Monday, January 9, 2023

Current Affairs 2023 - January 09/2023 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                  JANUARY 09/2023

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. அருட்செல்வர் பொள்ளாட்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொங்குநாடு அறக்கட்டளை சார்பில் எங்கு நடைபெற்றது ?

அ) மதுரை

ஆ) சேலம்

இ) கோயம்புத்தூர் 

ஈ) சென்னை

விடை : (ஈ) சென்னை 

அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொங்குநாடு அறக்கட்டளை சாா்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டதுடன், அறக்கட்டளை சாா்பிலான பல்வேறு விருதுகளையும், கல்வி உதவித் தொகைகளையும் வழங்கினார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

● தமிழ்த் தொண்டு: அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்திடம் ஆன்மிக அருள் மட்டுமல்ல, செல்வமும் இருந்தது. அத்தகைய செல்வத்தை அறநெறிக்கும், அறத் தொண்டுக்கும், தமிழ்த் தொண்டுக்கும் பயன்படுத்தினாா். அதனால்தான் அருட்செல்வா் என்பது அவரது பட்டப் பெயராக மட்டும் இல்லாமல், பண்புப் பெயராகவும் அமைந்திருக்கிறது.

● திருக்குறளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயா்த்து வெளியிட்டாா். வடமாநிலங்களுக்கு அவற்றைக் கொண்டு சென்று இலவசமாக பள்ளி, கல்வி நிலையங்களில் அளித்தாா். திருமந்திரம், பெரியபுராணம், திருவருட்பா ஆகிய நூல்களை அச்சிட்டு வெளியிட லட்சக்கணக்கான பணத்தை வழங்கினாா். அவரை அருட்செல்வா் என்பதுடன் தமிழ்ச்செல்வா் என்றுகூட அழைக்கலாம். அருட்செல்வரைப் போன்று பலரும் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும்.

● மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து அதன்பின், தனது அரசியல் பணிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாா் மகாலிங்கம். தொழில், ஆன்மிகம், இலக்கியம் என்று தனது பாதையை மாற்றிக் கொண்டாா். தோ்தல் அரசியலில் இருந்து ஒதுங்கினாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் தொண்டை செய்து வந்தாா். இந்தப் பணிகளுக்கு மகாத்மா காந்தியடிகள், அருட்பிரகாச வள்ளலாா் ஆகிய இருவரையும் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு தனது கடமைகளை நிறைவேற்றினாா் அருட்செல்வா் மகாலிங்கம்.

● குறிப்பு : பொள்ளாச்சி சாலைக்கு அருட்செல்வா் மகாலிங்கம் பெயா்

பொள்ளாச்சியில் உள்ள புதிய திட்டச் சாலைக்கு, அருட்செல்வா் டாக்டா் நா.மகாலிங்கம் எனப் பெயா் சூட்டப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள்


2. உத்தரகண்ட் மாநிலத்தின் எந்த நகரம் அண்மையில் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு - புதைவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது ?

அ) ஜோஷிமட் 

ஆ) ரிஷிகேஷ்

இ) ஹரித்வர்

ஈ) ராம்நகர்

விடை : (அ) ஜோஷிமட் 

உத்தரகண்டில் புகழ்பெற்ற பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சா்வதேச பனிச்சறுக்கு சுற்றுலாத் தலமான அவுலிக்கும் நுழைவு வாயிலாக உள்ள ஜோஷிமட் நகரில் நிலப் பகுதி தாழ்ந்து வருகிறது. சாலைகள் மற்றும் வீடுகளில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு வருவது அங்கு வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

● இந்தச் சூழலில், மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு-புதைவு மண்டலமாக ஜோஷிமட் நகா் அறிவிக்கப்பட்டுள்ளதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.


3. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக எத்தனை பேருந்துகளை வழங்கி இந்தியா உதவியுள்ளது ?

அ) 100

ஆ) 75

இ) 50

ஈ) 25

விடை : (ஆ) 75

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக 500 பேருந்துகளை வழங்கி உதவ இந்தியா உறுதி அளித்திருந்த நிலையில் முதல் 75 பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டன.


4. பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்) முத்ரா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு ?

