Saturday, July 30, 2022

Current Affairs 2022 - July 29 / 2022 - TNPSC 1 ,2/2A & 4

                      GK SHANKAR
                     JULY 29 / 2022 

I. தேசியச் செய்திகள்  

1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் கீழ்கண்ட எந்த நாளில் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 07
ஆ) ஆகஸ்ட் 15
இ) ஆகஸ்ட் 23
ஈ) ஆகஸ்ட் 30 

விடை : (அ) ஆகஸ்ட் 07 

● இந்த கூட்டத்தில் பொருளாதாரம், வேளாண்மை (ம) சுகாதாரம் போன்ற துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது .

2. அண்மையில் எத்தனையாவது வேளாண்மை கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 7 ஆவது
ஆ) 9 ஆவது
இ) 11 ஆவது
ஈ) 15 ஆவது 

விடை : (இ) 11 ஆவது 

பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்  தொடக்கி வைத்தாா்.

●பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●2021-22 ஆம் ஆண்டுக்கான 11-ஆவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதற்கான களப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.

●இந்த கணக்கெடுப்பு நடைமுறையை கடந்த 1970-71 ஆம் ஆண்டு முதல் மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு கடந்த 2015-16-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

●ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பதினோறாவது கணக்கெடுப்பு தாமதமானது.

●மொத்த விவசாய பரப்பின் அளவு, வகுப்பு வாரியான பங்கீடு, நிலப் பயன்பாடு, குத்தகை, பயிரிடும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் கீழ் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●பல மாநிலங்கள் நிலப் பதிவு மற்றும் அளவீடுகளை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கியிருப்பதால், வேளாண் கணக்கெப்புக்கான விவரங்களை விரைவாக சேகரிக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த எண்மமய விவரங்கள் மற்றும் விவரங்களை கைப்பேசி செயலிகளைக் கொண்டு சேகரிப்பது போன்ற நடைமுறைகள், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாய பரப்பின் விவரப் பதிவை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. அமெரிக்காவில் இருந்து எத்தனை எம்.ஹெச். - 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது ? 

அ) 03

ஆ) 02

இ) 05

ஈ) 09

விடை : (ஆ) 02 

● அமெரிக்காவுடன் ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள் (ம) பிற தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 

● அதன் ஒரு பகுதியாக 24 எம்.ஹெச் - 60 ஆர் ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

● அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

● அவற்றில் 3 ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தது ; தற்போது 2 கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

● வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 24 ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் வழங்கப்படவுள்ளது. 

4. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்ராந்த் கீழ்க்கண்ட எந்த நாளன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15

ஆ) அக்டோபர் 02 

இ) நவம்பர் 01

ஈ) டிசம்பர் 10 

விடை: (அ) ஆகஸ்ட் 15 

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

● சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ராந்த் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

● விமானம்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

● இத்துடன் விமானம்தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டும் வலிமை கொண்ட ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

● நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்ராந்த் விமானம்தாங்கி போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிகழ்வு சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

● கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐஏசி விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அக்கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. இது ‘தற்சாா்பு இந்தியா’ கொள்கைக்கான சிறந்த உதாரணமாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ராந்த் போா்க் கப்பலின் சிறப்பம்சங்கள்:

¤ நீளம் 262 மீட்டா்

¤ அகலம் 62 மீட்டா்

¤ உயரம் 59 மீட்டா்

¤ டா்பைன்களின் எண்ணிக்கை 4

¤ என்ஜின் திறன் 88 மெகா வாட்

¤ அதிகபட்ச வேகம் மணிக்கு 28 நாட் (சுமாா் 52கி.மீ.)

¤ ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு சுமாா் 7,500 கடல்மைல்

¤ இயக்கவல்ல போா் விமானங்கள் மிக்-29கே, கமோவ்-31 உள்ளிட்டவை

¤ இயக்கவல்ல ஹெலிகாப்டா்கள் எம்ஹெச்-60ஆா், இலகுரக ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை

¤ அறைகளின் எண்ணிக்கை சுமாா் 2,300.

5. சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிருந்து திருடப்பட்ட சோழர்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஆஸ்திரேலியா

இ) இலங்கை

ஈ) அமெரிக்கா

விடை : (ஈ) அமெரிக்கா

சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிலிருந்து திருடப்பட்ட சோழா்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள ஓா் அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கண்டறிந்தனா். அதனை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

6. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி , ஆறு வழிச் சாலைகளை மாற்றும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 13,310 கோடி

ஆ) ரூ. 18,500 கோடி

இ) ரூ. 25,000 கோடி

ஈ) ரூ. 22,400 கோடி

விடை : (ஆ) ரூ. 18,500 கோடி

தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு மட்டும் ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

7. அண்மையில் எத்தனை ஆயிரம் உயர்கல்வி படிப்புகளை வலைதளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது ? 

அ) 23,000

ஆ) 25,000

இ) 13,000

ஈ) 17,000

விடை : (அ) 23,000

செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உள்பட 23,000 உயா்கல்வி படிப்புகளை வலைத்தளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்தது.

● நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களும் உயா்கல்வியை சிரமமின்றி பெறுவதற்காக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம், புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

II. விளையாட்டுச் செய்திகள் 

8. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்யில் தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஜோ பைடன்

ஆ) நரேந்திர மோடி

இ) திரௌபதி முர்மு

ஈ) மு.க. ஸ்டாலின் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

● இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 

● இந்தியா சார்பில் 30 பேர் கொண்ட அணி பங்கேற்கவுள்ளது.

● ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. 

● செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜோதி ஓட்டம் முதல்முறையாக நடத்தப்பட்டது ; 75 முக்கிய நகரங்களில் 27,000 கி.மீ. தொலைவுக்கு ஜோதி பயணித்தது. 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. சர்வதேச புலிகள் தினம் ( International tiger day ) 2022 ? 

அ) ஜூலை 27

ஆ) ஜூலை 25

இ) ஜூலை 28

ஈ) ஜூலை 29 

விடை : (ஈ) ஜூலை 29 



Friday, July 29, 2022

Current Affairs 2022 - July 28 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                    JULY 28 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ?  

அ) கேரளா
ஆ) அசாம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

● தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14,095 மாணவா்கள் பயன்பெறுவா்.

● திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண்பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரி வழங்கப்படும். காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

● காலை உணவுக்கான மூலப் பொருள் ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்களை பயன்படுத்தலாம். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாள்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

● உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்கள் தரமானதாக, சுத்தமாக இருக்க வேண்டும்.

2. மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) நரேந்திர மோடி

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

●மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞா்களின் நலனுக்காக ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக் கலைத் தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

●சிற்பக்கலைத் தூணில் கலைநயமிக்க பல்லவா் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக் கூட்டம் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. 

●செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில், சதுரங்க வீரா்களையும், போட்டியைக் காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொது மக்களையும் கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. பத்ம விருதுகள் உள்பட அனைத்து தேசிய விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க கீழ்கண்ட எந்த வலைதளம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) awards.gov.in

ஆ) cg.awards.gov.in

இ) bharath.awards.in

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) awards.gov.in 

● மத்திய அரசின் அனைத்து விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க பொதுவான வலைதளம் awards.gov.in  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

● நோக்கம் : விருதுகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையையும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

4. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை எத்தனை கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2.5 லட்சம் கோடி

ஆ) ரூ.3.2 லட்சம் கோடி

இ) ரூ. 1.64 லட்சம் கோடி

ஈ) 57 லட்சம் கோடி 

விடை : (இ) ரூ. 1.64 லட்சம் கோடி 

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

●பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளன .

5. கூற்று : தேசிய ஊக்க மருந்து தடை முகமை (ம) தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

காரணம் : விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் , விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது . 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது 

● தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

●விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். இதன்மூலமாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வக வசதிகளும் மேம்படும். மேலும், இந்தியாவில் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நாட்டில் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் பலத்தை அதிகரிப்பது அவசியமாகும். அதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்.

●இந்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் என்பதோடு, விளையாட்டில் ஊக்க மருந்து தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கவும் உதவும்

●முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. இந்தியாவில் முதல்முறையாக வாடகை கார் முன்பதிவு செயலியை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) உத்தரகாண்ட் 

ஈ) கேரளா

விடை : (ஈ) கேரளா

● செயலியின் பெயர் : கேரளா சவாரி ( ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது ) 

● மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ? 

