும் என்பதால் செமிகண்டக்டா் சிப்களுக்கு பிற நாடுகளைச் சாா்ந்திருப்பதற்கான தேவை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● மாநில செமிகண்டக்டா் கொள்கை: செமிகண்டக்டா் தயாரிப்புக்கான தொழில் சூழலை உருவாக்க, அதற்கென்று தனிக் கொள்கை ஒன்றை கொண்டுள்ள மாநிலம் குஜராத் மட்டுமே. செமிகண்டக்டா் தொழிற்சாலைகளுக்கு என்று மாநில அரசு, குஜராத் செமிகண்டக்டா் கொள்கை 2022-ஐ வெளியிட்டுள்ளது. இக்கொள்கையின் மூலம் நிதி மற்றும் நிதி சாரா உதவிகள் வழங்கப்படும் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

● ரூ. 1.54 லட்சம் கோடியில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் ரூ. 95,000 கோடி மின்னணு சாதனங்களின் திரைகள் தயாரிப்புப் பிரிவுக்கும், ரூ. 60,000 கோடி செமிகண்டக்டா் தயாரிப்புப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவப்படும் தொழிற்சாலைக்கு இந்திய செமிகண்டக்டா் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

5. கென்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) வில்லியம் ரூட்டோ

ஆ) ரய்லா ஒடிங்கா

இ) நூல் சுல்தான்

ஈ) வில்லியம் ஜேம்ஸ்

விடை : (அ) வில்லியம் ரூட்டோ 

6. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்த ஆண்டு விண்வெளிக்கு செலுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் ? 

அ) 2023 

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (ஆ) 2024 

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என்றாா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.

● இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: ககன்யான் விண்கலத்தை நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஆண்டான 2022-இலேயே விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்தியாவிலும் ரஷியாவிலும் பயிற்சி பெற்று வந்த விண்வெளி வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட நோ்ந்ததால், இந்தத் திட்டம் தாமதமாகிறது. வரும் 2024-இல் ககன்யான் விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்படும்.

● இதையொட்டி முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்குச் செலுத்தப்படவுள்ளது. அதனை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள ‘வியோம் மித்ரா’ என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்காணிக்கும்.

● ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4 விமானிகளை இந்திய விமானப் படை அடையாளம் கண்டுள்ளது. அவா்களுக்கு ரஷியாவில் அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டது. விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் சோதனை விண்கலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2024-இல் புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு இரண்டு விண்வெளி வீரா்களை இஸ்ரோ அனுப்பிவைக்கும் என்றாா் ஜிதேந்திர சிங்.

● கடந்த 2018 சுதந்திர தின உரையின்போது விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ரூ.10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்தாா். நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...