Wednesday, September 14, 2022

Current Affairs 2022 - September 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                  SEPTEMBER 14 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளவர் ? 

அ) முனீஸ்வர் நாத் பண்டாரி 
ஆ) எம். துரைசாமி
இ) கோ. சங்க்கரன்
ஈ) ஞானசேகரன்

விடை : (ஆ) எம். துரைசாமி

முன்பு : முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்றார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. தேசிய அத்தியாவசிய மருந்து (என்எல்இஎம்) பட்டியல் 2022 ல் எத்தனை மருந்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் ? 

அ) 331
ஆ) 354
இ) 384
ஈ) 414

விடை : (இ) 384 

அனைத்துத் தரப்பினருக்கும் கட்டுப்படியான விலையில் தரமான மருந்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் (என்எல்இஎம்) 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
 
● இந்தப் பட்டியலில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பு), நோய்த் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட 34 புதிய மருந்துகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

● முந்தைய பட்டியலில் இருந்த முக்கியத்துவமற்ற 26 மருந்துகள்நீக்கப்பட்டுள்ளன. 27 சிகிச்சைப் பிரிவுகளுடன் இந்த மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
● தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல் 1996-ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் கடைசியாக 2015-ஆம் ஆண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. மீண்டும் இந்தப் பட்டியலை மறுஆய்வு செய்ய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 2018-ஆம் ஆண்டு மருந்துகளுக்கான சுதந்திரமான தேசிய நிலைக் குழுவை (எஸ்என்சிஎம்) அமைத்தது.

●  பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொடர்புடையவர்களுடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்தக் குழு, பட்டியலை கடந்த வாரம் சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022- ஆண்டு தேசியப் பட்டியலை வெளியிட்டார். 

● பட்டியல் : பெண்டாமுஸ்டைன் ஹைட்ரோகுளோரைடு, இரினோடெகன் ஹெச்சிஐ டிரைஹைட்ரúட், லெனலிடோமைடு, லியூப்ரோலைடு அசிடேட் ஆகிய நான்கு முக்கிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும், ஐவர்மெக்டின், முபிரோசின், மெரோபெனெம் போன்ற தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகளாவிய நோய்த் தடுப்புத் திட்டத்தில் (ரோட்டா வைரஸ் தடுப்பூசி) தடுப்பூசிகளும் இந்தப் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

2) இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. 

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2 
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

அங்கீகரிக்கப்படாத மேலும் 86 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் பதிவை இழந்த கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக அதிகரித்துள்ளது.

● தோ்தல் ஜனநாயகத்தின் தூய்மையைக் காக்கவும், பெரும் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில், அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

● தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அனூப் சந்திர பாண்டே ஆகியோா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்ப்பட்டுள்ளது.

● இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகளை நேரில் சென்று பதிவு செய்யப்பட்ட முகவரி உள்ளிட்ட தகவல்களை சரிபாா்க்கும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, குறிப்பிட்ட முகவரியில் அந்த அரசியல் கட்சிகள் செயல்படாதது தெரியவந்ததன் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

● மேலும், பிகாா், தில்லி, கா்நாடகம், மகாராஷ்டிரம், தமிழகம், தெலங்கானா, உத்தர பிரதேச மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், உடனடி சரிசெய்தல் நடவடிக்கையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத 253 கட்சிகளின் பதிவு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

● இதுபோல கடந்த மே 25-ஆம் தேதி 87 அரசியல் கட்சிகளின் பதிவும், ஜூன் 20-ஆம் தேதி 111 அரசியல் கட்சிகளின் பதிவும் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த மே 25-ஆம் தேதிமுதல் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உள்ளான கட்சிகளின் எண்ணிக்கை 537-ஆக உயா்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் இருந்து 86 அரசியல் கட்சிகளும் உடனடியாக நீக்கப்படும். 1968 தோ்தல் சின்ன நடைமுறையின் கீழான பலன்களை இந்தக் கட்சிகள் இனி பெற முடியாது. அதுபோல, செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட 253 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும், எந்தவித பலனும் பெற முடியாது.

● நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள் நிவாரணம் பெற கட்சி தொடா்ந்து செயல்படுவதற்கான ஆதாரங்கள், ஆண்டு வாரியான தணிக்கை ஆவணங்கள், பங்களிப்பு அறிக்கை, தோ்தல் செலவின அறிக்கை, அலுவலக நிா்வாகிகள் விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி பரிவா்த்தனை தொடா்பான விவரங்கள் ஆகியவற்றுடன் 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அல்லது தோ்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 கட்சிகள் : 

● தமிழகத்தில், பதிவு செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் வரை தோ்தலில் போட்டியிடாத 13 கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

4. இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா (ம) தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து எங்கு செமிகண்டக்டர் தொழிற்சாலை (ம) மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்பு பிரிவை நிறுவவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா 

இ) ராஜஸ்தான்

ஈ) குஜராத் 

விடை : (ஈ) குஜராத் 

இந்திய தொழில் நிறுவனமான வேதாந்தா மற்றும் தைவானின் மின்னணு பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டா் தொழிற்சாலை மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்புப் பிரிவை நிறுவ மாநில அரசுடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

● குஜராத் தலைநகா் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்வில் மாநில முதல்வா் பூபேந்திர படேல், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோா் கலந்துகொண்டனா். வேதாந்தா-ஃபாக்ஸ்கான் இணைந்து மேற்கொள்ளும் ரூ. 1.54 லட்சம் கோடி முதலீட்டில், சுமாா் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● காா் உள்ளிட்ட வாகனங்கள், கைப்பேசிகள், பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டா் சிப்-கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, இந்த சிப்களுக்காக இறக்குமதியை இந்தியா சாா்ந்துள்ளது. உலகில் 8 சதவீத செமிகண்டக்டா் சிப்களை தைவான், சீனா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் உற்பத்தி செய்கின்றன. இத்தகைய மூதலீட்டின் மூலம் சிப்களை தயாரிக்கும் மையமாக இந்தியா திகழும் என்பதால் செமிகண்டக்டா் சிப்களுக்கு பிற நாடுகளைச் சாா்ந்திருப்பதற்கான தேவை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

● மாநில செமிகண்டக்டா் கொள்கை: செமிகண்டக்டா் தயாரிப்புக்கான தொழில் சூழலை உருவாக்க, அதற்கென்று தனிக் கொள்கை ஒன்றை கொண்டுள்ள மாநிலம் குஜராத் மட்டுமே. செமிகண்டக்டா் தொழிற்சாலைகளுக்கு என்று மாநில அரசு, குஜராத் செமிகண்டக்டா் கொள்கை 2022-ஐ வெளியிட்டுள்ளது. இக்கொள்கையின் மூலம் நிதி மற்றும் நிதி சாரா உதவிகள் வழங்கப்படும் எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

● ரூ. 1.54 லட்சம் கோடியில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில் ரூ. 95,000 கோடி மின்னணு சாதனங்களின் திரைகள் தயாரிப்புப் பிரிவுக்கும், ரூ. 60,000 கோடி செமிகண்டக்டா் தயாரிப்புப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவப்படும் தொழிற்சாலைக்கு இந்திய செமிகண்டக்டா் திட்டத்தின் கீழ் மத்திய அரசும் பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

5. கென்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளவர் யார் ? 

அ) வில்லியம் ரூட்டோ

ஆ) ரய்லா ஒடிங்கா

இ) நூல் சுல்தான்

ஈ) வில்லியம் ஜேம்ஸ்

விடை : (அ) வில்லியம் ரூட்டோ 

6. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் எந்த ஆண்டு விண்வெளிக்கு செலுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் ? 

அ) 2023 

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (ஆ) 2024 

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்கு செலுத்தப்படும் என்றாா் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.

● இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: ககன்யான் விண்கலத்தை நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா ஆண்டான 2022-இலேயே விண்வெளிக்கு செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்தியாவிலும் ரஷியாவிலும் பயிற்சி பெற்று வந்த விண்வெளி வீரா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட நோ்ந்ததால், இந்தத் திட்டம் தாமதமாகிறது. வரும் 2024-இல் ககன்யான் விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்படும்.

● இதையொட்டி முதலாவது சோதனை விண்கலம் நிகழாண்டு விண்வெளிக்குச் செலுத்தப்படவுள்ளது. அதனை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள ‘வியோம் மித்ரா’ என்ற பெண் உருவம் கொண்ட ரோபோ கண்காணிக்கும்.

● ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4 விமானிகளை இந்திய விமானப் படை அடையாளம் கண்டுள்ளது. அவா்களுக்கு ரஷியாவில் அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டது. விண்வெளியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் சோதனை விண்கலத்தின் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு, 2024-இல் புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு இரண்டு விண்வெளி வீரா்களை இஸ்ரோ அனுப்பிவைக்கும் என்றாா் ஜிதேந்திர சிங்.

● கடந்த 2018 சுதந்திர தின உரையின்போது விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ரூ.10,000 கோடி மதிப்பிலான ககன்யான் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்தாா். நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...