Tuesday, September 20, 2022

Current Affairs 2022 - September 19 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                SEPTEMBER 19/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அடுத்த மாதம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் எத்தனை வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது ?

அ) 13
ஆ) 17
இ) 07
ஈ) 05

விடை : (அ) 13 

 ● அக்டோபர் மாதம் முதல் புதன்தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரை 11,333 இடங்களிலும், வியாழன்தோறும் பள்ளிகளிலும் கரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் போடப்பட உள்ளன. 

● இந்த முகாம்களில் கர்ப்பிணிகள், பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. நடப்பு நிதியாண்டில் ( 2022 - 2023 ) முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரிவாய் எத்தனை சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) 50%
ஆ) 46%
இ) 30%
ஈ) 28%

விடை : (இ) 30% 

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

● இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் 17-ஆம் தேதி வரையிலான காலம்வரை மொத்த நேரடி வரி வருவாய் ரூ.8,36,225 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம். பெருநிறுவன வரியாக ரூ.4.36 லட்சம் கோடியும், தனிநபா் வருமான வரியாக ரூ.3.98 லட்சம் கோடியும் வசூலானது.

● அதில் சுமாா் ரூ.1.35 லட்சம் கோடியானது ‘ரீஃபண்டாக’ திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. அந்தத் தொகை போக, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகர நேரடி வரி வருவாய் 23 சதவீதம் அதிகரித்து சுமாா் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலத்தில் முன்கூட்டிய வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்து ரூ.2.95 லட்சம் கோடியாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவனங்கள் ரூ.2.29 லட்சம் கோடியை முன்கூட்டிய வரியாக செலுத்தியுள்ளன.

● நேரடி வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்து வருவது, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதை வெளிக்காட்டுகிறது. மத்திய அரசின் நிலையான கொள்கைகளும், வரி செலுத்து நடைமுறைகளை எளிமைப்படுத்தியதும் வருவாய் அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்கள் ஆகும். வரி வசூல் நடைமுறையில் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படுவதால் வரி செலுத்தப்படாமல் தவிா்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

● வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களும் துரிதமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. தாக்கல் செய்யப்பட்ட படிவங்களில் செப்டம்பா் 17-ஆம் தேதிவரை 93 சதவீத படிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. ஜம்மு - காஷ்மீரின் பின்வரும் எந்த மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் ? 

அ)ராம்பன் 

ஆ) கதுவா 

இ) சம்பா 

ஈ) தோடா 

விடை : (அ) ராம்பன் 

● ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில்  பயங்கரவாதிகள் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

● அங்கிருந்து ஆயுதங்கள்,  வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

4. மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்திய மக்கள் சார்பில் பங்கேற்கவுள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு 

இ) அமித் ஷா

ஈ) எஸ். ஜெய்சங்கர் 

விடை : (ஆ) திரௌபதி முர்மு 

● பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8 ஆம் தேதி மறைந்தார்.

● அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய மக்கள் சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார். 

5. அண்மையில் நிறைவடைந்த இந்தியா - ஜப்பான் இடையிலான கடல்சார் போர்ப் பயிற்சி எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது ? 

அ) 2007

ஆ) 2012

இ) 2017

ஈ) 2020

விடை : (ஆ) 2012 

ஜப்பான்- இந்தியா இடையிலான ஆறாவது கடல்சார் பயிற்சி 2022, இந்தியக் கடற்படையால் நடத்தப்பட்ட ஜிமெக்ஸ் 22, வங்கக் கடலில் செப்டம்பர்17 அன்று வழக்கமான மரபுப்படி இரு தரப்பும் பரஸ்பரம் பிரியாவிடை கொடுத்து முடிவுக்கு வந்தது.

● ரியர் அட்மிரல் சஞ்சய் பல்லா தலைமையிலான இந்திய கடற்படைக் கப்பல்கள், கிழக்கு கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (ஜேஎம்எஸ்டிஎஃப்) ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் ரியர் அட்மிரல் ஹிராடா தோஷியுகி தலைமையிலான இசுமோ மற்றும் டகானாமி கப்பல்கள், ஒரு வார கால பயிற்சியில் பங்கேற்றன.

● ஜிமெக்ஸ் 22 இரண்டு கடற்படைகளும் இணைந்து மேற்கொண்ட சில முக்கிய பயிற்சிகளைக் கண்டது. இரு தரப்பும் மேம்பட்ட நிலை நீர்மூழ்கி எதிர்ப்புப் போர், ஆயுதத் துப்பாக்கிச் சூடு மற்றும் வான் பாதுகாப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இந்தப் பயிற்சியில் கப்பலில் செல்லும் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களும் பங்கேற்றன.

● 2012 இல் தொடங்கப்பட்ட ஜிமெக்ஸ் -இன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைத்தது

 III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. சென்னை ஓபன் டபிள்யுடிஏ (WTA) 250 டென்னிஸ் போட்டி 2022 ல் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) லிண்டா ஃபுருவிர்டோவா 

ஆ) கேப்ரியலா 

இ) ஸ்டெஃபானி 

ஈ) பிளிஸ்கோவா 

விடை : (அ) லிண்டா ஃபுருவிர்டோவா

● செக். குடியரசைச் சேர்ந்த 17 வயது லிண்டா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

● இவரின் முதல் WTA சாம்பியன் பட்டமாகும்.

● இவருக்கு கோப்பையும், ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.

● சாம்பியன் பட்டம் வழங்கியவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

7. சென்னை ஓபன் டபிள்யுடிஏ (WTA) 250 டென்னிஸ் போட்டி 2022 ல் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர்கள் யார் ? 

1) கேப்ரியலா 

2) மகதா லிஸேட 

3) ஸ்லாமிட்ஸ் 

4) ஸ்டெஃபானி 

அ) 1,2

ஆ) 1,3

இ) 2,4

ஈ) 1,4

விடை : (ஈ) 1,4 

● இரட்டையர் பிரிவில் கேப்ரியலா ( கனடா ) மற்றும் ஸ்டெஃபானி ( பிரேசில் ) சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 

● சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.9 லட்சம் ரொக்கப் பரிசும், 280 WTA புள்ளிகளும் வழங்கப்பட்டது. 






No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...