Thursday, August 25, 2022

Current Affairs 2022 - August 25 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                  AUGUST 25 / 2022 

தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. சாகித்திய அகாதெமி விருதுகள் 2022, கீழ்கண்ட எந்த தமிழக  எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் (ம) பால சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) பி. காளிமுத்து 
ஆ) வி. ஈஸ்வரன் 
இ) ஜி. மீனாட்சி 
ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ (ம) இ 

● நிகழ் ஆண்டுக்கான (2022) யுவ புரஸ்கார், பால சாகித்திய புரஸ்கார் விருதுகளை சாகித்திய அகாதெமி புதன்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பி.காளிமுத்து, ஜி.மீனாட்சி ஆகியோரின் படைப்புகள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

● இலக்கிய உலகில் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

● இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு "யுவ புரஸ்கார்' விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான "பால சாகித்திய புரஸ்கார்' விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி
வருகிறது. 

● அதன்படி, இந்த ஆண்டுக்கான (2022) இரு விருதுகளும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
சாகித்திய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர கம்பார் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் முடிவில், மேலும் 23 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும், 22 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

● தமிழ் மொழிப் பிரிவில் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' எனும் கவிதை தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

● குழந்தைகளுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.மீனாட்சி எழுதிய "மல்லிகாவின் வீடு' எனும் சிறுகதை நூலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

● இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

● பால சாகித்திய புரஸ்கார் விருது, குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி வழங்கப்படும் என்றும், யுவ புரஸ்கார் விருது வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

● குறிப்பு : தமிழ் தவிர, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, நேபாளி, ஒடியா, தெலுங்கு, சம்ஸ்கிருதம், உருது உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கோவை மாவட்டம் , ஈச்சனாரியில் ரூ. 589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி
ஆ) மு.க. ஸ்டாலின்
இ) நரேந்திர மோடி
ஈ) திரௌபதி முர்மு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

கோவை மாவட்டம், ஈச்சனாரியில் ரூ.589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய திட்டப் பணிகள் தொடக்கம், முடிவுற்ற பணிகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

3. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு புதிதாக எத்தனை கட்டாயப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ? 

அ) 08
ஆ) 09
இ) 10
ஈ) 11
விடை : (ஆ) 09 

● தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு புதிதாக 09 கட்டாயப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

● அறிவிப்பு : அண்ணா பல்கலைக்கழகம்.

4. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு எத்தனை சதவீதம் ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது ? 

அ) 7%
ஆ) 9%
இ) 5%
ஈ) 3% 
விடை : (இ) 5% 

சென்னையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

● அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ. 2,012 என்றும் அதிகபட்சமாக ரூ. 7,981ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

● அதேபோல், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ. 1,965 என்றும், அதிகபட்சம் ரூ. 6,640 என்றும் உயர்த்தப்பட்டு கையெழுத்தானது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. பிரிட்டனுக்கான அடுத்த புதிய இந்திய தூதராக நியமிக்கபபட்டுள்ளவர் யார் ? 

அ) விக்ரம் கே. துரைசுவாமி 

ஆ) எஸ். ஆறுமுகசுவாமி 

இ) காய்த்ரி இஸ்ஸார் குமார்

ஈ) எஸ். காவியா குமார் 

விடை : (அ) விக்ரம் கே. துரைசுவாமி 

● குறிப்ப: தற்போது வங்கதேசத்துக்கான தூதராக உள்ளார், விரைவில் பிரிட்டனுக்கான தூதராக பொறுப்பேற்கவுள்ளார். 

● முன்பு : காயத்ரி இஸ்ஸார் குமார் இப்பொறுப்பில் இருந்தார். 

6. அண்மையில் எங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு எங்கு நடைபெற்றது ? 

அ) தாஷ்கண்ட்

ஆ) ஈரான்

இ) மும்பை

ஈ) டோக்கியோ

விடை : (அ) தாஷ்கண்ட் 

உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கன்டில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ மாநாட்டில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:

● எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட எந்தவகையான பயங்கரவாதமும் மனித இனத்துக்கு எதிரான குற்றமாகும். அதனை ஒன்றிணைந்து எதிா்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

● இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ் பயங்கரவாதியை கைது செய்ததற்காக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷோய்குவிடம் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தாா்.

● தாஷ்கன்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின்போது சொ்ஜி சோய்குவை ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தாா். அப்போது, இந்தியா சாா்பில் ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாா். இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

● முன்னதாக, இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா் ரஷியாவில் கைது செய்யப்பட்டாா். நபிகள் நாயகம் குறித்து சா்ச்சை கருத்தைத் தெரிவித்த இந்திய ஆளும் கட்சி (பாஜக) தலைவரை குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்த அவா் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது என ரஷிய உயா் புலனாய்வு அமைப்பான ‘ஃபெடரல் செக்யூரிட்டி சா்வீஸ்’ தெரிவித்தது.

