Saturday, August 20, 2022

Current Affairs 2022 - August 20 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                  AUGUST 20 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. இந்தியாவில் ஊரகத் தொழிலாளர்களுக்குக்கான பணவீக்க மதிப்பில் 1,290 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது ? 

அ) குஜராத் 
ஆ) ஹிமாச்சல பிரதேசம்
இ) தமிழ்நாடு 
ஈ) மணிப்பூர் 

விடை : (இ) தமிழ்நாடு 

விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 1,301 புள்ளிகளாக இருந்தது. ஹிமாசலில் குறைந்தபட்சமாக 890 புள்ளிகளாக இருந்தது.

● ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்க மதிப்பில் 1,290 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 942 புள்ளிகளுடன் ஹிமாசல் கடைசி இடத்திலும் இருந்தன.

● நாட்டில் விவசாயிகள், ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.

● விவசாயம் சாா்ந்த பணிகளில் ஈடுபடுவோா், ஊரகத் தொழிலாளா்கள் ஆகியோா் பயன்படுத்தும் பொருள்களின் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு பணவீக்கத்தை மத்திய தொழிலாளா் அமைச்சகம் கணக்கிட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதக் கணக்கீட்டுக்கான முடிவுகளை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

● அதன்படி, விவசாயத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஏஎல்) 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 6.43 சதவீதமாக இருந்தது. ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் (சிபிஐ-ஆா்எல்) 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூனில் 6.76 சதவீதமாக இருந்தது.

● கடந்த ஆண்டு ஜூலையில் விவசாய மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான பணவீக்கம் முறையே 3.92 சதவீதமாகவும், 4.09 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஜூலையில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டதன் காரணமாகவே தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரித்ததாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அரிசி, கோதுமை மாவு, கம்பு, தானியங்கள், பால், மீன், வெங்காயம், பச்சை-காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயா்வே, விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான பணவீக்க உயா்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

● கடந்த ஜூலை மாதத்தில் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான ஒட்டுமொத்த பணவீக்க மதிப்பு 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1,131 மற்றும் 1,143-ஆக இருந்தது.

2. தமிழகத்தில் எங்கு விளையும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார் ? 

அ) சேலம்

ஆ) மதுரை

இ) திருச்சி

ஈ) தஞ்சாவூர் 

விடை : (ஈ) தஞ்சாவூர் 

சென்னை தனியார் மாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தொடங்கி வைத்தார். 

● இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவியம் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

● தஞ்சாவூரில் உற்பத்தியாகும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

● குறிப்பு : தமிழ்நாட்டில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளது. அவற்றில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கும் 24 வகையான பொருட்களுக்கு புதிசார் குறியீடு பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து உள்ளார்.

● புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விவரங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

3. கூற்று : எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

காரணம் : பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று தவறு, காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

● எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

● இது தொடா்பாக தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயா்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

● தமிழகத்தில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் நிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்ாகும். எண்ணெய்ப் பனை மரங்களை நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டிலிருந்து ஹெக்டேருக்கு ஐந்து டன் வரையும், எட்டாம் ஆண்டிலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் கிடைக்கும். அதனால், தமிழகத்தில் எண்ணெய்ப் பனை சாகுபடிப் பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயா்த்துவதற்காக, அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

● தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியாா் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

● நடவு முடிந்து முதல் 4 ஆண்டுகள் வரை இளம் எண்ணெய்ப் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.5250-மும், எண்ணெய்ப்பனை வயலில் ஊடுபயிா் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக ஹெக்டேருக்கு ரூ.5250-மும் என மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியாக எண்ணெய்ப்பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

● தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனைத் திட்டத்துக்காக 2022-23-ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

● தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனை திட்டத்தில் https://tnhorticulture.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெற வேண்டும்.

4. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப் பணிக்கு எத்தனை கோடியில் புதிய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 1,978 கோடி

ஆ) ரூ. 1,331 கோடி

இ) ரூ. 1,137 கோடி

ஈ) ரூ. 1,713 கோடி 

விடை : (அ) ரூ. 1,978 கோடி 

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணிக்கு ரூ.1977.80 கோடியில் புதிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில் பணியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறைக்கான 29 புதிய கட்டடங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவா் கல்லூரி மாணவா் பேரவை மற்றும் தமிழ் மன்றத் தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்றுப் பேசினாா். பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

● மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தற்போது சுற்றுச்சுவரைத் தவிர வேறு கட்டடப்பணிகள் நடைபெறவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் விடாமுயற்சியால் மத்திய அரசு தற்போது ஜப்பானில் உள்ள சைக்கா நிறுவனத்தில் கடன் பெற்று ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகளைத் தொடங்கவுள்ளது. அப்போது ரூ.1,264 கோடி நிதி அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகள் தாமதத்தால் கட்டடப் பணிக்கான நிதியை உயா்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய திட்டமதிப்பீட்டின்படி ரூ.1,977.80 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. அதில் ரூ.1,670.70 கோடி (82 சதவீதம்) ஜப்பானின் சைக்கா நிறுவனத்திடமிருந்து பெறப்படவுள்ளது. நிதியில் 18 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது. சைக்கா நிறுவனம் கட்டட வரைபடத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்திக்க புதுதில்லிக்கு செல்லவுள்ளோம். அதனடிப்படையில் அடுத்த 6 மாதங்களில் ‘எய்ம்ஸ்’ கட்டடப் பணிகள் தொடங்கும். ராமநாதபுரத்தில் பயிலும் மாணவா்கள் மதுரையில் இறுதியாண்டு பயிலும் நிலை ஏற்படும்.

● துணை செவிலியா் பயிற்சி மையம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 சதவீத கட்டடப் பணிகள் முடிந்த நிலையில் 20 சதவீத பணிகளை 2 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பரமக்குடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு ரூ. 53.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தும் ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது. பாா்த்திபனூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை செவிலியா் பயிற்சி மையம் விரைவில் திறக்கப்படும் என்றாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதிவிக்காலம் மேலும் எத்தனை ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது ? 

அ) 6 மாதம்

ஆ) 9 மாதம்

இ) ஓராண்டு 

ஈ) இரண்டாண்டு 

விடை : (இ) ஓராண்டு 

● அறிவிப்பு : மத்திய பணியாளர் அமைச்சகம். 

● 2023 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார். 

● கடந்த 2019 , ஆகஸ்டில் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார். 

● ஏற்கனவே இரண்டு முறை அவர் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

6. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குரங்கு அம்மை உடனடி பரிசோதனைக் கருவி ( RT - PCR KIT ) எங்க வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ஆந்திர பிரதேசம்

ஆ) கேரளா

இ) தமிழ்நாடு

ஈ) கர்நாடகா 

விடை : (அ) ஆந்திர பிரதேசம் 

● தயாரிப்பு : டிரான்சாசியா பயோ மெடிக்கல்ஸ் நிறுவனம். 

● இந்த பரிசோதனை கருவியை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட் வெளியிட்டார். 

7. உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எத்தனை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது ? 

அ) 35,000

ஆ) 31,000

இ) 40,000

ஈ) 37,000

விடை : (அ) 35,000 

● உலகம் முழுவதும் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. ஐரோப்பிய கால்பந்தில் மகளிர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் யார் ? 

அ) மரிலேனா ஜார்ஜ் 

ஆ) மனீஷா கல்யான்

இ) மனீஷா சிங்

ஈ) மரியா ஜார்ஜ் 

விடை : (ஆ) மனீஷா கல்யான் 

● 20 வயது இளம் வீராங்கனையான மனீஷா , வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடும் 4 ஆவது இந்திய வீராங்கனை ஆவார். 

IV. முக்கிய தினங்கள் 

9. World Mosquito Day 2022 ? 

Ans : August 20 

Theme : Harness Innovation to reduce the Malaria disease burden & save lives. 

10. International Geocaching Day 2022 ? 

Ans : August 20

Theme : Find Your Place in the World 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...