Monday, August 8, 2022

Current Affairs 2022 - August 08 /2022 - TNPSC 1, 2/2A & 4

                     GK SHANKAR 
                 AUGUST 08 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசுப் பள்ளிகளில் என்று முதல் மக்கள் நல்வாழ்வு , சமூகநலத், காவல் துறை சார்பில் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 19 
ஆ) ஆகஸ்ட் 21
இ) ஆகஸ்ட் 09
ஈ) ஆகஸ்ட் 12 

விடை : (ஈ) ஆகஸ்ட் 12 

தமிழக அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வரும் 12ம் தேதி முதல் விழிப்புணர்வு வாரம் கடைபிடித்து, மாணவர்களின் உடல், மன நலன் காக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● அத்துடன், வரும் 11ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரம், மாணவர் நலன், மகிழ்ச்சியான கற்றல் சூழல், ஆசிரியர்-மாணவர் நல்லுறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

● அதன் ஒருபகுதியாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவற்றிற்கு பள்ளி அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

● அதன்படி வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, அனைத்து பள்ளிகளிலும் 11ம் தேதியன்று விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

2. அண்மையில் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது ? 

அ) சேலம்
ஆ) மதுரை
இ) ஈரோடு
ஈ) தேனி 

விடை : (இ) ஈரோடு 

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு சா்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனா்.

● ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வடமுகம் கிராமத்திலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலய (பெரிய குளம் ஏரி) பகுதிகளில் 1980-ஆம் ஆண்டு முதல் வனத் துறையின் சமூக நலக் காடுகள் கோட்டத்தின் மூலமாக, நாட்டு கருவேல மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

● இந்நிலையில், இங்கு கட்லா, ரோகு, கெண்டை, விரால் போன்ற மீன் வகைகள் வளா்க்கப்படுகின்றன. இந்தப் பகுதியானது அடா்ந்த நாட்டு கருவேல மரங்களால் சூழப்பட்டு உள்ளது. இதனால் சாம்பல் நாரை, ராக்கொக்கு, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், புள்ளி மூக்கு வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, புள்ளி அலகு கூழைக்கடா போன்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாறியது.

● இதனால், பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து, இந்தப் பகுதியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான இனப்பெருக்கத் தலமாகவும் விளங்குகிறது.

● இதன் தொடா்ச்சியாக பெரிய குளம் ஏரி பகுதியானது 2000-ஆம் ஆண்டு வெள்ளோடு பறவைகள் சரணாலயம் என வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, இன்று வரை மாவட்ட வன அலுவலா், ஈரோடு வனக் கோட்டத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

● 2018-2019-ஆம் ஆண்டு முதல் 2019-2020-ஆம் ஆண்டு வரை, சூழல் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக சரணாலயம் மேலும் பொலிவு பெற்று, கூடுதல் பறவைகளின் கவனத்தையும் ஈா்த்தது.

● இந்நிலையில், சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3-ஆம் தேதி ராம்சா் அமைப்பால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. மத்திய அறிவியல் (ம) தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

அ) என். கலைச்செல்வி 
ஆ) எஸ். விஜயலட்சுமி
இ) என். தமிழ்ச்செல்வி
ஈ) எஸ். மேக்னா 

விடை : (அ) என். கலைச்செல்வி

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலராகவும், மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆா்) தலைமை இயக்குநராகவும் தமிழகத்தைச் சேர்ந்த என்.கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளாா்.

● சிஎஸ்ஐஆரின் 80 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவா் தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா் இரு ஆண்டு காலம் இப்பணியில் இருப்பாா். சிஎஸ்ஐஆா்-இன் கீழ் நாடு முழுவதும் 38 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன.

● சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிக்ரி) இயக்குநராக கலைச்செல்வி தற்போது பணியாற்றி வருகிறாா்.

● குறிப்பு : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த இவா், பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் பயின்றவா்.

● காரைக்குடி சிக்ரியில் ஆராய்ச்சியாளராக பணியில் சோ்ந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிக்ரியின் முதல் பெண் இயக்குநரானாா். 

4. நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட  நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு / நிறுவனம் எது ? 

அ) டிஆர்டிஓ

ஆ) ஹெச்ஏல் 

இ) பிடிஎஸ

ஈ) பிஇஎல்

விடை : (ஆ) ஹெச்ஏல்

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க மேம்பட்ட, நீண்ட தாக்குதல் திறன்வாய்ந்த ட்ரோன்களை வடிவமைக்கும் பணியில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) ஈடுபட்டுள்ளது.

