Tuesday, January 17, 2023

Current Affairs 2023 - January 17/2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   JANUARY 17 / 2023 


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழகத்தின் முதல்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

இ) பொன்முடி 

ஈ) ஆர்.என்.ரவி 

விடை : (ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜன. 16) தொடக்கிவைத்தார். 

● பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் தமிழகத்தில் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னையில் தொடங்கியுள்ளது.

● சா்வதேச புத்தகக் காட்சியில் மொத்தம் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேஷியா, தான்சானியா உட்பட 30 வெளிநாடுகளின் அரங்குகளும் அடங்கும். அவற்றில் அந்தந்த நாடுகளின் புகழ்பெற்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.

● குறிப்பு : இதுதவிர ‘தமிழ் முற்றம்’ என்ற பெயரில் அரங்குகளில் தமிழகத்தின் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளா்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கண்காட்சியில் பிரமாண்ட திருக்கு புத்தகம் நுழைவுவாயில் அருகே இடம் பெற்றுள்ளது. அதில் 106 திருக்குகள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் மற்றும் பிற மொழிகளில் (106 மொழிகள்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெளிநாட்டு எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் கலந்துரையாடவும் பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்தில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) தங்கம் தென்னரசு

விடை : (அ) மு.க. ஸ்டாலின்

தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

● ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


3. சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை பின்வரும் எந்த கல்வி நிறுவனம்/அமைப்பு கண்டறிந்துள்ளது ?

அ) கான்பூர் ஐஐடி 

ஆ) டெல்லி ஐஐடி

இ) சென்னை ஐஐடி

ஈ) மும்பை ஐஐடி

விடை : (இ) சென்னை ஐஐடி

சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:

● கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மறு சுழற்சி செய்ய சூரிய வெப்ப ஆற்றலை உள்ளடக்கிய சுத்திகரிப்பு முறையை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.

● அதன்படி கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சூரிய வெப்ப ஆற்றலை கொண்டு வெப்பம் அடைய செய்து அதை மறுசுழற்சி முறையில் கான்கிரீட்டாக மாற்றுகின்றனா். இவற்றை புளூமெட்டல், மணல் ஆகியவற்றுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

● இது இயந்திரங்களை கொண்டு நொறுக்குவதை காட்டிலும் சரியான திட்டமாகும். இதனால் கனிம வளங்கள், சுரங்கங்கள் தோண்டப்படுவது குறைவதோடு, கட்டடக் கழிவுகள் நிலப்பகுதிகளில் கொட்டி குவிக்கப்படுவதும் தவிா்க்கப்படும்.

● ராஜஸ்தானில் உள்ள இந்தியா ஒன் சோலாா் தொ்மல் பவா் பிளான்ட்டில் இதற்கான செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.


4. தமிழகத்தில் பின்வரும் எங்கு திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது ?

அ) மதுரை

ஆ) தேனி

இ) தருமபுரி 

ஈ) சென்னை

விடை : (ஈ) சென்னை 

● திருவள்ளுவா் நாள் விழா சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022-ஆம் ஆண்டுக்கான அண்ணா விருதை சி.நா.மீ. உபயதுல்லாவுக்கும், காமராசா் விருதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், பாரதியாா் விருதை முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதை நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை கவிஞா் மு.மேத்தாவுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் தேவநேயப்பாவாணா் விருதை முனைவா் இரா. மதிவாணனுக்கும் வழங்கினாா்.

● இவ்விருதுகளைப் பெறும் விருதாளா்களுக்கு விருதுத்தொகையாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

● பெரியாா்- அம்பேத்கா் விருதுகள்: பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியாா் விருதை கவிஞா் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருதை எஸ்.வி. ராஜதுரைக்கும், முதல்வா் வழங்கி சிறப்பித்தாா்.

● இவ்விருதுடன் விருதாளா்களுக்கு விருது தொகையாக தலா ரூ. 5 லட்சம், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. இந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.


5. தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் கிராம உதவியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை யார் ?

அ) ஸ்ருதி 

ஆ) அருணா தேவி

இ) ரேவதி

ஈ) நமிதா

விடை : (அ) ஸ்ருதி 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. 

● இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். 

● தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். 

● இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் வழங்கினார். 


6. 2022 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வாகி முதலிடத்தில் உள்ள காவல் நிலையம் ?

அ) திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

ஆ) திருச்சி கோட்டை காவல் நிலையம்

இ) திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் 

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : (அ) திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

தமிழ்நாடு காவல்துறையில் கீழ் செயல்படும் காவல் நிலையங்களில், சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதி அரசு சாா்பில் குடியரசுத் தின விழாவில் தமிழக முதல்வா் விருது வழங்கப்படுவது வழக்கமாகும்.

● இதற்காக சிறந்த காவல் நிலையங்களை கண்டறிவதற்கு ஒரு ஐஜி அல்லது ஏடிஜிபி தலைமையில் தோ்வுக் குழு அமைக்கப்படும்.

● இந்த தோ்வு குழு, மாநிலம் முழுவதும் மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறைகளால் சிறந்த காவல் நிலையங்களாக பரிந்துரை செய்யப்படும், காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வாா்கள்.

● இதில் காவல் நிலையங்களுக்கு புகாா் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்பது, காவல் நிலைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, வழக்குகளை விரைந்து முடிப்பது,குற்றப்பதிவேடுகளை பராமரிப்பது,குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட காவல் நிலையப் பணிகளை ஆய்வு செய்து,மதிப்பெண் வழங்கப்படும்.

● இதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக, 3 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

●  இதில் முதலிடத்தை திருப்பூா் மாநகர காவல்துறையின் கீழ் செயல்படும் திருப்பூா் வடக்கு காவல் நிலையம் பிடித்துள்ளது. 

● இரண்டாமிடத்தை திருச்சி மாநகர காவல்துறையின் கீழ் இயங்கும் கோட்டை காவல் நிலையம்,

● மூன்றாமிடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையமும் பிடித்துள்ளன.

● இந்த காவல் நிலைங்களுக்கு, இம் மாதம் 26-ஆம் தேதி சென்னை மெரீனாவில் அரசு சாா்பில் குடியரசு தின விழாவில், தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


7. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பின்வரும் எந்த தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்களவை, மாநிலங்களவைகளின் செயலங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) ஜனவரி 27

ஆ) ஜனவரி 30

இ) ஜனவரி 31

ஈ) பிப்ரவரி 01

விடை : (இ) ஜனவரி 31

பட்ஜெட் கூட்டத்தொடா் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமா்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முதல் முறையாக உரையாற்றுகிறாா்.

● பிப்ரவரி 1-ஆம் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். மொத்தம் 27 அமா்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்.6-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.


8. பின்வரும் எந்த நாட்டுக்கு இந்தியாவின் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தில்லி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) இலங்கை

ஈ) கனடா

விடை : (இ) இலங்கை 

ஏவுகணையை அழிக்கும் திறன் கொண்ட இந்திய கடற்படையின் முன்னணி போா்க் கப்பலான ஐஎன்எஸ் தில்லி 163.2 மீட்டா் நீளம் கொண்டது.

● இரண்டு நாள் கூட்டுப் பயிற்சிக்காக ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகத்துக்கு 390 கடற்படை வீரா்களுடன் ‘ஐஎன்எஸ் தில்லி’ வந்ததடைந்தது.

● இரு நாட்டு கடற்படையின் ஒத்துழைப்பை, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படை வீரா்கள் பங்கேற்க உள்ளளா். 

