Sunday, August 28, 2022

Current Affairs 2022 - August 28 /2022 - TNPSC Group 1, 2/2A & 4

                         GK SHANKAR 
                       August 28 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள்

1. தமிழகத்தில் காவல் துறையில் கருணை அடிப்படையில் எத்தனை பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கியுள்ளார் ? 

அ) 1000
ஆ) 912
இ) 898
ஈ) 781 
விடை : (ஆ) 912 

காவல் துறையில் கருணை அடிப்படையில் 912 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

● இதற்கான நிகழ்வு, சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

● இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது, காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை மலா்ந்த முகத்துடன் வரவேற்று, அவா்களது குறைகளைக் கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளா்கள் நியமிக்கப்படுவா் என்று அறிவிக்கப்பட்டது. 

● இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலா்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.

● இந்த அறிவிப்பின்படி, காவல் நிலைய வரவேற்பாளா் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலா்களின் வாரிசுதாரா்கள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

● முதல்கட்டமாக 457 ஆண்கள், 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரா்களுக்கு தகவல் பதிவு உதவியாளா், காவல் நிலைய வரவேற்பாளா் பணியிடத்துக்கு பணிநியமன உத்தரவுகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பணியை தொடக்கி வைக்கும் அடையாளமாக 8 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். 

●அவா்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள், ரயில்வே காவல் நிலையங்களில் பணியமா்த்தப்படுவா்.

2. மாற்றுத்திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று எந்த மாநில அரசு தெரிவித்துள்ளது ? 

அ) கர்நாடகா

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) தமிழ்நாடு

விடை : (ஈ) தமிழ்நாடு 

மாற்றுத் திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்ட உத்தரவு:-

● மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைநடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

● அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க, முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

3. தமிழகத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் எந்த தேதி வரை நீட்டித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) செப்டம்பர் 09

ஆ) செப்டம்பர் 17

இ) செப்டம்பர் 25 

ஈ) செப்டம்பர் 30 

விடை : (ஈ) செப்டம்பர் 30 

கொப்பரை தேங்காய்க்கான கொள்முதலை தமிழகத்தில் மேலும் இரு மாதங்களுக்கு நீடிக்க மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

● தமிழகத்தில் கடந்தாண்டு பொதுச் சந்தையில் கொப்பரை கிலோ ஒன்றிற்கு ரூ. 140 வரை இருந்த நிலையில் நிகழாண்டில் கிலோவிற்கு ரூ. 70 முதல் 80 ஆக சரிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கிலோ ஒன்றிற்கு ரூ. 52.50 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ. 105.98 ஆக நிா்ணயித்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்கிறது.

● குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல்களை, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃபெட்), தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவை மத்திய அரசின் முகமைகளாக இருந்து மாவட்ட ஆட்சியகங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல்களை மேற்கொள்கிறது.

● இந்த கொள்முதல் கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஜூன் மாதமே முடிவடைந்துள்ளது.

● தற்போது கொள்முதல் காலத்தை இரண்டு மாதங்களுக்கு நீடித்து அதாவது, வருகின்ற செப்டம்பா் 30 ஆம் தேதிவரை தமிழகத்தில் கொப்பரை மற்றும் பந்து தேங்காயை கொள்முதல் செய்ய நாஃபெட், என்சிசிஎஃப் நிறுவனங்களுக்கு மத்திய வேளாண்மை துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுள்ளார் ? 

அ) 48

ஆ) 49

இ) 50

ஈ) 52 

விடை : (ஆ) 49 

● உச்சநீதிமன்றத்தின் 49ஆவது  தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பொறுப்பேற்றுள்ளார்.

● பதவி பிரமாணம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

● குறிப்பு : வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபர்.

● முதலாவது நபர் : எஸ்.எம். சிக்ரி, இவர் நாட்டின் 13 ஆவது தலைமை நீதிபதி ஆவார்.

● இவர் 74 நாட்கள் மட்டுமே இந்த பதவியை வகிப்பார், வரும் நவம்பர் 8 ஆம் தேதி 65 வயதை அடையும் இவர் , அன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளார். 

● இவருக்கு அடுத்ததாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய். சந்திர சூட் தலைமை நீதிபதி ஆவதற்கான வரிசையில் உள்ளார். 

5. பின்வரும் எந்த வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக பதிவு செய்தால் , அவர்களின் பிறந்தநாளில் வாக்காளர் அடையாள அட்டை பரிசாக வீட்டுக்கு அனுப்பபடும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ? 

அ) 17

ஆ) 18

இ) 19

ஈ) 20

விடை : (அ) 17 

● 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும். 

● அவர்களுக்கு 18-வது பிறந்த தினத்தில் பரிசாக வீட்டிற்கு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

6. ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் என்ற ஒற்றை பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் எந்த மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன ? 

அ) செப்டம்பர்

ஆ) அக்டோபர்

இ) நவம்பர்

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

● விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

● பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூா்வாரக் பரியோஜனா-பிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவா் மேலும் கூறியதாவது:

● உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான இதர விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மூன்றில் 2 பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.

● கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

● யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம், டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

● பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போதிலும், கடந்த 1985-ஆம் ஆண்டின் உரங்கள் கட்டுப்பாட்டு உத்தரவின்படி அவற்றின் உள்ளடக்கங்கள் ஒன்றுதான். பல்வேறு வணிகப் பெயா்களில் தயாரிக்கப்படும் உரங்கள், பல்வேறு மாநிலங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உரங்களை மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதன் காரணமாக தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், அவற்றுக்கான போக்குவரத்து மானிய சுமையும் அரசுக்கு அதிகரிக்கிறது.

● உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் செயல்படும் உரத் தயாரிப்பு கூட்டுறவு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ராஜஸ்தான், உத்தர பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றன. ராஜஸ்தானில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ‘சம்பல்’ உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம், தனது தயாரிப்பை உத்தர பிரதேசத்தில் விற்பனை செய்கிறது. இதேபோல், மேற்கு இந்திய பகுதிகளில் தயாரிக்கப்படும் உரங்கள், கிழக்கு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்தப் போக்குவரத்தால் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

● உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தோ்வு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகா்களின் ஆதிக்கமும் இருக்காது என்றாா் அவா்.

7. அகமதாபாதில் சபர்மதி ஆற்றின் குறுக்கே 300 மீ நீளத்தில் கட்டப்பட்டுள்ள அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) ஜகதீப் தன்கர்

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

அகமதாபாதில் சபா்மதி ஆற்றின் குறுக்கே 300 மீட்டா் நீளத்தில் கட்டப்பட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக ‘அடல் மேம்பாலம்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த மேம்பாலத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

● இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வாஜ்பாயிடம் குஜராத் அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு மாநிலத்தில் உள்ள காந்திநகா் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்றாா். தற்போது திறக்கப்பட்டுள்ள அடல் மேம்பாலம் உள்ளூா் மக்கள் வாஜ்பாய்க்கு செலுத்தும் மரியாதை’ என்றாா் அவா்.

● மேலும் : இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலம், அகமதாபாதில் கதா் விழா  நடத்தப்பட்டது.

● இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு நிறைவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வில் ஒரே நேரத்தில் 7,500 பெண்கள் பங்கேற்று ராட்டையை சுழற்றி புதிய சாதனையை படைத்திருக்கின்றனா்.

8. மத்திய அரசின் வடிவமைப்பு சார் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கு எத்தனை நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன ? 

அ) 25

ஆ) 31

இ) 32

ஈ) 40

விடை : (இ) 32 

மத்திய அரசின் வடிவைமைப்புசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் பலன்பெறுவதற்கு 32 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

● இது குறித்து மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

● உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொலைத்தொடா்பு, ஜவுளி, மின்னணு பொருள்கள் உள்ளிட்ட துறைகளில் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தொலைத்தொடா்புத் துறைக்கான உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது வரை 31 நிறுவனங்கள் அத்திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றன.

● இந்நிலையில், தொலைத்தொடா்பு சாதனங்களை உள்நாட்டிலேயே வடிவமைக்கும் நோக்கில் வடிவமைப்பு சாா் ஊக்கத்தொகைத் திட்டத்தையும் தொலைத்தொடா்பு அமைச்சகம் செயல்படுத்தியது. அத்திட்டத்தில் 1 சதவீதம் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

● அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 25-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், மொத்தமாக 32 நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளன. அவற்றில் 17 நிறுவனங்கள் வடிவமைப்புசாா் நிறுவனங்கள். மற்றவை உற்பத்திசாா் நிறுவனங்கள். தொலைத்தொடா்பு சாதனங்களின் வடிவமைப்பிலும் உற்பத்தியிலும் முக்கிய மையமாக இந்தியா மாறவுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. இந்தியாவின் முதல் மின்சார இரட்டை அடுக்குப் பேருந்து எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கொல்கத்தா

இ) அகமதாபாத் 

ஈ) மும்பை 

விடை : (ஈ) மும்பை 

● நாட்டின் முதல் மின்சார இரட்டை அடுக்குப் பேருந்தானது தெற்கு மும்பையில் உள்ள YB மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

● பேருந்தின் பெயர் : Switch EiV 22.

● இது பெஸ்ட் சலோ என்ற செயலி அடிப்படையிலான இருக்கை முன்பதிவு , நேரடிக் கண்காணிப்பு (ம) பணம் செலுத்துதல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

III. விளையாட்டு நிகழ்வுகள் 

10. சுவிட்சர்லாந்தின் லாளேன் நகரில் நடைபெறும் டையமண்ட் லீக் தடகள போட்டியில் முதலிடம் பிடித்துள்ள முதல் இந்திய தடகள வீரர் யார் ? 

அ) நீரஜ் சோப்ரா

ஆ) சுமித் அன்டில்

இ) சுரேஷ் சத்தியா

ஈ) எம்.பி. ஜபிர்

விடை: (அ) நீரஜ் சோப்ரா 

● ஈட்டி எறிதல் பிரிவில் 89.08 மீ தூரம் எறிந்து முதலிடம் பிடித்துள்ளார். 

● குறிப்பு : கௌரவமிக்க டையமண்ட் லீக் தடகளப் போட்டியில் முதலிடம் வென்ற முதல் இந்திய தடகள வீரர். 

11. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (2022) ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீரர்கள் யார் ? 

அ) சாத்விக் ரங்கிரெட்டி 

ஆ) சிராக் ஷெட்டி 

இ) ஆரோன்சியா 

ஈ) அ (ம) ஆ

விடை : (ஈ) அ (ம) ஆ 

● போட்டி நடைபெற்ற இடம் : டோக்கியோ, ஜப்பான். 

● மேலும் இது இந்தியாவின் 13 ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும். 

12. சராஜூவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் (2022) போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லின்தோய் சமைபம் (15 வயது ) வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) தங்கம் 

● உலக ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...