Sunday, August 21, 2022

Current Affairs 2022 - August 21/ 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                      GK SHANKAR 
                    August 21 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்  

1. தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்குள் 80,000 காசநோயாளிகளைக் கண்டறியும் இலக்கில் இதுவரை எத்தனை சதவீதம் இலக்கு எட்டப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 50%
ஆ) 68%
இ) 72%
ஈ) 88% 

விடை : (இ) 72% 

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னையில் நடைபெற்ற தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65-ஆவது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த காணொலியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:

● இந்தியாவில் 2025-ஆம் ஆண்டுக்குள்ளாகவே காச நோயை ஒழிக்கும் பொருட்டு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் ஊசிகள் மூலம் காசநோயை தடுத்தல், 6 மாதங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை காலகட்டத்தை குறைத்தல் ஆகிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

● ‘காசநோய் இல்லா தமிழகம்-2025’ என்னும் இலக்கு நிா்ணயித்து அதற்கான பல்வேறு திட்டமிடல்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காசநோயில்லா தமிழகத்தை உருவாக்க நிதி ஒதுக்கீடு ரூ.31.32 கோடியிலிருந்து ரூ.68.22 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10.65 கோடி மதிப்பீட்டில் 23 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை கடந்த ஜூலை 1-ஆம் தேதி நொச்சிக்குப்பத்தில் முதல்வா் தொடங்கி வைத்தாா்.

● காசநோய் இல்லா தமிழகம்-2025’ இலக்கை அடையும் வகையில் காசநோய் பாதிப்பு விகிதத்தை 40 சதவீதம் அளவுக்கு குறைத்த நீலகிரி மாவட்டம், 20 சதவீத அளவுக்கு குறைத்த நாமக்கல், கரூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட காசநோய் திட்ட குழுவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022-ஆம் ஆண்டில் 80,000 காசநோயாளிகளைக் கண்டறியும் இலக்கில் 57,970 காசநோயாளிகளைக் கண்டறிந்து 72 சதவீத இலக்கை எட்டியுள்ளோம் என்றாா் அவா்.

2. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ? 

அ) ஆகஸ்ட் 10, 2022

ஆ) ஏப்ரல் 12, 2022

இ) ஆகஸ்ட் 10, 2021

ஈ) ஏப்ரல் 12, 2021

விடை : (அ) ஆகஸ்ட் 10, 2022 

● போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் ஆகஸ்ட் 10, 2022 அன்று தொடங்கப்பட்டது.

காரணம் : போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் தற்போது இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

● மேலும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

3. மத்திய அரசு சார்பாக தொடங்கப்பட்ட பொலிவுறு நகரத் திட்டம் ( ஸ்மார்ட் சிட்டி ) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ? 

அ) 2013

ஆ) 2015

இ) 2017

ஈ) 2019

விடை : (ஆ) 2015 

கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு சாா்பாக பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் நாடு முழுவதும் 100 நகரங்களைத் தோ்வு செய்து பொலிவுறு நகரங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது. 

● முதல் கட்டமாக தமிழகத்தில் 11 நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. அதற்கான அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. திட்ட செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 50 சதவீதத்தை மாநில அரசும் பகிா்ந்து கொள்கின்றன. 

● இதனிடையே, கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக சென்னை தியாகராய நகரில் மழைநீா் தேங்கியது. இதற்கு பொலிவுறு நகரத் திட்டங்களை சரியாக வடிவமைக்காததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. 

● இந்தத் திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழுந்த முறைகேடு தொடா்பான புகாா்கள் குறித்து விசாரித்த அதிகாரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா், தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

● டேவிதாா் தலைமையில் குழு: விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாா் நியமிக்கப்பட்டாா். அவா் தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, திட்டம் தொடா்பாக நடந்த பல்வேறு முறைகேட்டுப் புகாா்கள் குறித்து விசாரணை அதிகாரி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினாா்.

● மே மாதத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபா் விசாரணை ஆணையம் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பொலிவுறு திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தது. இந்நிலையில் திட்டப் பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதாா், சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) திரௌபதி முர்மு

ஆ) நரேந்திர மோடி

இ) என்.வி.ரமணா 

ஈ) யு.யு. லலித் 

விடை : (இ) என்.வி.ரமணா 

● ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுமார் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தவர். 

