Sunday, September 18, 2022

Current Affairs 2022 - September 17 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
               SEPTEMBER 17 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்:  

1. தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் , முதல்வர் தலைமை வகித்த தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தென்மண்டல மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) சேலம் 
ஆ) மதுரை 
இ) சென்னை 
ஈ) தேனி 

விடை : (ஆ) மதுரை 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தென்மண்டல மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டிற்குத் தலைமை வகித்த முதல்வா் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 

● சிறுதொழில் வளா்ச்சி திட்டங்கள்: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லாக் கடன் எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ், 81 நிறுவனங்களுக்கு ரூ.20 கோடியே 13 லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தாய்கோ வங்கி சீரமைப்பு, கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

● புதிய தொழில் குழுமங்கள் தொடக்கம்: அந்தந்த பகுதிக்குரிய சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன்படி,

● மதுரை விளாச்சேரி பொம்மைக் குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரைக் குழுமம், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மகளிா் நெசவுக் குழுமம் ஆகியன ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் அமைப்பதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

● இதேபோல, காஞ்சிபுரம் நரிக்குறவா் பாசிமணி குழுமம், திருநெல்வேலியில் சமையல் பாத்திரக்குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம்,

● கிருஷ்ணகிரியில் மூலப்பொருள்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம், ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

எம்ஓடி பதிவில் புதிய நடைமுறை: தொழில் முனைவோா்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் (எம்ஓடி) ஒப்படைத்து சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனா். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கடன் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது, மீண்டும் ‘எம்ஓடி’ பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

● மதுரையில் டைடல் பூங்கா: கடந்த 2000- இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி சென்னையில் திறந்த வைத்த டைடல் பூங்கா, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்போது திருப்பூா், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம், வேலூா் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிய டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக,

● தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி, நிதிச் சேவை போன்ற அறிவு சாா்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிா்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும். முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும்.

2. தமிழகத்தில் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களை புத்தாக்க சிந்தனை உடையவர்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) மு.க. ஸ்டாலின்

ஆ) ஆர்.என். ரவி

இ) முனீஷ்வர் நாத் பண்டாரி 

ஈ) பொன்முடி 

விடை : (அ) மு.க. ஸ்டாலின் 

பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களை புத்தாக்க சிந்தனை உடையவா்களாக உருவாக்கும், பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்: தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பள்ளி கல்வித் துறையும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன. நிகழ் ஆண்டில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் 1.56 லட்சம் மாணவா்களுக்கும், 3 ஆயிரத்து

● 120 ஆசிரியா்களுக்கும் தொழில் முனைதல் பற்றிய விழிப்புணா்வு அளிக்கப்படும்.மாணவா்களிடையே புத்தாக்கச் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த 40 புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

● மேலும் தொழில்முனைவோருக்கு விருதுகள்: 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

● சிறந்த தொழில் முனைவோா் விருது (தூத்துக்குடி கல்பகாகெமிக்கல்ஸ்), வேளாண் சாா்ந்த தொழில் விருது (திருப்பத்தூா் மாவட்டம் ப்ரெஸ்ரா பிக்ல்ஸ்), தரம் மற்றும் ஏற்றுமதி விருது (தூத்துக்குடி ரமேஷ் ப்ளவா்ஸ்), சிறந்த மகளிா் தொழில்முனைவோா் விருது (செங்கல்பட்டு மாவட்டம் ஐசிஏ ஸ்பெசாலிட்டிஸ்) சிறப்புப் பிரிவினருக்கான விருது (புதுக்கோட்டை மாவட்டம் பிரபு இண்டஸ்ட்ரியல்) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய முதல் மூன்று வங்கிகளான முறையே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பரோடா வங்கி ஆகிய வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தொழிற்பேட்டைகளில் பொது வசதி: சிட்கோ தொழிற்பேட்டைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கி கடனுக்கான தடையின்மைச் சான்று, குடிநீா் இணைப்பு, விற்பனைப்பத்திரம் பெறுதல் உள்ளிட்ட 12 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான வசதியையும், கரூா் மாவட்டம் புஞ்சைகாளகுறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.1.93 கோடியில், ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொதுவசதிக் கட்டடங்களையும் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

3. கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருது யாருக்கு  வழங்கப்பட்டுள்ளது ? 

