Wednesday, September 28, 2022

Current Affairs 2022 - September 28 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                        GK SHANKAR 
                 SEPTEMBER 28 / 2022

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது --------- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) 59
ஆ) 60
இ) 61
ஈ) 62

விடை : (ஆ) 60 

பகுதிநேர ஆசிரியா்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக உயா்த்தி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

● இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமாா் 16 ஆயிரம் ஆசிரியா்களும், பிற பணியாளா்களும் 60 வயது வரை தொடா்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டாா்.

● அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுநா்கள், பாதுகாவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிகழாண்டு செப்டம்பா் மாதம் முதல் ஒய்வு பெறும் வயது 58-இல் இருந்து 60 ஆக உயா்த்தி ஆணையிடப்படுகிறது. 

● இதுதொடா்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மற்றும் வட்டார வள மையங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியா்கள் கையாளுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

2. தமிழகத்தில் திருச்சி, மதுரை, சிதம்பரத்தில் 3 இடங்கலில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தவர் யார் ? 

 அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) முனீஷ்வர் நாத் பண்டாரி

ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (ஆ) மு.க.ஸ்டாலின் 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. 2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது ? 

அ) ஆஷா பரேக்

ஆ) கமல் ஹாசன் 

இ) ஸ்ரீ தேவி

ஈ) சிரஞ்சிவி 

விடை : (அ) ஆஷா பரேக் 

● 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் நடைபெறவுள்ளது. 

● அதில் ஆஷாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. 

● அறிவிப்பு : மத்திய செய்தி (ம) ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர். 

● தாதா சாகேப் விருது : இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாக இவ்விருது கருதப்படுகிறது.

● குறிப்பு : ஆஷா அவர்களுக்கு 1992 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

4. இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) 5 ஆவது ஆண்டு கூட்டம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் எங்கு நடைபெற்றது ? 

அ) மும்பை

ஆ) சென்னை

இ) டெல்லி

ஈ) கொல்கத்தா 

விடை: (இ) டெல்லி 

இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) 5-ஆவது ஆண்டு கூட்டம் தில்லி மானெக்ஷா மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்து பேசியதாவது:

● நாட்டில் 2022-23 ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தொழில்துறைக்கான மூலதன கொள்முதல் 68 சதவீதம் ஒதுக்கப்பட்டது. அதில் 25 சதவீதம் தனியார் துறையினருக்கு ஒதுக்கப்பட்டது. 

● இதன்படி உள்நாட்டு ராணுவப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் உபகரணங்கள் வாங்க நிகழாண்டு நிதியில் ரூ.85,000 கோடி ஒதுக்கப்பட்டது.
மேலும் கூடுதலாக, பாதுகாப்புத் துறையில் தனியாருக்கு ஆய்வு மற்றும் வளர்ச்சி, புதிய தொழில் முனைவு பணிகள் ஆகியவற்றுக்கும் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

● இது இந்தியாவில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கும். உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக சுமார் 10,000 சிறு குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் இணைந்துள்ளன.

● தற்போது நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தின் 2021-ஆம் ஆண்டு அறிக்கையின்படி , உலக ராணுவச் செலவு 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது. இதை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

● தமிழகம், உத்தர பிரதேச மாநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

● தற்சார்பு இந்தியா நோக்கிலும் இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும் அமைக்கப்பட்டுள்ள இந்த ராணுவ வழித்தடங்களில் அதிக முதலீடு செய்து பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.

5. உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நீதிபதி தீபாங்கர் தத்தா பின்வரும் எந்த உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார் ? 

அ) சென்னை

ஆ) கேரளா

இ) கொல்கத்தா

ஈ) மும்பை 

விடை : (ஈ) மும்பை 

● உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான கொலீஜியம் கூட்டம் இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளன.

● தற்போது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியோடு சேர்த்து 29 நீதிபதிகள் உள்ளன. 

6. பின்வரும் எந்த மாநிலத்தில் அலுவலக பணி நேரத்தில் கைப்பேசியைப் பயன்படுத்த மின்சார பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கேரளா 

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா 

விடை : (அ) ஆந்திர பிரதேசம் 

● அரசு ஊழியர்களுக்கு இது போன்ற தடை விதிப்பது இதுவே முதல்முறையாகும். 

7. குறுகிய தொலைவு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையை DRDO வெற்றிகரமாக எங்கு பரிசோதனை செய்தது? 

அ) மும்பை

ஆ) கொல்கத்தா 

இ) ஒடிஸா 

ஈ) திருச்சூர் 

விடை: (இ) ஒடிஸா 

குறுகிய தொலைவு வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.