அ) ரஷ்யா

ஆ) கனடா

இ) ஜமாய்

ஈ) பிலிப்பின்ஸ் 

விடை : (ஈ) பிலிப்பின்ஸ்

● ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

● இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் ; 25 பேர் காயமடைந்துள்ளனர்.

● இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பின்ஸ் திகழ்கிறது.

III. விளையாட்டுச் செய்திகள் 

8. காமன்வெல்த் போட்டிகள் 2022 ல் எத்தனை பேர் கொண்ட இந்திய அணி கலந்துக்கொளகிறது ? 

அ) 225

ஆ) 215

இ) 313

ஈ) 137 

விடை : (ஆ) 215 

● இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகளின் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது.

● இந்த நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

● இந்த ஆண்டுக்கான 22 ஆவது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ( 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் ) ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இப்போட்டியில் முதல்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

●இந்த ஆண்டுக்கான பர்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.

● இப்போட்டியில் இந்தியா சார்பில் 215 பேர் கொண்ட அணி 19 பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.

● இப்போட்டியின் அணிவகுப்பில் இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடி ஏற்றி தலைமை தாங்குவார். 

● முன்பு : 2018 , ஆஸ்திரேலியா - இந்தியா மொத்தமாக 66 ( 26G, 20S, 20B )  பதக்கங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்தது. 

9. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 11

ஆ) அக்டோபர் 11

இ) செப்டம்பர் 11

ஈ) நவம்பர் 11

●  17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

● இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா போட்டியின், 17 வயதுக்குட்பட்டோருக்கான 7வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி பிரபலமடைவதுடன், இளைஞர்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tuesday, July 26, 2022

Current Affairs 2022 - July 25 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                         GK SHANKAR 
                         JULY 25 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக: 

1) தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாதியின் நினைவாக மெரினா கடலுக்கு நடுவே பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. 

2) இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீ கண்ணாடி பாலம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும்
இ) 1 (ம) 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 (ம) 2 

● தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாதியின் நினைவாக மெரினா கடலுக்கு நடுவே ரூ. 80 கோடி செலவில் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. 

●  இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீ கண்ணாடி பாலம் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

● மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. 

2) தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என எந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது ? 

அ) 1978
ஆ) 1926
இ) 1998
ஈ) 1911
விடை : (அ) 1978 

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும் என அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது 1978 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது .

II. தேசிய செய்திகள் 

3. இந்தியாவின் எத்தனயாவது
 குடியரசு தலைவராக ராமநாத் கோவிந்த் கடந்த எந்த ஆண்டு பதவி ஏற்றுக்கொண்டார் ? 

அ) 15 ஆவது , 2014
ஆ) 14 ஆவது , 2014
இ) 15 ஆவது , 2017
ஈ) 14 ஆவது , 2017 

விடை : (ஈ) 14 ஆவது ,2017 

அவரின் பதவிக்காலம் ஜூலை 25 ஆம் தேதி நிறைவடைந்தது .

4. ஒற்றை கட்டளையின் கீழ் செயல்படும் முப்படை வீரர்களைக் கொண்ட பிரிவுகள் (தியேட்டரைசேஷன் ) விரைவில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) ராஜ்நாத் சிங்
இ) ஜெய்சங்கர்
ஈ) அமித் ஷா 

விடை : (ஆ) ராஜ்நாத் சிங் 

முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த கமெண்ட் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். முப்படைகளுக்குமான இந்த ஒருங்கிணைந்த கமெண்ட் மையம் என்பது பாதுகாப்புத் துறையில் நீண்ட காலம் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய சீர்திருத்தம் ஆகும். 

5. இந்தியாவில் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கும் குடியரசு தலைவர்களின் பட்டியலில் எத்தனையாவது குடியரசுத் தலைவராக முர்மு இடம் பிடித்துள்ளார் ? 

அ) 15 ஆவது
ஆ) 10 ஆவது
இ) 13 ஆவது
ஈ) 17 ஆவது 

விடை : (ஆ) 10 ஆவது 

● கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையுள்ள ஆவணங்களின்படி குடியரசு தலைவர்கள் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றுள்ளனர். 

6. நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் புலிகளின் இறப்பு அதிகபட்சமாக பதிவாகியுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா
ஆ) உத்தர பிரதேசம் 
இ) மத்திய பிரதேசம் 
ஈ) அசாம் 
விடை : (இ) மத்திய பிரதேசம் 

● நாடு முழுவதம் 74 புலிகள் இறந்துள்ளன.
- அவற்றின் பட்டியல் 
- ம.பி. - 27
- மகாராஷ்டிரா - 15
- கர்நாடகா - 11
- அசாம் - 5 
- கேரளா - 4 
- ராஜஸ்தான் - 4 
- உ.பி. - 3 
- ஆ.பி - 2 
- ஒடிசா, சட்டீஸ்கர், பிகார் - 01 

7. பின்வரும் எந்த நாடு தனது சொந்த விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது ? 

அ) ரஷ்யா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா 
ஈ) சீனா 
விடை : (ஈ) சீனா 

● சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக  விண்ணில் செலுத்தியது.

பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடா்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு ஏப்ரலில் தியான்ஹே மையக் கலம் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.

III. விளையாட்டுச் செய்திகள் 

8. அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு  நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து 23 வயதான நீரஜ் சோப்ரா தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.   இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அமெரிக்காவில் 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒரேகான் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இன்று இறுதி ஆட்டம் நடைபெற்ற நிலையில், நான்காவது முயற்சியில் 88.13 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்து நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் தன்வசப்படுத்தியுள்ளார்.

கிரெனடாவைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

IV. முக்கிய தினங்கள் 

9. உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள் ( World Drowning Prevention Day ) 2022 

அ) ஜூலை 21

ஆ) ஜூலை 23

இ) ஜூலை 25

ஈ) ஜூலை 26 

விடை : (இ) ஜூலை 25 

Theme : Do Onething - to Prevent Drowning 

Current Affairs 2022 - July 26 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR 
                     JULY 26 / 2022 

1. தமிழகத்தில் பிளஸ் 01 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின் 
இ) மா. சுப்பிரமணியன் 
ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

● நடப்பு கல்வியாண்டுக்கான ( 2021 - 2022 ) அரசு,அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் 01 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். 

II. தேசியச் செய்திகள்

2. இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுள்ளார் ? 

அ) 14 ஆவது
ஆ) 15 ஆவது
இ) 17 ஆவது 
ஈ) 16 ஆவது 

விடை : (ஆ) 15 ஆவது 

● பதவி பிரமாணம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
● இந்தியாவின் 2 ஆவது பெண் குடியரசு தலைவர்.
● பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவர். 
● குடியரசு தலைவர் பொறுப்பை ஏற்பதற்கான ஆவணத்தில் முர்மு கையொப்பமிட்ட போது , முப்படைகள் சார்பில் 21 குண்டுகள் முழங்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது . 

3. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமார் எத்தனை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 12,000
ஆ) 13,000
இ) 17,000
ஈ) 22,000

விடை : (அ) 12,000 

● நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமார் 12,044 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் (ம) 1,332 ஆசிரியரல்லாத பணியிடங்களும் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,162 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. 

4. மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியக் குழுவில் எத்தனை எம்.பிக்களை நியமனம் செய்வது தொடர்பான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ? 

அ) 03
ஆ) 05 
இ) 02 
ஈ) 06 

விடை : (இ) 02 

● மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியக் குழுவில் இடம் பெறும் இரண்டு  MP க்களை மக்களைவில் தலைவர் தேர்வு செய்வார். 
● இந்திய தொல்லியல் துறைக்கும் இந்தத் துறையில் ஆராய்ச்சியில் உள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்த இந்த வாரியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

5. பதவிக் காலம் முடிந்து இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு ஆகும் ? 

அ) 3 லட்சம்
ஆ) 4 லட்சம்
இ) 3.5 லட்சம்
ஈ) 2.5 லட்சம் 

விடை : (ஈ) 2.5 லட்சம் 

● பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜூலை 25 அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றுள்ளாா்.

6. பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு இதுவரை எத்தனை கோடி அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது ?

