Friday, July 15, 2022

Current Affairs 2022 - July 15 / 2022 - TNPSC Group 2 / 2A & Group 4

                          GK SHANKAR 
                         JULY 15 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. தமிழகத்தில் நிகழாண்டு எத்தனை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 80 
ஆ) 75 
இ) 100
ஈ) 113 
விடை : (அ) 80 

● நிகழாண்டு 80 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
● கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். 
● அறிவிப்பு : தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு. 

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

1) பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
2) பிறந்த நாள் அன்று மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும்
இ) 1 & 2 
ஈ) ஏதுமில்லை 

விடை : (இ) 1 & 2

 ● மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும்; தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும்; காலில் காலணி அணிந்து வருவது அவசியம். 

● பெற்றோா் கையொப்பத்துடன் வகுப்பாசிரியா் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும்.

●  பிறந்த நாள் என்றாலும் மாணவி, மாணவிகள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும். 

● மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனம், கைப்பேசி கொண்டு வர அனுமதி இல்லை.

● மாணவ, மாணவிகள் போதை பொருள்களை பயன்படுத்த கூடாது மற்றும் எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. 

● இவ்வாறு தமிழக சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

3. அண்மையில் சித்தியடைந்த சன்மார்க்கப் பெரியார், தவத்திரு ஊரன் அடிகள் எங்கு பிறந்தார் ? 

அ) சேலம் 
ஆ) திருச்சி 
இ) தருமபுரி
ஈ) மதுரை 

விடை : (ஆ) திருச்சி 

சன்மார்க்க சொற்பொழிவாளர் தவத்திரு ஊரன் அடிகளார் (குப்புசாமி) உடல்நலக்குறைவால் குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்.  

● திருச்சி மாவட்டம், சமயபுரம், கண்ணனூர் அடுத்துள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தில் ராமசாமி பிள்ளை-நாதரத்தினம் தம்பதிக்கு மூத்த மகனாக குப்புசாமி(ஊரன் அடிகளார்) 22.5.1933-இல் பிறந்தார்.

● கண்ணூரில் தொடக்க கல்வி, ஶ்ரீரங்கத்தில் உயர்நிலைக்கல்வி, திருச்சியில் கல்லூரி கல்வியும் பெற்றார். பின்னர் 1955 முதல் பொதுப்பணித்துறையில் நகர் அமைப்பு ஆய்வாளராக ஸ்ரீரங்கம், திருச்சி, வேலூர் நகராட்சிகளில் 13 ஆண்டுகள் பணியாற்றியவர், ஞானமார்க்க ஆர்வத்தால் பணியை ராஜிநாமா செய்துவிட்டு துறவறம் பூண்டார்.

● தமது 35 ஆவது வயதில் 23.05.1967-இல் துறவுபூண்ட பின் ஊரன் அடிகள் 1969-இல் வடலூர் சன்மார்க்கப் பணிக்கு வந்தார். "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 23.05.1968 முதல் வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 

● வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும் பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள், இராமலிங்க அடிகள் வரலாறு, வள்ளுவரும் வள்ளலாரும், வள்ளலார் கண்ட முருகன் என சுமார் 22 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

● மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாரிஸ், லண்டன், ஜெர்மனி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வள்ளலாரின் புகழ்பரப்பும் பணியை மேற்கொண்டார்.

● 23.05.1968 முதல் வடலூரையே வசிப்பிடமாக்கி வாழ்ந்து வந்த ஊரன் அடிகளார் கடந்த 23.5.2022 அன்று அவரது இல்லத்தில் எளிமையான முறையில் 90-ஆவது அகவை எனும் பிறவித் திருநாள் கொண்டாடப்பட்டது. 

● இந்நிலையில், உடல்நலக்குறைவால் புதன்கிழமை (ஜூலை 13) குரு பூர்ணிமா அன்று நள்ளிரவு வடலூரில் சித்தி அடைந்தார்


II. தேசியச் செய்திகள் 

4. தென்னிந்தியாவின் முதல் நானோ உர ஆலை எங்கு அமைக்கப்படவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 
ஆ) கேரளா
இ) தெலுங்கானா 
ஈ) கர்நாடகா 

விடை : (ஈ) கர்நாடகா 

மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சா்களின் தேசிய மாநாடு பெங்களூரிவில் அண்மையில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

● ரசாயன உரங்களுக்குப் பதிலாக முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘நானோ உரங்கள்’ பயன்பாட்டை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த வேண்டும்’ என்றார்.