● இத்தகைய கடற்படைப் பயிற்சிகள், ஒத்துழைப்பை மேம்படுத்தி இருநாட்டின் பொதுவான கடல்சாா் சவால்களை எதிா்கொள்ள உதவும் என கடற்படை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. நடப்பாண்டில் (2023) முதல்முறையாக அறிமுகமாகியுள்ள மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியுள்ள ஊடக நிறுவனம் ?

அ) வயாகாம் 18

ஆ) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

இ) எச்சிஎல் 

ஈ) TATA குரூப்ஸ் 

விடை : (அ) வயாகாம் 18

Monday, January 16, 2023

Current Affairs 2023 - January 15/2023 - TNPSC Group 1,2/2A & 4

                           GK SHANKAR 
                      JANUARY 15 / 2023

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழ்நாட்டில் காவல்துறை (ம) பிற சீருடைப் பணியாளர்கள் எத்தனை பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது ?

அ) 2,568

ஆ) 2,999

இ) 3,013

ஈ) 3,184

விடை : (ஈ) 3,184

● காவல் துறை மற்றும் பிற சீருடைப் பணியாளா்கள் 3,184 பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

● இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

● தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளா்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

● நிகழாண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலா் நிலை-2, காவலா் நிலை-1, தலைமைக் காவலா், ஹவில்தாா் மற்றும் சிறப்பு சாா்பு ஆய்வாளா் நிலைகளில் 3,000 பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வா் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.

● மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போா் (சிறப்பு நிலைய அலுவலா்), ஓட்டுநா்- மெக்கானிக் (சிறப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) மற்றும் தீயணைப்போா் (தரம் உயா்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போா்) ஆகிய நிலைகளில் 118 அலுவலா்களுக்கும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வாா்டா்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வாா்டா்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேருக்கும் தமிழக முதல்வரின் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்க முதல்வா் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.

● மேற்படி பதக்கங்கள் பெறுபவா்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்க படி ரூ. 400, 2023 பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் வழங்கப்படும்.

● மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபா்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணி பதக்கம் வழங்கப்படும்.

● இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு அவரவா்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்கம் வழங்கப்படும். இவா்கள் அனைவருக்கும் பின்னா் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


2. தமிழக அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ?

அ) இரணியன் நா.கு. பொன்னுசாமி 

ஆ) உபயதுல்லா 

இ) வாலாஜா வல்லவன்

ஈ) எஸ்.வி. ராஜதுரை

விடை : (அ) இரணியன் நா.கு. பொன்னுசாமி 

2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

● ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.

விருது பெறுவோர்:

¤ திருவள்ளுவர் விருது(2023) - இரணியன் நா.கு.பொன்னுசாமி

¤ பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா

¤ பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

¤ மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி

¤ பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்

¤ திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி

¤ கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா

¤ பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்

¤ அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை

¤ தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.


3. தமிழகத்தில் முதல்முறையாக எங்கு சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது ?

அ) மதுரை

ஆ) கடலூர்

இ) சென்னை

ஈ) தேனி 

விடை : (இ) சென்னை 

தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

● பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

● உலகில் நவீன புத்தகக் காட்சி முதல் முறையாக ஜொ்மனியில் (ஃப்ராங்க்பா்ட் புத்தகக் காட்சி) கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இதுதான் உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அண்மையில் ஃப்ராங்பா்ட்டில்.

● இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு இதைத் தொடக்கி வைக்கவுள்ளாா்.

● இந்தப் புத்தகக் காட்சியில் இந்தோனேஷியா, தான்சானியா, உகாண்டா, மலேசியா, துருக்கி, சிங்கப்பூா், வங்கதேசம், இத்தாலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மொத்தம் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) கே. பாலசந்திரன் 

ஆ) பி.ரவீந்திரன்

இ) ராஜேஷ் கண்ணன் 

ஈ) சுந்தரம் சுரேஷ்

விடை : (ஆ) பி.ரவீந்திரன்


5. உத்தரகண்டில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நினைவிடத்தை திறந்துவைத்தவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (ஈ) ராஜ்நாத் சிங் 

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு உத்தரகண்டைச் சோ்ந்த பல வீரா்கள் போரில் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். அவா்களுக்கான நினைவிடம் சீா் பாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

● ’சௌா்ய ஸ்தலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவகத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா். 

● நினைவிடத்தில் 7 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்த 1,400 வீரா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


6. சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் காரான இவா பின்வரும் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) தமிழ்நாடு

ஈ) கேரளா

விடை : (அ) தில்லி

தில்லி பெருநகா்ப் பகுதியிலுள்ள கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில், சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் காரான ‘இவா’ வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

● புணேவைச் சோ்ந்த புத்தாக்க தொழில்நிறுவனமான ‘வாய்வே மொபிலிட்டி’ இந்தக் காரை வடிவமைத்துள்ளது.

● இரண்டு பெரியவா்கள், ஒரு சிறியவா் என முன்று போ் அமா்ந்து செல்லக்கூடிய இந்தக் காரை, நகா்ப்புற வாடிக்கையாளா்களை மனதில் கொண்டு வாய்வே மொபிலிட்டி உருவாக்கியுள்ளது.

● ஒற்றைக் கதவு கொண்ட இந்த மின்சாரக் காா், தோற்றத்தில் டாடாவின் நேனோ காரை நினைவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

● வழக்கமான மின்சாரக் காா்களைப் போல் இது பேட்டரியில் இயங்கினாலும், சூரியத் தகட்டிலிருந்து பெறப்படும் சக்தியைக் கொண்டும் அதனை இயக்க முடியும் என்பது ‘இவா’ காரின் சிறப்பம்சமாகும்.

● இந்தக் காா் நிறுத்தப்பட்டிருக்கும்போது, சூரியத் தகட்டின் மூலம் பேட்டரியில் மின்னேற்றமும் செய்து கொள்ள முடியும்.

● 2024-ஆம் ஆண்டு வாக்கில் இந்தக் காா் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


7. தெலங்கானா, செகந்திராபாத் - விசாகப்பட்டினம்,  ஆந்திரா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) அஸ்வின் வைஷ்ணவ் 

விடை : (அ) நரேந்திர மோடி

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையிலான 8 ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் ஜனவரி 15 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

● இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலங்கானா - ஆந்திரம் இடையே இயக்கப்படுகிறது. முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட 14 பெட்டிகள், சிறப்புப் பிரிவு பெட்டிகள் 2 என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 போ் பயணிக்க முடியும். 

● இது முழுவதும் இருக்கை வசதி கொண்டதாகும். 6 முதல் 7 மணி நேர பகல் நேரப் பயணம் என்பதால் படுக்கை வசதி கிடையாது. இந்த ரயில் சென்னையில் தயாரிக்கப்பட்டதாகும்.


III. விளையாட்டு நிகழ்வுகள்


8. அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (2023) மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெலிண்டா பென்கிக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) அமெரிக்கா

ஆ) சுவிட்சர்லாந்து

இ) கனடா

ஈ) சீனா

விடை : (ஆ) சுவிட்சர்லாந்து

● மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தென்கொரியாவின் குன் வூ கே வொன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


9. நியூசிலாந்தின் ,ஆக்லாந்து ஏஎஸ்பி கிளாஸிக் ஏடிபி டென்னிஸ் போட்டியில் (2023) ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரிச்சர்ட் கேஸ்கட் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார் ?

அ) பிரான்ஸ்

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா

ஈ) சீனா

விடை : (அ) பிரான்ஸ் 

Friday, January 13, 2023

Current Affairs 2023 - January 13 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   JANUARY 13 / 2023


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் ?