அ) ரூ.494 கோடி

ஆ) ரூ. 500 கோடி

இ) ரூ. 371 கோடி

ஈ) ரூ. 243 கோடி 

விடை : (அ) ரூ. 494 கோடி 

7 இந்தியாவில் முதல்முறையாக மனிதர்களை ஏற்றிச் செல்லக் கூடிய ஓட்டுநர் இல்லாத ஆளில்லா விமானம் எங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது ? 

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) புது டெல்லி 

ஈ) குஜராத் 

விடை : (இ) புது டெல்லி 

● ஆளில்லா விமானத்தின் பெயர் : வருணா.

● தயாரிப்பு : சாகர் டிஃபென்ஸ் இஞ்ஜினியரிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

● இது ஒரு முறையில் ஒரு நபரினை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 

8. குஜராத்தில் நடைபெறவுள்ள 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிக்காக (2022) வெளியிடப்பட்டுள்ள சின்னம் எது ? 

அ) ஆசிய சிங்கம்

ஆ) ஆசிய புலி 

இ) ஆசிய யானை 

ஈ) ஆசிய குதிரை 

விடை : (அ) ஆசிய சிங்கம் 

● செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை குஜராத்தில் 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. 

● இப்போட்டிக்கு ஆசிய சிங்கம் இடம் பெற்றச் சின்னமானது வெளியிடப்பட்டுள்ளது. 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. அமெரிக்காவில் நடைபெற்ற 18 ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் எந்த நாடு அதிக பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது ? 

அ) ரஷ்யா

ஆ) சீனா

இ) இந்தியா 

ஈ) அமெரிக்கா 

விடை : (ஈ) அமெரிக்கா 

● உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 - அமெரிக்காவில் நடைபெற்றது. 

● இப்போட்டியில் அமெரிக்கா 33 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. 

● இப்போட்டியில் இந்தியா 1 பதக்கத்துடன் 37 ஆவது இடம் பிடித்துள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

10. சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சர்வதேச தினம்( International day for the conservation of the Mangrove Ecosystem ) 2022 ? 

அ) ஜூலை 20

ஆ) ஜூலை 22

இ) ஜூலை 24

ஈ) ஜூலை 26 

விடை : (ஈ) ஜூலை 26 


Saturday, July 23, 2022

Current Affairs 2022 - July 23 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                     July 23 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் எத்தனை மரத்தடி பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 2,500
ஆ) 1,500
இ) 3,000
ஈ) 31,000

விடை: (அ) 2,500

2. தமிழகத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் எண்ம மறுவாழ்வு தளத்தை வரும் ஜூலை 25 அன்று தொடக்கிவைக்கவுள்ளவர் ? 

அ) ஆர்.என்.ரவி
ஆ) திரௌபதி முர்மு
இ) நரேந்திர மோடி
ஈ) மு.க. ஸ்டாலின் 

விடை : (ஈ) மு.க. ஸ்டாலின் 

II. தேசியச் செய்திகள்

3. கூற்று : இந்திய அன்டார்டிக் மசோதா 2022 மக்களைவில் நிறைவேற்றப்பட்டது. 

காரணம் : அன்டார்டிகா பகுதியில் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும் , சர்வதேச முரண்பாடுகளுக்கு இப்பகுதி இலக்காகிவிடாமல் தடுப்பதையும் மேற்கொள்ள நிறைவேற்றப்பட்டது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 
ஆ) கூற்று தவறு , காரணம் சரி
இ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்கவில்லை 
ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது 

4. நாட்டில் கரோனா தடுப்பூசியின் முதல் தவணை கூட போடாமல் எத்தனை பேர் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 4 கோடி
ஆ) 8 கோடி
இ) 3கோடி
ஈ) 6 கோடி 

விடை : (அ) 4 கோடி

5. இந்தியாவிலிருந்து எத்தனை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 147
ஆ) 101
இ) 155
ஈ) 198 

விடை : (ஆ) 101 

6. இந்திய (ம) கீழ்க்கண்ட எந்த நாட்டுக்கும் இடையில் உயர் கல்வி அங்கீகார ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது ? 

அ) சீனா
ஆ) ஜப்பான்
இ) ரஷ்யா
ஈ) பிரிட்டன் 

விடை : (ஈ) பிரிட்டன் 

7. 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 ல் சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளவர் யார் ? 

அ) ரஜினிகாந்த் 
ஆ) தனுஷ்
இ) சூர்யா
ஈ) கதிர் 

விடை : (இ) சூர்யா 

III. சர்வதேச செய்திகள் 

8. இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) ரணில் விக்ரமசிங்க
ஆ) தினேஷ் குணவர்தன
இ) கோத்தபய ராஜபட்ச 
ஈ) மகிந்த ராஜபட்ச 

விடை : (ஆ) தினேஷ் குணவர்தன

IV. விளையாட்டுச் செய்திகள் 

9. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஈட்டி எறிதலில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய தடகள வீரர் ? 

அ) எல்தோஸ் பால் 
ஆ) நீரஜ் சோப்ரா
இ) ரோஹித் யாதவ் 
ஈ) அர்ஜூன் சிங் 

விடை : (ஆ) நீரஜ் சோப்ரா 

Current Affairs 2022 - July 22 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR
                      JULY 22 / 2022  

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
2) தகவல் தொழில்நுட்பவியல் துறையானது தகவல் தொழில் நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 மற்றும் 2 

 ● தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறையானது தகவல் தொழில் நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
● அறிவிப்பு : தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு .

2. தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு சரபோஜி  மன்னர் ஓவியம் எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது ?

அ) ரஷ்யா 
ஆ) அமெரிக்கா
இ) சீனா 
ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (ஆ) அமெரிக்கா

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் திருடப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு சரபோஜி  மன்னர் ஓவியம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது .

II. தேசியச் செய்திகள் 

3. இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளவர் யார் ?
அ) திரௌபதி முர்மு
ஆ) யஷ்வந்த் சின்ஹா 
இ) ராம்நாத் கோவிந்த்
ஈ) வெங்கையா நாயுடு 

விடை: (அ) திரௌபதி முர்மு 

● இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர்.
● இந்தியாவின் இளம் ( 64 வயது ) குடியரசு தலைவர் .
● இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவர். 
●சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசு தலைவர் ஆகும் முதல் தலைவர் ஆவார். 
● இவர் 64% வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார் 
● ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். 

4. கூற்று : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கௌசிக் ராஜசேகராவுக்கு சர்வதேச எரிசக்தி விருது 2022 கிடைத்துள்ளது . 

காரணம் : போக்குவரத்து மின்மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம் , மின் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்கவிலலை 
ஆ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது 
இ) காரணம் சரி , கூற்று தவறு
ஈ) கூற்று சரி , காரணம் தவறு 

விடை : (ஆ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

 ● இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கௌசிக் ராஜசேகராவுக்கு சர்வதேச எரிசக்தி விருது 2022 கிடைத்துள்ளது . 

● போக்குவரத்து மின்மயமாக்கம், எரிசக்தி செயல்திறன் தொழில்நுட்பம் , மின் உற்பத்தியின் போது கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக வழங்கப்பட்டுள்ளது. 

● விருது அறிவிப்பு : சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பு.

5. இந்தியாவின் நிகழ் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பை --------- சதவீதமாக குறைத்து ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) அறிவித்துள்ளது ? 

அ) 8.9%
ஆ) 8.7%
இ) 7.5%
ஈ) 7.2%
விடை : (ஈ) 7.2%

6. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்திய புத்தாக்க குறியீடு 2021ல் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் ? 

அ) கர்நாடகா
ஆ) மணிப்பூர்
இ) சண்டிகர்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

● நிதி ஆயோக் மூன்றாவது இந்திய புத்தாக்க குறியீட்டினை வெளியிட்டுள்ளது . 
● இது மாநிலங்கள் (ம) ஓன்றியப் பிரதேசங்களை அவற்றின் புத்தாக்க செயல்திறனின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துகிறது. 
● இந்த குறியீட்டில் முதலிடம் பிடித்தவை : 
மாநிலங்கள் : கர்நாடகா ; தமிழ்நாடு 5 ஆவது இடம். 
வடகிழக்கு மாநிலங்கள் : மணிப்பூர்
ஒன்றியப் பிரதேசங்கள் : சண்டிகர்

III. சர்வதேச செய்திகள் 
 
7. உலகின் முதல் மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு கீழ்க்கண்ட எந்த நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது ? 

