Saturday, May 28, 2022

விஜயநகர் & பாமினி பேரரசு

 



விஜயநகர் & பாமினி பேரரசு

அறிமுகம்

  • 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரான போது தக்காண தென்னிந்தியாவும் நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன

  • அவை

  • தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம் தற்போதைய மகாராஷ்டிரா),

  • துவாரசமுத்திரத்தின் ஹொய்சாலர் (கர்நாடகா),

  • வாரங்கலின் காகதியர் (தற்பொதைய தெலங்கானவின் கிழக்குப்பகுதி),

  • மதுரையின் பாண்டியர் (தென் தமிழ்நாடு) ஆகும்.

  • 1310, 1304 ஆகிய ஆண்டுகளில் மாலிக் காபூரின் இரு படையெடுப்புகளில் பழைய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்டன. சேர்த்து வைக்கப்பட்டிருந்த தங்கள் செல்வங்களின் பெரும் பகுதியையும் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்பின்போது இழந்தன

  • துக்ளக் அரச வம்சம் தனது படைத் தளபதிகளின் மூலம் தென்னந்தியப் படையெடுப்புகளைத் தொடர்ந்து நடத்தியது

  • முகம்மது பின் துக்ளக் (1325-1351) பரந்த தன் அரசை சிறப்பாக ஆட்சி புரிவதற்கென தலைநகரைக் கூட தேவகிரிக்கு மாற்றினார். (தௌலதாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). 

  • ஆனால் அம்முயற்சிகள் தோல்வியடைந்து மக்கள் பெருந்துயரத்திற்கு ஆளாயினர். மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றியபோது அவரின் தென்பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்

  • இதன் காரணமாக 1333இல் மதுரையில் சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவானது

  • 1345இல் வடக்குக் கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைத் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்

  • அவர் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரச வம்சத்தைத் (1347-1527) தோற்றுவித்தார்.

  • இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக 1336ஆம் ஆண்டு விஜயநகர அரசு சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரைத் தலைநகராகக் கொண்டு (தற்போதைய ஹம்பி) தோற்றுவிக்கப்பட்டது

  • அடுத்த நூற்றாண்டுகளில் இவ்வரசுகள் தங்களுக்குள் வளமான ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியைக் கட்டுப்படுத்தவும் இவர்களின் இராணுவத்திற்குத் தேவைப்படும் குதிரைகளை இறக்குமதி செய்யவும், மேற்கு கடற்கரையிலுள்ள கோவா, ஹோனாவர் துறைமுகங்களைக் கட்டுப்படுத்தவும் இடைவெளியில்லாமல் கடுமையாகப் போரிட்டனர்.

ஆதாரங்கள்

  • இக்காலப் பகுதியைப் பற்றி அறிய இலக்கியம், கல்வெட்டு, தொல்பொருள் போன்ற பல வகை ஆதாரங்கள் கிடைக்கின்றன. பாமினி அரசவையிலிருந்த வரலாற்றாசிரியர்கள், பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள் பற்றிப் பாரசீக மொழியில் எழுதிய பல குறிப்புகள் உள்ளன

  • விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவபையுதயம் போன்ற இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

  • 14 முதல் 16ஆம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவிற்கு வந்த பல அயல்நாட்டுப் பயணிகள் தங்கள் பயணங்களைப் பற்றி எழுதியுள்ளனர். அவை அரசியல், சமூகம், பண்பாடு ஆகிய அம்சங்களின் முக்கியத்துவத்தை அறிய உதவுகிறது

  • தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ண தேவராயரின் கீழ் இருந்த நாயங்காரர் முறை பற்றிய ஆர்வ மூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது.

அயல்நாட்டுப் பயணிகள்

  • மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணியான இபன் பதூதா (1333-45), பாரசீகப் பயணியான அப்துர் ரசாக் (1443-45), ரஷியப் பயணியான நிகிடின் (1470-74), போர்த்துகீசிய நாட்டு வணிகர்களான டோமிங்கோ பயஸ், நூனிஸ் (1520-37) ஆகியோரின் குறிப்புகள் குறிப்பிடத்தகுந்த முறையில் அதிகமான செய்திகளை முன் வைக்கின்றன

  • கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்களும் இலக்கியச் சான்றுகள் தரும் செய்திகளோடு அதிகச் செய்திகளை வழங்குகின்றன

  • கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மசூதிகள் என வளமான தொல்லியல் சான்றுகளும் உள்ளன

  • நாணயச் சான்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347-1358)

  • 1347 ஆம் ஆண்டு பாமினி அரசை நிறுவியர் அலாவுதீன் பாமன்ஷா. அவர் ஹசன் கங்கு என்றும் அழைக்கப்பட்டார். அதன் தலைநகரம் குல்பர்கா

  • பாமினி அரசை மொத்தம் பதினான்கு சுல்தானகள் ஆட்சிபுரிந்தனர். அவர்களில், அலாவுதீன் பாமன்ஷா, முதலாம் முகமது ஷா, பிரோஸ் ஷா ஆகியோர் சிறப்பு வாய்ந்தவர்கள்.

  • வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக பாமன் ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினார்

  • சுமூகமான நிர்வாகத்திற்காக தில்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றிய இவர் தன் ஆட்சிப் பகுதியை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். அப்பகுதிகள் தராப்ஸ் எனப்பட்டன

  • பிரிக்கப்பட்ட நான்கு பகுதிகளுக்கும் ஒவ்வொரு ஆளுநர் நியமிக்கப்பட்டார். அவர்களே அப்பகுதியின் படைகளையும் வழிநடத்தினர். குல்பர்கா, தௌலதாபாத், பீடார், பெரார் ஆகியவை அந்த நான்கு மாகாணங்களாகும். மாகாண ஆளுநர்கள் மாகாண நிர்வாகம், வரிவசூல் போன்றவற்றிற்கு முழுப்பொறுப்பாவர்.

  • இவர் தான் பெற்ற வெற்றிகளை நினைவு கூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை இரண்டாம் அலெக்சாண்டர் என்று பொறித்துக் கொண்டார்.

முதலாம் முகமது (1358-1375)

  • பாமன் ஷாவிற்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் முதலாம் முகம்மது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவர் மேற்கொண்டார். அவற்றில் பல ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியோடு தொடர்புடையதாகும்

  • இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் யாரும் அப்பகுதியை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இவர் மேற்கொண்ட கடுமையான போர்களால் பலன் ஏதும் இல்லை

  • 1363 இல் வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். வாரங்கல் போர் நஷ்ட ஈட்டை வாரி வழங்கியது. கோல்கொண்டா கோட்டை அவர் வசமானது. அங்கிருந்த கருவூலங்கள், ரத்தினக்கற்கள் பாமினி அரசின் வசமாயின. அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று.

  • வழப்பறி கொள்ளையர்களுக்கு எதிராக அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தார். நிறுவன மற்றும் புவியியல் ரீதியில் முகமது ஷா ஏற்படுத்திய ஒருங்கிணைப்பே அவர் அரசுக்கு திடமான அடித்தளத்தை உருவாக்கியது

  • அவர் குல்பர்காவில் இரு மசூதிகளை எழுப்பினார். ஒன்று, 1367 இல் கட்டி முடிக்கப்பட்ட பெரிய மசூதி, ஒரு பிரம்மாண்டமான கட்டிடமாக உள்ளது.

பிற்கால ஆட்சியாளர்கள் 

  • முதலாம் முகமது ஷாவிற்குப் பின் சில சுல்தான்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் திறமையற்றவர்கள். தென் பகுதி ஆட்சியாளர்களுடன் அவர்கள் அடிக்கடி போரிட்டனர்

  • 1425இல் வாரங்கல் மற்றும் அதன் கிழக்கிலிருந்த பகுதிகளை ஒரிசாவின் ஆட்சியாளர்கள் கைப்பற்றினர். இந்நிலையில் தலைநகரம் குல்பர்;காவிலிருந்த பகுதிகளை ஒரிசாவின் ஆட்சியாளர்கள் கைப்பற்றினர்

  • இந்நிலையில் தலைநகரம் குல்பர்காவிலிருந்து 1429இல் பீடாருக்கு குல்பர்காவிலிருந்து 1429இல் பீடாருக்கு மாற்றப்பட்டது

  • அதன் பின் ஆட்சிக்கு வந்த மூன்றாம் முகமது (1463-1482) காலத்தில் சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் சிறந்த அரசியல் இராஜதந்திரியாவார்.