● ரூ. 350 கோடி நானோ உர ஆலைக்கு அடிக்கல்: பெங்களூரில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (இஃப்கோ) சாா்பில் ரூ. 350 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் நானோ உர (திரவம்) ஆலைக்கு கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

● இந்த ஆலைக்கென தேவனஹள்ளியில் உள்ள கா்நாடக தொழிற்சாலை பகுதி மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 12 ஏக்கா் பரப்பளவை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 

● தென்னிந்தியாவில் அமைக்கப்படும் முதல் நானோ உர ஆலை இதுவாகும்.

● ஆண்டுக்கு தலா 500 மில்லி லிட்டா் அளவு கொண்ட 34 கோடி நானோ உர பாட்டில்களை தயாரிக்கும் திறனுடன் அமைக்கப்படும் இந்த ஆலை அமைக்கும் திட்டம் 15 மாதங்களில் நிறைவடையும் என இஃப்கோ தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற மேலும் 8 ஆலைகளை அமைக்கவும் இஃப்கோ திட்டமிட்டுள்ளது.


5. இந்தியாவில் முதல்முறையாக எங்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ? 

அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) குஜராத் 
ஈ) மணிப்பூர் 

விடை : (அ) கேரளா 

6. ஐ2யு2 கூட்டமைப்பில் இந்தியாவுடன் சேர்ந்து கீழ்கண்ட எந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன ? 

அ) இஸ்ரேல்
ஆ) அமெரிக்கா
இ) ஐக்கிய அரபு அமீரகம்
ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும்

 ● இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. 

● குறிப்பு : சா்வதேச அளவில் நிலையில்லாத்தன்மை அதிகரித்து வரும் நிலையில், நடைமுறை சாத்தியம் நிறைந்த சா்வதேச ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாக ஐ2யு2 கூட்டமைப்பு திகழ்கிறது. பல்வேறு துறைகளில் அக்கூட்டமைப்பின் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

● வளா்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நீா், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பு உறுதி ஏற்றுள்ளது.

7. மக்களவையில் ஆளும்கட்சி (ம) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசக் கூடாத வார்த்தைகளின் பட்டியலை மத்திய அரசு எந்த ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது ? 

அ) 1949 
ஆ) 1959
இ) 1969
ஈ) 1979 
விடை : (ஆ) 1959 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வரும் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினா்கள் பேசும்போது இடம்பெறக்கூடாத வாா்த்தைகளின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

●  அதில், ஜும்லாஜீவி (வெற்று வாக்குறுதிகளை அளிப்பவா்), கோவிட் ஸ்ப்ரெடா்(கரோனாவை பரப்புபவா்), ஸ்னூப்கேட்(ஒட்டுக்கேட்பவா்) போன்ற வாா்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி துரோகம், ஊழல், துஷ்பிரயோகம், திறமையில்லாத, மோசடி நாடகம் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. 

● இதனால் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, ஆகிய கட்சிகள் மத்திய அரசை விமா்சித்துள்ளன. 

8. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் ---------- சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 13.31%
ஆ) 31.13%
இ) 23.52%
ஈ) 17.13%
விடை : (இ) 23.52%

வெளியீடு : மத்திய அரசு 

III. விளையாட்டுச் செய்திகள் 

தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்துள்ளது ? 

அ) 08
ஆ) 13
இ) 11
ஈ) 09
விடை : (அ) 08 

● இந்தியா ஒட்டுமொத்தமாக 08 பதக்கங்கள் வென்றுள்ளது 
● 8 பதக்கங்கள் : 3G , 4S , 1B 
● இந்தியா 8 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
2nd - தென் கொரியா ; 3rd - செர்பியா.

IV. முக்கிய தினங்கள் 

10. உலக இளைஞர் திறன் தினம் ( World Youth Skill Day ) 2022 ? 

அ) ஜூலை 12
ஆ) ஜூலை 10
இ) ஜூலை 14
ஈ) ஜூலை 15 

விடை : (ஈ) ஜூலை 15 

● Theme : Transforming Youth Skills for the Future.  

11. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி தினம் என்று கொண்டாடப்டுகிறது ? 

 அ) ஜூலை 12
ஆ) ஜூலை 10
இ) ஜூலை 14
 ஈ) ஜூலை 15 

விடை : (ஈ) ஜூலை 15 

● தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியானது கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .

● அண்மையில் 120 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...