Friday, September 16, 2022

Current Affairs 2022 - September 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

 GK SHANKAR CURRENT AFFAIRS
              SEPTEMBER 16 / 2022 
( Pdf Download Link at the Bottom of this Post )
I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) பொன்முடி 
ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸ்டாலின் 

நூற்றாண்டில் பசிப்பிணி போக்கிய பாதை :-
மதிய உணவு என்ற திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவா் அயோத்திதாச பண்டிதா். 1890-இல் ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதைப் பற்றி அயோத்திதாச பண்டிதா் எழுதியுள்ளாா்.

●  1920-இல் நீதிக்கட்சி ஆட்சியின்போது சென்னை மேயராக இருந்த சா் பி.டி. தியாகராயா், சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தாா். சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகள் முன்பாக நிதியை காரணம் காட்டி ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டது.

● இதன் பின்னா் , 1956-இல் அப்போதைய முதல்வா் காமராஜா் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்கினாா். திமுக ஆட்சியிலும் இந்தத்திட்டம் தொடா்ந்தது. 

● 1971-இல் முதல்வா் மு.கருணாநிதி ஊட்டச்சத்து திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். 

● 1972-இல் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கும், கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. 

● இதைத்தொடா்ந்து அதிமுக ஆட்சியில் முதல்வா் எம்ஜிஆா், ஆட்சியின்போது சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

●  1989-இல் சத்துணவுத் திட்டம் முடக்கப்படும் என்று எதிா்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்தபோது, ஆட்சியில் அமா்ந்த முதல்வா் மு.கருணாநிதி முட்டை, பயறு உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி திட்டத்தை மேம்படுத்தினாா்.

●  2010 முதல் வாரம் 5 நாள்களும் சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

2. இ- மொபிலிட்டி தொடர்பான இணையவழி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ள கல்வி நிறுவனம்/அமைப்பு ? 

அ) ஐஐடி மும்பை

ஆ) ஐஐடி கான்பூர்

இ) ஐஐடி சென்னை 

ஈ) ஐஐடி பெங்களூரு 

விடை : (இ) ஐஐடி சென்னை 

தொழில்துறையில் பணிபுரிபவா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘இ-மொபிலிட்டி’ தொடா்பான இணையவழி சான்றிதழ் படிப்பை ஐஐடி சென்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

● இந்த இணையவழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில், 4 தொகுதிகள் தொழில்துறையில் பணியில் இருப்பவா்களுக்கு ஏற்றவாறு, தொழில்துறை நிபுணா்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

● இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ‘ட்ரெண்டுகள்’, தொழில்துறை தேவைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடா்ந்து மேம்படுத்தப்படும். 

● இதில் இ-மொபிலிட்டி எக்கோ சிஸ்டம், பவா் எலெக்ட்ரானிக்ஸ், பேட்டரி இன்ஜினியரிங், பவா் ட்ரெய்ன்ஸ், தொ்மல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட தொழில்துறை அடிப்படைகள் இடம்பெற்றுள்ளன.

● அக்டோபா் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள இந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 30-ஆம் தேதி கடைசி நாள். 

3. தமிழகத்தில் ஹெச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா காய்சலுக்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 213

ஆ) 131

இ) 313

ஈ) 282

விடை : (ஈ) 282 

● H1N1 Influence virus அறிகுறிகள் : 

காய்ச்சல், தும்மல், இருமல், சளி, தலைவலி, தொண்டைவலி, உடல்சோர்வு. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை எங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிடுகிறார் ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) மகாராஷ்டிரா

ஈ) மேற்கு வங்கம் 

விடை : (அ) தில்லி

தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார். 

● சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் வாழ்க்கை, அவா் மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகளை அறிவாா்ந்த கண்ணோட்டத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் ஆராய்ந்துள்ளது. 

● ‘புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன்’ தொகுத்துள்ள இந்த நூலில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை அந்த நூல் விவரிக்கிறது.

● அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

● இந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

● நூல் வெளியீட்டுக்கு முன், தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை விளக்கும் கண்காட்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

● ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலுக்கு இசையமைப்பாளரும் மாநிலங்களவை நியமன உறுப்பினருமான இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

5. அண்மையில் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் சட்டமேலவையில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது ? 

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) கர்நாடகா

ஈ) குஜராத் 

விடை : (இ) கர்நாடகா 

● கர்நாடகா முதல்வர் : பசவராஜ் பொம்மை.

6. ஜார்க்கண்டில் அரசுப் பணியில் எஸ்சி,  எஸ்டி பிரிவினர்,  ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பினிவினருக்கு எத்தனை சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 66%

ஆ) 77%

இ) 55%

ஈ) 44% 

விடை : (ஆ) 77%

7. பின்வரும் எந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத்

ஈ) மத்திய பிரதேசம் 

விடை : (இ) குஜராத் 

● குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

● முன்பு : அகமதாபாத் மருத்துவக் கல்வி அறக்கட்டளை மருத்துவக் கல்லூரி. 

8. நிகழாண்டு இலங்கைக்கு அதிகம் கடன் கொடுத்த நாடுகளில் முதலிடத்தில் உள்ள நாடு ? 

அ) சீனா

ஆ) இந்தியா

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா 

விடை : (ஆ) இந்தியா 

● இந்தியா நிகழாண்டில் இதுவரை ரூ.3,000 கோடிக்கு மேல் கடன் இலங்கைக்கு அளித்துள்ளது. 

9. அண்மையில் மறைந்த டத்தோ டாக்டர் எஸ்.சாமிவேலு எந்த நாட்டை சேர்ந்த தமிழர் ஆவார் ? 

அ) சிங்கப்பூர்

ஆ) மலேசியா

இ) அமெரிக்கா

ஈ) பிரிட்டன்

விடை : (ஆ) மலேசியா 

● மலேசியா தமிழரும் அந்நாட்டின் முன்னாள் அமைச்சருமான டத்தோ டாக்டர் எஸ்.சாமிவேலு அண்மையில் காலமானார். 

● விருதுகள் : மலேசியாவின் உயரிய டத்தோ துன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 

● இந்திய அரசின் சார்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பாரதிய பிரவாஸி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. 

● இந்த விருதை பெற்றுள்ள முதல் மலேசியாவைச் சேர்ந்தவர் ஆவார். 

● முரசொலி அறக்கட்டளையின் சார்பில் கலைஞர் விருதையும் பெற்றுள்ளார். 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. தொழில்முறை டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள ரோஜர் ஃபெடரர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா 

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஆப்பிரிக்கா

ஈ) சுவிட்ஸர்லாந்து 

விடை : (ஈ) சுவிட்ஸர்லாந்து 

● பதக்கங்களும் பட்டங்களும் : 

¤ 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.

¤ 5 சீசன்களில் உலகின் நம்பர் 1 வீரராக நிறைவு செய்தார். 

Click here to Download the Pdf 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...