அ) ஏப்ரல் 08,2013

ஆ) ஏப்ரல் 08,2014

இ) ஏப்ரல் 08,2015

ஈ) ஏப்ரல் 08,2016

விடை : (இ) ஏப்ரல் 08,2015 

தெருவோர வியாபாரிகள், சிறு தொழில்முனைவோருக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின்கீழ் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ.1,550 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

● ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஆகியோா், சில பயனாளிகளுக்கு நேரடியாக காசோலைகளை வழங்கினா். அனைத்து பிற பயனாளிகளுக்கும் அன்றைய தினமே கடன் தொகை வழங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

● பிரதமரின் ஸ்வநிதி யோஜனா (தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கான கடன் திட்டம்), முத்ரா திட்டம், பசு வளா்ப்போருக்கான கடன் திட்டம் போன்றவற்றின்கீழ் 33,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இக்கடன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. எத்தனையாவது இந்தியா-அமெரிக்க வர்த்தக கொள்கை அமைப்பு (டிபிஎஃப்) கூட்டம் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது ?

அ) 10 ஆவது

ஆ) 11 ஆவது

இ) 12 ஆவது

ஈ) 13 ஆவது

விடை : (ஈ) 13 ஆவது 

இந்திய-அமெரிக்க வா்த்தகக் கொள்கை அமைப்பு (டிபிஎஃப்) கூட்டம் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜன. 11-ஆம் தேதி வாஷிங்டனில் 13-ஆவது இந்திய-அமெரிக்க டிபிஎஃப் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சா் பியூஷ் கோயல்-அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டை ஆகியோா் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

● வா்த்தகம் மற்றும் முதலீட்டில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை விரிவுபடுத்தும் தளமாக டிபிஎஃப் உள்ளது. இந்த அமைப்பின் கூட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும் என நம்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


III. விளையாட்டு செய்திகள்


6. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் 2023 ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் ?

அ) நோவக் ஜோகோவிச் 

ஆ) செபாஸ்டியன் கோர்டா 

இ) ஹேரி ஹெலியோவாரா 

ஈ) வாய்ட் கிளாஸ் பூல்

விடை : (அ) நோவக் ஜோகோவிச்

● செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

● ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்வில் கைப்பற்றிய 92 ஆவது ஒற்றையர் பிரிவு.

● இதற்கு முன் இந்த போட்டியில் 2007 ஆம் ஆண்டு பட்டம் வென்றிருந்தார்.


7. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் 2023 மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் ?

அ) அரினா சபலென்கா 

ஆ) சின்லிண்டா 

இ) ஜேமிமுர்ரே 

ஈ) மைக்கேல் வீனஸ்

விடை : (அ) அரினா சபலென்கா 

● பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

● இது இவரது 11 ஆவது ஒற்றையர் பட்டமாகும்.

இரட்டையர் பிரிவு - சாம்பியன் பட்டம் வென்றவர்கள்.

¤ ஆடவர் : ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவாரா / இங்கிலாந்தின் லாய்ட் கிளாஸ் பூல். 

¤ மகளிர் : இங்கிலாந்தின் ஜேமிமுர்ரே / ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ்.


8. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ATP (ம) WTA இணைந்து முதல்முறையாக நடத்திய யுனைடெட் கோப்பை டென்னிஸ போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ?

அ) அமெரிக்கா

ஆ) இத்தாலி

இ) ரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

விடை : (அ) அமெரிக்கா


IV. முக்கிய தினங்கள்


9. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது ?

● Ans : ஜனவரி 09

● தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய நாளான ஜன.9}ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக  கொண்டாடப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்வதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

● ஆண்டுதோறும் ஜன.9}ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படும்' என்று கடந்த 2002}ஆம் ஆண்டு ஜன.8}ஆம் தேதி அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அறிவித்தார். 

● அதைத் தொடர்ந்து 2003}ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9}ஆம் தேதி இந்தி தினம் மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

● மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (1915}ஆம் ஆண்டு, ஜனவரி 9) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

● ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

● கடந்த 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் தில்லியிலும், 2005-ல் மும்பை, 2006-ல் ஹைதராபாத், 2007, மீண்டும் 2008-ல் தில்லி, 2009}இல் சென்னை, 2010 மற்றும் 2011-ல் தில்லி, 2012-ல் ஜெய்ப்பூர், 2013-ல் கொச்சி, 2014-ல் தில்லி, 2015-ல் மகாத்மா மந்திர், காந்தி நகர், குஜராத், 2017-ல் பெங்களூரு, 2018-ல் சிங்கப்பூர் 2019-ல் வாரணாசி ஆகிய இடங்களில் இவ்விழா நடைபெற்றது.2023 ம் ஆண்டுக்கான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தினம் ம.பி., மாநிலம் இந்தூரில் நடைபெறுகிறது.

 





No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...