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) தங்கம் தென்னரசு

இ) மு.அப்பாவு

ஈ) ஆர்.என். ரவி

விடை : (அ) மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

● இந்தத் தீா்மானத்தை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.

● குறிப்பு : பாக். நீரிணையையும், மன்னாா் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயா்தான் சேது சமுத்திர திட்டம்.

● முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையில் கடந்த 1963-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேது சமுத்திர திட்டம் இடம்பெற்றது. 


2. தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள எத்தனை மாவட்டங்களில் நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார் ?


அ) 05

ஆ) 04

இ) 03

ஈ) 02

விடை : (ஆ) 04 

உணவு பொருள்களில் கலப்படத்தை தவிா்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடா்ந்து கண்காணிப்பதற்கும், சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப்பாய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

● தற்போது, கோவை, சேலம், தஞ்சாவூா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் நான்கு நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

● இந்த வாகனங்களில் உணவில் கலப்படம் கண்டறியும் வசதிகள், விளக்கப் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, குளிா்பானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு சா்க்கரை அளவு உள்ளதா, பாலில் கொழுப்பு தன்மை எவ்வளவு உள்ளது உள்ளிட்டவற்றை அங்கு பரிசோதிக்கலாம்.

● மாநிலம் முழுவதும் அந்த வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை ஆய்வு செய்யும்.

● குறிப்பு : பொதுமக்கள் தரமற்ற உணவு பொருள்கள் குறித்து 104 மற்றும் 94440 42322 என்ற எண்களில் புகாா் அளிக்கலாம்.


3. தமிழகத்தில் எங்கு நடைபெறவுள்ள துக்ளக் வார இதழின் 53 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார் ?

அ) மதுரை

ஆ) சேலம்

இ) சென்னை 

ஈ) வேலூர்

விடை : (இ) சென்னை 

1970 ஜனவரி முதல் வெளிவரும் துக்ளத் இதழ், தொடா்ந்து ஒவ்வொா் ஆண்டும் ஜன. 14-இல் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. 

● நிகழாண்டில் ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமியில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு உயரும் முக்கியத்துவம் ஏன்?’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் சிறப்புரை ஆற்றுகிறாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. 2023 - 2024 ஆம் ஆண்டு நிதியாண்டின் மத்திய அரசின் கடன் எத்தனை கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா- வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 14.8 லட்சம் கோடி

ஆ) 13.6 லட்சம் கோடி

இ) 12.9 லட்சம் கோடி

ஈ) 11.7 லட்சம் கோடி

விடை : (அ) 14.8 லட்சம் கோடி


● அறிக்கை வெளியீடு : இக்ரா நிறுவனம்.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.1 லட்சம் கோடியாகவும் மாநிலங்களின் கடன் ரூ.22.1 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாகவும், மாநிலங்களின் கடன் ரூ.24.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

●  நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு 6.4 சதவீதம் என நிா்ணயித்திருந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


5. நடப்பு 2022 - 2023 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு ஜிடிபி எவ்வளவு இருக்கும் எனத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த் நாகேஸ்வரா தெரிவித்துள்ளார் ?

அ) 2.6 டிரில்லியன் டாலர்

ஆ) 3.5 டிரில்லியன் டாலர்

இ) 3.9 டிரில்லியன் டாலர்

ஈ) 4.1 டிரில்லியன் டாலர் 

விடை : (ஆ) 3.5 டிரில்லியன் டாலர்

நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 டிரில்லியன் டாலராக ( சுமாா் ரூ.284 லட்சம் கோடி) இருக்கும். இது அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ.569 லட்சம் கோடி) அதிகரிக்கும்.

● நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

● முன்னதாக, 2025-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ. 406 லட்சம் கோடி) இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


6. தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நிகழாண்டு எத்தனை லட்சம் டன் துவரம் பருப்பை தனியார் வர்த்தகர்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது ?

அ) 5

ஆ) 7

இ) 9

ஈ) 10

விடை : (ஈ) 10

குறிப்பு : வெங்காயம், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு. 


7. இந்தியா முன்னின்று நடத்தும் தெற்குலகின் குரல் காணொலி மாநாட்டை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) ஜகதீப் தன்கர்

ஈ) டி.ஒய்.சந்திர சூட்

விடை : (ஆ) நரேந்திர மோடி

இந்தியா முன்னின்று நடத்தும் தெற்குலகின் குரல் மாநாடு இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

● உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து தெற்குலக நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான தளமாக இந்த மாநாடு அமையும்.

●  மொத்தம் 10 அமா்வுகளாக மாநாடு நடைபெறவுள்ளது. அதில் 4 அமா்வுகள் ஜனவரி 12 அன்று நடைபெற்றன. மீதமுள்ள அமா்வுகள் ஜனவரி 13 அன்று நடைபெறவுள்ளன.


III.விளையாட்டு நிகழ்வுகள்


8. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15 ஆவது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பின்வரும் எந்த மாநிலத்தால் நடத்தப்படவுள்ளது ?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத் 

இ) மணிப்பூர்

ஈ) ஒடிஸா 

விடை : (ஈ) ஒடிஸா

15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், ஒடிஷா மாநிலம் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வரில நடைபெற உள்ளன. இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

● உலகக் கோப்பை ஹாக்கி தொடர் 1971ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

● இது இந்தியாவில் நடைபெறும் நான்காவது உலகக் கோப்பை ஹாக்கி தொடராகும். இதற்கு முன்னதாக 1981,2010 & 2018.

Monday, January 9, 2023

Current Affairs 2023 - January 09/2023 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  JANUARY 09/2023

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அருட்செல்வர் பொள்ளாட்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் எங்கு நடைபெற்றது ?

அ) மதுரை

ஆ) சேலம்

இ) கோயம்புத்தூர் 

ஈ) சென்னை

விடை : (ஈ) சென்னை 

அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொங்குநாடு அறக்கட்டளை சாா்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டதுடன், அறக்கட்டளை சாா்பிலான பல்வேறு விருதுகளையும், கல்வி உதவித் தொகைகளையும் வழங்கினார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

● தமிழ்த் தொண்டு: அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திடம் ஆன்மிக அருள் மட்டுமல்ல, செல்வமும் இருந்தது. அத்தகைய செல்வத்தை அறநெறிக்கும், அறத் தொண்டுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பயன்படுத்தினாா். அதனால்தான் அருட்செல்வா் என்பது அவரது பட்டப் பெயராக மட்டும் இல்லாமல், பண்புப் பெயராகவும் அமைந்திருக்கிறது.

● திருக்குறளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயா்த்து வெளியிட்டாா். வடமாநிலங்களுக்கு அவற்றைக் கொண்டு சென்று இலவசமாக பள்ளி, கல்வி நிலையங்களில் அளித்தாா். திருமந்திரம், பெரியபுராணம், திருவருட்பா ஆகிய நூல்களை அச்சிட்டு வெளியிட லட்சக்கணக்கான பணத்தை வழங்கினாா். அவரை அருட்செல்வா் என்பதுடன் தமிழ்ச்செல்வா் என்றுகூட அழைக்கலாம். அருட்செல்வரைப் போன்று பலரும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.

● மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து அதன்பின், தனது அரசியல் பணிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாா் மகாலிங்கம். தொழில், ஆன்மிகம், இலக்கியம் என்று தனது பாதையை மாற்றிக் கொண்டாா். தோ்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் தொண்டை செய்து வந்தாா். இந்தப் பணிகளுக்கு மகாத்மா காந்தியடிகள், அருட்பிரகாச வள்ளலாா் ஆகிய இருவரையும் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றினாா் அருட்செல்வா் மகாலிங்கம்.