● இந்த ஏவுகணையை ஹைதராபாதைச் சோ்ந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. அந்த மையம் டிஆா்டிஓ-வின் கீழ் இயங்கி வருகிறது. ஏவுகணை பரிசோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஏவுகணையானது இருமுறை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. 

● ஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

● பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் இடம்பெற்றுள்ளன. அக்கருவிகள் அனைத்தும் பரிசோதனையின்போது வெற்றிகரமாகச் செயல்பட்டன. வான்வெளியில் குறைந்த தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை பயன்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

● ஏவுகணை பரிசோதனைக்காக டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தாா்.

8. எதிர்காலத்தில் பூமியின் மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தெரிந்து கொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின் மீது செயற்கைக்கோள் ஒன்றை பின்வரும் எந்த அமைப்பு அண்மையில் மோத செய்தது ? 

அ) நாசா 

ஆ) இஸ்ரோ 

இ) ஸ்பேஸ் எக்ஸ் 

ஈ) சிஎஸ்ஏ 

விடை : (அ) நாசா 

எதிா்காலத்தில் பூமியின் மீது விண்கற்கள் மோதி பேரழிவை ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, அவற்றின் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக அத்தகைய விண்கல் ஒன்றின் மீது செயற்கைக்கோள் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செவ்வாய்க்கிழமை மோதச் செய்தது.

● பூமியில் மிகப் பெரிய விண்கற்கள் மோதி மிகப் பெரிய அழிவை ஏற்படுவத்துவதற்கான அபாயத்தை தவிா்ப்பதற்காக நாசா விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

● அதன் ஒரு பகுதியாக, பூமியை நோக்கி வரக்கூடிய விண்கற்களை திசைமாற்றுவதற்கான வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் தேடி வருகின்றனா்.

● இந்த நிலையில், ஒரு பொருளை விண்கல்லின் மீது பலமாக மோதச் செய்வதன் மூலம் அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றியமைக்க முடியுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, ‘தி டபுள் ஆஸ்டிராய்ட் ரிடைரக்ஷன் டெஸ்ட்’ (டாா்ட்) என்ற சோதனையை நாசா மேற்கொண்டது.

● அந்த சோதனை திட்டத்தின் கீழ், 160 மீட்டா் விட்டம் கொண்ட டிமாா்ஃபோஸ் என்ற விண்கல் மீது செயற்கைக்கோளை மோதச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

● அந்த விண்கல், டிடிமோஸ் என்ற 780 மீட்டா் விட்டம் கொண்ட மிகப் பெரிய விண்கல்லுக்கு நிலவாக சுற்றிவருகிறது.

● இந்த நிலையில், டிமாா்ஃபோஸ் மீது மோதுவதற்காக நாசா அனுப்பிய செயற்கைக்கோள் 10 மாதங்களுக்குப் பிறகு அந்த விண்கல் மீது செவ்வாய்க்கிழமை மோதிச் சிதறியது.

● இந்த மோதலையும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட மாற்றத்தையும் ஆய்வு செய்வதற்காக, இத்தாலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த எல்ஐசிஐஏ கியூப் செயற்கைக்கோள், டாா்ட் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அது, டாா்ட்டிலிருந்து கடந்த 11-ஆம் தேதி தனியாகப் பிரிந்துஅதனை பின்தொடா்ந்தது.

● டிமாா்ஃபோஸ் விண்கலம் மீது டாா்ட் செயற்கைக்கோள் மோதுவதையும் அதனால் எழுந்த தூசி மண்டலத்தின் தன்மையையும் எல்ஐசிஐஏ கியூப் செயற்கோள் பதிவு செய்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வருகிறது.

● இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, குறிப்பிட்ட விண்கல்லைக் குறிவைத்து, அதன் மீது வேண்டுமென்றே மோதச் செய்து, அதன் பாதையை மாற்றியமைக்கும் திறன் நாசாவுக்கு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

● இது குரித்து நாசா நிா்வாக அதிகாரி பில் நெல்சன் கூறுகையில், ‘பூமிப் பந்து பாதுகாப்பு தொடா்பான ஆய்வில் இதுவரை இல்லாத முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை டாா்ட் சோதனை கண்டுள்ளது. இது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் சோதனை திட்டம்’ என்றாா்.

● நாா்ட் செயற்கைக்கோள் மோதலைத் தொடா்ந்து, டிடிமோஸை டிமாா்ஃபோஸ் விண்கலம் சுற்றி வரும் வட்டப்பாதையில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, சுற்றும் வேகம் எவ்வளவு குறைந்துள்ளது என்பது குறித்து இன்னும் சில தினங்களுக்குப் பிறகுதான் உறுதியாகத் தெரிய வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

III. முக்கிய நிகழ்வுகள் 

9. World Rabies Day 2022 

Ans : September 28

Theme (2022) : Rabies: One Health, zero Deaths. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...