Friday, January 6, 2023

Current Affairs 2023 - January 06/2023 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 JANUARY 06 / 2022 


I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்


1. தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எத்தனை கோடியாக உயர்ந்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் ? 

அ) 6.10 கோடி 

ஆ) 6.12 கோடி

இ) 6.15 கோடி

ஈ) 6.20 கோடி

விடை : (ஈ) 6.20 கோடி

தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மாநில தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது.

● மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179-ஆக உயா்ந்துள்ளது. 

● இதில், ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866. பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286. மூன்றாம் பாலின வாக்காளா்களின் எண்ணிக்கை 8,027.

● அதிகம், குறைவு: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளா்கள் உள்ளனா். 

● குறைந்தபட்ச வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 125 வாக்காளா்கள் உள்ளனா்.

● வெளிநாடுகளில் வசித்து, தமிழ்நாட்டில் வாக்குரிமை வைத்திருப்போரின் எண்ணிக்கை 3,310 ஆகும். 

● மொத்த வாக்காளா்களில் மாற்றுத் திறன் படைத்தவா்களாக அறியப்பட்டவா்கள் 4 லட்சத்து 48 ஆயிரத்து 138. 

● குறிப்பு : 

மொத்த வாக்காளா்கள்: 6,20,41,179

ஆண்கள்: 3,04,89,866

பெண்கள்: 3,15,43,286

மூன்றாம் பாலினத்தவா்: 8,027.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


2. வடகிழக்கு மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடர எத்தனை கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது ?

அ) ரூ. 10,170 கோடி

ஆ) ரூ.12,882 கோடி

இ) ரூ. 13,170 கோடி

ஈ) ரூ. 13,999 கோடி

விடை : (ஆ) 12,882 கோடி

வடகிழக்கு மாநிலங்கள் வளா்ச்சி திட்டங்கள் தொடர ரூ. 12,882 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 

● அறிவிப்பு :  வடகிழக்கு மாநிலங்களுக்கான அமைச்சா் கிஷண் ரெட்டி.

● வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு 15-ஆவது நிதி ஆணையம் 2024-26 வரையில் பரிந்துரைத்திருந்த ரூ.19,482 கோடியில் மீதமுள்ள ரூ.12,882 கோடியை விடுவிக்க பிரதமா் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● பெரும்பாலான வளா்ச்சித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 


3. தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி எந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார் ?

அ) 2019

ஆ) 2020

இ) 2021

ஈ) 2022

விடை : (ஆ) 2020

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமா்வு வரும் 31-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10-ஆம் தேதி வரையும், இரண்டாம் அமா்வு மாா்ச் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இன்னும் தேதிகள் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.

● பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

● இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தில் நுழைவின்போது எம்.பி.க்கள் பயன்படுத்துவதற்கான ஸ்மாா்ட் காா்டு அடிப்படையிலான அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

● மேலும், புதிய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஒலி-ஒலி கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து எம்.பி.களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


4) பின்வரும் எங்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது தேசிய மாநாடு தொடங்கப்பட்டுள்ளது ?

அ) போபால் 

ஆ) கொல்கத்தா 

இ) காந்திநகர்

ஈ) சென்னை 

விடை : (அ) போபால் 

மாநில நீா்வளத் துறை அமைச்சா்களின் முதலாவது தேசிய மாநாடு மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சாா்பில் மத்திய பிரதேச தலைநகா் போபாலில் வியாழக்கிழமை தொடங்கியது. 

● இருநாள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினார் .


5. உலகின் மிக நீண்டதூர நதிவழி சொகுசு கப்பல் சேவை பின்வரும் எந்த நாட்டில் தொடங்கப்படவுள்ளது ?

அ) சீனா 

ஆ) ரஷ்யா

இ) இந்தியா

ஈ) பிரிட்டன் 

விடை : (இ) இந்தியா 

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மற்றும் அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகா் இடையே வங்கதேசம் வழியாக இயக்கப்படவிருக்கும் ‘கங்கா விலாஸ்’ நதி சுற்றுலா கப்பலை பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி 13-இல் தொடக்கிவைக்கவுள்ளாா்.

● கங்கை, பிரம்மபுத்ரா என நாட்டின் இரு பெரும் நதிகளில் 3,200 கி.மீ. தொலைவுக்கு இக்கப்பல் பயணிக்கும். 

● ஐம்பது நாள்கள் நடைபெறும் இந்த சுற்றுலா பயணத்தில் உலக பாரம்பரிய சின்னங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கப்பல் நின்று செல்லும். 

● உலகிலேயே மிக நீளமான நதி சுற்றுலா என்ற சிறப்பும் ‘கங்கா விலாஸ்’ கப்பல் பயணத்துக்கு சொந்தமாக உள்ளது.


6. சமுத்ரயான் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் எத்தனை ஆய்வாளர்களை கடலில் 500 மீ ஆழத்துக்கு அனுப்பி ஆய்வு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது ?

அ) 6

ஆ) 5

இ) 4

ஈ) 3

விடை : (ஈ) 3

இந்தியாவிலேயே கட்டப்பட்ட சமுத்ராயன் என்ற கப்பலில் கடலுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்திற்கு இந்த ஆண்டு மூன்று ஆய்வாளர்களை இந்தியா அனுப்பவுள்ளது.


7. பின்வரும் எந்த ஆண்டுக்குள் பெங்களூரு - சென்னை விரைவுச் சாலைப் தயாராகிவிடும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளனர் ?

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026

விடை : (ஆ) 2024

பெங்களூரு: பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

● பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

● இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.


8. 108 ஆவது இந்திய அறிவியல் மாநாடு பின்வரும் எங்கு நடைபெற்று வருகிறது ?

அ) நாகபுரி 

ஆ) சென்னை

இ) கொல்கத்தா 

ஈ)திருச்சூர் 

விடை : (அ) நாகபுரி 

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், கல்வியாளா்கள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

● நாகபுரியில் நடைபெறும் 108-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

● குறிப்பு : இந்தியாவில் குறைந்து வரும் ஆராய்ச்சியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல் திட்ட முயற்சிகளுக்கு மாநில அரசுகள் நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு அளிக்க மத்திய அரசின் அறிவியல் ஆலோசகா் அஜய் குமாா் சூட் கோரிக்கை விடுத்துள்ளாா்.


III. முக்கிய நிகழ்வுகள் 


9. World Day of War Orphans 2023 ---------

Ans : January 06 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...