Saturday, July 30, 2022

Current Affairs 2022 - July 29 / 2022 - TNPSC 1 ,2/2A & 4

                      GK SHANKAR
                     JULY 29 / 2022 

I. தேசியச் செய்திகள்  

1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் கீழ்கண்ட எந்த நாளில் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 07
ஆ) ஆகஸ்ட் 15
இ) ஆகஸ்ட் 23
ஈ) ஆகஸ்ட் 30 

விடை : (அ) ஆகஸ்ட் 07 

● இந்த கூட்டத்தில் பொருளாதாரம், வேளாண்மை (ம) சுகாதாரம் போன்ற துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது .

2. அண்மையில் எத்தனையாவது வேளாண்மை கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 7 ஆவது
ஆ) 9 ஆவது
இ) 11 ஆவது
ஈ) 15 ஆவது 

விடை : (இ) 11 ஆவது 

பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்  தொடக்கி வைத்தாா்.

●பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●2021-22 ஆம் ஆண்டுக்கான 11-ஆவது வேளாண் கணக்கெடுப்பை மத்திய அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதற்கான களப் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட உள்ளன.

●இந்த கணக்கெடுப்பு நடைமுறையை கடந்த 1970-71 ஆம் ஆண்டு முதல் மத்திய வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு கடந்த 2015-16-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

●ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பதினோறாவது கணக்கெடுப்பு தாமதமானது.

●மொத்த விவசாய பரப்பின் அளவு, வகுப்பு வாரியான பங்கீடு, நிலப் பயன்பாடு, குத்தகை, பயிரிடும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் கீழ் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

●பல மாநிலங்கள் நிலப் பதிவு மற்றும் அளவீடுகளை எண்ம (டிஜிட்டல்) மயமாக்கியிருப்பதால், வேளாண் கணக்கெப்புக்கான விவரங்களை விரைவாக சேகரிக்க உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த எண்மமய விவரங்கள் மற்றும் விவரங்களை கைப்பேசி செயலிகளைக் கொண்டு சேகரிப்பது போன்ற நடைமுறைகள், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாய பரப்பின் விவரப் பதிவை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. அமெரிக்காவில் இருந்து எத்தனை எம்.ஹெச். - 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது ? 

அ) 03

ஆ) 02

இ) 05

ஈ) 09

விடை : (ஆ) 02 

● அமெரிக்காவுடன் ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள் (ம) பிற தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 

● அதன் ஒரு பகுதியாக 24 எம்.ஹெச் - 60 ஆர் ரோமியோ ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

● அமெரிக்காவை சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

● அவற்றில் 3 ஹெலிகாப்டர்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தது ; தற்போது 2 கொச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

● வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 24 ஹெலிகாப்டர்களும் இந்தியாவிடம் வழங்கப்படவுள்ளது. 

4. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான விக்ராந்த் கீழ்க்கண்ட எந்த நாளன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15

ஆ) அக்டோபர் 02 

இ) நவம்பர் 01

ஈ) டிசம்பர் 10 

விடை: (அ) ஆகஸ்ட் 15 

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

● சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி விக்ராந்த் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

● விமானம்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானம்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அக்கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.

● இத்துடன் விமானம்தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டிலேயே கட்டும் வலிமை கொண்ட ஒருசில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

● நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்ராந்த் விமானம்தாங்கி போா்க் கப்பல் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிகழ்வு சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

● கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘ஐஏசி விக்ராந்த் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அக்கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. இது ‘தற்சாா்பு இந்தியா’ கொள்கைக்கான சிறந்த உதாரணமாகவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்கும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்ராந்த் போா்க் கப்பலின் சிறப்பம்சங்கள்:

¤ நீளம் 262 மீட்டா்

¤ அகலம் 62 மீட்டா்

¤ உயரம் 59 மீட்டா்

¤ டா்பைன்களின் எண்ணிக்கை 4

¤ என்ஜின் திறன் 88 மெகா வாட்

¤ அதிகபட்ச வேகம் மணிக்கு 28 நாட் (சுமாா் 52கி.மீ.)

¤ ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் செல்லும் தொலைவு சுமாா் 7,500 கடல்மைல்

¤ இயக்கவல்ல போா் விமானங்கள் மிக்-29கே, கமோவ்-31 உள்ளிட்டவை

¤ இயக்கவல்ல ஹெலிகாப்டா்கள் எம்ஹெச்-60ஆா், இலகுரக ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை

¤ அறைகளின் எண்ணிக்கை சுமாா் 2,300.

5. சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிருந்து திருடப்பட்ட சோழர்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை எங்கு கண்டறியப்பட்டுள்ளது ? 

அ) சீனா

ஆ) ஆஸ்திரேலியா

இ) இலங்கை

ஈ) அமெரிக்கா

விடை : (ஈ) அமெரிக்கா

சுதந்திரத்துக்கு முன்பே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோயிலிலிருந்து திருடப்பட்ட சோழா்களின் பேரரசி செம்பியன் மாதேவி சிலை அமெரிக்காவில் உள்ள ஓா் அருங்காட்சியகத்தில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கண்டறிந்தனா். அதனை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

6. தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி , ஆறு வழிச் சாலைகளை மாற்றும் திட்டத்திற்காக தமிழகத்திற்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 13,310 கோடி

ஆ) ரூ. 18,500 கோடி

இ) ரூ. 25,000 கோடி

ஈ) ரூ. 22,400 கோடி

விடை : (ஆ) ரூ. 18,500 கோடி

தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழி, ஆறு வழிச் சாலைகளாக மாற்றும் திட்டத்திற்காக, தமிழகத்திற்கு மட்டும் ரூ.18,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

7. அண்மையில் எத்தனை ஆயிரம் உயர்கல்வி படிப்புகளை வலைதளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது ? 

அ) 23,000

ஆ) 25,000

இ) 13,000

ஈ) 17,000

விடை : (அ) 23,000

செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உள்பட 23,000 உயா்கல்வி படிப்புகளை வலைத்தளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்தது.

● நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களும் உயா்கல்வியை சிரமமின்றி பெறுவதற்காக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம், புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

II. விளையாட்டுச் செய்திகள் 

8. இந்தியாவில் முதல்முறையாக நடைபெறுகிற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்யில் தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஜோ பைடன்

ஆ) நரேந்திர மோடி

இ) திரௌபதி முர்மு

ஈ) மு.க. ஸ்டாலின் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

● இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 

● இந்தியா சார்பில் 30 பேர் கொண்ட அணி பங்கேற்கவுள்ளது.

● ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. 

● செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜோதி ஓட்டம் முதல்முறையாக நடத்தப்பட்டது ; 75 முக்கிய நகரங்களில் 27,000 கி.மீ. தொலைவுக்கு ஜோதி பயணித்தது. 

III. விளையாட்டுச் செய்திகள் 

9. சர்வதேச புலிகள் தினம் ( International tiger day ) 2022 ? 

அ) ஜூலை 27

ஆ) ஜூலை 25

இ) ஜூலை 28

ஈ) ஜூலை 29 

விடை : (ஈ) ஜூலை 29 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...