Friday, July 29, 2022

Current Affairs 2022 - July 28 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                    JULY 28 / 2022 

I. தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ?  

அ) கேரளா
ஆ) அசாம்
இ) தமிழ்நாடு
ஈ) குஜராத் 

விடை : (இ) தமிழ்நாடு 

● தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 14,095 மாணவா்கள் பயன்பெறுவா்.

● திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை ரவை கிச்சடியில் ஏதேனும் ஒன்று வழங்கப்படும். புதன்கிழமை ரவை அல்லது வெண்பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரி வழங்கப்படும். காய்கறி சாம்பாா் தினமும் அளிக்கப்படும்.

● காலை உணவுக்கான மூலப் பொருள் ஒரு குழந்தைக்கு 50 கிராம் அளவில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்களை பயன்படுத்தலாம். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாள்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.

● உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருள்கள் தரமானதாக, சுத்தமாக இருக்க வேண்டும்.

2. மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை திறந்து வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின் 

ஆ) ஆர்.என். ரவி

இ) நரேந்திர மோடி

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

●மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞா்களின் நலனுக்காக ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக் கலைத் தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

●சிற்பக்கலைத் தூணில் கலைநயமிக்க பல்லவா் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக் கூட்டம் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. 

●செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில், சதுரங்க வீரா்களையும், போட்டியைக் காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொது மக்களையும் கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. பத்ம விருதுகள் உள்பட அனைத்து தேசிய விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க கீழ்கண்ட எந்த வலைதளம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) awards.gov.in

ஆ) cg.awards.gov.in

இ) bharath.awards.in

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) awards.gov.in 

● மத்திய அரசின் அனைத்து விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க பொதுவான வலைதளம் awards.gov.in  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

● நோக்கம் : விருதுகள் வழங்குவதில் வெளிப்படைத் தன்மையையும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் இந்த வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

4. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை எத்தனை கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ. 2.5 லட்சம் கோடி

ஆ) ரூ.3.2 லட்சம் கோடி

இ) ரூ. 1.64 லட்சம் கோடி

ஈ) 57 லட்சம் கோடி 

விடை : (இ) ரூ. 1.64 லட்சம் கோடி 

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

●பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளன .

5. கூற்று : தேசிய ஊக்க மருந்து தடை முகமை (ம) தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

காரணம் : விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் , விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு , காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது . 

விடை : (ஈ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது 

● தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

●விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு வீரா்களின் நலனைப் பாதுகாக்கவும் இந்த மசோதா உதவும். இதன்மூலமாக நாட்டில் ஊக்க மருந்து ஆய்வக வசதிகளும் மேம்படும். மேலும், இந்தியாவில் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு நாட்டில் ஊக்க மருந்து சோதனை ஆய்வகங்களின் பலத்தை அதிகரிப்பது அவசியமாகும். அதற்கு இந்த மசோதா வழிவகுக்கும்.

●இந்த மசோதா, தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் என்பதோடு, விளையாட்டில் ஊக்க மருந்து தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய ஊக்க மருந்து தடை வாரியத்தை உருவாக்கவும் உதவும்

●முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. இந்தியாவில் முதல்முறையாக வாடகை கார் முன்பதிவு செயலியை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் ? 

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத்

இ) உத்தரகாண்ட் 

ஈ) கேரளா

விடை : (ஈ) கேரளா

● செயலியின் பெயர் : கேரளா சவாரி ( ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளது ) 

● மாநில தொழிலாளர் நலத்துறை சார்பில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

7. அண்மையில் கீழ்கண்ட எந்த நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது ? 

அ) ரஷ்யா

ஆ) கனடா

இ) ஜமாய்

ஈ) பிலிப்பின்ஸ் 

விடை : (ஈ) பிலிப்பின்ஸ்

● ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

● இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் ; 25 பேர் காயமடைந்துள்ளனர்.

● இயற்கை பேரிடர் அபாயம் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பின்ஸ் திகழ்கிறது.

III. விளையாட்டுச் செய்திகள் 

8. காமன்வெல்த் போட்டிகள் 2022 ல் எத்தனை பேர் கொண்ட இந்திய அணி கலந்துக்கொளகிறது ? 

அ) 225

ஆ) 215

இ) 313

ஈ) 137 

விடை : (ஆ) 215 

● இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகளின் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது.

● இந்த நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

● இந்த ஆண்டுக்கான 22 ஆவது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ( 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் ) ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

● இப்போட்டியில் முதல்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

●இந்த ஆண்டுக்கான பர்மிங்ஹாம் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.

● இப்போட்டியில் இந்தியா சார்பில் 215 பேர் கொண்ட அணி 19 பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.

● இப்போட்டியின் அணிவகுப்பில் இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடி ஏற்றி தலைமை தாங்குவார். 

● முன்பு : 2018 , ஆஸ்திரேலியா - இந்தியா மொத்தமாக 66 ( 26G, 20S, 20B )  பதக்கங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்தது. 

9. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற உள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 11

ஆ) அக்டோபர் 11

இ) செப்டம்பர் 11

ஈ) நவம்பர் 11

●  17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

● இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா போட்டியின், 17 வயதுக்குட்பட்டோருக்கான 7வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி பிரபலமடைவதுடன், இளைஞர்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...