Tuesday, September 27, 2022

Current Affairs 2022 - September 27 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   SEPTEMBER 27 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் இணையவழி விளையாட்டுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக பின்வரும் யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது ? 

அ) கே. சந்துரு 
ஆ) முனீஷ்வர் நாத் பண்டாரி 
இ) எஸ். சண்முகம் 
ஈ) எல். முத்துசாமி 

விடை: (அ) கே. சந்துரு 

● தமிழகத்தில் இணையவழி விளையாட்டுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

● இக்குழு கடந்த ஜூன் 27 இல் முதல்வரிடம் அறிக்கை அளித்தது. 

● தற்போது இணையவழி விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பான அவசரச் சட்டத்துக்கு தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

● இந்த சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கடந்த ஓராண்டில் மட்டும் எத்தனை லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை அமைசசர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார் ? 

அ) 3.50 லட்சம்
ஆ) 4.92 லட்சம்
இ) 5.15 லட்சம்
ஈ) 5.94 லட்சம் 

விடை : (ஆ) 4.92 லட்சம்

● மேலும் நிகழ் நிதியாண்டில் ஓய்வூதியத்துக்கென ரூ.4,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஓபிஎஸ்கே மையங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் காவல் துறை தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவை என்று முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது ? 

அ) செப்டம்பர் 27
ஆ) செப்டம்பர் 28
இ) செப்டம்பர் 29
ஈ) செப்டம்பர் 30 

விடை : (ஆ) செப்டம்பர் 28 

கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விண்ணப்பதாரா்கள் காவல் துறையின் தடையில்லாச் சான்று (பிசிசி) பெறுவதற்கு இனி அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

● விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல் துறையின் தடையில்லாச் சான்று கட்டாயமாகும். ஆனால், இந்தத் தடையில்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூா் போலீஸாா் அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தடையில்லாச் சான்றை விரைந்து பெறும் வகையில் புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

● இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

● கடவுச்சீட்டு விநியோகத்துக்கு அவசியமான காவல் துறையின் தடையில்லாச் சான்றுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து இணையவழி தபால்நிலைய கடவுச்சீட்டு சேவை (பிஓபிஎஸ்கே) மையங்களில் காவல் துறை தடையில்லாச் சான்றுக்கு விண்ணப்பிப்பதற்கான சேவையையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

● இந்தச் சேவையை புதன்கிழமை (செப். 28) முதல் விண்ணப்பதாரா்கள் பெற முடியும். இதில், அந்தத் தடையில்லாச் சான்றுக்கு போலீஸ் ஆய்வுக்கான நாளையும் தெரிவு செய்யும் வசதியும் சோ்க்கப்பட்டுள்ளது.

● இந்தப் புதிய வசதி வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்ல விரும்புபவா்களுக்கு மட்டுமின்றி, கல்வி, நீண்ட கால நுழைவு அனுமதி (விசா), குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பிப்பவா்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் இறுதிசடங்கில் இந்திய மக்கள் சார்பில் பங்கேற்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) ராம்நாத் கோவிந்த்

இ) எஸ். ஜெய்சங்கர்

ஈ) நரேந்திர மோடி

விடை : (ஈ) நரேந்திர மோடி 

● ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே கடந்த ஜூலை 8 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

● அவரது இறுதி சடங்கு செப்டம்பர் 27 ஆம் தேதி டோக்கியோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது 

● இந்த இறுதிசடங்கில் இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

● குறிப்பு : இந்திய அரசு சார்பில் 2021 ஆம் ஆண்டு ஷின்ஸோ அபேவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. 

5. இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) மரியோ டிராகி 

ஆ) ஜியார்ஜியா மெலோனி 

இ) ஏன்ஜலின் மரியா 

ஈ) மெலோனி ஷிபா 

விடை : (ஆ) ஜியார்ஜியா மெலோனி

● இத்தாலியின் சகோதரர்கள் கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. சான்டியாகோ ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிராண்டன் நகாஷிமா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ?

அ) அமொிக்கா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) ஆஸ்திரேலியா 

விடை : (அ) அமொிக்கா 

● இந்த வெற்றி மூலம் ஏடிபி தரவரிசையில் 69 ஆம் இடத்தில் இருந்து 48 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

7. 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் பின்வரும் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) ராஜஸ்தான் 

ஆ) குஜராத்

இ) தமிழ்நாடு

ஈ) மணிப்பூர் 

விடை: (ஆ) குஜராத் 

36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) 7 ஆண்டுகளுக்கு பின் குஜராத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வமாக தொடங்குகிறது.

● இந்தியன் ஒலிம்பிக்ஸ் என அழைக்கப்படும் இப் போட்டிகள் முதன்முறையாக குஜராத்தில் நடைபெறுகிறது. 

● கடந்த 2020-இல் கோவாவில் நடைபெறவிருந்த போட்டிகள் கரோனாவில் ஒத்தி வைக்கப்பட்டது.

● அகமதாபாத், காந்தி நகா், சூரத், பரோடா, ராஜ்கோட், பவ்நகா் உள்ளிட்ட 6 நகரங்களிலும், சைக்கிளிங் போட்டி புது தில்லியிலும் நடைபெறுகின்றன. 

● ஒருங்கிணைந்த இந்தியாவில் முதன்முறையாக லாகூரில் 1924-ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகள் நடைபெற்றன. 1938 வரை இந்திய ஒலிம்பிக் போட்டி என அழைக்கப்பட்டது.

● குஜராத் தேசியப் போட்டிகளில் 7,000 வீரா், வீராங்கனைகள் 36 பிரிவுகளில் பதக்கங்களுக்காக மோதுகின்றனா். கோ-கோ, மல்லா் கம்பம், யோகாசனம் முதன்முறையாக இடம் பெறுகின்றன.

● கடைசியாக 2015-இல் கேரளத்தில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் சா்வீஸஸ் 159 பதக்கங்களுடன் முதலிடத்தையும், கேரளம், ஹரியாணா இரண்டு, மூன்றாம் இடத்தையும் பெற்றன. கேரளத்தின் சாஜன் பிரகாஷ் 6 தங்கம், 2 வெள்ளியுடன் அதிக பதக்கங்களை வென்றிருந்தாா். வரும் அக்டோபா் 12-ஆம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன.

IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Tourism Day 2022

Ans : September 27

Theme (2022) : Rethink Tourism 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...