அ) மாலாவி
ஆ) கானா
இ) கென்யா
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

● தடுப்பூசி பெயர் : மஸ்கிரிக்ஸ்
● தயாரிப்பு : கிளாக்ஸோஸ்மித்க்ளைன் நிறுவனம். 
● இந்த தடுப்பூசி 30% மட்டுமே கட்டுப்படுத்தும் செயல்திறன் கொண்டது. 
● இதனை 4 தவணைகள் செலுத்திக்கொள்ள வேண்டும். 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. ஜெர்மனியில் நடைபெற்ற பாரா துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 13
ஆ) 10
இ) 17
ஈ) 07
விடை : (ஆ) 10

● 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். 
● 10 பதக்கங்கள் : 6G , 3S, 1B .

V. முக்கிய தினங்கள் 

9. உலக மூளை தினம் ( World Brain Day ) 2022 ? 

அ) ஜூலை 18
ஆ) ஜூலை 19
இ) ஜூலை 20
ஈ) ஜூலை 22
விடை : (ஈ) ஜூலை 22

Theme : Brain health for all as our brains continue to be challenged by pandemics , wars, climate change & the myriad of disorders impacting human existence globally. 

10. தேசிய மாம்பழ தினம் ( National Mango Day ) 2022 

அ) ஜூலை 18
ஆ) ஜூலை 19
இ) ஜூலை 22
ஈ) ஜூலை 23

விடை : (இ) ஜூலை 22 

Friday, July 22, 2022

Current Affairs 2022 - July 21 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                    JULY 21 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழக உளவுத்துறைக்கு புதிய ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 
அ) கே.ஏ. செந்தில் வேலன்
ஆ) கே. பணீந்திர ரெட்டி 
இ) டி.வி. கிரண் சுருதி 
ஈ) டி. கண்ணன் 

விடை : (அ) கே.ஏ. செந்தில் வேலன் 

● தமிழக உளவுத் துறைக்கு புதிய ஐ.ஜி.-ஆக கே.ஏ. செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

● மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

2. அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளவர் ? 

அ) ராம்நாத் கோவிந்த் 
ஆ) வெங்கையா நாயுடு
இ) நரேந்திர மோடி
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (இ) நரேந்திர மோடி 

● ஜூலை 29 ஆம் தேதி நடைபெறவுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 

3. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரர்கள் தவணைகளை எளிய முறையில் செல்லுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி எது ? 

அ) நம்ம வீடு 
ஆ) நம்ம குடியிருப்பு 
இ) நம்ம வாழ்விடம் 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) நம்ம குடியிருப்பு 

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரா்கள் தவணைகளை எளிய முறையில் செலுத்தும் வகையில் ‘நம்ம குடியிருப்பு’ என்ற புதிய செயலியை அந்தத் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா்

● இந்த செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மாத தவணைத் தொகை, பராமரிப்புத் தொகை, நிலுவைத் தொகை போன்றவற்றை செலுத்தலாம். 

● www.tnuhdb.tn.gov.in  என்ற இணைய தள முகவரியில் உள்ள ணத ஸ்ரீா்க்ங் மூலமாகவும் தவணைத் தொகையை செலுத்தலாம்.

4. உச்சநீதிமன்ற தமிழக அரசின் புதிய வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் 
ஆ) டி. குமணன்
இ) டி. கண்ணன் 
ஈ) சபரிஷ் சுப்ரமணியன்

விடை : (ஈ) சபரிஷ் சுப்ரமணியன் 

● தமிழக அரசின் 38 துறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் மனுக்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்ததைத் தொடர்ந்து கூடுதலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

II. தேசியச் செய்திகள் 

5. மத்திய துணை ராணுவப் படை ( CRPF ) , எல்லை பாதுகாப்பு படை ( PSF ) ஆகிய மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகளில் அக்னி வீரர்களுக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 10% 
ஆ) 13%
இ) 31%
ஈ) 43%
விடை : (அ) 10% 

● அக்னி வீரர்கள் நான்கு ஆண்டு கால ராணுவ பணியை முடித்த பின்பு இந்த பிரிவில் சேர 10% இடஒதுக்கீடு அளிக்க பூர்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது .
● அறிவிப்பு : மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய். 

6. நாட்டில் எத்தனை லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 15
ஆ) 26
இ) 31
ஈ) 13 
விடை : (ஈ) 13 

● நாட்டில் 13 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

7. இந்தியாவில் சிவிங்கிப் புலி ( சீட்டா ) இனம் முற்றிலும் அழிந்து போனதாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது ? 

அ) 1952
ஆ) 1964
இ) 1969
ஈ) 1994 
விடை : (அ) 1952 

● ஆப்பிரிக்க நாடான நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு 8 சீட்டாக்கள் ( 4 ஆண் , 4 பெண் ) கொண்டுவரப்படவுள்ளன.
● இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. 
● உலகம் முழுவதும் சுமார் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. 

8. இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) கோத்தபய ராஜபட்ச 
ஆ) ரணில் விக்ரமசிங்க 
இ) சஜித் பிரேமதாச 
ஈ) மகிந்த ராஜபட்ச 

விடை : (ஆ) ரணில் விக்ரமசங்க
 
● முன்பு : ஆறு முறை இலங்கை பிரதமராக இருந்தவர் ஆவார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 31
 ஆ) 13
இ) 15 
ஈ) 21 
விடை : (இ) 15 

● 15 பதக்கங்கள் : 5G, 6S, 4B 
 

Thursday, July 21, 2022

Current Affairs 2022 - July 20 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                        GK SHANKAR 
                       JULY 20 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் நெல்கொள் முதல் பருவத்தை என்று முதல் துவக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது ? 

அ) செப்டம்பர் 01 
ஆ) ஆகஸ்ட் 01
இ) அக்டோபர் 01
ஈ) நவம்பர் 01 

விடை : (அ) செப்டம்பர் 01 

● நிகழாண்டுக்கான கொள்முதல் பருவத்தை ஒரு மாதம் முன்னதாக செப்டம்பர் 01 ஆம் தேதியன்று தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது . 
● குறிப்பு : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

2. திருப்பூர் ரயில் நிலையத்துக்கு தற்காலிகமாக கீழ்கண்ட எந்த சுதந்திர போராட்ட தியாகியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது ? 

அ) ராஜாஜி
ஆ) சிங்கார வேலூர
இ) ராதாகிருஷ்ணன் 
ஈ) திருப்பூர் குமரன் 

விடை : (ஈ) திருப்பூர் குமரன் 

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டியுள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

● இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

● அதன் ஒரு பகுதியாக ரயில்வே நிர்வாகம் சார்பில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தற்காலிகமாக திருப்பூரை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் பெயர் பலகை வைக்கப் பட்டுள்ளது. மேலும் திருப்பூர் குமரன் நினைவை போற்றும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் திருப்பூர் குமரன் புகைப்படக் கண்காட்சி மற்றும் செல்பி பூத் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

II. தேசியச் செய்திகள் 

3. கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 3.92 லட்சம் 
ஆ) 1.70 லட்சம்
இ) 3.13 லட்சம்
ஈ) 5.42 லட்சம் 

விடை : (அ) 3.92 லட்சம் 

● கடந்த 3 ஆண்டுகளில் 3,92,643  க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் அனைவரும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். 
● இவர்களில் அதிகபட்சமாக 1.70 லட்சம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் . 

4. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி எத்தனை டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 2 பில்லியன் டாலர்
ஆ) 3 பில்லியன் டாலர்
இ) 1 பில்லியன் டாலர் 
ஈ) 2.5 பில்லியன் டாலர் 

விடை : (இ) 1 பில்லியன் டாலர் 

● பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் ( சுமார் ரூ. 8,000 கோடி ) கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

5. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) உலகில் உள்ள மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 26 லட்சம் ஆகும். 
2) ஆசியாவில் உள்ள மொத்த நூலகங்களில் எண்ணிக்கை 19 லட்சம் ஆகும். 
3) இந்தியாவில் உள்ள மொத்த நூலகங்களில் 15 லட்சம் ஆகும். 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும் 
இ) 3 மட்டும்
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

 III. விளையாட்டுச் செய்திகள் 

6. உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் (ம) ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 ல் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மொத்த பதக்கம் ? 