அமைச்சர்கள் சபை

  • முதலாம் முகமது சிறந்த அரசு முறை நிர்வாகத்தைப் பின்பற்றினார். தில்லி சுல்தானிய அரச முறையைப் பின்பற்றிச் சிறப்பாக இவர்  செய்த நிர்வாக முறை பிற்கால்த்தில் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது

  • அவர் எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினார். அதன் படி 

  1. வகில்-உஸ்-சுல்தானா: படைத்தலைவர், அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்

  2. வசீர்--குல்: மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர்.     

  3. அமீர்--ஜும்லா: நிதியமைச்சர் 

  4. வசீர்--அஷ்ரப்: வெளியுறவு அமைச்சர், அரசு விவகாரத்துறை அமைச்சர், அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்புடையவர்

  5. நசீர்: நிதித்துறை இணையமைச்சர்.       

  6. பேஷ்வா: அரசப் படைகளின் பொறுப்பாளர்

  7. கொத்வால்: காவல் துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி 

  8. சதர்--ஜஹான்: தலைமை நீதிபதி, சமய அற நிலையைத் துறை அமைச்சர்

முகமது கவான்

  • பாரசீகத்தில் பிறந்த முகமதுகவான் புகழ்பெற்ற இஸ்லமிய சமய வல்லுநராகவும், பாரசீக மொழியில், கணிதத்தில் புலமை பெற்றவராகவும் விளங்கினார். அவர் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் வளங்கினார்

  • பீடாரில் ஒரு மதராசாவை நிறுவிய அவர்  அதில் ஒர் பெரிய அந்நூலகத்தையும் அமைத்தார். நூலகத்தில் 3000 கையெழுத்து பிரதிகள் இருந்தன. இவை இவருடைய புலமையை உணர்த்தவல்லன

  • மூன்றாம் முகம்மதுவின் தலை சிறந்த பிரதம மந்திரியாக விளங்கிய கவான் சிறந்த நிர்வாகத் திறனுடன் பாமினி அரசின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகத் திகழ்ந்தார்

  • சிறந்த நிர்வாக நுணுக்கங்களை அறிந்திருந்த இவர் பாரசீக வேதியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்

  • மாகாண ஆளுநர்களின் அதிகாரத்கை கட்டுப்படுத்திச் சிறப்பான ஆட்சி அமைப்புக்கு கவான் அடித்தளமிட்டார்

  • பாமினி அரசை நிர்வகிக்க வசதியாக நாட்டை எட்டு மாகணங்களாகப் பிரித்தார். ஒவ்வொரு பகுதியும் தனித்தனியே எல்லை வரையறை செய்யப்பட்டு அவற்றிற்கெனத் தனித்தனியே ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்

  • சில மாவட்டங்களை கவானே தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்

  • ஆளுநர்களின் ராணுவ அதிகாராத்தை குறைத்தார். ஒரு ஆளுநருக்கு ஒரு கோட்டையே அனுமதிக்கப்பட்டது, மற்ற கோட்டைகள் சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

  • கவான் அறிமகப்படுத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் அரசின் நிலையை உயர்த்தின

  • கவானின் வளர்ச்சியால் பொறாமை கொண்ட பிரபுக்கள் கவான் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறார் என்னும் போலிக் கடிதத்தை தயாரித்து சுல்தானின் கைகளில் கிடைக்குமாறு செய்தனர். ஏற்கனவே கவான் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணிய சுல்தான் அவர் மீது அதிருப்தி கொண்டார்.

  • அரசனுக்கெதிராகச் செயல்பட்டதாக கவான் கொல்லப்பட்டார். சுல்தான் மூன்றாம் முகம்மதுவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு கவானின் மறைவு காரணமாயிற்று.

  • மூன்றாம் முகம்மது இறந்தபின் பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன்பின் அவரது வம்சத்தைச் சார்ந்த 5 மன்னர்கள் ஆட்சிசெய்தனர்

  • அரசும் நான்கு சுதந்திர அரசுகளாகப் பிரிந்தது (பீஜப்பூர், அகமதுநகர், பெரார், கோல்கொண்டாஅதன்பின் ஐந்தாவதாக பீடார் உருவாக்கப்பட்டது

  • பிற்காலத்தில் பீஜாப்பூர் வலிமையான அரசானது. பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன

  • அதே நேரத்தில் அகமதுநகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின

  • ஆனால் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்கும் வகையில் ஐந்து அரசுகளும் இணைந்து 1565இல் தலைக்கோட்டைப் போரில் (ராக்ஷி தங்கடிபோர்) விஜயநகர அரசைத் தோற்கடித்தன

  • ஆனால் தலைக்கோட்டைப் போருக்குப் பின் தக்காண சுல்தானியங்கள் முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.

