Monday, January 16, 2023

Current Affairs 2023 - January 15/2023 - TNPSC Group 1,2/2A & 4

                           GK SHANKAR 
                      JANUARY 15 / 2023

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழ்நாட்டில் காவல்துறை (ம) பிற சீருடைப் பணியாளர்கள் எத்தனை பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது ?

அ) 2,568

ஆ) 2,999

இ) 3,013

ஈ) 3,184

விடை : (ஈ) 3,184

● காவல் துறை மற்றும் பிற சீருடைப் பணியாளா்கள் 3,184 பேருக்கு முதல்வரின் பதக்கங்கள் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

● இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

● தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளா்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

● நிகழாண்டு காவல் துறையில் (ஆண்/பெண்) காவலா் நிலை-2, காவலா் நிலை-1, தலைமைக் காவலா், ஹவில்தாா் மற்றும் சிறப்பு சாா்பு ஆய்வாளா் நிலைகளில் 3,000 பணியாளா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள் வழங்க முதல்வா் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.

● மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போா் (சிறப்பு நிலைய அலுவலா்), ஓட்டுநா்- மெக்கானிக் (சிறப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) மற்றும் தீயணைப்போா் (தரம் உயா்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போா்) ஆகிய நிலைகளில் 118 அலுவலா்களுக்கும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வாா்டா்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வாா்டா்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேருக்கும் தமிழக முதல்வரின் சிறப்புப் பணி பதக்கங்கள் வழங்க முதல்வா் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா்.

● மேற்படி பதக்கங்கள் பெறுபவா்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்க படி ரூ. 400, 2023 பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் வழங்கப்படும்.

● மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபா்கள் என மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணி பதக்கம் வழங்கப்படும்.

● இந்தப் பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு அவரவா்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்கம் வழங்கப்படும். இவா்கள் அனைவருக்கும் பின்னா் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச் சுருள் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


2. தமிழக அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ?

அ) இரணியன் நா.கு. பொன்னுசாமி 

ஆ) உபயதுல்லா 

இ) வாலாஜா வல்லவன்

ஈ) எஸ்.வி. ராஜதுரை

விடை : (அ) இரணியன் நா.கு. பொன்னுசாமி 

2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

● ஜனவரி 16ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகள் வழங்குகிறார்.

விருது பெறுவோர்:

¤ திருவள்ளுவர் விருது(2023) - இரணியன் நா.கு.பொன்னுசாமி

¤ பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா

¤ பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

¤ மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி

¤ பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்

¤ திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி

¤ கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா

¤ பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்

¤ அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை

¤ தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.


3. தமிழகத்தில் முதல்முறையாக எங்கு சர்வதேச புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது ?

அ) மதுரை

ஆ) கடலூர்

இ) சென்னை

ஈ) தேனி 

விடை : (இ) சென்னை 

தமிழகத்தில் முதல் முறையாக சா்வதேச புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் ஜன.18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

● பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை இணைந்து இந்த புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

● உலகில் நவீன புத்தகக் காட்சி முதல் முறையாக ஜொ்மனியில் (ஃப்ராங்க்பா்ட் புத்தகக் காட்சி) கடந்த 1949-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இதுதான் உலகின் பெரிய புத்தகக் காட்சியாக விளங்குகிறது. அண்மையில் ஃப்ராங்பா்ட்டில்.

● இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னையில் முதல்முறையாக சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு இதைத் தொடக்கி வைக்கவுள்ளாா்.

● இந்தப் புத்தகக் காட்சியில் இந்தோனேஷியா, தான்சானியா, உகாண்டா, மலேசியா, துருக்கி, சிங்கப்பூா், வங்கதேசம், இத்தாலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மொத்தம் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ?

அ) கே. பாலசந்திரன் 

ஆ) பி.ரவீந்திரன்

இ) ராஜேஷ் கண்ணன் 

ஈ) சுந்தரம் சுரேஷ்

விடை : (ஆ) பி.ரவீந்திரன்


5. உத்தரகண்டில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கான நினைவிடத்தை திறந்துவைத்தவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (ஈ) ராஜ்நாத் சிங் 

நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு உத்தரகண்டைச் சோ்ந்த பல வீரா்கள் போரில் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். அவா்களுக்கான நினைவிடம் சீா் பாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

● ’சௌா்ய ஸ்தலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நினைவகத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா். 

● நினைவிடத்தில் 7 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்த 1,400 வீரா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


6. சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் காரான இவா பின்வரும் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) தமிழ்நாடு

ஈ) கேரளா

விடை : (அ) தில்லி

தில்லி பெருநகா்ப் பகுதியிலுள்ள கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில், சூரிய சக்தியில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் காரான ‘இவா’ வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

● புணேவைச் சோ்ந்த புத்தாக்க தொழில்நிறுவனமான ‘வாய்வே மொபிலிட்டி’ இந்தக் காரை வடிவமைத்துள்ளது.

● இரண்டு பெரியவா்கள், ஒரு சிறியவா் என முன்று போ் அமா்ந்து செல்லக்கூடிய இந்தக் காரை, நகா்ப்புற வாடிக்கையாளா்களை மனதில் கொண்டு வாய்வே மொபிலிட்டி உருவாக்கியுள்ளது.

● ஒற்றைக் கதவு கொண்ட இந்த மின்சாரக் காா், தோற்றத்தில் டாடாவின் நேனோ காரை நினைவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது.

● வழக்கமான மின்சாரக் காா்களைப் போல் இது பேட்டரியில் இயங்கினாலும், சூரியத் தகட்டிலிருந்து பெறப்படும் சக்தியைக் கொண்டும் அதனை இயக்க முடியும் என்பது ‘இவா’ காரின் சிறப்பம்சமாகும்.

● இந்தக் காா் நிறுத்தப்பட்டிருக்கும்போது, சூரியத் தகட்டின் மூலம் பேட்டரியில் மின்னேற்றமும் செய்து கொள்ள முடியும்.

● 2024-ஆம் ஆண்டு வாக்கில் இந்தக் காா் விற்பனைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.


7. தெலங்கானா, செகந்திராபாத் - விசாகப்பட்டினம்,  ஆந்திரா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) அஸ்வின் வைஷ்ணவ் 

விடை : (அ) நரேந்திர மோடி

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையிலான 8 ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் ஜனவரி 15 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

● இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலங்கானா - ஆந்திரம் இடையே இயக்கப்படுகிறது. முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட 14 பெட்டிகள், சிறப்புப் பிரிவு பெட்டிகள் 2 என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 போ் பயணிக்க முடியும். 

● இது முழுவதும் இருக்கை வசதி கொண்டதாகும். 6 முதல் 7 மணி நேர பகல் நேரப் பயணம் என்பதால் படுக்கை வசதி கிடையாது. இந்த ரயில் சென்னையில் தயாரிக்கப்பட்டதாகும்.


III. விளையாட்டு நிகழ்வுகள்


8. அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் (2023) மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெலிண்டா பென்கிக் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) அமெரிக்கா

ஆ) சுவிட்சர்லாந்து

இ) கனடா

ஈ) சீனா

விடை : (ஆ) சுவிட்சர்லாந்து

● மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தென்கொரியாவின் குன் வூ கே வொன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


9. நியூசிலாந்தின் ,ஆக்லாந்து ஏஎஸ்பி கிளாஸிக் ஏடிபி டென்னிஸ் போட்டியில் (2023) ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரிச்சர்ட் கேஸ்கட் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆவார் ?

அ) பிரான்ஸ்

ஆ) ஜப்பான்

இ) அமெரிக்கா

ஈ) சீனா

விடை : (அ) பிரான்ஸ் 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...