அ) 5 
ஆ) 7
இ) 3 
ஈ) 8 
விடை: (இ) 3 

● 3 பதக்கங்கள் : 1 G , 2 B 
● தங்கம் : மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்ஷதா கௌட் மொத்தமாக 157 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். 
● இதே பிரிவில் சௌம்யா தேவி 145 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார். 
● ஆடவருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் எல். தனுஷ் மொத்தமாக 185 கிலோ எடை தூக்கி 4 ஆவது இடம் பிடித்தார் என்றாலும் ஸ்னாட்ச் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். 

7. ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய இணை வென்றுள்ள பதக்கம் ? 

அ ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● வெண்கலம் வென்றுள்ள இந்திய இணை அனிஷ் பன்வாலா,  ரிதம் சங்வான்.  
● இப்போட்டியில் இதுவரை இந்தியா வென்றுள்ள பதக்கம் 5G , 5S, 4B - 14 பதக்கங்கள். 

8. மாமல்லப்புரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் எத்தனை நவீன டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன ? 

அ) 205 
ஆ) 131
இ) 313
ஈ) 225 
விடை : (அ) 205 

இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. 
● ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 
● 188 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். 
● போட்டிக்காக மொத்தம் 205 நவீன டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. 

IV. முக்கிய தினங்கள் 

9. சர்வதேச சதுரங்க தினம் ( International Chess Day ) 2022 ? 

அ) ஜூலை 16
ஆ) ஜூலை 17
இ) ஜூலை 19
ஈ) ஜூலை 20 

விடை : (ஈ) ஜூலை 20 

Wednesday, July 20, 2022

Current Affairs 2022 - July 19 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                     JULY 19 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு , பாண்டிச்சேரி (ம) அந்தமானை உள்ளடக்கிய இயக்குநரகம் தேசிய அளவில் பிடித்துள்ள இடம் ?

அ) முதலாவது 
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது 
ஈ) நான்காவது 

விடை : (ஆ) இரண்டாவது 

● சண்டீகரில் கடந்த ஜூலை 4 முதல் 15 ஆம் தேதி வரை இந்திய ரைபிள் சங்கத்தின் சார்பில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்பட்டது. 

● இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

2. தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி பிடித்துள்ள இடம் ? 

அ) 4 
ஆ) 7
இ) 18
ஈ) 12 
விடை : (ஈ) 12 

● பட்டியல் வெளியீடு : மத்திய கல்வி அமைச்சகம். 
● மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பிடித்துள்ளது. 

3. தமிழ்நாடு நாளை ஒட்டி எழுத்தாளர்கள் (ம) தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கியவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) தங்கம் தென்னரசு
இ) துரை முருகன்
ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (இ) துரைமுருகன் 

● தமிழ்நாடு திருநாளை ஒட்டி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், எழுத்தாளா்கள், தமிழறிஞா்களுக்கு விருதுகளை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்.

● சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவுக்கு தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினாா்.

● இந்த விழாவில், எழுத்தாளா்கள், தமிழறிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

● இலக்கிய மாமணி விருது எழுத்தாளா்கள் கோணங்கி, இரா. கலியபெருமாள், மறைந்த கு.சின்னப்ப பாரதி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சின்னப்ப பாரதிக்கான விருதினை அவரது குடும்பத்தினா் பெற்றனா். இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கியதாகும்.

● 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது கயல் தினகரன், கபிலா் விருது பாவலா் கருமலைத் தமிழாழன் என்கிற கி. நரேந்திரன், உ.வே.சா. விருது மருத்துவா் இரா. கலைக்கோவன், அம்மா இலக்கிய விருது முனைவா் மு. சற்குணவதி, காரைக்கால் அம்மையாா் விருது முனைவா் இரா. திலகவதி சண்முகசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.2 லட்சத்துக்கான காசோலை தங்கப்பதக்கம், தகுதி உரை ஆகியவை அடங்கியது.

4. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மன அழுத்தம் (ம) குழப்பங்கள் இருந்தால் ---------- என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ)  104 

ஆ) 111

இ) 1441

ஈ) 1331

விடை : (அ) 104 

● இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு மன அழுத்தம் (ம) குழப்பங்கள் இருந்தால் 104 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

● அறிவிப்பு : தமிழக நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். 

II. தேசியச் செய்திகள் 

5. மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளவர் யார் ?

அ) ஜகதீப் தன்கர் 

ஆ) இல. கணேசன்

இ) ஆர். என். ரவி

ஈ) தமிழிசை சௌந்தரராஜன் 

விடை : (ஆ) இல. கணேசன் 

● குறிப்பு : மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். 

6.நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஒட்டுமொத்தமாக எத்தனை சதவீத வாக்கு பதிவாகியுள்ளது ? 

அ) 75%

ஆ) 50%

இ) 99%

 100%

விடை : (இ) 99%

● ஜூலை 21 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

● புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். 

III. விளையாட்டுச் செய்திகள் 

7. தென் கொரியாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மைராஜ் அகமது கான வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

இதன் மூலம், இப்போட்டியின் இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவருக்கும் இப்பிரிவில் இது முதல் தங்கமாகும். 

● இப்போட்டியில் மகளிர் அணிகளுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் முட்கில்/ஆஷி செüக்சி/சிஃப்ட் கெüர் சம்ரா கூட்டணி வெண்கலம் வென்றுள்ளார். 

● பதக்கப் பட்டியலின் தற்போதைய  நிலவரப்படி, இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

IV. முக்கிய தினங்கள் 

8. சர்வதேச நிலவு தினம் ( International Moon Day ) 2022 ? 

அ) ஜூலை 16

ஆ) ஜூலை 20

இ) ஜூலை 19 

ஈ) ஜூலை 17

விடை : (ஆ) ஜூலை 20 

Monday, July 18, 2022

Current Affairs 2022 - July 18 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                 GK SHANKAR 
                 JULY 18 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் என்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது ? 

அ) ஜனவரி 14 
ஆ) ஏப்ரல் 14
இ) நவம்பர் 01 
ஈ) ஜூலை 18 

விடை : (ஈ) ஜூலை 18 

● அன்றைய மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று முன்னாள் முதல்வர் அண்ணாவால் கடந்த 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி பெயர் சூட்டப்பட்டது . 

● இதனை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படுகிறது. 

II. தேசியச் செய்திகள் 

2. இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ( ஜூலை 18 ) நடைபெற்றது ? 

அ) 18 ஆவது
ஆ) 15 ஆவது
இ) 19 ஆவது
ஈ) 23 ஆவது 

விடை : (ஆ) 15 ஆவது 

● குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

● தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21 ஆம் தேதி எண்ணப்படவுள்ளது.  

● புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார். 

3. தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளி , சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூரும் வகையில் 22 ஆவது பாரத் ரங் பெருவிழாவை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) வெங்கையா நாயுடு
இ) அமித் ஷா
ஈ) அர்ஜூன் ராம் மேக்வால் 

விடை : (ஈ) அர்ஜூன் ராம் மேக்வால் 

நாட்டின் 75 -ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. 

● இந்த விழாவையொட்டி, தில்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளி சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையில், 22- ஆவது ‘பாரத் ரங்’ பெருவிழாவை நடத்துகிறது. 

● இதை மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் அா்ஜூன் ராம் மேக்வால் தொடங்கிவைத்தாா்.

4. இந்தியா - ஆப்பிரிக்க நாடுகளிடையே வர்த்தகம் (ம) முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இரண்டு நாள் வளர்ச்சி கூட்டுறவு மாநாடு எங்கு தொடங்கவுள்ளது ? 

அ) டெல்லி 
ஆ) சென்னை
இ) உத்தர பிரதேசம்
ஈ) கேரளா 

விடை : (அ) டெல்லி 

● இந்தியா - ஆப்பிரிக்க நாடுகளிடையே வர்த்தகம் (ம) முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டு நாள் வளர்ச்சி கூட்டுறவு மாநாடு டெல்லியில் நாளை ( ஜூலை 18 )  தொடங்கவுள்ளது .

5. அதிக கடன்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு ? 