● குறிப்பு : பொள்ளாச்சி சாலைக்கு அருட்செல்வா் மகாலிங்கம் பெயா்

பொள்ளாச்சியில் உள்ள புதிய திட்டச் சாலைக்கு, அருட்செல்வா் டாக்டா் நா.மகாலிங்கம் எனப் பெயா் சூட்டப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


2. உத்தரகண்ட் மாநிலத்தின் எந்த நகரம் அண்மையில் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு - புதைவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது ?

அ) ஜோஷிமட் 

ஆ) ரிஷிகேஷ்

இ) ஹரித்வர்

ஈ) ராம்நகர்

விடை : (அ) ஜோஷிமட் 

உத்தரகண்டில் புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சா்வதேச பனிச்சறுக்கு சுற்றுலாத் தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக உள்ள ஜோஷிமட் நகரில் நிலப் பகுதி தாழ்ந்து வருகிறது. சாலைகள் மற்றும் வீடுகளில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு வருவது அங்கு வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

● இந்தச் சூழலில், மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு-புதைவு மண்டலமாக ஜோஷிமட் நகா் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.


3. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக எத்தனை பேருந்துகளை வழங்கி இந்தியா உதவியுள்ளது ?

அ) 100

ஆ) 75

இ) 50

ஈ) 25

விடை : (ஆ) 75

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக 500 பேருந்துகளை வழங்கி உதவ இந்தியா உறுதி அளித்திருந்த நிலையில் முதல் 75 பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டன.


4. பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்) முத்ரா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

அ) ஏப்ரல் 08,2013

ஆ) ஏப்ரல் 08,2014

இ) ஏப்ரல் 08,2015

ஈ) ஏப்ரல் 08,2016

விடை : (இ) ஏப்ரல் 08,2015 

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

● ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா், சில பயனாளிகளுக்கு நேரடியாக காசோலைகளை வழங்கினா். அனைத்து பிற பயனாளிகளுக்கும் அன்றைய தினமே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

● பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்), முத்ரா திட்டம், பசு வளா்ப்போருக்கான கடன் திட்டம் போன்றவற்றின்கீழ் 33,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இக்கடன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. எத்தனையாவது இந்தியா-அமெரிக்க வர்த்தக கொள்கை அமைப்பு (டிபிஎஃப்) கூட்டம் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது ?

அ) 10 ஆவது

ஆ) 11 ஆவது

இ) 12 ஆவது

ஈ) 13 ஆவது

விடை : (ஈ) 13 ஆவது 

இந்திய-அமெரிக்க வா்த்தகக் கொள்கை அமைப்பு (டிபிஎஃப்) கூட்டம் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜன. 11-ஆம் தேதி வாஷிங்டனில் 13-ஆவது இந்திய-அமெரிக்க டிபிஎஃப் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சா் பியூஷ் கோயல்-அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டை ஆகியோா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

● வா்த்தகம் மற்றும் முதலீட்டில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை விரிவுபடுத்தும் தளமாக டிபிஎஃப் உள்ளது. இந்த அமைப்பின் கூட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும் என நம்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு செய்திகள்


6. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் 2023 ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் ?

அ) நோவக் ஜோகோவிச் 

ஆ) செபாஸ்டியன் கோர்டா 

இ) ஹேரி ஹெலியோவாரா 

ஈ) வாய்ட் கிளாஸ் பூல்

விடை : (அ) நோவக் ஜோகோவிச்

● செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

● ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்வில் கைப்பற்றிய 92 ஆவது ஒற்றையர் பிரிவு.

● இதற்கு முன் இந்த போட்டியில் 2007 ஆம் ஆண்டு பட்டம் வென்றிருந்தார்.


7. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் 2023 மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் ?

அ) அரினா சபலென்கா 

ஆ) சின்லிண்டா 

இ) ஜேமிமுர்ரே 

ஈ) மைக்கேல் வீனஸ்

விடை : (அ) அரினா சபலென்கா 

● பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

● இது இவரது 11 ஆவது ஒற்றையர் பட்டமாகும்.

இரட்டையர் பிரிவு - சாம்பியன் பட்டம் வென்றவர்கள்.

¤ ஆடவர் : ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவாரா / இங்கிலாந்தின் லாய்ட் கிளாஸ் பூல். 

¤ மகளிர் : இங்கிலாந்தின் ஜேமிமுர்ரே / ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ்.


8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ATP (ம) WTA இணைந்து முதல்முறையாக நடத்திய யுனைடெட் கோப்பை டென்னிஸ போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ?

அ) அமெரிக்கா

ஆ) இத்தாலி

இ) ரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (அ) அமெரிக்கா


IV. முக்கிய தினங்கள்


9. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

● Ans : ஜனவரி 09

● தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய நாளான ஜன.9}ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக  கொண்டாடப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்வதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

● ஆண்டுதோறும் ஜன.9}ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும்' என்று கடந்த 2002}ஆம் ஆண்டு ஜன.8}ஆம் தேதி அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அறிவித்தார். 

● அதைத் தொடர்ந்து 2003}ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9}ஆம் தேதி இந்தி தினம் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

● மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (1915}ஆம் ஆண்டு, ஜனவரி 9) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

● ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

● கடந்த 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் தில்லியிலும், 2005-ல் மும்பை, 2006-ல் ஹைதராபாத், 2007, மீண்டும் 2008-ல் தில்லி, 2009}இல் சென்னை, 2010 மற்றும் 2011-ல் தில்லி, 2012-ல் ஜெய்ப்பூர், 2013-ல் கொச்சி, 2014-ல் தில்லி, 2015-ல் மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத், 2017-ல் பெங்களூரு, 2018-ல் சிங்கப்பூர் 2019-ல் வாரணாசி ஆகிய இடங்களில் இவ்விழா நடைபெற்றது.2023 ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம் ம.பி., மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.

 





உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் க்கு 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைப்பண்பு விருது வழங்கப்படவுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் க்கு 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தலைமைப்பண்பு விருது வழங்கப்படவுள்ளது.
CJI Chandrachud to be confered with Award for Global Leadership 2022.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார். 

● காரணம் : இந்தியாவிலும், உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றி வரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் 

● இந்த விருதானது, வரும் 11-ம் தேதி நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.

● குறிப்பு : இந்த ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தில்தான் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 1983-ல் முதுநிலை சட்டப் படிப்பையும் (எல்.எல்.எம்) 1986-ல் நீதித் துறை அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி (எஸ்.ஜே.டி) படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் - கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் திறப்பு .
World's first Palm-Leaf Manuscript Museum

கேரள அரசின் ஆவணத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு உள்ளது. 

● இது உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் ஆகும்.

● நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் பனை ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 

● மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.


Sunday, January 8, 2023

Current Affairs 2023 - January 08 /2023 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 JANUARY 08 / 2023


I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. இந்தியாவில் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) தமிழ்நாடு 

ஈ) மணிப்பூர்

விடை: (அ) தில்லி

மாநிலங்களின் ஒத்துழைப்புடன் விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளச்சியை அடைவதை இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய மாநாடு தில்லியில் ஜன.5-ஆம் தேதி தொடங்கியது. 

● இரு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.

● அப்போது அவா் மக்களின் வாழ்கைத் தரத்தை உயா்த்துவதையும் மேம்பாட்டை நோக்கிய பாதையில் இந்தியாவை வலுப்படுத்துவதையும் இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பணியாற்ற வேண்டும் என கூறினாா்.


