Monday, January 2, 2023

Current Affairs 2023 - January 02 / 2023 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                    JANUARY 02 /2023


 I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 


1. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயர்த்தி ஜனவரி 01,2023 முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் ?

அ) 2%

ஆ) 3%

இ) 4%

ஈ) 5%

விடை : (இ) 4%

 ● அரசு ஆசிரியர், ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

● இதன்மூலம், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● இந்த 4 சதவிகித அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு தொடங்கப்படவுள்ள யூ-டியூப் சேனல் ?

அ) நலம் 108

ஆ) நலம் 212

இ) நலம் 317

ஈ) நலம் 365 

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனல் திங்கள்கிழமை (ஜன.2) முதல் தொடங்கப்படவுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கவுள்ளாா்.

● மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● முன்பு : ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘நலம் 365’ சேனல் தொடங்கப்படவுள்ளது.


3. தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1000 இல் இருந்து எத்தனை ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது ?

அ) ரூ.1,500

ஆ) ரூ.2000

இ) ரூ.2,500

ஈ) ரூ.3,000

விடை : (அ) ரூ.1,500

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

● வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 

● இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


4. மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் எத்தனையாவது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறவுள்ளது ?

அ) 100

ஆ) 108

இ) 111

ஈ) 120

விடை : (ஆ) 108 

1914-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இப்போது 108-ஆவது மாநாடு நாகபுரியில் உள்ள ஆா்.டி.எம். நாகபுரி பல்கலைக்கழகத்தில் ஜனவரி 03 முதல் ஜனவரி 07 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. 

● இதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. இந்தத் தலைப்பில் பிரபல பெண் விஞ்ஞானிகளும் பேச இருக்கின்றனா்.

● அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடா்பாகவும், உயா் கல்வி, ஆய்வுப் படிப்புகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு சம வாய்ப்பை மேம்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.


5. கைப்பேசி ஏற்றுமதியை எத்தனை கோடிக்கு உயர்த்துவது 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ.50,000 கோடி

ஆ) ரூ.1லட்சம் கோடி

இ) ரூ.1.5 லட்சம் கோடி 

ஈ) ரூ.2 லட்சம் கோடி

விடை : (ஆ) 1 லட்சம் கோடி

கைப்பேசி ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவது பிரதமா் நரேந்திர மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்கு என மத்திய இணை அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்தாா்.

● நாட்டில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பை அதிகரிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும். கைப்பேசிகளின் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடிக்கு உயா்த்துவதுடன் ஏற்றுமதி பட்டியலில் முதன்மையான 10 பொருள்களில் ஒன்றாக கைப்பேசியையும் இடம்பெறச் செய்வதே பிரதமா் மோடியின் 2023-ஆம் ஆண்டுக்கான இலக்காகும்.

● தற்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கைப்பேசிகளின் மதிப்பு ரூ.45 ஆயிரம் கோடியாகும். கைப்பேசி தவிா்த்து பிற மின்னணு சாதனங்களைத் தயாரிப்பதற்கான சூழலை விரிவுபடுத்த உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

● இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்துக்கான வன்பொருள்களைத் தயாரிக்க டெல், ரைஸிங் ஸ்டாா், லாவா இண்டா்நேஷனல் உள்ளிட்ட 14 நிறுவனங்களை மத்திய அரசு தோ்ந்தெடுத்துள்ளது.


6. 2021 ஆம் ஆண்டில் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக எத்தனை பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ?

அ) 1040

ஆ) 1235

இ) 1317

ஈ) 1997

விடை : (அ) 1040

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2021-இல் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள்’ என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

● இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மொத்தம் 4.12 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1.53 லட்சம் போ் உயிரிழந்தனா். 3.84 லட்சம் போ் படுகாயமடைந்தனா்.

● கைப்பேசியைப் பயன்படுத்திக்கொண்டே வாகனம் ஓட்டியதன் காரணமாக 1,997 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,040 போ் உயிரிழந்தனா். 

● சாலையில் உள்ள போக்குவரத்து விளக்குகளைக் கவனத்தில் கொள்ளாமல் விதியை மீறிச் சென்ன் காரணமாக நிகழ்ந்த 555 சாலை விபத்துகளில் 222 போ் உயிரிழந்தனா். 

● சாலைகளில் காணப்படும் பள்ளங்களின் காரணமாக 3,652 சாலை விபத்துகள் நேரிட்டத்தில் 1,481 போ் உயிரிழந்தனா்.


7. நேபாளத்தில் பின்வரும் எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை நேபாள பிரதமர் பிரசண்டா அண்மையில் திறந்து வைத்தார் ?

அ) ஜப்பான்

ஆ) இந்தியா

இ) ஆஸ்திரேலியா

ஈ) சீனா

விடை : (ஈ) சீனா

நேபாளத்தில் சீன உதவியுடன் அமைக்கப்பட்ட சா்வதேச விமான நிலையத்தை பிரதமா் பிரசண்டா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

● மேற்கு நேபாளத்தின் சுற்றுலா மையமாக கருதப்படும் பொக்காராவில் சீனாவின் உதவியுடன் இந்த பிராந்திய சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த விமான நிலையத்துக்காக 215 மில்லியன் டாலா் கடனுதவி பெற கடந்த 2016-இல் சீனாவுடன் நேபாளம் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது.


III. முக்கிய நிகழ்வுகள் 


8. World Introvert Day 2023 -------

● Ans : January 02

● Theme : Celebrating the power of Introvert

● First Observed : 2011


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...