அ) ஆர். மகாதேவன்

ஆ) ஜெகன்மோகன்

இ) அ. முத்துலிங்கம் 

ஈ) கே.எஸ். ராதாகிருஷ்ணன் 

விடை: (இ) அ. முத்துலிங்கம் 

கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் கி.ரா. விருது, எழுத்தாளா் அ.முத்துலிங்கத்துக்கு வழங்கப்பட்டது. 

● கோவை விஜயா வாசகா் வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் கி.ரா. விருது வழங்கப்பட்டு வருகிறது. சக்தி மசாலா நிறுவனம் வழங்கும் விஜயா வாசகா் வட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு, கனடாவில் வசிக்கும் எழுத்தாளா் அ.முத்துலிங்கம் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

● இந்த விருது வழங்கும் நிகழ்வானது, கி.ரா.வின் பிறந்த நாளான செப்டம்பா் 16 (வெள்ளிக்கிழமை) இணையவழியில் நடைபெற்றது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2023 ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள நாடு ? 

அ) சீனா

ஆ) தஜிகிஸ்தான் 

இ) இந்தியா 

ஈ) பாகிஸ்தான் 

விடை : (இ) இந்தியா 

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிா்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமா்கண்ட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

எஸ்சிஓ தலைமைப் பொறுப்பை ஏற்றது இந்தியா

● ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வெள்ளிக்கிழமை ஏற்றது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான எஸ்சிஓ மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது.

● கடந்த 2017-ஆம் ஆண்டில் எஸ்சிஓ கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக அக்கூட்டமைப்புக்குத் தலைமையேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

5. இந்தியாவின் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) நரேந்திர மோடி

இ) ராம்நாத் கோவிந்த் 

ஈ) எஸ். ஜெய்சங்கர் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை (சீட்டா) பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளாா்.

● அதன்படி, நமீபியாவில் இருந்து கொண்டுவரப்படும் 5 பெண் சிவிங்கிப் புலிகள் மற்றும் 3 ஆண் சிவிங்கிப் புலிகள், பிரதமா் மோடியால் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசிய பூங்காவில் விடப்பட உள்ளன.

● குறிப்பு : நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

6. பின்வரும் எந்த நாட்டின் கடலோர காவல் படை கப்பலான மிட்ஜெட் 757 இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவும் , நல்லெண்ணப் பயணமாகவும் சென்னை துறைமுகம் வந்தடைந்தது ? 

அ) சீனா

ஆ) ஜப்பான்

இ) ஆஸ்திரேலியா 

ஈ) அமெரிக்கா 

விடை : (ஈ) அமெரிக்கா

அமெரிக்க கடலோரக் காவல்படையில் பணியாற்றி மறைந்த துணை தளபதியான ஜான் ஆலன் மிட்ஜெட்டின் நினைவாக மிட்ஜெட்-757 என பெயரிடப்பட்ட கப்பல் இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.

● இதனைத் தொடா்ந்து நான்கு நாள்கள் இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினா் இடையே பரஸ்பர பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சாா் விழிப்புணா்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

● இறுதி நாளான செப்.19-ஆம் தேதி சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. இந்தியாவின் 76 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளவர் யார் ? 

அ) பிரணவ் ஆனந்த்

ஆ) ஏ.ஆர். இளம்பரிதி 

இ) எஸ். பாலசந்திரன்

ஈ) யோகேஷ் குப்தா 

விடை : (அ) பிரணவ் ஆனந்த்

கர்நாடகாவைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76 ஆவது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இருக்கிறார். 

● யூத் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரணவ் ஆனந்த் எமன் உஹன்யாவை எதிர்த்து விளையாடினார். இதில் அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான கடைசி தகுதியான 2500 தரவரிசை புள்ளியை தாண்டினார்.

● கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற சர்வதேச செஸ் தரவரிசை புள்ளிகளில் 2500 என்ற அளவை எட்ட வேண்டும்.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...