Thursday, September 15, 2022

Current Affairs 2022 - September 15 /2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                SEPTEMBER 15 / 2022 

( Swipe Down to Download pdf )

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கு தொடக்கி வைத்தார் ? 

அ) சென்னை 
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) சேலம் 

விடை : (ஆ) மதுரை 

● அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடக்கி வைத்தார். 

2. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த சமூகங்களைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்கும் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) நரிக்குறவர்கள் 
ஆ) காடு குருபா 
இ) குருவிக்காரர்கள் 
ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களான நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது. 

● நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்கத்தைச் சேர்ந்தவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

● எம்.பி.சி.ஆக இருந்த நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். 

● தற்போது அதன் விளைவாக நரிக்குறவர், குருவிக்காரர் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. தமிழகத்தில் காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி எனும் திட்டத்தை எங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் ? 

அ) சென்னை

ஆ) மதுரை

இ) சேலம்

ஈ) தேனி 

விடை : (அ) சென்னை 

● சிற்பி திட்டம் : 

¤ பள்ளிக் குழந்தைகளை நல்வழியில் செல்ல வகை செய்யும் சிற்பி திட்டத்தில் பங்கேற்கும் மாணவா்களுக்கு தனிச் சீருடை வழங்கப்பட உள்ளது.

¤ இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: சென்னை பெருநகர காவல் துறையின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கென பிரத்யேகமாக சிற்பி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது ரூ.4.25 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

¤ சென்னையில் 100 பள்ளிகளில் இருந்து தலா 50 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு நல்லொழுக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவா்களுக்கு அளிக்கப்படும். காவல் துறை அதிகாரிகளும், துறை சாா் நிபுணத்துவம் பெற்றவா்களும் பயிற்சி வகுப்புகளை நடத்துவா். இதற்கென பிரத்யேகமாக புத்தகம் வழங்கப்படும்.

¤ சத்தான உணவு: சிற்பி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 5,000 மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதில், மாணவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764. மாணவிகள் 2 ஆயிரத்து 236. மொத்தம் 5 ஆயிரம் போ். இந்தத் திட்டத்தின் நோக்கமாக சில பண்புநலன்கள் வடித்தெடுக்கப்பட்டுள்ளன.

¤ அதன்படி, சமத்துவ உணா்வு, மதச்சாா்பற்ற கண்ணோட்டம் மற்றும் விசாரணை மனப்பான்மையுடன் கூடிய தலைமைப் பண்புகளை

¤ வளா்த்தல், காவல் துறை எவ்வாறு சமூகத்துடன் இணைந்து செயல்படுகிறது என்பதை கவனிக்கச் செய்தல், வகுப்புவாதம், போதை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்துக்கு எதிராக மாணவா்களை உருவாக்குதல் ஆகியன திட்டத்தின் நோக்கங்களாகும். இந்தத் திட்டத்தில் இணையும் மாணவா்களுக்கு தனிச் சீருடை வழங்கப்படும்.

¤ பாட வேளையின் போது, முளைகட்டிய பயறு வகைகள், இனிப்பு கொழுக்கட்டை, பழங்கள் ஆகியன சிற்றுண்டிகளாக வழங்கப்படும்.

¤ கவாத்துப் பயிற்சி, போக்குவரத்து விதிகள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள், பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்தும் விளக்கப்படும். மேலும், மாணவ, மாணவியா்கள் சென்னையில் புகழ்பெற்ற எட்டு இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா்.

4. தமிழகத்தில் காவல் துறையைச் சேர்ந்த எத்தனை பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) 113

ஆ) 127

இ) 131

ஈ) 150 

விடை : (ஆ) 127 

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

● இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

● இந்த ஆண்டு, காவல் துறையில் முதல் நிலை காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் நிலை வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் வட்டார தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் என்று மொத்தம் 127 பேரின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. மத்திய அரசின் புதிய அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டர்னி ஜெனரல் ) நியமிக்கப்படவுள்ளவர் யார் ? 

அ) கே.கே. வேணுகோபால் 

ஆ) முகுல் ரோத்தகி 

இ) கோ. சங்க்கரன்

ஈ) எல். பாலமுருகன்

விடை : (ஆ) முகுல் ரோத்தகி 

● மூத்த வழக்குரைஞரான முகுல் ரோத்தகி மத்திய அட்டர்னி ஜெனரலாக இரண்டாவது முறையாக நியமிக்கப்படவுள்ளார். 

● முன்பு : கே.கே. வேணுகோபால் இந்த பதவியில் இருந்தார். 

● குறிப்பு : அட்டர்னி ஜெனரல் பதவிக் காலம் 3 ஆண்டுகளைக் கொண்டது.

6. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22 ஆவது மாநாடு எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) உஸ்பெகிஸ்தான்

ஆ) கிர்கிஸ்தான்

இ) இந்தியா

ஈ) பாகிஸ்தான் 

விடை : (அ) உஸ்பெகிஸ்தான்

● 22 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு.

● நடைபெறும் தேதி (ம) இடம் : செப் 15 ஆம் தேதி தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளது, சாமர் கண்ட் நகர், உஸ்பெகிஸ்தான். 

● உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

● மாநாட்டின் பார்வையாளர் நாடுகள் : ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா, கம்போடியா,நேபாளம், இலங்கை, துருக்கி, ஆர்ம்னியா, அஜர்பைஜான்.

● ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு : 

¤ தலைமையிடம் : பெய்ஜிங், சீனா

¤ உறுப்பு நாடுகள் (8)  : சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா (ம) பாகிஸ்தான். 

7. இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை சதவீதமாக பதிவாகியுள்ளது ? 

அ) 15.88%

ஆ) 12.41%

இ) 11.64%

ஈ) 33.13%

விடை : (ஆ) 12.41% 

8. மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கவும், இந்திய மக்கள் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் லண்டன் செல்ல உள்ளவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) ஜகதீப் தன்கர்

இ) திரௌபதி முர்மு 

ஈ) எஸ். ஜெய்சங்கர்

விடை : (இ) திரௌபதி முர்மு 

● மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி செப். 19 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள்

9. இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப்பில் இந்தியா மொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 31

ஆ) 13

இ) 25

ஈ) 9

விடை : (இ) 25 

● 25 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆம் இடம் பிடித்துள்ளது. 

● 25 பதக்கங்கள் : 3G, 8S, 14B 

IV. முக்கிய நிகழ்வுகள் 

10 ) International Day of Democracy 2022 

Ans : September 15

Theme (2022) The Importance of media freedom to democracy, peace & delivering on the SDG. 

Click here to Download Pdf 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...