Tuesday, January 17, 2023

Current Affairs 2023 - January 17/2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   JANUARY 17 / 2023 


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழகத்தின் முதல்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

இ) பொன்முடி 

ஈ) ஆர்.என்.ரவி 

விடை : (ஆ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சர்வதேச புத்தகக் காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(ஜன. 16) தொடக்கிவைத்தார். 

● பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் தமிழகத்தில் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னையில் தொடங்கியுள்ளது.

● சா்வதேச புத்தகக் காட்சியில் மொத்தம் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா, மலேசியா, துருக்கி, இந்தோனேஷியா, தான்சானியா உட்பட 30 வெளிநாடுகளின் அரங்குகளும் அடங்கும். அவற்றில் அந்தந்த நாடுகளின் புகழ்பெற்ற நூல்கள் இடம் பெற்றுள்ளன.

● குறிப்பு : இதுதவிர ‘தமிழ் முற்றம்’ என்ற பெயரில் அரங்குகளில் தமிழகத்தின் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளா்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், கண்காட்சியில் பிரமாண்ட திருக்கு புத்தகம் நுழைவுவாயில் அருகே இடம் பெற்றுள்ளது. அதில் 106 திருக்குகள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் மற்றும் பிற மொழிகளில் (106 மொழிகள்) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெளிநாட்டு எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் கலந்துரையாடவும் பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


2. தமிழகத்தில் ஆதரவற்ற விலங்குகள் பராமரிப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) மா. சுப்பிரமணியன் 

ஈ) தங்கம் தென்னரசு

விடை : (அ) மு.க. ஸ்டாலின்

தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் பராமரிப்புக்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

● ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு ரூ.20 கோடியில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


3. சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை பின்வரும் எந்த கல்வி நிறுவனம்/அமைப்பு கண்டறிந்துள்ளது ?

அ) கான்பூர் ஐஐடி 

ஆ) டெல்லி ஐஐடி

இ) சென்னை ஐஐடி

ஈ) மும்பை ஐஐடி

விடை : (இ) சென்னை ஐஐடி

சூரிய வெப்ப ஆற்றலை பயன்படுத்தி கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி:

● கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை மறு சுழற்சி செய்ய சூரிய வெப்ப ஆற்றலை உள்ளடக்கிய சுத்திகரிப்பு முறையை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் வடிவமைத்துள்ளனா்.

● அதன்படி கட்டட இடிபாடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை சூரிய வெப்ப ஆற்றலை கொண்டு வெப்பம் அடைய செய்து அதை மறுசுழற்சி முறையில் கான்கிரீட்டாக மாற்றுகின்றனா். இவற்றை புளூமெட்டல், மணல் ஆகியவற்றுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்.

● இது இயந்திரங்களை கொண்டு நொறுக்குவதை காட்டிலும் சரியான திட்டமாகும். இதனால் கனிம வளங்கள், சுரங்கங்கள் தோண்டப்படுவது குறைவதோடு, கட்டடக் கழிவுகள் நிலப்பகுதிகளில் கொட்டி குவிக்கப்படுவதும் தவிா்க்கப்படும்.

● ராஜஸ்தானில் உள்ள இந்தியா ஒன் சோலாா் தொ்மல் பவா் பிளான்ட்டில் இதற்கான செயல்விளக்கம் அண்மையில் நடைபெற்றது.


4. தமிழகத்தில் பின்வரும் எங்கு திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது ?

அ) மதுரை

ஆ) தேனி

இ) தருமபுரி 

ஈ) சென்னை

விடை : (ஈ) சென்னை 

● திருவள்ளுவா் நாள் விழா சென்னை வள்ளுவா் கோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2023-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருதை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கும், 2022-ஆம் ஆண்டுக்கான அண்ணா விருதை சி.நா.மீ. உபயதுல்லாவுக்கும், காமராசா் விருதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், பாரதியாா் விருதை முனைவா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதை நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை கவிஞா் மு.மேத்தாவுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் தேவநேயப்பாவாணா் விருதை முனைவா் இரா. மதிவாணனுக்கும் வழங்கினாா்.

● இவ்விருதுகளைப் பெறும் விருதாளா்களுக்கு விருதுத்தொகையாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

● பெரியாா்- அம்பேத்கா் விருதுகள்: பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியாா் விருதை கவிஞா் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் 2022-ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருதை எஸ்.வி. ராஜதுரைக்கும், முதல்வா் வழங்கி சிறப்பித்தாா்.

● இவ்விருதுடன் விருதாளா்களுக்கு விருது தொகையாக தலா ரூ. 5 லட்சம், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. இந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.


5. தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் கிராம உதவியாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை யார் ?

