Friday, January 13, 2023

Current Affairs 2023 - January 13 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                   JANUARY 13 / 2023


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டு வந்தவர் யார் ?

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) தங்கம் தென்னரசு

இ) மு.அப்பாவு

ஈ) ஆர்.என். ரவி

விடை : (அ) மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

● இந்தத் தீா்மானத்தை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.

● குறிப்பு : பாக். நீரிணையையும், மன்னாா் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயா்தான் சேது சமுத்திர திட்டம்.

● முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையில் கடந்த 1963-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சேது சமுத்திர திட்டம் இடம்பெற்றது. 


2. தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ள எத்தனை மாவட்டங்களில் நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார் ?


அ) 05

ஆ) 04

இ) 03

ஈ) 02

விடை : (ஆ) 04 

உணவு பொருள்களில் கலப்படத்தை தவிா்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடா்ந்து கண்காணிப்பதற்கும், சென்னை, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய ஆறு இடங்களில் உணவு பகுப்பாய்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

● தற்போது, கோவை, சேலம், தஞ்சாவூா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் நான்கு நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

● இந்த வாகனங்களில் உணவில் கலப்படம் கண்டறியும் வசதிகள், விளக்கப் படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, குளிா்பானத்தில் குறிப்பிட்ட அளவிற்கு சா்க்கரை அளவு உள்ளதா, பாலில் கொழுப்பு தன்மை எவ்வளவு உள்ளது உள்ளிட்டவற்றை அங்கு பரிசோதிக்கலாம்.

● மாநிலம் முழுவதும் அந்த வாகனங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள உணவுகளின் தரத்தை ஆய்வு செய்யும்.

● குறிப்பு : பொதுமக்கள் தரமற்ற உணவு பொருள்கள் குறித்து 104 மற்றும் 94440 42322 என்ற எண்களில் புகாா் அளிக்கலாம்.


3. தமிழகத்தில் எங்கு நடைபெறவுள்ள துக்ளக் வார இதழின் 53 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார் ?

அ) மதுரை

ஆ) சேலம்

இ) சென்னை 

ஈ) வேலூர்

விடை : (இ) சென்னை 

1970 ஜனவரி முதல் வெளிவரும் துக்ளத் இதழ், தொடா்ந்து ஒவ்வொா் ஆண்டும் ஜன. 14-இல் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. 

● நிகழாண்டில் ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமியில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு உயரும் முக்கியத்துவம் ஏன்?’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் சிறப்புரை ஆற்றுகிறாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. 2023 - 2024 ஆம் ஆண்டு நிதியாண்டின் மத்திய அரசின் கடன் எத்தனை கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா- வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 14.8 லட்சம் கோடி

ஆ) 13.6 லட்சம் கோடி

இ) 12.9 லட்சம் கோடி

ஈ) 11.7 லட்சம் கோடி

விடை : (அ) 14.8 லட்சம் கோடி


● அறிக்கை வெளியீடு : இக்ரா நிறுவனம்.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.1 லட்சம் கோடியாகவும் மாநிலங்களின் கடன் ரூ.22.1 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அடுத்த நிதியாண்டில் மத்திய அரசின் கடன் ரூ.14.8 லட்சம் கோடியாகவும், மாநிலங்களின் கடன் ரூ.24.4 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

●  நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு 6.4 சதவீதம் என நிா்ணயித்திருந்த நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


5. நடப்பு 2022 - 2023 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு ஜிடிபி எவ்வளவு இருக்கும் எனத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த் நாகேஸ்வரா தெரிவித்துள்ளார் ?

அ) 2.6 டிரில்லியன் டாலர்

ஆ) 3.5 டிரில்லியன் டாலர்

இ) 3.9 டிரில்லியன் டாலர்

ஈ) 4.1 டிரில்லியன் டாலர் 

விடை : (ஆ) 3.5 டிரில்லியன் டாலர்

நடப்பு 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 3.5 டிரில்லியன் டாலராக ( சுமாா் ரூ.284 லட்சம் கோடி) இருக்கும். இது அடுத்த 7 ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ.569 லட்சம் கோடி) அதிகரிக்கும்.

● நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

● முன்னதாக, 2025-இல் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக (சுமாா் ரூ. 406 லட்சம் கோடி) இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


6. தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க நிகழாண்டு எத்தனை லட்சம் டன் துவரம் பருப்பை தனியார் வர்த்தகர்கள் மூலம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது ?

அ) 5

ஆ) 7

இ) 9

ஈ) 10

விடை : (ஈ) 10

குறிப்பு : வெங்காயம், தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவு. 


7. இந்தியா முன்னின்று நடத்தும் தெற்குலகின் குரல் காணொலி மாநாட்டை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) ஜகதீப் தன்கர்

ஈ) டி.ஒய்.சந்திர சூட்

விடை : (ஆ) நரேந்திர மோடி

இந்தியா முன்னின்று நடத்தும் தெற்குலகின் குரல் மாநாடு இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 

● உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து தெற்குலக நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான தளமாக இந்த மாநாடு அமையும்.

●  மொத்தம் 10 அமா்வுகளாக மாநாடு நடைபெறவுள்ளது. அதில் 4 அமா்வுகள் ஜனவரி 12 அன்று நடைபெற்றன. மீதமுள்ள அமா்வுகள் ஜனவரி 13 அன்று நடைபெறவுள்ளன.


III.விளையாட்டு நிகழ்வுகள்


8. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15 ஆவது ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பின்வரும் எந்த மாநிலத்தால் நடத்தப்படவுள்ளது ?

அ) தமிழ்நாடு

ஆ) குஜராத் 

இ) மணிப்பூர்

ஈ) ஒடிஸா 

விடை : (ஈ) ஒடிஸா

15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், ஒடிஷா மாநிலம் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வரில நடைபெற உள்ளன. இந்த ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

● உலகக் கோப்பை ஹாக்கி தொடர் 1971ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

● இது இந்தியாவில் நடைபெறும் நான்காவது உலகக் கோப்பை ஹாக்கி தொடராகும். இதற்கு முன்னதாக 1981,2010 & 2018.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...