● இவா் துருக்கியில் ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படை பிரிவு பயங்கரவாதியாக தோ்வு செய்யப்பட்டு, அங்குள்ள இஸ்தான்புல் நகரில் அவருக்கு மத பயங்கரவாத போதனைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, ரஷியாவுக்கு வந்து அங்கு தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்குச் சென்று தாக்குதல் நடத்த அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்றும் ரஷிய உளவு அமைப்பு தெரிவித்தது.

7. தேசிய தலைநகர் பிராந்தியத்துக்கு (என்டஆர் ) உட்பட்ட ஃபரீதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தா மருத்துவமனையை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ராஜ்நாத் சிங்

ஈ) அமித் ஷா 

விடை : (அ) நரேந்திர மோடி

 ● ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதில் 2,600 படுக்கைகளைக் கொண்ட நவீனமான அம்ரிதா மருத்துவமனையினை பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். 

ஃபரிதாபாதில் அம்ரிதா மருத்துவமனையை தொடங்கி வைத்திருப்பது தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு ஊக்கமளிக்கும், நவீன மருத்துவ கட்டமைப்பு வசதி கிடைக்கும். மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நிர்வகிக்கப்படும் இந்த பன்னோக்கு மருத்துவமனை 2,600 படுக்கை வசதிகளை கொண்டது. ரூ.6,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ஃபரிதாபாத் மற்றும் ஒட்டு மொத்த தேசிய தலைநகர் பிராந்தியத்தின் மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகளை வழங்கும்.

8. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி --------- முதல் -------- சதவீதமாக சரியும் என்று கிரிசல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 7 முதல் 8 

ஆ) 6 முதல் 9

இ) 7 முதல் 10

ஈ) 7 முதல் 9 

விடை: 7 முதல் 9 வரை 

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளா்ச்சி 7 முதல் 9 சதவீதமாக சரியும் என்று கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக மொத்த மாநிலங்கள் உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 90 சதவீதத்தை கொண்டுள்ள 17 மாநிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

● இந்த நிதியாண்டில் மத்திய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருவாயில் மாநிலங்களின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரி வருவாய் பகிா்வு விகிதாசாரங்களை நிதிக் குழு தீா்மானித்து வந்தாலும், ஒட்டுமொத்த வருவாயும் மத்திய அரசின் மொத்த வரி வசூல்களுடன் இணைந்துள்ளது.

● கடந்த ஆண்டு நவம்பா், இந்த ஆண்டு மே மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட்டது. அத்துடன் சில மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் அதிகரித்துள்ளதன் மூலம் கிடைக்கும் லாபம், சிறப்பான அளவில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது ஆகியவை ஈடுசெய்யும். இதனால் இந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி வசூலில் பெரிதாக மாற்றம் இருக்காது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

● இந்த நிதியாண்டில் மத்திய அரசின் மானியங்கள், நிதிக் குழுவின் மானியங்கள், வருவாய் பற்றாக்குறை ஆகியவை சிறிய அளவிலான வளா்ச்சியை மட்டுமே காண வாய்ப்புள்ளது.

● மேலும், மத்திய அரசு சாா்பில் மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கான கால வரம்பு கடந்த ஜூலை 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

● எனவே, வலுவான ஜிஎஸ்டி வசூல் இருந்தபோதிலும் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் வருவாய் வளா்ச்சி 7 முதல் 9 சதவீதமாக சரியும்.

● பொதுமுடக்கம் சாா்ந்த பாதிப்புகள் இல்லாதது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான வளா்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● அதேவேளையில், எதிா்பாா்த்ததைவிட அதிகமான பணவீக்க அழுத்தத்தால் பொருளாதார நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவது வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. உலகிலேயே முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ரயில்களின் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?

அ) ரஷ்யா

ஆ) சீனா

இ) ஜெர்மனி

ஈ) இந்தியா 

விடை : (இ) ஜெர்மனி

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. தென்கொரியாவில் நடைபெற்ற பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக வென்றுள்ள பதக்கங்கள் ? 

அ) 15

ஆ) 17

இ) 10

ஈ) 13 

விடை : (இ) 10 

● பதக்கங்கள் : 1G , 4S & 5B 

11. 13 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் போட்டியில் இந்தியாவின் ஹன்சினிமதன் ராஜன் எத்தனையாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ? 

அ) 5 ஆவது

ஆ) 4 ஆவது

இ) 2 ஆவது

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது 




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...