5. இந்திய கடற்படையின் பின்வரும் எந்த பாய்மரப் படகுடன் அண்மையில் 3 வீராங்கனைகள் உள்பட 6 பேர் கொண்ட இந்திய கடற்படை குழுவினர் மொரிஷியஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் ? 

அ) புல்புல் 

ஆ) கடல்புறா 

இ) நீல்கண்ட் 

ஈ) ஐஎன்எஸ்வி தாரிணி 

விடை : (ஈ) ஐஎன்எஸ்வி தாரிணி

கோவாவில் இருந்து மொரிஷியசின் போர்ட் லூயிஸ் வரையிலான கடல் பயணத்தை ஐஎன்எஸ் மண்டோவியின் காமாண்டிங் அதிகாரி சஞ்சய் பாண்டா கொடியசைத்து துவக்கி வைத்தார். INSV தாரிணி பாய்மரக் கப்பலில் ஆறு பேர் கொண்ட குழுவினர் (மூன்று பெண் அதிகாரிகள் உட்பட) இந்த பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

 ● கிட்டத்தட்ட 2500 கடல் மைல் (சுமார் 45000 கி.மீ) தூரத்தை 20 - 21 நாட்களுக்குள் கடக்கும் குழுவினர், தீவிர வானிலை மற்றும் பருவமழையின் கரடுமுரடான கடல் நிலைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது.

● இந்திய கடற்படை இந்த வகையைச் சேர்ந்த ,  மஹதேய், தாரிணி, புல்புல், ஹரியால், கடல்புறா,  நீலகண்ட் ஆகிய 6 கப்பல்களை கொண்டுள்ளது.

● இந்தக் கடல் பயணம் கடினமான சாகசம் மிக்கதாகும்.  பயணங்கள் சாகச உணர்வை வளர்ப்பதற்கும், ஆபத்தை எதிர்நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன, அதே சமயம் வழிசெலுத்தல், தகவல் தொடர்பு, என்ஜின்கள் மற்றும் உள் இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய கடல்சார் திறன்களை மேம்படுத்துகிறது.

6. இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழைமை வாய்ந்த எத்தனை கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் அண்மையில் திரும்ப ஒப்படைத்தது ? 

அ) 07

ஆ) 09

இ) 11

ஈ) 15 

விடை : (அ) 07 

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 7 பழைமைவாய்ந்த கலைப்பொருள்களை ஸ்காட்லாந்து அருங்காட்சியகம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

● 14-ஆவது நூற்றாண்டைச் சோ்ந்த இந்தோ-பொ்சிய வாள், கான்பூா் கோயிலில் இருந்து திருடப்பட்ட 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செதுக்கப்பட்ட கற்கதவின் நிலை உள்ளிட்ட பழமைவாய்ந்த கலைப்பொருள்கள் ஸ்காட்லாந்தின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டது.

● அப்பொருள்களைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இந்தியத் தூதரகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. அப்பொருள்களை இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தின் (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதையடுத்து, கலைப்பொருள்களைத் திரும்ப வழங்குவதற்கு அருங்காட்சியகங்களை நிா்வகித்து வரும் கிளாஸ்கோ லைஃப் அமைப்பு ஒப்புக்கொண்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் கையொப்பமானது. அதையடுத்து, கலைப்பொருள்கள் பிரிட்டனுக்கான இந்தியத் தூதா் (பொறுப்பு) சுஜித் கோஷிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி 2022 ல் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது ? 

அ) 13 

ஆ) 17

இ) 19 

ஈ) 27 

விடை : (ஆ) 17 

● இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்கள் (17) : 4 G , 5S, 8B .

8. பல்கேரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார் ?

அ) பிரியங்கா

ஆ) பிரியான்ஷி ரஜாவத் 

இ) அன்டிம் பங்கால் 

ஈ) ரீதிகா 

விடை : (இ) அன்டிம் பங்கால் 

● மகளிருக்கான 53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கால் தங்கம் வென்றனர். 

● இப்போட்டியில் இந்திய அணி மொத்தமாக 1G, 3S, 3B என 7 பதக்கங்களுடன் 160 புள்ளிகளோடு 2 ஆவது இடம் பிடித்தது. 

● இந்தப் போட்டியின் வரலாற்றில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும். 

● முதலிடம் : ஜப்பான்

இரண்டாவது : அமொிக்கா. 

IV. முக்கிய தினங்கள் 

9. International Day of Rememberance & Tribute to the Victoms of Terrorism 2022 ? 

Ans : August 21 

Theme (2022) : Memories 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...