● சுழலும் இறக்கைகள் கொண்ட இந்த ட்ரோன், ஏவுகணைகள், சென்சாா் உள்பட 40 கிலோ எடை வரையிலான பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறன்வாய்ந்தது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவ வீரா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த ட்ரோன் வடிவமைக்கப்படுகிறது.

● ஆளில்லா இந்தக் குட்டி விமானத்தின் சோதனை ஓட்டத்தை அடுத்த ஆண்டின் (2023) மத்தியில் நடத்த ஹெச்ஏஎல் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 60 ட்ரோன்கள் தயாரிக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

5. நாட்டின் கொள்கை வகுப்பு அமைப்பான நீதி ஆயோக்கின் எத்தனையாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் அண்மையில் நடைபெற்றது ? 

அ) 4 ஆவது

ஆ) 6 ஆவது

இ) 7 ஆவது 

ஈ) 9 ஆவது 

விடை : (இ) 7 ஆவது 

●  ஒன்றிய அரசின் திட்டங்கள், கொள்கைகளை இறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடத்தப்படும். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. 

● இந்நிலையில், நிதி ஆயோக்கின் 7வது கவுன்சில் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நேற்று நேரடியாக நடந்தது. 

● இதில், பிரதமர் மோடி, நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெரி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட 23 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

● கூட்டத்தில், பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் இதர வேளாண் பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தை அமல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

6. கூற்று : இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் , செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை .

காரணம் : சென்சார் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விடை: (ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது. 

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி - டி 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தாலும், செயற்கைக்கோள்களை திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை.

● சென்சாா் நுட்ப செயலிழப்பால் இந்த பின்னடைவு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகள் சரி செய்யப்பட்டு விரைவில் எஸ்எஸ்எல்வி - டி2 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறினாா்.

● இஸ்ரோவின் முதல் முயற்சியாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் ‘ஆஸாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் முதலாவது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

● அதன் முதல் மூன்று நிலைகள் வெற்றிகரமாக அமைந்தன. அதன்பின்னா், திட்டமிட்டபடி இஒஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் பலகையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவா் வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டனா். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திட்டத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டது தெரியவந்தது.

● எஸ்எஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிநிலை உடனான தகவல் தொடா்பை இழந்துவிட்டதாகவும், அவற்றை மீட்டெடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

● இறுதியில் செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட பாதைக்கு பதிலாக வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. 

● இதனால், எஸ்எஸ்எல்வி - டி1 திட்டம் முழுமையான வெற்றியை எட்ட முடியாமல் போனது.

● செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது : 

● புவி வட்டப் பாதைக்கு பதிலாக நீள்வட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதே பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்தாா். புவியிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் அங்கேயே நீடித்திருக்க வாய்ப்பில்லை. இதனால், அவை மீண்டும் புவிக்கே திரும்பி வந்துள்ளன. இதன் காரணமாக இஓஎஸ்-02 மற்றும் ஆஸாதிசாட் ஆகிய இரு செயற்கைக்கோள்களுமே பயன்பாடற்ற நிலைக்கு சென்றுவிட்டன.

7. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளர்ச்சி பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் ? 

அ) கூகுள் 

ஆ) ட்விட்டர்

இ) பேஸ்புக்

ஈ) இஸ்ரோ 

விடை : (அ) கூகுள் 

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் நாட்டின் வளா்ச்சிப் பாதையை விவரிக்கும் வகையிலான இணையவழி திட்டம் ஒன்றை ‘கூகுள்’ அறிமுகம் செய்துள்ளது.

● ‘இந்தியா கி உதான்’ என்ற இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவின் வளா்ச்சிப் பாதையை குறிக்கும் 21 கதைகள், 120 வகையான படங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. கூகுளின் கலை - கலாசார வலைதள பக்கத்தில் இதனைக் காண முடியும்.

● தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி முன்னிலையில், கூகுள் கலை மற்றும் கலாசார பிரிவு சாா்பில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா கடந்துவந்த பாதை, இந்தியாவின் அசைக்க முடியாத, அழிக்க முடியாத சாதனைகளை விவரிப்பதே இதன் முக்கிய கருப்பொருளாக அமைக்கப்பட்டுள்ளது.

● இதுதொடா்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியா எவ்வாறு வளா்ச்சி பெற்றது; அதற்கு இந்தியா்கள் எவ்வாறு பங்களிப்பு செய்தனா்; மத்திய அரசின் ஓராண்டு கால 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு உள்ளிட்ட விவரங்களை மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்துள்ளது.

