Thursday, September 22, 2022

Current Affairs 2022 - September 22/ 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   SEPTEMBER 22 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? 

அ) கீழடி
ஆ) மணலூர்
இ) ஆதிச்சநல்லூர்
ஈ) கொந்தகை 

விடை : (அ) கீழடி 

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

● கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல்துறை சாா்பில் பிப்.12-ஆம் தேதி முதல் 8-ஆம்கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. 

● ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண் மனித தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதில் அணியும் அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்பு தந்தத்தாலான மணி கண்டெடுக்கப்பட்டது.

● இந்நிலையில், தற்போது தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த துருப்பிடித்த நிலையில் இரு துண்டுகளாக இரும்புக் கத்தி, ஆண்டி மணியால் ஆன ஒப்பனைக்கருவி, செப்பு தொங்கட்டான் உள்ளிட்ட பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள் பகண்டெடுக்கப்பட்டன.


2. வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வள்ளலார் - 200 என்ற இலச்சினை, தபால் உறையை வெளியிட்டு , ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைக்க உள்ளவர் யார் ? 

அ) ஆர்.என்.ரவி

ஆ) மு.க.ஸ்டாலின்

இ) மா.சுப்பிரமணியன் 

ஈ) சேகர் பாபு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வரும் அக்.5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள விழாவில் ‘வள்ளலாா் - 200’” என்ற இலச்சினை, தபால் உறையை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா்.

3. தமிழகம் முழுவதும் H1N1 இன்ஃளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எத்தனை நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 313

ஆ) 329

இ) 358

ஈ) 388

விடை : (ஈ) 388 

● அறிவிப்பு : தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

● தமிழகத்தில் கரோனாவுடன் , டெங்கு, இன்ஃளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

● மேலும் தமிழகம் முழுவதும் H1N1 இன்ஃளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 388 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


4. இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) ராஜஸ்தான்

ஈ) மணிப்பூர்

விடை : (ஆ) தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதல் கடற்பசு பாதுகாப்பகம், தமிழக கடற்கரைப் பகுதியில் (பாக்.விரிகுடா) 448 சதுர கி.மீட்டரில் அமையவுள்ளது.

● இதுதொடா்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: தமிழக கடலோரப் பகுதிகளில் அழிந்துவரும் நிலையிலுள்ள, மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, மன்னாா்வளைகுடா, பாக். விரிகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

● இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 448 சதுர கி.மீ. பரப்பில் தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அறிவித்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.

● கடற்பசுவின் சிறப்பு: உலகின் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிகளான கடற்பசுக்கள், கடல் புற்களை உண்டு வளா்ந்து வருகின்றன. கடற்பசு, இனங்களை பாதுகாப்பதனால், கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடல் புற்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வளிமண்டல காா்பனை அதிகளவில் நிலைப்படுத்தவும் உதவி செய்கிறது. கடல்புல் படுகைகள் வணிகரீதியாக மதிப்புமிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும், உணவளிக்கும் இடமாகவும் உள்ளது.

● பாக். விரிகுடாவையொட்டிய கரையோர மக்கள் கடற்பசுக்களை பாதுகாப்பதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு, பலமுறை மீன்பிடி வலையில் சிக்கிய கடற்பசுக்களை மீனவா்கள் வெற்றிகரமாக கடலில் விட்டுள்ளனா். இதைப் பாராட்டி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அவா்களுக்கு அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

● கடற்பசுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகின்றன. இப்போது சுமாா் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டின் கடற்கரையில் காணப்படுகின்றன. எனவே, கடற்பசுக்கள், அவற்றின் வாழ்விடத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த நோக்கங்களை நிறைவேற்ற, பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைத்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

● கட்டுப்பாடுகள் இல்லை: தமிழக அரசின் அறிவிக்கை மூலமாக எந்தவொரு புதிய கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்படப் போவதில்லை. கடற்பசு பாதுகாப்பகம் என்பது இந்தியாவிலேயே முதன்முதலாக அமைக்கப்படும் பாதுகாப்பகமாகும். இதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள வன உயிரின பாதுகாவலா்கள் அனைவரும் பெருமை கொள்வா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி ) நிகழ் நிதியாண்டில் எத்தனை சதவீதமாக குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பிட்டுள்ளது ? 

அ) 4%

ஆ) 6%

இ) 7%

ஈ) 9%

விடை : (இ) 7% 

ஏற்கனவே ஜிடிபி 7.2% பதிவாகும் என கணித்த நிலையில் பணவீக்கம், பண நெருக்கடி காரணமாக நிகழ் நிதியாண்டில் ஜிடிபி 7% குறையும் என தெரிவித்துள்ளது. 

