Thursday, July 14, 2022

Current Affairs 2022 - July 14 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                      GK SHANKAR 
                     JULY 14 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1.கரோனா நோய்த்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் உதவி (ம) நிவாரணத் திட்டத்துக்காக எத்தனை கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது ? 

அ) ரூ. 50 கோடி
ஆ) ரூ. 75 கோடி
இ) ரூ. 100 கோடி
ஈ) ரூ. 131 கோடி

● கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்கள்,  புதிய தொழில்களைத் தொடங்கவும் , ஏற்கெனவே இருக்கும் தொழில்களை மேம்படுத்தவும் உதவி (ம) நிவாரண நிதி அளிக்கப்படவுள்ளது. 

● இந்த திட்டமானது ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு செயல்படவுள்ளது . 

உத்தரவு : தமிழக சிறு குறு (ம) நடுதரத் தொழில்கள் துறை. 

2. தமிழகத்தில் என்று கல்வி வளர்ச்சி நாள் அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஜூலை 18
ஆ) ஜூலை 15
இ) ஆகஸ்ட் 15
ஈ) ஆகஸ்ட் 27 

விடை : (ஆ) ஜூலை 15 

● மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதியானது கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

● காமராஜர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

II. தேசியச் செய்திகள் 

3. பாலியல் சமத்துவமின்மை நிலவும் 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 113
ஆ) 131
இ) 135
ஈ) 55
விடை : 135 

● பட்டியல் வெளியீடு : உலகப் பொருளாதார கூட்டமைப்பு .

● பாலியல் சமத்துவமின்மை நிலவும் நாடுகளில் : 
* முதலிடம் - ஐஸ்லாந்து
* கடைசி இடம் - சாடு 

பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் இடம் : 

* பாலின சமத்துவமின்மை விகிதம் 5 % அதிகமாக உள்ள 5 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
* பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா 48 வது இடம் .
* சுகாதாரம் (ம) வாழ்வியல் பிரிவில் இந்தியா 146 வது இடம். 
* ஆரம்பநிலைக் கல்வி பயில்வதற்கான சேர்க்கையில் பாலின சமத்துவம் நிலவும் நாடுகளில் உலகளவில் இந்தியா 8 வது இடம். 

4. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள MP's (ம) MLA's க்களில் --------------- % மட்டுமே பெண்கள் உள்ளதாக தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது ? 

அ) 13%
ஆ) 31%
இ) 50%
ஈ) 10% 
விடை : (ஈ) 10% 

● குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவுள்ள 4,759 MP's (ம) MLA's  477 ( 10%) மட்டுமே பெண்கள் உள்ளதாக தேர்தல் சீர்த்திருத்த நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது .

5. இந்தியாவில் எங்கு முதன்முதலில் ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது ? 

அ) மும்பை
ஆ) புணே
 இ) கொல்கத்தா
ஈ) சென்னை 

விடை : (ஆ) புணே 

● 2021 ஆம் ஆண்டு புணேவில் நாட்டின் முதல் ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
● தற்போது மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
● ஜிகா வைரஸ் தொற்று கொசு கடித்தல் மூலம் பரவும் நோயாகும்.  

6. குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல வசதியாக எத்தனை கோடி மதிப்பிலான ரயில் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2,798 கோடி
ஆ) ரூ. 3,272 கோடி
இ) ரூ. 5,473 கோடி
ஈ) ரூ. 1,331 கோடி 

விடை : (அ) ரூ. 2,798 கோடி

● குஜராத் மாநிலம் பனாஸ்காந்தா மாவட்டத்தில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான அம்பாஜி கோயிலும், மேசனா மாவட்டத்தில் 24 தீா்த்தங்கரா்களில் ஒருவரான அஜீத்நாத் சமணா் கோயிலும் உள்ளன. 
●அந்த மாநிலத்தின் எல்லையையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம் அபு மலைப் பகுதியில் பல ஹிந்து கோயில்கள் உள்ளன. அந்தப் பகுதி பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் தலைமையிடமாகவும் உள்ளது.
● அம்பாஜி, அஜீத்நாத் சமணா் கோயில்கள் மற்றும் அபு மலைப் பகுதியை இணைக்கும் விதமாக ரூ.2,798 கோடி மதிப்பில் ரயில் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்தத் திட்டம் 2026-27-ஆம் ஆண்டு நிறைவடையும்.

7. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் என்று முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி கட்டணமின்றி செலுத்தப்பட உள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15
ஆ) ஆகஸ்ட் 05 
இ) ஜூலை 15 
ஈ) ஜூலை 30 
விடை : (இ) ஜூலை 15 

● 18 வயது  மேற்பட்டோருக்கு அடுத்த 75 நாள்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

● நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், 75 நாள்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

III. சர்வதேச செய்திகள் 

8. பூமியிலிருந்து எத்தனை ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீர் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கு செயற்க்கைக்கோள் கண்டறிந்துள்ளது ? 

அ) 1,150
ஆ) 2,150
இ) 1,050
ஈ) 2,050
விடை : (அ) 1,150

பூமியிலிருந்து 1,150 ஒளிவருட தூரத்தில் உள்ள வாயு கோளொன்றில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.

● இது குறித்து அந்த ஆய்வு மையம் புதன்கிழமை கூறியதாவது: பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள 5,000-க்கும் மேற்பட்ட தொலைதூரக் கோள்களில் வாஸ்ப்-96 பி-யும் ஒன்று. சுமாா் 1,150 ஒளிவருட தூரத்தில் சூரியனைப் போன்ற மற்றொரு நட்சத்திரத்தை சுற்றி வரும் அந்த வாயுக் கோளில் நீா் இருப்பதற்கான அறிகுறிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. 

● இதுவரை இல்லாத அதிநவீனமான அந்த தொலைநோக்கி செயற்கைக்கோள், வாஸ்ப்-19 பி-யில் வளிமண்டலம், பனிமூட்டம், மேகங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

9. தென் கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மெஹூலி (ம) சாஹூ கூட்டணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம்

● 10 மீ ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் (ம) சாஹூ துஷார் கூட்டணி தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.  

10. சென்னையில் நடைபெறவுள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ளர்கள் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) மு.க. ஸ்டாலின்

இ) ராம்நாத் கோவிந்த்

ஈ) அ & ஆ 

விடை : (ஈ) அ & ஆ 

● இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

● 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. 

● தொடக்க (ம) நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...