அ) பெலாரஸ்
ஆ) அர்ஜென்டீனா
இ) பாகிஸ்தான் 
ஈ) கானா

விடை : (ஆ) அர்ஜென்டீனா

● குறிப்பு : மேலும் பெரும் கடனாளியாக உள்ள நாடுகள் உக்ரைன் , கானா, துனிசியா, கென்யா, பெலாரஸ் 

6. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) இந்தியாவின் முதல் லித்தியம் அயனி மின்கலம் NMC 2170 .
2) இதனை இந்தியாவின் ஓலா எலக்டரிக் நிறுவனமானது தயாரித்துள்ளது. 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 (ம) 2 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை: (இ) 1 (ம) 2 

● உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் லித்தியம் - அயான் மின்கலம் NMC 2170

● இதனை இந்தியாவின் ஓலா எலக்டரிக் நிறுவனமானது தயாரித்துள்ளது. 

● NMC 2170 என்பது உருளை வடிவ உயர் ஆற்றல் நிக்கல் ஓலா மின்கலமாகும்.  

III. விளையாட்டுச் செய்திகள் 

7. ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அன்ஜூம் மொட்கில் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (இ) வெண்கலம் 

● போட்டி நடைபெற்ற இடம் : சாங்வொன்,  தென்கொரியா. 
● மகளிர் 50மீ ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அன்ஜூம் மொட்கில் வெண்கலம் வென்றுள்ளார். 

8. சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் சூப்பர் 500 போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய வீராங்கனை ? 

அ) பி.வி. சிந்து
ஆ) சாய்னா நேவால்
இ) சானியா மிர்ஸா
ஈ) கவாகமி சிங் 

விடை : (அ) பி.வி. சிந்து 

● சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் சூப்பர் 500 போட்டி 2022. 
● மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன்முதலாக பி.வி. சிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் . 

IV. முக்கிய தினங்கள் 

9. Nelson Mandela International Day 2022 ? 

அ) ஜூலை 15
ஆ) ஜூலை 14
இ) ஜூலை 16
ஈ) ஜூலை 18 

விடை : (ஈ) ஜூலை 18 

The United Nations officially designated Nelson Mandela International Day or Mandela Day in November 2009, with the first celebration taking place on July 18, 2010. Each year, Nelson Mandela International Day sheds a focus on the legacy of a man whose colossal achievements transformed the twentieth century.

Sunday, July 17, 2022

Current Affairs 2022 - July 17 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                    GK SHANKAR 
                   JULY 17 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் என்று தமிழ்நாடு நாள் அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஜூலை 17
ஆ) ஜூலை 18
இ) ஜூலை 19
ஈ) ஜூலை 20 

விடை : (ஆ) ஜூலை 18 

II. தேசிய செய்திகள் 

2. உத்தர பிரதேசத்தில் 296 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி
ஆ) அமித் ஷா
இ) யோகி ஆதித்யநாத் 
ஈ) ராம்நாத் கோவிந்த் 

விடை : (அ) நரேந்திர மோடி 

3. வருகின்ற ( ஜூலை 18 ) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது எத்தனை புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ) 24
ஆ) 14
இ) 31
ஈ) 19

விடை : (அ) 24

4. 2024 - 2025 ஆம் ஆண்டுக்குள் எத்தனை கோடி அளவுக்கு மீன் உள்ளிட்ட கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 50,000 கோடி
ஆ) ரூ. 60,000 கோடி
இ) ரூ. 1,00,000 கோடி
ஈ) ரூ. 88,000 கோடி 

விடை : (இ) ரூ. 1,00,000 கோடி 

5. மகாராஷ்டிரா மாநிலத்தின் எத்தனை நகரங்கள் அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது ? 

அ) ஐந்து
ஆ) நான்கு
இ) ஏழு
ஈ) இரண்டு 

விடை : (ஈ) இரண்டு 

6. நிகழாண்டில் எந்த மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மோசமான இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது ? 

அ) குஜராத்
ஆ) ஜம்மு காஷ்மீர்
இ) அசாம்
ஈ) மேற்கு வங்கம் 

விடை : (இ) அசாம் 

7 . இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் யார் ? 

அ) நீலம் சஞ்சீவ ரெட்டி
ஆ) ராதாகிருஷ்ணன்
இ) வி.வி. கிரி
ஈ) அப்துல் கலாம் 

விடை : (அ) நீலம் சஞ்சீவ ரெட்டி 

8. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவர் நீளம் தாண்டுதலில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் வீரர் ? 

அ) அவினாஷ் சாப்லே
ஆ) ஸ்ரீ சங்கர்
இ) ஜார்ஜ் பாபி 
ஈ) சந்தீப் குமார் 

விடை : (ஆ) ஸ்ரீ சங்கர்

9. சர்வதேச நீதிக்கான உலக தினம் ( World Day for International Justice) 2022 ? 

அ) ஜூலை 15
ஆ) ஜூலை 16
இ) ஜூலை 11
ஈ) ஜூலை 17

விடை : (ஈ) ஜூலை 17 

Saturday, July 16, 2022

Current Affairs 2022 - July 16 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR 
                     JULY 16 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 2022 ல் முதலிடம் பிடித்துள்ள நிறுவனம் ? 

அ) சென்னை ஐஐடி
ஆ) பெசங்களூரு ஐஏஎஸ்
இ) மும்பை ஐஐடி
ஈ) கான்பூர் ஐஐடி 

விடை : (அ) சென்னை ஐஐடி 

தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடா்ந்து நான்காவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

● தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவன தரவரிசை திட்டம் (என்ஐஆா்எஃப்) என்ற நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி அறிமுகம் செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

● 11 பிரிவுகளின் கீழ் தரவரிசைப் பட்டியல்களை என்ஐஆா் ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

● 2022-ஆம் ஆண்டுக்கான இந்த தரவரிசைப் பட்டியல்களை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

● இதில், ஒட்டுமொத்த உயா்கல்வி நிறுவனங்கள் அளவில் சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, ரூா்கி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 9-ஆவது இடத்தையும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

● பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியல்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.

● பொறியியல் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை, மும்பை, கான்பூா், காரக்பூா், ரூா்கி, குவாஹாட்டி, ஹைதராபாத் ஐஐடிக்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்த திருச்சி என்ஐடி, இம்முறை 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூரத்கல் என்ஐடி தொடா்ந்து 10-ஆவது இடம் வகிக்கிறது.

● சென்னை மாநிலக் கல்லூரிக்கு மூன்றாமிடம்: கல்லூரிகள் அளவிலான தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை தில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி ஹிந்து கல்லூரி, இம்முறை 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

● கடந்த முறை 7-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை மாநிலக் கல்லூரி இம்முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

● கடந்த முறை 3-ஆவது இடத்திலிருந்து சென்னை லயோலா கல்லூரி, தற்போது 4-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

● அதுபோல, கடந்த முறை 2-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரி இம்முறை 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

● மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பட்டியில் தில்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.

II. தேசியச் செய்திகள் 

2. சுதந்திரத்தின் அமுதப் பெரு விழாவை ( 75 ஆவது ஆண்டு ) கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் எத்தனை மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ ) 100 லட்சம்

ஆ) 125 லட்சம்

இ) 50 லட்சம்

ஈ) 75 லட்சம் 

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை (75 -ஆவது ஆண்டு) கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 

● என்ஹெச்ஏ என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை அமுதப் பெருவிழாவாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் கொண்டாடி வருகிறது. இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்றுக்கள் நட திட்டமிட்டுள்ளது. 

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படவுள்ளது 

2) எம்.எல்.ஏ க்களுக்கு மஞ்சல் நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .

● குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்திலும் (ம) எம்.எல்.ஏ க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .

குறிப்பு : நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினா்களின் தற்போதைய எண்ணிக்கை 776. அதில், பாஜகவுக்கு மட்டும் 393 உறுப்பினா்கள் உள்ளனா். ஓா் உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700-ஆக உள்ளது. நாடு முழுவதும் 4,033 எம்எல்ஏக்கள் உள்ளனா். மாநில மக்கள்தொகையின் அடிப்படையில் அவர்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன. 

4. ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO ) அமைப்பின் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கலாசார,  சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது ? 