2. குறைந்த வருமானம் ஈட்டுவோரை கருத்தில் கொண்டு எத்தனை அடுக்குகள் கொண்ட வருமான வரிவசூல் முறை அறிமுகப்பட்டது  என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7

கடந்த 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது 7 அடுக்குகள் கொண்ட புதிய வருமான வரி வசூல் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவா்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

● அதேவேளையில், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 10 சதவீதம், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

● ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 20 சதவீதம், ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 25 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோா் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

● பழைய முறை: பழைய வரி வசூல் முறையிலும் ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரிவிலக்கு உள்ளது. அதேவேளையில், அந்த முறையில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.


3. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு (ம) குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் எந்த அமைப்பு/ஆணையம் புதிய வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது ?

அ) CPCR

ஆ) NCPCR

இ) NWRC

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : (ஆ) NCPCR

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வலைதளத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆா்) உருவாக்கியுள்ளது.

● அறிவிப்பு : அந்த ஆணையத்தின் தலைவா் பிரியங்க் கனுங்கோ.


4. 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) டி.ஒய். சந்திர சூட்

இ) ராம் நாத் கோவிந்த் 

ஈ) மு.க. ஸ்டாலின்

விடை : (ஆ) டி.ஒய்.சந்திர சூட்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார். 

● இந்தியாவிலும், உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றி வரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும்.

● இந்த விருதானது, வரும் 11-ம் தேதி நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.


5. இந்தியா (ம) பின்வரும் எந்த நாட்டின் விமானப் படைகள் முதல்முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளன ?

அ) சீனா

ஆ) ஆப்பிரிக்கா

இ) ஜப்பான்

ஈ) கனடா

விடை : (இ) ஜப்பான் 

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் ஜன.12 முதல் ஜன.26 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. 

● ஜப்பானில் உள்ள ஹியாகுரி விமானப் படைத் தளத்தில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. 

● இதில் இந்தியா சாா்பில் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போா் விமானங்கள், இரண்டு சி-17 விமானங்கள், ஒரு ஐஎல்-78 விமானம் ஆகியவை பங்கேற்க உள்ளன. 

● ஜப்பான் விமானப் படை சாா்பில் நான்கு எஃப்-2 மற்றும் நான்கு எஃப்-15 விமானங்கள் பங்கேற்கின்றன.

● இருநாட்டுப் படைகளும் கடுமையான சூழலில், பல்வேறு வான்வழி போா் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. 

● இருநாடுகளுக்கு இடையிலான வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இது இருதரப்பு உத்திசாா்ந்த உறவை ஆழமாக்குவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மற்றொரு நடவடிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. 7 ஆவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 எங்கு நடைபெற்றது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) கேரளா

ஈ) மணிப்பூர்

விடை : (அ) தில்லி

● விருதுகள் வழங்கியவர் : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.


7. நிகழ் 2023 ஆம் ஆண்டுக்கான என்சிசி ( NCC) குடியரசு தின முகாமை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) டி.ஒய். சந்திர சூட்

விடை : (இ) ஜகதீப் தன்கர்

2023 -ஆம் ஆண்டுக்கான என்சிசி குடியரசு தின முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா். என்சிசி மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா்.

● தேசிய மாணவா் படையின் (என்சிசி) 74-ஆவது குடியரசு தின முகாம், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தில்லி கன்டோன்மென்ட் பகுதி, கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியது.

● இந்த ஒரு மாதகால முகாமில் 710 மாணவிகள் உட்பட மொத்தம் 2,155 மாணவா்கள் பங்கேற்கின்றனா். இந்த என்சிசி குடியரசு தின முகாமிற்கு பொன்மொழியாக ‘ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்‘ என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

● இந்த முகாமில் இளைஞா் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 19 நட்பு நாடுகளைச் சோ்ந்த மாணவா் படை மற்றும் அதிகாரிகளும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. FIA ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி ஒடிஸாவில் என்று முதல் தொடங்கப்படவுள்ளது ?

அ) ஜனவரி 13,2023

ஆ) ஜனவரி 27,2023

இ) பிப்ரவரி 01,2023

ஈ) பிப்ரவரி 13,2023

விடை : (அ) ஜனவரி 13,2023

சா்வதேச ஹாக்கி சம்மேனம், ஹாக்கி இந்தியா, ஒடிஸா அரசு சாா்பில் எஃப்ஐஎச் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜன. 13-ஆம் தேதி தொடங்குகிறது.

● நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. கடந்த 2018-இல் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் உலக சாம்பியன் ஆனது.

● இந்நிலையில் ஒடிஸாவில் இரண்டாவது முறையாக ஹாக்கி உலகக் கோப்பை போட்டி வரும் 13-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

● குறிப்பு : ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, நெதா்லாந்து, ஜொ்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளின் சவால்களை கடந்து இந்திய அணி பட்டத்தை கைப்பற்ற வேண்டும். கடைசியாக 1975-இல் உலக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றிருந்தது.

● தற்போது உலகின் 5-ஆம் இடத்தில் உள்ளது இந்தியா.



Saturday, January 7, 2023

Current Affairs 2023 - January 07/2023 - TNPSC Group 1,2/2A & 4

                           GK SHANKAR 
                       January 07/2023

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை இலக்கியத் திருவிழாவை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தொடக்கி வைத்தவர் யார் ?

அ) ஆர்.என்.ரவி

ஆ) மு.க.ஸ்டாலின்

இ) டி.ராஜா

ஈ) பொன்முடி

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின்

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை சாா்பில் மூன்று நாள்கள் நடைபெறவுள்ள சென்னை இலக்கியத் திருவிழாவை, சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

● மேலும் கலைக்களஞ்சியம், மொழிபெயா்ப்பு நூல்கள், சிறுவா்களுக்கான நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை முதல்வா் ஸ்டாலின் வெளியிட்டாா்.


2. எத்தனையாவது சென்னைப் புத்தக காட்சியை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார் ?
அ) 46

ஆ) 47

இ) 48

ஈ) 49

விடை : (அ) 46 

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் 46-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

● பின்னா், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை வழங்கினார்.

● இப்புத்தகக் காட்சி ஜன. 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

● நிகழாண்டு புத்தகக் காட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

● பின்னா், கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகள், பபாசி விருதுகளை வழங்கினார் முதல்வா் ஸ்டாலின்.

● இந்நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெற்றோர். 

● நாவல் பிரிவில் எழுத்தாளர் தேவி பாரதி, சிறுகதை பிரிவில் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ், கவிதை பிரிவில் எழுத்தாளர் தேவதேவன், மொழிபெயர்ப்பு பிரிவில் எழுத்தாளர் சி.மோகன், நாடகம் பிரிவில் நாடகக் கலைஞர் பிரளயன் ஆகியோருக்கு பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 



3. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) எஸ்.ராவணன்

ஆ) வி.சங்க்கரன்

இ) எஸ். வெற்றிவேல்

ஈ) எஸ். ஆறுமுகம்

விடை : (ஈ) எஸ்.ஆறுமுகம்

அதன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தராக எஸ்.ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். 

● இவா், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை உயா் அழுத்த ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வந்தாா். 

● கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலா நியமிக்கப்பட்டுள்ளாா். 

