Tuesday, August 30, 2022

Current Affairs 2022 - August 30 / 2022 - TNPSC Group 1, 2/2A & 4

                       GK SHANKAR 
                    August 30 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படும் எத்தனை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ? 

அ) 7
ஆ) 9
இ) 4
ஈ) 5 
விடை : (ஈ) 5 
தமிழகத்தில் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கு நாட்டிலேயே முதல் முறையாக தேசிய தர உறுதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

● அதனை தேசிய தர நிா்ணய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்) வழங்கியது.

● அதற்கான சான்றிதழ்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், துணை இயக்குநா் (ஆய்வகம்) ராஜு ஆகியோா் வழங்கி வாழ்த்து பெற்றனா்.

2. தேசிய அளவில் உயர் பாதுகாப்பு பிரிவுகளில் மோப்ப நாய்களாக , கீழ்கண்ட எந்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன ?

அ) சிப்பிப்பாறை 

ஆ) ராஜபாளையம் 

இ) கோம்பை

ஈ) மேற்கண்ட அனைத்தும் 

விடை : (ஈ) மேற்கண்ட அனைத்தும் 

தேசிய அளவில் உயர் பாதுகாப்புப் பிரிவுகளில் மோப்ப நாய்களாக, தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை நாய் இனங்கள் சேர்க்கப்படவுள்ளன.

● அதீத மோப்ப சக்தி காரணமாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளிலும், வெடிபொருள்களைக் கண்டறிந்து நாசவேலைகளை முறியடித்தல், போதைப் பொருள்களைக் கண்டறிதல் ஆகிய பணிகளிலும் காவல் துறையினருக்கும், பல்வேறு உயர் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் மோப்ப நாய்கள் உதவியாகச் செயல்பட்டு வருகின்றன.

● ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், சுங்கத் துறை ஆகியவற்றில் மோப்ப நாய்ப் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலும் மோப்ப நாய்ப் பிரிவுகளில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், டாபர்மேன் போன்ற வெளிநாட்டு இனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின நாய்கள் குறித்து "மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசியதையடுத்து, தேசிய அளவில் நாட்டின நாய்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

● இந்தியாவின் பூர்விக இனங்களாக சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை, ராம்பூர் ஹவுண்ட், காரவன் ஹவுண்ட், முதோல் ஹவுண்ட், மஸ்டிப், ஹிமாயலன், பூட்டியா போன்ற நாய்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

● விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைக் பிறப்பிடமாகக் கொண்ட "ராஜபாளையம் நாய்கள்' நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தின்போது, தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டவை. நிறம் மற்றும் வெளித் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் ஒரு சில நாய் இனங்களில் ராஜபாளையம் நாய் இனம் குறிப்பிடத்தகுந்தது. தூய வெண்மை நிறத்துடன் சருமம் மற்றும் இளம் சிவப்பு நிறத்துடன் நாசிப் பகுதி காணப்படுவது இதன் சிறப்பு.

● சிப்பிப்பாறை, கன்னி ஆகிய நாட்டினங்கள் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட வேட்டையினப் பிரிவைச் சேர்ந்தவை. விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இவை அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பிறப்பிடமாகக் கொண்டது கோம்பை இனம். பண்டைய காலத்தில் போர்களில் கோம்பை நாய் இனம் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

● உயர் பாதுகாப்புப் பிரிவில் :

● நாட்டின நாய்கள் அனைத்துமே ஆரம்பத்தில் வேட்டைக்காக வளர்க்கப்பட்டுள்ளன. வேட்டையாடுதல் தடை செய்யப்பட்ட பிறகு, தற்போது வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், விவசாயத் தோட்டங்களின் பாதுகாப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன.

