Tuesday, August 9, 2022

Current Affairs 2022 - August 09 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                   AUGUST 09 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எந்த நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது ? 

அ) ஆகஸ்ட் 15 
ஆ) ஆகஸ்ட் 17 
இ) ஆகஸ்ட் 19 
ஈ) ஆகஸ்ட் 21 

விடை : (ஆ) ஆகஸ்ட் 17 

● அறிவிப்பு : தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
● இந்த மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பாடங்களை ஒரே மாதிரியாக செயல்முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

2. 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? 

அ) பி.கே. முருகன்
ஆ) ஏ. ஞானசுந்தரி
இ) எஸ். இளங்கோவன் 
ஈ) ஜி.டி. சரவணன் 

விடை : (அ) பி.கே. முருகன் 

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு உயர்த்தப்பட்ட பரிசுத் தொகை 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருதாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

● 2021-2022-ஆம் ஆண்டுக்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையில் “மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. 

● அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநில அளவிலான பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாகவும், இரண்டாம் பரிசிற்கான பரிசுத்தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 இலட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசிற்கான பரிசுத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

● அதன்படி, 2021-2022-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கே. முருகனுக்கும், இரண்டாம் பரிசினை காஞ்சிபுரம் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஏ.ஞானசுந்தரிக்கும், மூன்றாம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். இளங்கோவுக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதிற்கான முதல் பரிசினை மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஜி.டி.சரவணனுக்கும், இரண்டாம் பரிசினை சிவசக்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.ஆர்.பாலனுக்கும், மூன்றாம் பரிசினை மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் கே. சந்திரலேகாவுக்கும், என 6 விருதாளர்களுக்கு மொத்தம் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
மேலும், சிறந்த கைத்தறி 

● ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசினை சென்னை- அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம்
பரிசினை தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசினை ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்வர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.


3. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயர்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது ? 

அ) ரூ. 313 கோடி
ஆ) ரூ. 131 கோடி
இ) ரூ. 498 கோடி
ஈ) ரூ. 698 கோடி 

விடை : (ஈ) ரூ. 698 கோடி 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.698 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

● தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா் கல்வி சோ்க்கையை உயா்த்த, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். 

● இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

● இதைத் தொடா்ந்து இது தொடா்பாக கல்லூரிகளில் பயிலும் மாணவிகளிடம் இணையவழியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை தற்போது பரிசீலனையில் உள்ளன. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

● அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7- ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். 

● இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும். திட்டத்தின் கண்காணிப்பாளராக சமூக நலத்துறையின் இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த திட்டத்தை முறைப்படி செயல்படுத்தவும், தொடா்ந்து கண்காணிக்கவும் மாநில அளவில் தலைமைச் செயலாளா் தலைமையிலும் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையிலும் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

4. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.378 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்துவைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) நரேந்திர மோடி 

ஈ) திரௌபதி முர்மு 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

● மேலும் சென்னை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார். 

5. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நிகழாண்டு எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளது ? 

அ) 305 

ஆ) 313 

இ) 386 

ஈ) 357 

விடை : (இ) 386 

● விருதுகள் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

● இவ்விருதுக்கான தேர்வு நடைமுறைகள் வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

6. கூற்று : மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அறிமுகம் செய்தார். 

காரணம் : நுகர்வோர் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தேர்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு 

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

இ) கூற்று தவறு , காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை. 

விடை : கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

மின் விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

● மின்சார விநியோகத் துறையில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் வகை செய்யும் மின்சார திருத்த மசோதாவை மத்திய எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மக்களவையில் அறிமுகம் செய்தாா். நுகா்வோா் தாங்கள் விரும்பும் சேவை வழங்குவோரைத் தோ்ந்தெடுக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்

● எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு ஒப்புதல்: பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு (திருத்த) மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.

● மத்தியஸ்த மசோதாவுக்கு ஒப்புதல்: தில்லி சா்வதேச மத்தியஸ்த மைய (திருத்த) மசோதாவுக்கும் மக்களவை ஒப்புதல் அளித்தது.

● கதிசக்தி பல்கலைக்கழக மசோதா அறிமுகம்: தேசிய ரயில் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் பெயரை கதிசக்தி பல்கலைக்கழகம் என மாற்றம் செய்வதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதாவை மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தாா். தற்போது நிகா்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வரும் அதை மத்திய பல்கலைக்கழகமாகத் தரம் உயா்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

7. SC, ST பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு எத்தனை துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) 01

ஆ) 05

இ) 04

ஈ) 07

விடை : (அ) 01 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு தலா ஒரு துணைவேந்தா் நியமிக்கப்பட்டிருப்பதாக மக்களவையில் கல்வித் துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் தெரிவித்தாா்.

● நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலிருந்து தலா ஒருவரும், ஓபிசி-யிலிருந்து 7 பேரும் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனா். எஞ்சியோா் பொதுப் பிரிவினரை சோ்ந்தவா்கள் ஆவா்.

●  இதேபோல பல்கலைக்கழக பதிவாளா்களில் இருவா் எஸ்.சி. பிரிவையும், 5 போ் எஸ்.டி. பிரிவையும், 3 போ் ஓபிசி பிரிவையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

8. காமன்வெல்த் போட்டி 2022 ல் மகளிருக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் பாட்மின்டனில் இந்தியாவின் பதக்கங்கள் :

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் லஷயா சென் தங்கம் வென்றார்.

● ஆடவருக்கான பிரிவில் சாத்விக்சாய்ராஜ் (ம) சிரக் ஷெட்டி இணை தங்கம் வென்றது.

● ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலம் வென்றார்.

● மகளிருக்கான இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் (ம) டிரீசாஜாலி இணை வெண்கலம் வென்றது. 

● இப்போட்டியில் இந்தியா பாட்மின்டன் அணிக்கு 3G, 1S, 2B என 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

9. காமன்வெல்த் போட்டி 2022 ல் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல் வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட ஏதுமில்லை 

விடை : (அ) தங்கம் 

மேலும் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜி.சத்தியன் வெண்கலம் வென்றார்.

● கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல் (ம) ஸ்ரீஜா அகுலா இணை தங்கம் வென்றது 

மேலும் இந்தியாவின் பதக்கங்கள் : 

● ஹாக்கி ஆடவர் அணி வெள்ளி வென்றது.

● கிரிக்கெட் மகளிர் அணி வெள்ளி வென்றது. 

10. 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 ல் இந்தியா ஒட்டுமொத்தமாக எத்தனை பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்து நிறைவு செய்தது ? 

அ) 113

ஆ) 79

இ) 88

ஈ) 61 

விடை : (ஈ) 61 

● போட்டி நடைபெற்ற இடம் : பர்மிங்ஹாம், இங்கிலாந்து.

● இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்கள் : 22G , 16S, 23B - 4ஆவது இடம் பிடித்து நிறைவு செய்தது.

● பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்கள்: 

1st - ஆஸ்திரேலியா ( 178 )

2nd - இங்கிலாந்து ( 176 )

3rd - கனடா ( 92 ) 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...