Saturday, July 16, 2022

Current Affairs 2022 - July 16 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR 
                     JULY 16 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியல் 2022 ல் முதலிடம் பிடித்துள்ள நிறுவனம் ? 

அ) சென்னை ஐஐடி
ஆ) பெசங்களூரு ஐஏஎஸ்
இ) மும்பை ஐஐடி
ஈ) கான்பூர் ஐஐடி 

விடை : (அ) சென்னை ஐஐடி 

தேசிய அளவிலான ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி தொடா்ந்து நான்காவது ஆண்டாக 2022-ஆம் ஆண்டிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

● தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவன தரவரிசை திட்டம் (என்ஐஆா்எஃப்) என்ற நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி அறிமுகம் செய்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

● 11 பிரிவுகளின் கீழ் தரவரிசைப் பட்டியல்களை என்ஐஆா் ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

● 2022-ஆம் ஆண்டுக்கான இந்த தரவரிசைப் பட்டியல்களை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

● இதில், ஒட்டுமொத்த உயா்கல்வி நிறுவனங்கள் அளவில் சென்னை ஐஐடி நான்காவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, தில்லி ஐஐடி, கான்பூா் ஐஐடி, காரக்பூா் ஐஐடி, ரூா்கி ஐஐடி, குவாஹாட்டி ஐஐடி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) 9-ஆவது இடத்தையும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

● பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியல்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது.

● பொறியியல் கல்வி நிறுவனங்கள் அளவிலான தரவரிசைப் பட்டியலில் சென்னை, மும்பை, கான்பூா், காரக்பூா், ரூா்கி, குவாஹாட்டி, ஹைதராபாத் ஐஐடிக்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்த திருச்சி என்ஐடி, இம்முறை 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூரத்கல் என்ஐடி தொடா்ந்து 10-ஆவது இடம் வகிக்கிறது.

● சென்னை மாநிலக் கல்லூரிக்கு மூன்றாமிடம்: கல்லூரிகள் அளவிலான தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை தில்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை 9-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி ஹிந்து கல்லூரி, இம்முறை 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

● கடந்த முறை 7-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை மாநிலக் கல்லூரி இம்முறை 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

● கடந்த முறை 3-ஆவது இடத்திலிருந்து சென்னை லயோலா கல்லூரி, தற்போது 4-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது.

● அதுபோல, கடந்த முறை 2-ஆம் இடம் பிடித்திருந்த தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரி இம்முறை 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

● மேலாண்மை கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அகமதாபாத் ஐஐஎம், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் பட்டியில் தில்லி எய்ம்ஸ், பல் மருத்துவக் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் ஆகியவை முதலிடங்களைப் பிடித்துள்ளன.

II. தேசியச் செய்திகள் 

2. சுதந்திரத்தின் அமுதப் பெரு விழாவை ( 75 ஆவது ஆண்டு ) கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் எத்தனை மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது ? 

அ ) 100 லட்சம்

ஆ) 125 லட்சம்

இ) 50 லட்சம்

ஈ) 75 லட்சம் 

சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை (75 -ஆவது ஆண்டு) கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் 75 லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கத்திற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 

● என்ஹெச்ஏ என்கிற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொள்ளும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை அமுதப் பெருவிழாவாக மத்திய அரசின் அனைத்து துறைகளும் கொண்டாடி வருகிறது. இந்த வகையில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் மரக்கன்றுக்கள் நட திட்டமிட்டுள்ளது. 

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படவுள்ளது 

2) எம்.எல்.ஏ க்களுக்கு மஞ்சல் நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .

● குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி க்களுக்கு பச்சை நிறத்திலும் (ம) எம்.எல்.ஏ க்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டவுள்ளது .

குறிப்பு : நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மொத்த உறுப்பினா்களின் தற்போதைய எண்ணிக்கை 776. அதில், பாஜகவுக்கு மட்டும் 393 உறுப்பினா்கள் உள்ளனா். ஓா் உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700-ஆக உள்ளது. நாடு முழுவதும் 4,033 எம்எல்ஏக்கள் உள்ளனா். மாநில மக்கள்தொகையின் அடிப்படையில் அவர்களின் வாக்குகள் மதிப்பிடப்படுகின்றன. 

4. ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO ) அமைப்பின் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கலாசார,  சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது ? 

அ) ராமநாதபுரம்

ஆ) வாரணாசி

இ) அகமதாபாத்

ஈ) கொல்கத்தா 

விடை : (ஆ) வாரணாசி 

● இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வாராணசி நகரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) கலாசார மற்றும் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● எஸ்சிஓ அமைப்பின் 2022-23-ஆம் ஆண்டுக்கான கலாசார, சுற்றுலாத் தலைநகரமாக வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

 ● ஒவ்வோா் ஆண்டும் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் நகரங்கள் சுழற்சி முறையில் சுற்றுலாத் தலைநகரமாக அறிவிக்கப்படும். 

● அந்த வரிசையில் முதலாவது சுற்றுலாத் தலைநகரமாக இந்தியாவின் பழைமையான நகரங்களில் ஒன்றான வாராணசி அறிவிக்கப்பட்டுள்ளது.

● எஸ்சிஓ நாடுகளின் தலைவா்கள் மாநாடு, வரும் செப்டம்பரில் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டுக்குப் பிறகு எஸ்சிஓ அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மாநாட்டையும் இந்தியா தலைமையேற்று நடத்தும் என்றாா் அவா்.

● சீனாவின் பெய்ஜிங் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

5. இந்திய பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அக்சய பாத்திரா மதிய உணவகம் எங்கு அமைந்துள்ளது ? 

அ) மும்பை 

ஆ) மதுரை

இ) வாரணாசி

ஈ) திருச்சூர் 

விடை : (இ) வாரணாசி 

● அக்சய பாத்திரா மதிய உணவகம் வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. 

● அக்சய பாத்ரா அறக்கட்டளையானது, மத்திய அரசாங்கத்தின் PM POSHAN திட்டத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய அளவிலான பள்ளிகளுக்கு உணவு வழங்கீட்டுத் திட்டங்களில் ஒன்றை செயல்படுத்தி வருகிறது . 

III. சர்வதேச செய்திகள் 

6. இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளவர் யார் ? 

அ) ரணில் விக்ரமசிங்க

ஆ) மகிந்த ராஜபட்ச

இ) பசில் ராஜபகச

ஈ) கோத்தபய ராஜபட்ச 

விடை : (அ) ரணில் விக்ரமசிங்க.

7. ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதாரத் தடைப் பட்டியலில் கீழ்க்கண்ட எந்த உலோகம் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது ?

அ) வெள்ளி

ஆ) தங்கம் 

இ) தாமிரம் 

ஈ) வைரம்

விடை : (ஆ) தங்கம் 

● உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான அடுத்த பொருளாதார தடைப் பட்டியலில் தங்க ஏற்றுமதியும் சேர்க்கப்படும் என ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளது . 

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912 ) தங்கம் வென்ற தடகள வீரரான ஜிம் தோர்பேவிடம் விதிகளை மீறியதாக பறிக்கப்பட்ட பதக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி வழங்கப்பட்டுள்ளது ?

அ) 150

ஆ) 198

இ) 176

ஈ) 110

விடை : (ஈ) 110

அமெரிக்க தடகள வீரா் ஜிம் தோா்பே ஒலிம்பிக் விதிகளை மீறியதாக ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில் (1912) அவா் வென்ற தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சாம்பியன் பட்டம் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 9. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வெளியிடபட்டுள்ள டீசருக்கு இசையமைத்தவர் யார் ?

அ) ஏ.ஆர். ரகுமான்

ஆ) இளையராஜா

இ) அனிருத

ஈ) யுவன் சங்கர் ராஜா 

விடை : (அ) ஏ.ஆர். ரகுமான்.

● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 

● டீசர் வெளியீடு : நடிகர் ரஜினிகாந்த்.

● டீசரின் இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான்.

V. முக்கிய தினங்கள்

10. உலக பாம்பு தினம் ( World Snake Day ) 2022 ? 

அ) ஜூலை 13

ஆ) ஜூலை 14

இ) ஜூலை 15

ஈ) ஜூலை 16

விடை : (ஈ) ஜூலை 16 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...