Sunday, January 8, 2023

Current Affairs 2023 - January 08 /2023 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                 JANUARY 08 / 2023


I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 


1. இந்தியாவில் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) தமிழ்நாடு 

ஈ) மணிப்பூர்

விடை: (அ) தில்லி

மாநிலங்களின் ஒத்துழைப்புடன் விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளச்சியை அடைவதை இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய மாநாடு தில்லியில் ஜன.5-ஆம் தேதி தொடங்கியது. 

● இரு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.

● அப்போது அவா் மக்களின் வாழ்கைத் தரத்தை உயா்த்துவதையும் மேம்பாட்டை நோக்கிய பாதையில் இந்தியாவை வலுப்படுத்துவதையும் இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பணியாற்ற வேண்டும் என கூறினாா்.


2. குறைந்த வருமானம் ஈட்டுவோரை கருத்தில் கொண்டு எத்தனை அடுக்குகள் கொண்ட வருமான வரிவசூல் முறை அறிமுகப்பட்டது  என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 5

ஆ) 6

இ) 7

ஈ) 8

விடை : (இ) 7

கடந்த 2020-21-ஆம் ஆண்டு பட்ஜெட்டின்போது 7 அடுக்குகள் கொண்ட புதிய வருமான வரி வசூல் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவா்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

● அதேவேளையில், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் தங்கள் வருவாயில் 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 10 சதவீதம், ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவா்கள் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

● ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 20 சதவீதம், ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோா் 25 சதவீதம், ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோா் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

● பழைய முறை: பழைய வரி வசூல் முறையிலும் ரூ.2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரிவிலக்கு உள்ளது. அதேவேளையில், அந்த முறையில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.


3. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு (ம) குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வரும் எந்த அமைப்பு/ஆணையம் புதிய வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது ?

அ) CPCR

ஆ) NCPCR

இ) NWRC

ஈ) மேற்கண்ட அனைத்தும்

விடை : (ஆ) NCPCR

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வலைதளத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆா்) உருவாக்கியுள்ளது.

● அறிவிப்பு : அந்த ஆணையத்தின் தலைவா் பிரியங்க் கனுங்கோ.


4. 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) டி.ஒய். சந்திர சூட்

இ) ராம் நாத் கோவிந்த் 

ஈ) மு.க. ஸ்டாலின்

விடை : (ஆ) டி.ஒய்.சந்திர சூட்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளார். 

● இந்தியாவிலும், உலக அளவிலும் சட்டப் பணியில் அவா் ஆற்றி வரும் வாழ்நாள் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும்.

● இந்த விருதானது, வரும் 11-ம் தேதி நடைபெறும் இணையவழி விழாவில் அவருக்கு வழங்கப்பட இருக்கிறது.


5. இந்தியா (ம) பின்வரும் எந்த நாட்டின் விமானப் படைகள் முதல்முறையாக கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளன ?

அ) சீனா

ஆ) ஆப்பிரிக்கா

இ) ஜப்பான்

ஈ) கனடா

விடை : (இ) ஜப்பான் 

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் ஜன.12 முதல் ஜன.26 வரை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. 

● ஜப்பானில் உள்ள ஹியாகுரி விமானப் படைத் தளத்தில் இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது. 

● இதில் இந்தியா சாா்பில் சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போா் விமானங்கள், இரண்டு சி-17 விமானங்கள், ஒரு ஐஎல்-78 விமானம் ஆகியவை பங்கேற்க உள்ளன. 

● ஜப்பான் விமானப் படை சாா்பில் நான்கு எஃப்-2 மற்றும் நான்கு எஃப்-15 விமானங்கள் பங்கேற்கின்றன.

● இருநாட்டுப் படைகளும் கடுமையான சூழலில், பல்வேறு வான்வழி போா் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. 

● இருநாடுகளுக்கு இடையிலான வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இது இருதரப்பு உத்திசாா்ந்த உறவை ஆழமாக்குவதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மற்றொரு நடவடிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. 7 ஆவது டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2022 எங்கு நடைபெற்றது ?

அ) தில்லி

ஆ) கோவா

இ) கேரளா

ஈ) மணிப்பூர்

விடை : (அ) தில்லி

● விருதுகள் வழங்கியவர் : குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.


7. நிகழ் 2023 ஆம் ஆண்டுக்கான என்சிசி ( NCC) குடியரசு தின முகாமை தொடக்கி வைத்தவர் யார் ?

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) டி.ஒய். சந்திர சூட்

விடை : (இ) ஜகதீப் தன்கர்

2023 -ஆம் ஆண்டுக்கான என்சிசி குடியரசு தின முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தாா். என்சிசி மாணவா் படையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவா் ஏற்றுக்கொண்டாா்.

● தேசிய மாணவா் படையின் (என்சிசி) 74-ஆவது குடியரசு தின முகாம், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி தில்லி கன்டோன்மென்ட் பகுதி, கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியது.

● இந்த ஒரு மாதகால முகாமில் 710 மாணவிகள் உட்பட மொத்தம் 2,155 மாணவா்கள் பங்கேற்கின்றனா். இந்த என்சிசி குடியரசு தின முகாமிற்கு பொன்மொழியாக ‘ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்‘ என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

● இந்த முகாமில் இளைஞா் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 19 நட்பு நாடுகளைச் சோ்ந்த மாணவா் படை மற்றும் அதிகாரிகளும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 


8. FIA ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி ஒடிஸாவில் என்று முதல் தொடங்கப்படவுள்ளது ?

அ) ஜனவரி 13,2023

ஆ) ஜனவரி 27,2023

இ) பிப்ரவரி 01,2023

ஈ) பிப்ரவரி 13,2023

விடை : (அ) ஜனவரி 13,2023

சா்வதேச ஹாக்கி சம்மேனம், ஹாக்கி இந்தியா, ஒடிஸா அரசு சாா்பில் எஃப்ஐஎச் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜன. 13-ஆம் தேதி தொடங்குகிறது.

● நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவது வழக்கம். பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. கடந்த 2018-இல் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியம் உலக சாம்பியன் ஆனது.

● இந்நிலையில் ஒடிஸாவில் இரண்டாவது முறையாக ஹாக்கி உலகக் கோப்பை போட்டி வரும் 13-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

● குறிப்பு : ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, நெதா்லாந்து, ஜொ்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளின் சவால்களை கடந்து இந்திய அணி பட்டத்தை கைப்பற்ற வேண்டும். கடைசியாக 1975-இல் உலக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றிருந்தது.

● தற்போது உலகின் 5-ஆம் இடத்தில் உள்ளது இந்தியா.



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...