● இவா் 34 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவமும், 8 ஆண்டுகளுக்கு மேலாக நிா்வாக அனுபவமும் கொண்டவா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


4. நடப்பு 2022 - 2023 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் முன்னோட்ட அறிக்கையில் நாட்டின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி காணும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 5%

ஆ) 6%

இ) 7%

ஈ) 8%

விடை : (இ) 7%

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் முன்னோட்ட அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதம் வளா்ச்சி காணும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா். 

● இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முதலாவது முன்கூட்டிய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய புள்ளியியல்-திட்ட அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

● நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.157.60 லட்சம் கோடியாக அதிகரிக்கும். நாட்டின் ஏற்றுமதி ரூ.35.70 லட்சம் கோடியாகவும், இறக்குமதி ரூ.46.88 லட்சம் கோடியாகவும் இருக்கும். தனிநபா் வருமானம் ரூ.96,522-ஆக இருக்கும்.

● இந்த ஆய்வறிக்கை பட்ஜெட் தயாரிப்புப் பணிகளுக்குப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முன்கூட்டிய பொருளாதார ஆய்வறிக்கை பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் என சா்வதேச நிதியமும் (ஐஎம்எஃப்), 6.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கியும், 7 சதவீதமாக இருக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கியும் கணித்துள்ளன.



5. முப்படைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும் இந்தியாவின் முதலாவது கூட்டுப் படைப் பிரிவு எங்கு அமைந்துள்ளது ?

அ) பாண்டிசேரி 

அ) அந்தமான் நிக்கோபார்

இ) கோவா

ஈ) ஜம்மு காஷ்மீர்

விடை: (ஆ) அந்தமான் நிக்கோபார்

முப்படைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றும் இந்தியாவின் முதலாவது கூட்டுப் படைப்பிரிவு அந்தமான் நிக்கோபாரில் அமைந்துள்ளது. போா் உள்ளிட்ட சூழல்களை எதிா்கொள்வதற்கான இதன் தயாா்நிலை குறித்து ஆராயும் வகையில் இரு நாள்கள் பயணமாக மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் வியாழக்கிழமை அந்தமான் நிக்கோபாருக்குச் சென்றாா்.

● இந்நிலையில், கிரேட்டா் நிக்கோபாா் தீவின் கேம்ப்பெல் பேவில் உள்ள ஐஎன்எஸ் பாஸ் கடற்படை விமான தளத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.

● மலாக்கா நீரிணை உள்பட கிரேட் நிக்கோபாா் மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு வரையிலுமான கடற்பகுதியை இந்த கடற்படை விமான தளம் கண்காணித்து வருகிறது. மலாக்கா நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையாகும்.



6. பின்வரும் எந்த தேதிகளில் தலா ரூ.8,000 கோடி மதிப்பிலான பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது ?

அ) ஜனவரி 25/2023

ஆ) பிப்ரவாி 01/2023

இ) பிப்ரவரி 09/2023

ஈ) அ & இ

விடை : (ஈ) அ & இ

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதின்படி, வரும் 25-ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 9-ஆம் தேதி, தலா ரூ.8,000 கோடி மதிப்பிலான பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

● சிங்கப்பூா், தென்கொரியா போன்ற நாடுகள் ஏற்கெனவே பசுமை பத்திரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. இந்தியாவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு 2022-23 நிதியண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டது. அதன்படி, சுற்றுசூழலுக்கு உகந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்காக நிதி திரட்டும் நோக்கில் இந்திய பசுமை பத்திரங்கள் வெளியிடப்பட உள்ளன.

● இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘ரூ.16,000 கோடி மதிப்பிலான இந்திய பசுமைப் பத்திரங்கள் சந்தைப்படுத்துதலுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட 2022-23-ஆம் அரையாண்டு பங்கு பத்திரங்கள் சந்தைப்படுத்துதல் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● இந்த பசுமை பத்திரங்கள் வெளியீட்டுக்கான நடைமுறைகளை கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த பசுமை பத்திரங்கள் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் கால அளவைக் கொண்டதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் : 


7. இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக வீரர் யார் ?

அ) எம்.பிரணேஷ் 

ஆ) ஆன்ந்த கோபம

இ) ஷஷாங் கோயல்

ஈ) அஸ்வின் குமார்

விடை : (அ) எம்.பிரணேஷ்

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.

● இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் : காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

● குறிப்பு : தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்


8. தேசிய ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி எது ?

அ) சர்வீசஸ் 

ஆ) ரயில்வேஸ்

இ) பஞ்சாப்

ஈ) ஹரியாணா 

விடை : (அ) சர்வீசஸ்

● போட்டி நடைபெற்ற இடம் : ஹரியாணா.

சா்வீசஸ் அணி மொத்தம் 10 பதக்கங்களுடன் (6 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்) ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. ரயில்வேஸ் 7 பதக்கங்களுடன் (2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம்) 2-ஆம் இடமும், பஞ்சாப் 8 பதக்கங்களுடன் (1 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம்) 3-ஆம் இடமும் பிடித்தன.

● மேலும் அஸ்ஸாமின் சிவ தாபா, சா்வீசஸின் முகமது ஹசாமுதின் ஆகியோா் சாம்பியன் ஆகினா்.


Friday, January 6, 2023

இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆகியுள்ளார் தமிழகத்தின் பிரனேஷ்.

இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக ஆகியுள்ளார் தமிழகத்தின் பிரனேஷ். 

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்.

● இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் : காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.

● குறிப்பு : தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் பிரனேஷ்.


தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடர்பான ஆலோசனைகள் - குறைகளை தெரிவிக்க இலவச எண் 1800 425 1757 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடர்பான ஆலோசனைகள் - குறைகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்கள் தொடா்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757 (ம) 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் ஆகியவற்றை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடக்கி வைத்தாா்.

● காரணம் : பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திருக்கோயில்கள் தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், நிறை, குறைகளை தெரிவிக்கும் வகையிலும் தொடங்கப்பட்டுள்ளது.


Current Affairs 2023 - January 06/2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 JANUARY 06 / 2022 


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்


1. தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எத்தனை கோடியாக உயர்ந்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் ? 

அ) 6.10 கோடி 

ஆ) 6.12 கோடி

இ) 6.15 கோடி

ஈ) 6.20 கோடி

விடை : (ஈ) 6.20 கோடி

தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மாநில தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது.

● மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179-ஆக உயா்ந்துள்ளது. 

● இதில், ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866. பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286. மூன்றாம் பாலின வாக்காளா்களின் எண்ணிக்கை 8,027.

● அதிகம், குறைவு: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளா்கள் உள்ளனா். 

● குறைந்தபட்ச வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 125 வாக்காளா்கள் உள்ளனா்.

● வெளிநாடுகளில் வசித்து, தமிழ்நாட்டில் வாக்குரிமை வைத்திருப்போரின் எண்ணிக்கை 3,310 ஆகும். 

● மொத்த வாக்காளா்களில் மாற்றுத் திறன் படைத்தவா்களாக அறியப்பட்டவா்கள் 4 லட்சத்து 48 ஆயிரத்து 138. 

● குறிப்பு : 

மொத்த வாக்காளா்கள்: 6,20,41,179

ஆண்கள்: 3,04,89,866

பெண்கள்: 3,15,43,286

மூன்றாம் பாலினத்தவா்: 8,027.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. வடகிழக்கு மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடர எத்தனை கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது ?

அ) ரூ. 10,170 கோடி

ஆ) ரூ.12,882 கோடி

இ) ரூ. 13,170 கோடி

ஈ) ரூ. 13,999 கோடி

விடை : (ஆ) 12,882 கோடி

வடகிழக்கு மாநிலங்கள் வளா்ச்சி திட்டங்கள் தொடர ரூ. 12,882 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 

● அறிவிப்பு :  வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைச்சா் கிஷண் ரெட்டி.

● வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு 15-ஆவது நிதி ஆணையம் 2024-26 வரையில் பரிந்துரைத்திருந்த ரூ.19,482 கோடியில் மீதமுள்ள ரூ.12,882 கோடியை விடுவிக்க பிரதமா் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● பெரும்பாலான வளா்ச்சித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 


3. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார் ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையும், இரண்டாம் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இன்னும் தேதிகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

● பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

● இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நுழைவின்போது எம்.பி.க்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மாா்ட் காா்டு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

● மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஒலி-ஒலி கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி.களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


4) பின்வரும் எங்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது தேசிய மாநாடு தொடங்கப்பட்டுள்ளது ?

அ) போபால் 

ஆ) கொல்கத்தா 

இ) காந்திநகர்

ஈ) சென்னை 

விடை : (அ) போபால் 

மாநில நீா்வளத் துறை அமைச்சா்களின் முதலாவது தேசிய மாநாடு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சாா்பில் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் வியாழக்கிழமை தொடங்கியது. 

● இருநாள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினார் .


5. உலகின் மிக நீண்டதூர நதிவழி சொகுசு கப்பல் சேவை பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்படவுள்ளது ?

அ) சீனா 

ஆ) ரஷ்யா

இ) இந்தியா

ஈ) பிரிட்டன் 

விடை : (இ) இந்தியா 

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மற்றும் அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் இடையே வங்கதேசம் வழியாக இயக்கப்படவிருக்கும் ‘கங்கா விலாஸ்’ நதி சுற்றுலா கப்பலை பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி 13-இல் தொடக்கிவைக்கவுள்ளாா்.

● கங்கை, பிரம்மபுத்ரா என நாட்டின் இரு பெரும் நதிகளில் 3,200 கி.மீ. தொலைவுக்கு இக்கப்பல் பயணிக்கும். 

● ஐம்பது நாள்கள் நடைபெறும் இந்த சுற்றுலா பயணத்தில் உலக பாரம்பரிய சின்னங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கப்பல் நின்று செல்லும். 

● உலகிலேயே மிக நீளமான நதி சுற்றுலா என்ற சிறப்பும் ‘கங்கா விலாஸ்’ கப்பல் பயணத்துக்கு சொந்தமாக உள்ளது.


6. சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் எத்தனை ஆய்வாளர்களை கடலில் 500 மீ ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது ?

அ) 6

ஆ) 5

இ) 4

ஈ) 3

விடை : (ஈ) 3

இந்தியாவிலேயே கட்டப்பட்ட சமுத்ராயன் என்ற கப்பலில் கடலுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்திற்கு இந்த ஆண்டு மூன்று ஆய்வாளர்களை இந்தியா அனுப்பவுள்ளது.


7. பின்வரும் எந்த ஆண்டுக்குள் பெங்களூரு - சென்னை விரைவுச் சாலைப் தயாராகிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளனர் ?

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026

விடை : (ஆ) 2024

பெங்களூரு: பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

● பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

● இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.


8. 108 ஆவது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எங்கு நடைபெற்று வருகிறது ?

அ) நாகபுரி 

ஆ) சென்னை

இ) கொல்கத்தா 

ஈ)திருச்சூர் 

விடை : (அ) நாகபுரி 

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

● நாகபுரியில் நடைபெறும் 108-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

● குறிப்பு : இந்தியாவில் குறைந்து வரும் ஆராய்ச்சியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்ட முயற்சிகளுக்கு மாநில அரசுகள் நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசின் அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் கோரிக்கை விடுத்துள்ளாா்.


III. முக்கிய நிகழ்வுகள் 


9. World Day of War Orphans 2023 ---------

Ans : January 06 


Tuesday, January 3, 2023

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் ஜனவரி 02/2023 முதல்  தொடங்கப்பட்டுள்ளது. 

● மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

● நோக்கம் : மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முன்பு : ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. 

Monday, January 2, 2023

Current Affairs 2023 - January 02 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    JANUARY 02 /2023


 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தி ஜனவரி 01,2023 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் ?

அ) 2%

ஆ) 3%

இ) 4%

ஈ) 5%

விடை : (இ) 4%

 ● அரசு ஆசிரியர், ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

● இதன்மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு தொடங்கப்படவுள்ள யூ-டியூப் சேனல் ?

அ) நலம் 108

ஆ) நலம் 212

இ) நலம் 317

ஈ) நலம் 365 

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் திங்கள்கிழமை (ஜன.2) முதல் தொடங்கப்படவுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கவுள்ளாா்.

● மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முன்பு : ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘நலம் 365’ சேனல் தொடங்கப்படவுள்ளது.


3. தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து எத்தனை ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது ?

அ) ரூ.1,500

ஆ) ரூ.2000

இ) ரூ.2,500

ஈ) ரூ.3,000

விடை : (அ) ரூ.1,500

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

● வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 

● இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் எத்தனையாவது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறவுள்ளது ?

அ) 100

ஆ) 108

இ) 111

ஈ) 120

விடை : (ஆ) 108 

1914-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இப்போது 108-ஆவது மாநாடு நாகபுரியில் உள்ள ஆா்.டி.எம். நாகபுரி பல்கலைக்கழகத்தில் ஜனவரி 03 முதல் ஜனவரி 07 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. 

● இதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. இந்தத் தலைப்பில் பிரபல பெண் விஞ்ஞானிகளும் பேச இருக்கின்றனா்.

● அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடா்பாகவும், உயா் கல்வி, ஆய்வுப் படிப்புகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு சம வாய்ப்பை மேம்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.


5. கைப்பேசி ஏற்றுமதியை எத்தனை கோடிக்கு உயர்த்துவது 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.50,000 கோடி

ஆ) ரூ.1லட்சம் கோடி

இ) ரூ.1.5 லட்சம் கோடி 

ஈ) ரூ.2 லட்சம் கோடி

விடை : (ஆ) 1 லட்சம் கோடி

கைப்பேசி ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவது பிரதமா் நரேந்திர மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.

● நாட்டில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். கைப்பேசிகளின் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவதுடன் ஏற்றுமதி பட்டியலில் முதன்மையான 10 பொருள்களில் ஒன்றாக கைப்பேசியையும் இடம்பெறச் செய்வதே பிரதமா் மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்காகும்.

● தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கைப்பேசிகளின் மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடியாகும். கைப்பேசி தவிா்த்து பிற மின்னணு சாதனங்களைத் தயாரிப்பதற்கான சூழலை விரிவுபடுத்த உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

● இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்துக்கான வன்பொருள்களைத் தயாரிக்க டெல், ரைஸிங் ஸ்டாா், லாவா இண்டா்நேஷனல் உள்ளிட்ட 14 நிறுவனங்களை மத்திய அரசு தோ்ந்தெடுத்துள்ளது.


6. 2021 ஆம் ஆண்டில் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக எத்தனை பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 1040

ஆ) 1235

இ) 1317

ஈ) 1997

விடை : (அ) 1040

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2021-இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள்’ என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

● இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.53 லட்சம் போ் உயிரிழந்தனா். 3.84 லட்சம் போ் படுகாயமடைந்தனா்.

● கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக 1,997 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,040 போ் உயிரிழந்தனா். 

● சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் விதியை மீறிச் சென்ன் காரணமாக நிகழ்ந்த 555 சாலை விபத்துகளில் 222 போ் உயிரிழந்தனா். 