அ) ராமநாதபுரம்

ஆ) வாரணாசி

இ) அகமதாபாத்

ஈ) கொல்கத்தா 

விடை : (ஆ) வாரணாசி 

● இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● எஸ்சிஓ அமைப்பின் 2022-23-ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத் தலைநகரமாக வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

 ● ஒவ்வோா் ஆண்டும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் நகரங்கள் சுழற்சி முறையில் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்படும். 

● அந்த வரிசையில் முதலாவது சுற்றுலாத் தலைநகரமாக இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்றான வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

● எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு, வரும் செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும் என்றாா் அவா்.

● சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

5. இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அக்சய பாத்திரா மதிய உணவகம் எங்கு அமைந்துள்ளது ? 

அ) மும்பை 

ஆ) மதுரை

இ) வாரணாசி

ஈ) திருச்சூர் 

விடை : (இ) வாரணாசி 

● அக்சய பாத்திரா மதிய உணவகம் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. 

● அக்சய பாத்ரா அறக்கட்டளையானது, மத்திய அரசாங்கத்தின் PM POSHAN திட்டத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய அளவிலான பள்ளிகளுக்கு உணவு வழங்கீட்டுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது . 

III. சர்வதேச செய்திகள் 

6. இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) ரணில் விக்ரமசிங்க

ஆ) மகிந்த ராஜபட்ச

இ) பசில் ராஜபகச

ஈ) கோத்தபய ராஜபட்ச 

விடை : (அ) ரணில் விக்ரமசிங்க.

7. ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதாரத் தடைப் பட்டியலில் கீழ்க்கண்ட எந்த உலோகம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது ?

அ) வெள்ளி

ஆ) தங்கம் 

இ) தாமிரம் 

ஈ) வைரம்

விடை : (ஆ) தங்கம் 

● உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதார தடைப் பட்டியலில் தங்க ஏற்றுமதியும் சேர்க்கப்படும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது . 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912 ) தங்கம் வென்ற தடகள வீரரான ஜிம் தோர்பேவிடம் விதிகளை மீறியதாக பறிக்கப்பட்ட பதக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி வழங்கப்பட்டுள்ளது ?

அ) 150

ஆ) 198

இ) 176

ஈ) 110

விடை : (ஈ) 110

அமெரிக்க தடகள வீரா் ஜிம் தோா்பே ஒலிம்பிக் விதிகளை மீறியதாக ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912) அவா் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாம்பியன் பட்டம் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 9. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வெளியிடபட்டுள்ள டீசருக்கு இசையமைத்தவர் யார் ?

அ) ஏ.ஆர். ரகுமான்

ஆ) இளையராஜா

இ) அனிருத

ஈ) யுவன் சங்கர் ராஜா 

விடை : (அ) ஏ.ஆர். ரகுமான்.

● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 

● டீசர் வெளியீடு : நடிகர் ரஜினிகாந்த்.

● டீசரின் இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான்.

V. முக்கிய தினங்கள்

10. உலக பாம்பு தினம் ( World Snake Day ) 2022 ? 

அ) ஜூலை 13

ஆ) ஜூலை 14

இ) ஜூலை 15

ஈ) ஜூலை 16

விடை : (ஈ) ஜூலை 16 


Friday, July 15, 2022

Current Affairs 2022 - July 15 / 2022 - TNPSC Group 2 / 2A & Group 4

                          GK SHANKAR 
                         JULY 15 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் நிகழாண்டு எத்தனை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 80 
ஆ) 75 
இ) 100
ஈ) 113 
விடை : (அ) 80 

● நிகழாண்டு 80 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
● கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். 
● அறிவிப்பு : தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. 

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
2) பிறந்த நாள் அன்று மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும்
இ) 1 & 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 & 2

 ● மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்; தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்; காலில் காலணி அணிந்து வருவது அவசியம். 

● பெற்றோா் கையொப்பத்துடன் வகுப்பாசிரியா் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும்.

●  பிறந்த நாள் என்றாலும் மாணவி, மாணவிகள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். 

● மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், கைப்பேசி கொண்டு வர அனுமதி இல்லை.

● மாணவ, மாணவிகள் போதை பொருள்களை பயன்படுத்த கூடாது மற்றும் எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. 

● இவ்வாறு தமிழக சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3. அண்மையில் சித்தியடைந்த சன்மார்க்கப் பெரியார், தவத்திரு ஊரன் அடிகள் எங்கு பிறந்தார் ? 

அ) சேலம் 
ஆ) திருச்சி 
இ) தருமபுரி
ஈ) மதுரை 

விடை : (ஆ) திருச்சி 

சன்மார்க்க சொற்பொழிவாளர் தவத்திரு ஊரன் அடிகளார் (குப்புசாமி) உடல்நலக்குறைவால் குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்.  

● திருச்சி மாவட்டம், சமயபுரம், கண்ணனூர் அடுத்துள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் ராமசாமி பிள்ளை-நாதரத்தினம் தம்பதிக்கு மூத்த மகனாக குப்புசாமி(ஊரன் அடிகளார்) 22.5.1933-இல் பிறந்தார்.

● கண்ணூரில் தொடக்க கல்வி, ஶ்ரீரங்கத்தில் உயர்நிலைக்கல்வி, திருச்சியில் கல்லூரி கல்வியும் பெற்றார். பின்னர் 1955 முதல் பொதுப்பணித்துறையில் நகர் அமைப்பு ஆய்வாளராக ஸ்ரீரங்கம், திருச்சி, வேலூர் நகராட்சிகளில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர், ஞானமார்க்க ஆர்வத்தால் பணியை ராஜிநாமா செய்துவிட்டு துறவறம் பூண்டார்.

● தமது 35 ஆவது வயதில் 23.05.1967-இல் துறவுபூண்ட பின் ஊரன் அடிகள் 1969-இல் வடலூர் சன்மார்க்கப் பணிக்கு வந்தார். "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 23.05.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 

● வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும் பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், இராமலிங்க அடிகள் வரலாறு, வள்ளுவரும் வள்ளலாரும், வள்ளலார் கண்ட முருகன் என சுமார் 22 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

● மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாரிஸ், லண்டன், ஜெர்மனி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வள்ளலாரின் புகழ்பரப்பும் பணியை மேற்கொண்டார்.

● 23.05.1968 முதல் வடலூரையே வசிப்பிடமாக்கி வாழ்ந்து வந்த ஊரன் அடிகளார் கடந்த 23.5.2022 அன்று அவரது இல்லத்தில் எளிமையான முறையில் 90-ஆவது அகவை எனும் பிறவித் திருநாள் கொண்டாடப்பட்டது. 

● இந்நிலையில், உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஜூலை 13) குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்


II. தேசியச் செய்திகள் 

4. தென்னிந்தியாவின் முதல் நானோ உர ஆலை எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 
ஆ) கேரளா
இ) தெலுங்கானா 
ஈ) கர்நாடகா 

விடை : (ஈ) கர்நாடகா 

மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சா்களின் தேசிய மாநாடு பெங்களூரிவில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

● ரசாயன உரங்களுக்குப் பதிலாக முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘நானோ உரங்கள்’ பயன்பாட்டை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும்’ என்றார்.

● ரூ. 350 கோடி நானோ உர ஆலைக்கு அடிக்கல்: பெங்களூரில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சாா்பில் ரூ. 350 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் நானோ உர (திரவம்) ஆலைக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

● இந்த ஆலைக்கென தேவனஹள்ளியில் உள்ள கா்நாடக தொழிற்சாலை பகுதி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கா் பரப்பளவை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 

● தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் நானோ உர ஆலை இதுவாகும்.

● ஆண்டுக்கு தலா 500 மில்லி லிட்டா் அளவு கொண்ட 34 கோடி நானோ உர பாட்டில்களை தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்படும் இந்த ஆலை அமைக்கும் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என இஃப்கோ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற மேலும் 8 ஆலைகளை அமைக்கவும் இஃப்கோ திட்டமிட்டுள்ளது.


5. இந்தியாவில் முதல்முறையாக எங்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ? 

அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) குஜராத் 
ஈ) மணிப்பூர் 

விடை : (அ) கேரளா 

6. ஐ2யு2 கூட்டமைப்பில் இந்தியாவுடன் சேர்ந்து கீழ்கண்ட எந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன ? 