● தமிழகத்தின் நாட்டினங்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பை ஆகிய நாய்களை மோப்ப நாய்களாக ஈடுபடுத்துவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் வெற்றி அடைந்திருக்கின்றன. இதையடுத்து பிரதமர், மாநில முதல்வர்களின் உயர் பாதுகாப்புப் பிரிவுகள், சுங்கத் துறை, காவல் துறைகளில் இந்த வகை நாய்கள் விரைவில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

3. தமிழகத்தில் முருகப்பா குழுமத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனங்களை தொடங்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர். என். ரவி

ஆ) க. பொன்முடி 

இ) மு.க. ஸ்டாலின்

ஈ) எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

விடை : (இ) மு.க. ஸ்டாலின் 

முருகப்பா குழுமத்தின் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

● முருகப்பா குழுமத்தின் மற்றொரு நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பயணிகளுக்கான மின் ஆட்டோக்கள், மின் சரக்கு வாகனங்களை தயாா் செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

● இதைத் தொடா்ந்து. அம்பத்தூரில் உள்ள டி.ஐ. சைக்கிள் வளாகத்தில் ரூ.140 கோடி முதலீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் அடிப்படையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்காத மூன்று சக்கர மின்சார வாகனங்களைத் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓராண்டு காலத்திலேயே உற்பத்தித் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

● இந்த உற்பத்தியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று சக்கர மின்சார வாகனத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். 

4. தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தவர் யார் ?

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க. ஸ்டாலின் 

இ) பி.கே. சேகர்பாபு 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான மொத்தமாக ரூ.105 கோடியில் கட்டப்படவுள்ள கோயில்களின் புதிய கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு ---------- சதவீதமாக இருந்ததென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ? 

அ) 21.5%

ஆ) 20.8%

இ) 19.2%

ஈ) 18.8% 

விடை : (இ)19.2% 

தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு சுமாா் 20 சதவீதமாக உள்ள நிலையில், அத்துறையில் பணியாற்றும் ஊழியா்களுக்கான ஊதியம் மொத்த ஊதியத்தில் சுமாா் 40 சதவீதமாக உள்ளதென மதிப்பீட்டு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்து இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசா்ச் என்ற மதிப்பீட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசிய வருவாயில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 19.2 சதவீதமாக இருந்ததென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● அதே வேளையில், பொதுத்துறை நிறுவன ஊழியா்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்த ஊதியத்தில் 39.2 சதவீதமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், தனியாா் துறை நிறுவனங்களின் பங்களிப்பும் ஊதியமும் கிட்டத்தட்ட சமமாகவே இருந்ததெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தனியாா் துறை நிறுவனங்களின் தேசிய வருவாய் பங்களிப்பு 36.3 சதவீதமாகவும், ஊதிய பங்கு 35.2 சதவீதமாகவும் இருந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் போதிய திறன் இன்றி செயல்படுவதே அவற்றின் பங்களிப்புக்கும் ஊதியத்துக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுவதற்கான முக்கியக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

● 2012 முதல் 2016-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில் 2017 முதல் 2021-ஆம் நிதியாண்டு வரையிலான காலத்தில் ஊதிய வளா்ச்சி வேகமும், முதலீட்டுக்கான லாப வளா்ச்சி விகிதமும் பெருமளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கரோனா தொற்று பரவலும் அதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

6. இந்தியா பங்கேற்கவுள்ள வோஸ்டாக் 2022 போர் பயிற்சி கீழ்க்கண்ட எந்த நாட்டுடன் தொடர்புடையது ? 

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) ஜப்பான்

ஈ) ரஷ்யா 

விடை : (ஈ) ரஷ்யா 

வோஸ்டாக் 2022 (கிழக்கு 2022) பயிற்சியானது செப்டம்பர் 1-7 தேதிகளில் ரஷ்யாவின் தூர கிழக்கு மற்றும் ஜப்பான் கடலில் பல்வேறு இடங்களில் நடைபெறும் என்றும், இதில் 50,000 துருப்புக்கள் மற்றும் 140 விமானங்கள் மற்றும் 60 உட்பட 5,000 க்கும் மேற்பட்ட ஆயுதப் பிரிவுகள் ஈடுபடும் என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. போர்க்கப்பல்கள்.