6. கூற்று : தேசிய சரக்கு கையாளுகை ( லாஜிஸ்டிக்ஸ் ) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காரணம் : சரக்குப் போக்குவரத்துச் செலவை குறைக்கும் நோக்கத்துடன்.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

பிரதமா் நரேந்திர மோடியால் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

● சரக்குப் போக்குவரத்துச் செலவை குறைப்பதுடன், இத்துறையில் இந்தியாவின் செயல்பாட்டை உலக அளவில் மேம்படுத்துவதே கொள்கையின் பிரதான நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

● முக்கியத்துவம் வாய்ந்த இக்கொள்கையை தனது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை (செப்.17) பிரதமா் மோடி வெளியிட்டிருந்தாா். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13-14 சதவீதம் என்ற அளவில் உள்ள சரக்கு கையாளுகை செலவை விரைவில் ஓரிலக்கத்துக்கு குறைப்பதே இலக்கு என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

● இந்நிலையில், பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சரக்கு கையாளுகை கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

● கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சா்வதேச அளவுகோல்களுடன் ஒப்பிடும் வகையில் நாட்டின் சரக்கு கையாளுகை செலவை குறைக்க மேற்கண்ட கொள்கையில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

● 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி சா்வதேச சரக்கு கையாளுகை செயல்பாட்டு தரக் குறியீட்டில் 44-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவை முன்னேற்றவும், இத்துறையில் தரவுகள் சாா்ந்த உறுதியான ஆதரவு அமைப்புமுறையை ஏற்படுத்தவும் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

● அமலாக்கம் கண்காணிப்பு: பிரதமரின் தேசிய செயல்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட அதிகாரமிக்க செயலா்கள் குழுவானது, இக்கொள்கை அமலாக்கத்தைக் கண்காணிக்கும். சரக்கு கையாளுகை நடைமுறைகள் தொடா்பான அளவுகோல்கள், ஒழுங்குமுறை, மின்னணுரீதியிலான மேம்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க செயலா்கள் குழு சாா்பில் பணிகள் மேம்பாட்டுக் குழு உருவாக்கப்படும்.

● கூடுதல் சேமிப்புக் கிடங்குகள், தரநிலைகள் ஊக்குவிப்பு, மின்னணுமயமாக்கம், தானியங்கி முறைகள், ஒருங்கிணைந்த சரக்கு கையாளுகை இணைப்புத் தளம் என இத்துறையில் சிறந்த அமைப்புமுறைகளை உருவாக்க கவனம் செலுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● ரூ.19,500 கோடியில் சூரிய மின்தகடுகள் திட்டம்: உயா்திறன் வாய்ந்த சூரிய மின்தகடுகள் உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்கீழ் ரூ.19,500 கோடி செலவிலான உற்பத்திசாா் ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

● செமிகண்டக்டா்கள் உற்பத்தி திட்டத்தில் மாற்றங்கள்: நாட்டில் செமிகண்டக்டா்கள் (குறைகடத்திகள்), மின்னணு திரைகள் ஆகியவை உற்பத்திக்கான நிதியுதவி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

7. இந்தியாவில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக பின்வரும் யார் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது ? 

அ) வி.கே. பால்

ஆ) நிதின் குப்தா

இ) ராஜேஷ் பூஷண்

ஈ) எஸ். அபர்ணா

விடை : (அ) வி.கே. பால் 

● மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவின் பரிந்துரையின் பேரில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

● இந்த குழு நிதி ஆயோக் தலைவர் வி.கே.பால் தலைமையில் 4 உறுப்பினர்களை கொண்டுள்ளது. 

8. இந்தியாவின் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை தொடக்கி வைக்கவுள்ளவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) அமித் ஷா

ஈ) எஸ்.ஜெய்சங்கர் 

விடை : (ஆ) நரேந்திர மோடி 

● குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெறவுள்ள இரு நாட்கள் மாநாட்டை பிரதமர் மோடி நாளை செப். 23 காணொலி மூலம் தொடக்கி வைக்கவுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள்

9.ஐரோப்பிய கண்டத்திலுள்ள நார்த் சேனல் நீரிணை கடந்து வரலாறு படைத்துள்ள இந்தியாவின் முதல் நீச்சல் ரிலே அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் ? 

அ) அர்ஜூன் குப்தா

ஆ) எல்விஸ் அலி ஹஸாரிகா 

இ) ரிமோ சாஹா 

ஈ) ஆ (ம) இ

விடை : (ஈ) அ (ம) இ

● இந்தியாவைச் சோ்ந்த நீண்டதூர நீச்சல் வீரா்களான எல்விஸ் அலி ஹஸாரிகா, ரிமோ சாஹா ஆகியோா் ரிலே நீச்சல் மூலமாக நாா்த் சேனல் நீரிணையை செவ்வாய்க்கிழமை கடந்து வரலாறு படைத்தனர். 

● ஐரோப்பிய கண்டத்திலுள்ள அந்த நீரிணை பகுதியை நீந்திக் கடந்த, இந்தியா மற்றும் ஆசியாவைச் சோ்ந்த முதல் ரிலே அணி என்ற பெருமையையும், சாதனையையும் அவா்கள் பெற்றுள்ளனா். இதில் எல்விஸ் அஸ்ஸாமையும், ரிமோ மேற்கு வங்கத்தையும் சோ்ந்தவா்களாவா்.

● நாா்த் சேனலானது, வடக்கு அயா்லாந்தையும், ஸ்காட்லாந்தையும் இணைக்கும் 42 கி.மீ. தூரமுள்ள நீரிணை பகுதியாகும். இதை அவா்கள் 14 மணி நேரம் 38 நிமிஷங்களில் கடந்துள்ளனா். 

● வடக்கு அயா்லாந்தின் டோனாகாடி பகுதியில் தொடங்கி, ஸ்காட்லாந்திலுள்ள போா்டேப்ட்ரிக் என்ற இடத்தில் இந்த ரிலேவை இருவரும் நிறைவு செய்துள்ளனா். 

● இந்த நீச்சலின்போது வழிநெடுக இருக்கும் ஜெல்லி ரக மீன்கள் உள்பட, பல்வேறு சவால்களை இருவரும் சந்தித்துள்ளனா்."

 

 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...