பாமினி கூட்டமைப்பு

1526இல் சுல்தானியம் படிப்படியாக ஐந்து சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்ததுஅவை 

  • பீடார்

  • பீஜப்பூர்

  • அகமதுநகர்

  • பெரார்

  • கோல்கொண்டா 

நிஜாம் ஷாஹி வம்சம் - அகமதுநகர் (1490-1633)

  • சினா நதிக்கு அருகிலுள்ள அகமதுநகரில் மாலிக் அகமது நிறுவினார்.

  • அவர் 1499இல் தவுலதாபாத்தில் பெரிய கோட்டையை நிறுவினார்.

  • அகமதுநகர் 1622இல் ஷாஜகானால் கைப்பற்றப்பட்டது

ஆதில் ஷாஹி வம்சம் - பீஜப்பூர் (1490-1686)

  • முக்கிய ஆட்சியாளர்கள் யூசுப் ஆதில் ஷா, முஹம்மது ஆதில் ஷா

  • இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட கோல்கும்பாஸ் இரண்டாவது பெரிய கல்லறை.

  • இது முணுமுணுக்கும் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

  • 1686 இல் அவுரங்கசீப்பால் கைப்பற்றப்பட்டது.

இமாத் ஷாஹி வம்சம் - பெரார் (1490-1574)

  • ஃபதுல்லா கான் இமாத்-உல்-முல்கால் நிறுவப்பட்டது

  • அகமதுநகர்  ராஜ்ஜியத்தின்  நிஜாம் ஷாஹி ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.

பாரிட் ஷாஹி - பீடார்  (1528-1619)

  • முக்கியமான ஆட்சியாளர் ஆதில் பாரிட்.

  • பிஜாப்பூரைச் சேர்ந்த ஆதில் ஷாஹி கைப்பற்றினார்.

குதுப் ஷாஹி-கோல்கொண்டா (1518-1687)

  • குலி குதுப் ஷா நிறுவினார்.

  • அவர் கோல்கொண்டா கோட்டையைக் கட்டி அதை தலைநகராக மாற்றினார்.

  • முஹம்மது குலி குதுப் ஷா ஹைதராபாத்தை தலைநகராக மாற்றினார்.

  • அவர் சார்மினாரை நிறுவினார்.

  • ஔரங்சீப் இதை 1687 இல் கைப்பற்றினார்.

கோல்கொண்டா கோட்டை

  • ராஜா கிருஷ்ண தேவ் என்ற வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்ட காகத்திய வம்ச அரசர் கட்டிய கோட்டை இது.

  • 1495-1496இல் இக்கோட்டை சுல்தான் குலிகுதுப்ஷாவிற்கு ஒரு ஜாகீராகத் (நிலமாக) தரப்பட்டது

கோல்கொண்டா கோட்டை

  • அவர் அக்கோட்டையைக் கருங்கற்கள் கொண்டு புனரமைத்தார். அதன்பின் இக்கோட்டைப் பகுதி இருந்த நகரம் முகம்மது நகர் எனப்பட்டது.

  • பிற்காலத்தில் பாமினி அரசன் கைவசமாகி, அதன்பின்னர் குதுப்ஷாகி வம்ச அரசின் தலைநகரானது

  • குதுப்ஷாகி வம்சத்தின் ஐந்தாவது சுல்தானான முகம்மது குலி குதுப்ஷா காலத்தில் கம்பீரமான கோட்டையாக கோல்கொண்டா திகழ்ந்தது.

  • 17ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைரச் சந்தையாகத் திகழ்ந்தது

  • கோஹினூர்வைரம் உட்பட மிகச்சிறந்த வைரங்களை உலகிற்கு வழங்கியது.

  • கோல்கொண்டா கோட்டை ஹைதராபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலை மீது 120 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

  • கோல்கொண்டாகோட்டை அதன் ஒலி அம்ச அடிப்படையில் சிறந்த கட்டடக் கலையின் அம்சமாகும்.