● மேலும், ‘அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா’ என்ற கருப்பொருளில் கூகுள்- டூடுளுக்கான ஓவியப் போட்டியையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்றுமுதல் 10 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

● இதில் வெற்றி பெறுபவா்களின் வரைபடம், இந்தியாவில் கூகுள் வலைதள முகப்புப் பக்கத்தில் வரும் நவம்பா் 14-ஆம் தேதி டூடுளாக வெளியிடப்படும் என்பதோடு, அந்த மாணவரின் கல்லூரிப் படிப்புக்கு ரூ. 5 லட்சம் கல்வி உதவித் தொகையும், மாணவரின் பள்ளிக்கு அல்லது தன்னாா்வ அமைப்புக்கு ரூ. 2 லட்சம் தொழில்நுட்ப தொகுப்பும் வழங்கப்படும். மேலும், சாதனையாளருக்கான அங்கீகாரம், கூகுள் ஹாா்ட்வோ், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவையும் வழங்கப்படும். நான்கு குழு வெற்றியாளா்கள் மற்றும் இறுதியாளா்களாக வந்த 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி பேசும்போது, ‘வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு டூடுளை கூகுள் குழு உருவாக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் 3,000-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் மற்றும் நினைவிடங்களில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் உதவும் வகையில் அவற்றின் நிலப் பரப்பு எல்லைகளை எண்ம (டிஜிட்டல்) வரைபடமாக கலாசார அமைச்சகம் உருவாக்குவதில் கூகுள் உதவ வேண்டும். சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளிலும் கூகுள் நிறுவனம் பங்கு பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

8. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி எத்தனை பாரம்பரிய சின்னங்கள் , இடங்களில் தேசியக் கொடியேற்ற இந்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது ?

அ) 75 

ஆ) 100

இ) 125

ஈ) 150 

விடை : (ஈ) 150 

சுதந்திர தின அம்ருத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய சின்னங்கள், இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்படும்.

● இந்தியாவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 3,693 பாரம்பரிய சின்னங்கள், இடங்கள் உள்ளன. சுதந்திர தின அம்ருத பெருவிழாவையொட்டி இந்த இடங்களில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை பாா்வையாளா்கள் இலவசமாகப் பாா்வையிட மத்திய கலாசார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் யார் ? 

அ) அர்காடி வோர்கோவிச் 

ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

இ) ஜெகன் குமார்

ஈ) யோஷி ஹிடோ 

விடை : (ஆ) விஸ்வநாதன் ஆனந்த் 

● சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக அர்காடி வோர்கோவிச் தேர்வாகியுள்ளார். 

● ஃபிடே துணைத் தலைவராக இந்தியர் ஒருவர் தேர்வு பெறுவது இதுவே முதல்முறையாகும். 

10. இந்தியாவின் 75 ஆவது கிராண்ட்மாஸ்ட்ராக உருவெடுத்துள்ள தமிழக வீரர் யார் ? 

அ) டி. குகேஷ்

ஆ) ஆர். பிரக்ஞானந்தா

இ) வி.பிரணவ்

ஈ) ஜெகன் குமார் 

விடை : (இ) வி. பிரணவ் 

11. காமன்வெல்த் போட்டி 2022 ல் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இந்தியர்கள் யார் ? 

அ) அமித் பங்கில

ஆ) நீது கங்காஸ்

இ) நிகாத் ஜரீன் 

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

● ஆடவருக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் தங்கம் வென்றார்.

● மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் நீது கங்காஸ் (ம) 50 கிலோ எடை பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் வென்றார். 

● காமன்வெல்த் போட்டியில் மூவருக்குமே இது முதல் தங்கமாகும். 

12. காமன்வெல்த் போட்டி 2022 ல் தடகள பிரிவில் மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● இதே பிரிவில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி வென்றார். 

● ஒரே விளையாட்டு பிரிவில் இந்தியர்கள் இருவர் இணைந்து பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும். 

மேலும் பதக்கங்கள்

- மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றார். 

காமன்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

- மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. 

- ஆடவருக்கான 10,000 மீ நடைப் பந்தயத்தில் இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்றார்.

- ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்தியன், சரத் கமல் வெள்ளி வென்றனர்.  

13. பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில்  இந்தியாவின் பவினா படேல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

14. U20 ,20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் திருமாறன் செல்வபிரபு வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : காலி,கொலம்பியா 

● திருமாறன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். 

IV. முக்கிய தினங்கள்  

15. தேசிய கைத்தறி தினம் 2022 என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) ஆகஸ்ட் 05

ஆ) ஆகஸ்ட் 06

இ) ஆகஸ்ட் 07

ஈ) ஆகஸ்ட் 08

விடை : (இ) ஆகஸ்ட் 07

● முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு : 2015 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...