அ) ஸ்ருதி 

ஆ) அருணா தேவி

இ) ரேவதி

ஈ) நமிதா

விடை : (அ) ஸ்ருதி 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. 

● இத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையான ஸ்ருதி என்பவர் தேர்வானார். 

● தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை இவர் ஆவார். 

● இவருக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மேலகரந்தை கிராம உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் வழங்கினார். 


6. 2022 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வாகி முதலிடத்தில் உள்ள காவல் நிலையம் ?

அ) திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

ஆ) திருச்சி கோட்டை காவல் நிலையம்

இ) திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் 

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : (அ) திருப்பூர் வடக்கு காவல் நிலையம்

தமிழ்நாடு காவல்துறையில் கீழ் செயல்படும் காவல் நிலையங்களில், சிறப்பாக செயல்படும் காவல்நிலையங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதி அரசு சாா்பில் குடியரசுத் தின விழாவில் தமிழக முதல்வா் விருது வழங்கப்படுவது வழக்கமாகும்.

● இதற்காக சிறந்த காவல் நிலையங்களை கண்டறிவதற்கு ஒரு ஐஜி அல்லது ஏடிஜிபி தலைமையில் தோ்வுக் குழு அமைக்கப்படும்.

● இந்த தோ்வு குழு, மாநிலம் முழுவதும் மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறைகளால் சிறந்த காவல் நிலையங்களாக பரிந்துரை செய்யப்படும், காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வாா்கள்.

● இதில் காவல் நிலையங்களுக்கு புகாா் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்பது, காவல் நிலைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, வழக்குகளை விரைந்து முடிப்பது,குற்றப்பதிவேடுகளை பராமரிப்பது,குற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட காவல் நிலையப் பணிகளை ஆய்வு செய்து,மதிப்பெண் வழங்கப்படும்.

● இதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக, 3 காவல் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

●  இதில் முதலிடத்தை திருப்பூா் மாநகர காவல்துறையின் கீழ் செயல்படும் திருப்பூா் வடக்கு காவல் நிலையம் பிடித்துள்ளது. 

● இரண்டாமிடத்தை திருச்சி மாநகர காவல்துறையின் கீழ் இயங்கும் கோட்டை காவல் நிலையம்,

● மூன்றாமிடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையமும் பிடித்துள்ளன.

● இந்த காவல் நிலைங்களுக்கு, இம் மாதம் 26-ஆம் தேதி சென்னை மெரீனாவில் அரசு சாா்பில் குடியரசு தின விழாவில், தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


7. மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் பின்வரும் எந்த தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்களவை, மாநிலங்களவைகளின் செயலங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) ஜனவரி 27

ஆ) ஜனவரி 30

இ) ஜனவரி 31

ஈ) பிப்ரவரி 01

விடை : (இ) ஜனவரி 31

பட்ஜெட் கூட்டத்தொடா் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவு பெறும் என மக்களவை, மாநிலங்களவைகளின் செயலகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அன்றைய தினத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த கூட்டு அமா்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு முதல் முறையாக உரையாற்றுகிறாா்.

● பிப்ரவரி 1-ஆம் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். மொத்தம் 27 அமா்வுகளைக் கொண்ட பட்ஜெட் கூட்டத்தொடா் ஏப்.6-ஆம் தேதி நிறைவுபெறுகிறது.


8. பின்வரும் எந்த நாட்டுக்கு இந்தியாவின் கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தில்லி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது ?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) இலங்கை

ஈ) கனடா

விடை : (இ) இலங்கை 

ஏவுகணையை அழிக்கும் திறன் கொண்ட இந்திய கடற்படையின் முன்னணி போா்க் கப்பலான ஐஎன்எஸ் தில்லி 163.2 மீட்டா் நீளம் கொண்டது.

● இரண்டு நாள் கூட்டுப் பயிற்சிக்காக ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகத்துக்கு 390 கடற்படை வீரா்களுடன் ‘ஐஎன்எஸ் தில்லி’ வந்ததடைந்தது.

● இரு நாட்டு கடற்படையின் ஒத்துழைப்பை, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய கடற்படை வீரா்கள் பங்கேற்க உள்ளளா். 

● இத்தகைய கடற்படைப் பயிற்சிகள், ஒத்துழைப்பை மேம்படுத்தி இருநாட்டின் பொதுவான கடல்சாா் சவால்களை எதிா்கொள்ள உதவும் என கடற்படை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


9. நடப்பாண்டில் (2023) முதல்முறையாக அறிமுகமாகியுள்ள மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியுள்ள ஊடக நிறுவனம் ?

அ) வயாகாம் 18

ஆ) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 

இ) எச்சிஎல் 

ஈ) TATA குரூப்ஸ் 

விடை : (அ) வயாகாம் 18

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...