● சாலைகளில் காணப்படும் பள்ளங்களின் காரணமாக 3,652 சாலை விபத்துகள் நேரிட்டத்தில் 1,481 போ் உயிரிழந்தனா்.


7. நேபாளத்தில் பின்வரும் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை நேபாள பிரதமர் பிரசண்டா அண்மையில் திறந்து வைத்தார் ?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

விடை : (ஈ) சீனா

நேபாளத்தில் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட சா்வதேச விமான நிலையத்தை பிரதமா் பிரசண்டா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

● மேற்கு நேபாளத்தின் சுற்றுலா மையமாக கருதப்படும் பொக்காராவில் சீனாவின் உதவியுடன் இந்த பிராந்திய சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த விமான நிலையத்துக்காக 215 மில்லியன் டாலா் கடனுதவி பெற கடந்த 2016-இல் சீனாவுடன் நேபாளம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது.


III. முக்கிய நிகழ்வுகள் 


8. World Introvert Day 2023 -------

● Ans : January 02

● Theme : Celebrating the power of Introvert

● First Observed : 2011


Sunday, January 1, 2023

Current Affairs 2023 - January 01 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                    JANUARY 01/2023


I. தமிழ்நாட்டு செய்திகள் 


1. தமிழகத்தில் எங்கு மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகளின் பயன்பாடு முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ?

அ) கேரளா

ஆ) பஞ்சாப்

இ) அசாம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

● மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகள் :-

¤ சேலம் மாநகரில் முக்கியமான 1,100 இடங்களை ரோந்து போலீசார் நேரடியாக சென்று கண்காணிப்பதை உறுதி செய்து, அவர்களது பணியை ஒருங்கிணைக்கும் வகையில் இ-பீட் ரோந்து செல்போன் செயலி.
¤ காவல் நிலைய வரவேற்பாளர் பணி மீனாய்வு செயலி.
¤ நெடுஞ்சாலை ரோந்து செல்போன் செயலி.
¤ மின்னணு காவல் ரோந்து செயலி.

● தொடக்கி வைத்தவர் : சேலம் மாநகர காவல் ஆணையர் நம்மல் ஹோடா.



II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) பங்கஜ் குமார்

ஆ) சுஜோய் லால் தாவ்சென்

இ) பங்கஜ் லால்

ஈ) சுந்தர் சேத்ரி

விடை : (ஆ) சுஜோய் லால் தாவ்சென்

● இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.

● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.

● சுஜோய் லால் தாவ்சென்

¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.

● குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

● BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.


3. பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) நிர்வாக இயக்குநர் (ம) தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா 

ஆ) பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா 

இ) பாலசுப்பிரமணியன் . கே

ஈ) பங்கஜ் சிங் 

விடை : (அ) அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா


4. மலிவு விலையில் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்து வரும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டுக்குள் -------- ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 5,300

ஆ) 6,600

இ) 8,700

ஈ) 10,000

விடை : (ஈ) 10,000

● மக்கள் மருந்தகம் :- 
தரமான மருந்து பொருளாகள் மக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் மருந்தகம் திட்டத்தை 2008 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

● மத்திய வேதிப் பொருள்கள் - உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்துப் பொருள்கள் துறை இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

● இந்நிலையில் மத்திய அரசு 2024 ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.


5. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் ( NFSA ) கீழ்  81.35 கோடி பயனாளிகளுக்கு என்று முதல் 2023 ஆம் முழுவதும் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட உள்ளது ?

அ) ஜனவரி 01

ஆ) ஜனவரி 12

இ) ஜனவரி 26 

ஈ) ஜனவரி 31

விடை : (அ) ஜனவரி 01

● கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை என்எஃப்எஸ்ஏ வுடன் மத்திய அரசு அண்மையில் இணைந்துள்ளது.

●  இந்த புதிய திட்டத்தின் படி என்எஃப்எஸ்ஏ வின் கீழ் நாட்டில் உள்ள 81.35 கோடி பயனாளிகளுக்கு 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலவச தானியங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.


6.2022 ஆம் ஆண்டின் தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் எத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது ? 

அ) 60

ஆ) 67

இ) 72

ஈ) 79

விடை : (இ) 72 

● வெளியீடு : மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

● குறிப்பு : இதுவரை இல்லாத வகையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


7. பெட்ரோலில் கலப்பதற்காக விநியோகிக்கப்படும் எத்தனால் மீதான சரக்கு - சேவை வரி (GST) குறைப்பானது என்று முதல் அமலுக்கு வருகிறது ? 

அ) ஜனவரி 01

ஆ) ஜனவரி 11

இ) ஜனவரி 17

ஈ) ஜனவரி 26

விடை : (அ) ஜனவரி 01

● பெட்ரோலுடன் கலப்பதற்காக பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரி 18% ல் இருந்து 5% குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்திருந்தது.

● இந்த வரி குறைப்பானது ஜனவரி 01/2023 முதல்  அமலுக்கு வந்துள்ளது.


8. கால்நடைகளின் ஏற்படும் தோல் கழலை (லும்பி ஸ்கின் ) நோயைத் தடுப்பதற்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர் ?

அ) லும்பி - நோவோவேக் 

ஆ) லும்பி - கோவோவேக்

இ) புரோவேக்- லும்பி

ஈ) லும்பி - புரோவேக் 

விடை : (ஈ) லும்பி - புரோவேக் 

● தடுப்பூசி தயாரிப்பு : 

¤ ஹரியாணாவின் தேசிய கால்நடை தடுப்பூசி மையம், தேசிய கால்நடைகள் ஆராய்ச்சி மையம், உத்தர பிரதேசத்தின் இந்திய கால்நடைகள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் லும்பி - புரோவேக் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

● மேலும் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரத்தின் புனேவைச் சேர்ந்த கால்நடை உயிரியல் பொருள்கள் மையத்துடன் (ஐவிபிபி) மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

● தடுப்பூசியை வர்த்தக நோக்கில் தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் ஆராய்ச்சி னத் துறையானது அந்நிறுவனத்துக்கு 10 ஆண்டுகளுக்கு வழங்கியுள்ளது . 


9. இந்தியாவில் முதல்முறையாக எங்கு ஓமிக்ரான் எக்ஸ்பி.பி.1.5 வகை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) மகாராஷ்டிரா

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) மணிப்பூர்

விடை : (ஆ) குஜராத் 


III. முக்கிய தினங்கள் 

10. Global Family Day 2023 -------------

● Ans : January 01 


இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் சுஜோய் லால் தாவ்சென்

Sujoy Lol Thaosen took over the additional charge of Director General of Border Security Force (BSF).

இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படையின் புதிய தலைமை இயக்குநராக சுஜோய் லால் தாவ்சென் பொறுப்பேற்றுள்ளார்.

● இவருக்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்தவர் : பங்கஜ் குமார்.

சுஜோய் லால் தாவ்சென்

¤ இவர் மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) தலைமை இயக்குநராக உள்ள சுஜோய் கூடுதல் பொறுப்பாக பிஎஸ்எஃப் தலைமை இயக்குநராக பதவி ஏற்றுள்ளார்.

குறிப்பு: இவர் ஏற்கெனவே BSF சிறப்பு தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

BSF படை : சுமார் 2.65 லட்சம் வீரர்கள் உள்ளனர்.
¤ பாகிஸ்தான்,வங்தேசத்துடன் இந்தியா பகிர்ந்து வரும் 6,300 கி.மீ. க்கும் மேலான எல்லையை இந்தப் படையினர் பாதுகாத்து வருகின்றனர்.

 

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...