Monday, September 26, 2022

Current Affairs 2022 - September 26 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                  SEPTEMBER 26 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. 3 ஆவது பன்னாட்டு மனித நேய சமூக நீதி மாநாடு பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) சென்னை
ஆ) கனடா
இ) காமாபியா 
ஈ) நார்வே 

விடை : (ஆ) கனடா 

● பெரியார் பன்னாட்டு அமைப்பு,  அமெரிக்கா (ம) கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை சார்பில் 3 ஆவது பன்னாட்டு மனித நேய சமூக நீதி மாநாடு கனடாவில் நடைபெற்றது. 

● மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரை ஆற்றினார்.

● திராவட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனித நேயமும் சமூக நீதியும் தான் என்று கூறினார். 

2. தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 90 லட்சமாவது பயனாளியை நேரில் சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கியவர் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன்
இ) ஆர்.என். ரவி
ஈ) தங்கம் தென்னரசு 

விடை : (ஆ) மா. சுப்பிரமணியன் 

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 90 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் காலனியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் 90 லட்சமாவது பயனாளியை அவா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மருந்துப் பெட்டகத்தை வழங்கினாா்.

● கடந்த 2021-ஆம் ஆண்டு ஆக. 5-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வா் தொடக்கி வைத்தாா். 

● ஒட்டுமொத்தமாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 74 சதவீத பொதுமக்கள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறாா்கள்.

● குறிப்பு : சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், நோய் ஆதரவு சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறுநீரக பாதிப்பினால் டயாலிசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் பின்வரும் எந்த விமான நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்படவுள்ளது ? 

அ) சண்டீகர் விமான நிலையம் 

ஆ) கொச்சி விமான நிலையம்

இ) மதுரை விமான நிலையம் 

ஈ) மும்பை விமான நிலையம்

விடை : (அ) சண்டீகர் விமான நிலையம் 

● நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பகத் சிங்கின் பிறந்த தினம் வரும் 28 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

● அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

● அவரது பெயரை சண்டீகர் விமான நிலையத்துக்கு சூட்டப்படவுள்ளது.

4. பின்வரும் எந்த மத்திய துறையின் கீழ் ஸ்வச் டாய்கேத்தோன் என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை அறிமுகப்படுத்துகிறது ? 

அ) பாதுகாப்புத் துறை

ஆ) வெளியுறவுத் துறை

இ) வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி துறை 

ஈ) வேளாண் துறை 

விடை : ( இ) வீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி துறை 

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை திங்கள்கிழமை (செப்டம்பா் 26 ) அறிமுகப்படுத்துகிறது.

● இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினைப் பொருள்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மை தொழிலை மேம்படுத்துவதற்காக பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிடி) 2020 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 14 அமைச்சகங்களுடன் இணைந்து வா்த்தக அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) என்ஏபிடி பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

● இதில் தற்போது மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையுடன் இணைந்து ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்கிற இயக்கத்தை நடத்துகிறது.

● இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியது வருமாறு: உலகின் 2- ஆவது மக்கள்தொகை மிக்க நாடு என்பதோடு, மொத்த மக்கள்தொகையில் பாதியளவில் இளம் மக்கள் தொகை நாடாகவும் இந்தியா விளங்குகிறது. மேலும், வலுவான பொருளாதார வளா்ச்சி, வருமானத்தால் அதிகமாகவே மக்கள் செலவழிக்கின்றனா்.

● புதிய கண்டுபிடிப்புகளுடன் குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் மாறிவரும் நுகா்வு முறைகள், விரைவான மின் வணிக அதிகரிப்பு ஆகியவற்றால் வாங்கும் பொருள்களின் தனிநபா் கழிவு, குடியிருப்பு பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் சீராக அதிகரித்துள்ளது. இதனால், நகரங்களின் கழிவு மேலாண்மை பெரும் சவாலாக உள்ளது. 2 -ஆம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின்படி 2026 -ஆம் ஆண்டுக்குள் ‘குப்பை இல்லாத நகரங்கள்’ என்கிற பாா்வையை பிரதமா் அறிவித்துள்ளாா்.

● ஒருபுறம் பொம்மைகளுக்கான தேவை அதிகரிப்பு மறுபுறம் திடக்கழிவுகளின் தாக்கம் இவற்றை ஒருங்கிணைத்து ’ஸ்வச் டாய்கேத்தான்’ தொடங்கப்பட்டுள்ளது. இது பொம்மைகளை தயாரிப்பிற்கு கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தீா்வுகளை காண்பதாகும். உலா் கழிவுகளைப் பயன்படுத்தி பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டு வர தனிநபா்கள் அல்லது நிறுவன குழுக்களுக்குள் போட்டி வைக்கப்படுகிறது.

● இதற்கு குஜராத் காந்திநகா் ஐஐடி, கிரியேட்டிவ் லோ்னிங் மையம், இந்த முயற்சிகளுக்கு அறிவு கூட்டாளியாக இருந்து ஊக்குவிக்கும். குறைந்தபட்ச பாதுகாப்புத் தரங்களோடு திறமையான அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய பொம்மைகள் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

● இந்தப் போட்டிகள் வருகின்ற ஆக்டோபா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை திங்கள்கிழமை மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை செயலா் மனோஜ் ஜோஷி காணொலி வழியாக தொடக்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா எப்பொழுது ஏற்கவுள்ளது ? 

அ) அக்டோபர் 01, 2022

ஆ) நவம்பர் 01, 2022

இ) டிசம்பர் 01, 2022

ஈ) ஜனவரி 01, 2023 

விடை : (இ) டிசம்பர் 01, 2022

● ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா டிசம்பர் 01,2022 முதல் 2023, நவம்பர் 30 வரை வகிக்கவுள்ளது.  

● குறிப்பு : இந்தியா, உணவுப் பாதுகாப்பு , கடன்கள், எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை சார்ந்த பிரச்னைகளுக்கு உறுப்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீர்வு காண பணியாற்றவுள்ளது.  

● இந்த அமைப்பின் உச்சிமாநாடு,  2023 செப்டம்பர் 9,10 இல் தில்லியில் நடைபெறவுள்ளது. 

6. கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி எந்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது ? 

அ) 137%

ஆ) 198%

இ) 247%

ஈ) 334%

விடை: (ஈ) 334%

● மேலும் இந்தியாவிலிருந்து 75 க்கும் அதிகமான நாடுகளுக்குப் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. பான் பசிபிக் ஓபன் WTA மகளிர் டென்னிஸ் போட்டி 2022 ல்  சாம்பியன் பட்டம் வென்றுள்ள லுட்மிலா சாம்சோனோவா எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார் ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) ஆஸ்ட்ரேலியா 

ஈ) சீனா 

விடை : (ஆ) ரஷ்யா 

● போட்டி நடைபெற்ற இடம் : டோக்கியோ, ஜப்பான் 

● ரஷ்யாவின் லுட்மிலா சாம்சோனோவா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

8. கொரியா ஹனா பேங்க் ஓபன் டென்னிஸ் மகளிர் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றவர் ? 

அ) ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா 

ஆ) லாட்வியா வின்ஜெலனா 

இ) ஸெங் குன்வெய் 

ஈ) லுட்மிலா சாம்சோனோவா 

விடை : (அ) ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா

● போட்டி நடைபெற்ற இடம் : சியோல்.

● ரஷ்யாவின் ஏகடெரினா அலெக்சாண்ட்ரோவா சாம்பியன் பட்டம் வென்றார். 

IV. முக்கிய தினங்கள் 

9. International Day for the total Elimination of Nuclear Weapons 2022 

Ans : September 26



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...