அ) இஸ்ரேல்
ஆ) அமெரிக்கா
இ) ஐக்கிய அரபு அமீரகம்
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும்

 ● இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. 

● குறிப்பு : சா்வதேச அளவில் நிலையில்லாத்தன்மை அதிகரித்து வரும் நிலையில், நடைமுறை சாத்தியம் நிறைந்த சா்வதேச ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாக ஐ2யு2 கூட்டமைப்பு திகழ்கிறது. பல்வேறு துறைகளில் அக்கூட்டமைப்பின் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

● வளா்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நீா், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பு உறுதி ஏற்றுள்ளது.

7. மக்களவையில் ஆளும்கட்சி (ம) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக் கூடாத வார்த்தைகளின் பட்டியலை மத்திய அரசு எந்த ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது ? 

அ) 1949 
ஆ) 1959
இ) 1969
ஈ) 1979 
விடை : (ஆ) 1959 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வரும் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினா்கள் பேசும்போது இடம்பெறக்கூடாத வாா்த்தைகளின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

●  அதில், ஜும்லாஜீவி (வெற்று வாக்குறுதிகளை அளிப்பவா்), கோவிட் ஸ்ப்ரெடா்(கரோனாவை பரப்புபவா்), ஸ்னூப்கேட்(ஒட்டுக்கேட்பவா்) போன்ற வாா்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி துரோகம், ஊழல், துஷ்பிரயோகம், திறமையில்லாத, மோசடி நாடகம் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. 

● இதனால் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, ஆகிய கட்சிகள் மத்திய அரசை விமா்சித்துள்ளன. 

8. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் ---------- சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 13.31%
ஆ) 31.13%
இ) 23.52%
ஈ) 17.13%
விடை : (இ) 23.52%

வெளியீடு : மத்திய அரசு 

III. விளையாட்டுச் செய்திகள் 

தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது ? 

அ) 08
ஆ) 13
இ) 11
ஈ) 09
விடை : (அ) 08 

● இந்தியா ஒட்டுமொத்தமாக 08 பதக்கங்கள் வென்றுள்ளது 
● 8 பதக்கங்கள் : 3G , 4S , 1B 
● இந்தியா 8 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
2nd - தென் கொரியா ; 3rd - செர்பியா.

IV. முக்கிய தினங்கள் 

10. உலக இளைஞர் திறன் தினம் ( World Youth Skill Day ) 2022 ? 

அ) ஜூலை 12
ஆ) ஜூலை 10
இ) ஜூலை 14
ஈ) ஜூலை 15 

விடை : (ஈ) ஜூலை 15 

● Theme : Transforming Youth Skills for the Future.  

11. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி தினம் என்று கொண்டாடப்டுகிறது ? 

 அ) ஜூலை 12
ஆ) ஜூலை 10
இ) ஜூலை 14
 ஈ) ஜூலை 15 

விடை : (ஈ) ஜூலை 15 

● தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியானது கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .

● அண்மையில் 120 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.




Thursday, July 14, 2022

Current Affairs 2022 - July 14 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                      GK SHANKAR 
                     JULY 14 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1.கரோனா நோய்த்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் உதவி (ம) நிவாரணத் திட்டத்துக்காக எத்தனை கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது ? 

அ) ரூ. 50 கோடி
ஆ) ரூ. 75 கோடி
இ) ரூ. 100 கோடி
ஈ) ரூ. 131 கோடி

● கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்கள்,  புதிய தொழில்களைத் தொடங்கவும் , ஏற்கெனவே இருக்கும் தொழில்களை மேம்படுத்தவும் உதவி (ம) நிவாரண நிதி அளிக்கப்படவுள்ளது. 

● இந்த திட்டமானது ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு செயல்படவுள்ளது . 

உத்தரவு : தமிழக சிறு குறு (ம) நடுதரத் தொழில்கள் துறை. 

2. தமிழகத்தில் என்று கல்வி வளர்ச்சி நாள் அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஜூலை 18
ஆ) ஜூலை 15
இ) ஆகஸ்ட் 15
ஈ) ஆகஸ்ட் 27 

விடை : (ஆ) ஜூலை 15 

● மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியானது கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

● காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

II. தேசியச் செய்திகள் 

3. பாலியல் சமத்துவமின்மை நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 113
ஆ) 131
இ) 135
ஈ) 55
விடை : 135 

● பட்டியல் வெளியீடு : உலகப் பொருளாதார கூட்டமைப்பு .

● பாலியல் சமத்துவமின்மை நிலவும் நாடுகளில் : 
* முதலிடம் - ஐஸ்லாந்து
* கடைசி இடம் - சாடு 

பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் இடம் : 

* பாலின சமத்துவமின்மை விகிதம் 5 % அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
* பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா 48 வது இடம் .
* சுகாதாரம் (ம) வாழ்வியல் பிரிவில் இந்தியா 146 வது இடம். 
* ஆரம்பநிலைக் கல்வி பயில்வதற்கான சேர்க்கையில் பாலின சமத்துவம் நிலவும் நாடுகளில் உலகளவில் இந்தியா 8 வது இடம். 

4. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள MP's (ம) MLA's க்களில் --------------- % மட்டுமே பெண்கள் உள்ளதாக தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது ? 

அ) 13%
ஆ) 31%
இ) 50%
ஈ) 10% 
விடை : (ஈ) 10% 

● குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள 4,759 MP's (ம) MLA's  477 ( 10%) மட்டுமே பெண்கள் உள்ளதாக தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது .

5. இந்தியாவில் எங்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது ? 

அ) மும்பை
ஆ) புணே
 இ) கொல்கத்தா
ஈ) சென்னை 

விடை : (ஆ) புணே 

● 2021 ஆம் ஆண்டு புணேவில் நாட்டின் முதல் ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
● தற்போது மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
● ஜிகா வைரஸ் தொற்று கொசு கடித்தல் மூலம் பரவும் நோயாகும்.  

6. குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வசதியாக எத்தனை கோடி மதிப்பிலான ரயில் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2,798 கோடி
ஆ) ரூ. 3,272 கோடி
இ) ரூ. 5,473 கோடி
ஈ) ரூ. 1,331 கோடி 

விடை : (அ) ரூ. 2,798 கோடி

● குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டத்தில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜி கோயிலும், மேசனா மாவட்டத்தில் 24 தீா்த்தங்கரா்களில் ஒருவரான அஜீத்நாத் சமணா் கோயிலும் உள்ளன. 
●அந்த மாநிலத்தின் எல்லையையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் அபு மலைப் பகுதியில் பல ஹிந்து கோயில்கள் உள்ளன. அந்தப் பகுதி பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் தலைமையிடமாகவும் உள்ளது.
● அம்பாஜி, அஜீத்நாத் சமணா் கோயில்கள் மற்றும் அபு மலைப் பகுதியை இணைக்கும் விதமாக ரூ.2,798 கோடி மதிப்பில் ரயில் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தத் திட்டம் 2026-27-ஆம் ஆண்டு நிறைவடையும்.

7. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் என்று முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்பட உள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15
ஆ) ஆகஸ்ட் 05 
இ) ஜூலை 15 
ஈ) ஜூலை 30 
விடை : (இ) ஜூலை 15 

● 18 வயது  மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

● நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

III. சர்வதேச செய்திகள் 

8. பூமியிலிருந்து எத்தனை ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கு செயற்க்கைக்கோள் கண்டறிந்துள்ளது ? 

அ) 1,150
ஆ) 2,150
இ) 1,050
ஈ) 2,050
விடை : (அ) 1,150

பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.

● இது குறித்து அந்த ஆய்வு மையம் புதன்கிழமை கூறியதாவது: பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96 பி-யும் ஒன்று. சுமாா் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனைப் போன்ற மற்றொரு நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த வாயுக் கோளில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. 

● இதுவரை இல்லாத அதிநவீனமான அந்த தொலைநோக்கி செயற்கைக்கோள், வாஸ்ப்-19 பி-யில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

9. தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மெஹூலி (ம) சாஹூ கூட்டணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம்

● 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் (ம) சாஹூ துஷார் கூட்டணி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.  

10. சென்னையில் நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளர்கள் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) மு.க. ஸ்டாலின்

இ) ராம்நாத் கோவிந்த்

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 

● தொடக்க (ம) நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 


Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...