● இந்த பயிற்சிகள் ரஷ்யாவின் தூர கிழக்கு பகுதியில் உள்ள ஏழு துப்பாக்கி சூடு எல்லைகளில் நடத்தப்படும் மற்றும் பல முன்னாள் சோவியத் நாடுகள், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியாவின் துருப்புக்களை ஈடுபடுத்தும்.

7. ஒரு மாவட்டம் , ஒரு பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 300 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அரசின் மின் கொள்முதல் சந்தை மூலமாக பிரபலப்படுத்தும் பரிசு முறை பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் யார் ? 

அ) பியூஷ் கோயல் 

ஆ) அமித் ஷா 

இ) ராஜ்நாத் கோவிந்த் 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (அ) பியூஷ் கோயல் 

ஒரு மாவட்டம், ஒரு பொருள் (ஒடிஒபி) முன் முயற்சியின் கீழ் அடையாளம் காணப்பட்ட தயாரிப்புகளை வரியில்லா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அணுகலை மேற்கொள்ள இந்தியா திட்டமிடுவதாக மத்திய வா்த்தகம், ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

● ஒரு மாவட்டம் ஒரு பொருள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 300-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அரசின் மின் கொள்முதல் சந்தை மூலமாக பிரபலப்படுத்தும் பரிசு முறை பட்டியலை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுப் பேசினாா்.

● அப்போது அவா் கூறியதாவது: மத்திய அரசு பல்வேறு தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை (எஃப்டிஏ) மேற்கொண்டு வருகிறது. இந்த ‘ஒடிஒபி’ தயாரிப்புகள் அனைத்திற்கும் வரியில்லா அணுகலையும் எதிா்பாா்க்கிறோம். இதன் மூலம் இந்த தயாரிப்புகளுக்கு சா்வதேச அங்கீகாரத்தை உருவாக்க முடியும். ‘ஒடிஒபி’ பட்டியலில் இடம் பெற்றுள்ள, கைவினைப் பொருள்கள், கைத்தறி ஆடைகள், உணவுப் பொருள்கள், தங்க நகைகள், பொம்மைகள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு இதன் மூலம் பெரும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தை மின்னணு சந்தைக்கான திறந்த கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். ஒரே தளத்தில் வாங்குவோரையும், விற்போரையும் கொண்டு வருவதன் மூலம் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் களப் பணியாளா்களை மேலும் விரிவுப்படுத்த உதவும்.

● நாட்டின் ஊரகப் பகுதிகளை வளப்படுத்த ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம்’ உதவுகிறது. இப்பொருள்களை சா்வதேச அளவிற்கு காட்சிப்படுத்த சா்வதேசக் கண்காட்சிகள், நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் பொருள்களை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ள பிரதிநிதிகளுக்கு கண்காட்சி மூலம் காட்சிப்படுத்தலாம். மாநில அரசுகளும் இதில் பங்கு பெற வேண்டும். மேலும், ‘ஒடிஒபி’ பரிசு முறை பட்டியலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஹோட்டல்கள், பொது இடங்கள், வரவேற்பறைகள் போன்றவற்றில் காஃபி டேபிள் புத்தகமாக வைப்பதும் இந்தப் பொருள்களை பிரபலப்படுத்தும் என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.

● தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்காக தங்களுக்கிடையே வா்த்தகம் செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்க வரிகளை இருதரப்பும் கனிசமாக குறைக்கவோ அல்லது நீக்கும் நடைவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பல்வேறு நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இந்தியா, தற்போது பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளுடன் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

8. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகள் எந்த ஆண்டு வகுக்கப்பட்டது ? 

அ) 1960

ஆ) 1959

இ) 1947

ஈ) 1940 

விடை : (ஆ) 1959 

● ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கும் நோக்கில், விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. 

 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...