  • இக்கோட்டையின் உயர்ந்த பகுதி பாலா ஹிசார் என்றழைக்கப்படுகிறது. இதில் ரசகிய நிலத்தடி சுரங்கப்பாதை உள்ளது. அது தர்பார் அறையிலிருந்து மலையின் கீழுள்ள அரண்மனைக்குச் செல்வதாகச் சொல்லப்படுகின்றது

  • கோல்கொண்டா கோட்டையில் குதுப்ஷாகியின் கல்லறையும் உள்ளது. இதில் இருவிதத் தனி வழிகள் உள்ளன. இவை கோல்கொண்டா கட்டடக்கலையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகத் கருதப்படுகிறது

  • பீரங்கிகள், பாலங்கள், அரச அரண்மனைகள், அறைகள், மசூதிகள், தொழுவங்கள் உட்பட நான்கு சிறிய கோட்டைகளும் இதனுள் அடங்கும்

  • இக்கோட்டையின் நுழைவாயில் பகுதி பதேதர்வாசா () வெற்றிநுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.

  • ஒளரங்கசீப் எட்டு மாதங்கள் முற்றுகையிட்டு 1687இல் ஆப்கானிய வாசல் காப்பாளரின் துரோகம் காரணமாக கோல்கொண்டா கோட்டையை அதன் ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார்.

கல்வி

  • பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா, அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் மூல்தானில் கல்வி கற்றார்.

  • அவர் அரசரான பின்னர் தமது மகன்கள் கல்வி கற்பதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவருடைய மகன் முதலாம் முகமது கல்வி கற்பதை ஆதரித்தவராவார்

  • பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் போர்வீரர்களுக்கான கலைகளில் பயிற்சி பெறுவதற்காகப் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுததினார்

  • பாமினி அரசின் எட்டாவது சுல்தானான சுல்தான் பிரோஸ், மொழியியல் அறிஞரும் கவிஞரும் ஆவார்.

  • இவருக்குப் பின்வந்த அரசர்கள் குல்பர்கா, பீடார், தௌலதாபாத், காண்டகார் ஆகிய இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர்

  • பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற, மகமது கவானின் மதரசா (கல்விநிலையம்;) 3000 கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட பெரிய நூலாகத்தைக் கொண்டிருந்தது, இவையாவும் கல்விக்கும், புலமைக்கும் கவான் அளித்த முக்கியத்துவத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றன.

விஜயநகரப் பேரரசு

  • சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் ஹொய்சாள அரசிடம் சில காலம் பணி செய்த பின்னர் தங்களை சுதந்திர அரசர்களாக நிலைநிறுத்திக் கொண்டு 1336இல் புதிய அரசுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

  • இந்நிகழ்வு ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர், மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும்.

  • தொடக்க தலைநகரம்- அனகொண்டி 

  • மாற்றப்பட்ட தலைநகரம் - ஹொசபட்னா (ஹம்பிக்குஅருகே

  • தலைநகரம் விரிவுபடுத்தப்பட்ட பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது

  • 1346ஆம் ஆண்டு ஹரிஹரரின் முடிசூட்டுவிழா கொண்டாடப்பட்டது

  • விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தைத் தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர்.

  • புகழ்பெற்ற சைவத் தறவியும், சமஸ்கிருத அறிஞருமான வித்யாரண்யர்(மாதவர்) அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரிஹரரும் புக்கரும் சுல்தான் துக்ளக்கிடம் செய்துவந்த பணியிலிருந்து விலகி, சுல்தானால் சிறைபிடிக்கப்பட்டபோது முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த இவர்கள் மீண்டும் இந்துக்களாக மாறினர் என்று கூறப்படுகிறது.

  • பதிமூன்றாம் நூற்றாண்டின் பெரிய அரசுகளான தமிழ்நாட்டில் பாண்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஹொய்சாளர், ஆந்திர காகத்தியர் ஆகிய மூன்று அரசுகளும் பதினான்காம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் தில்லி சுல்தானியத்தின் படையெடுப்புகளால் அழிவுற்று பெரும் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இச்சூழ்நிலை சங்கம வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர் முதலான ஐந்து சகோதரர்களுக்கு தங்கள் பகுதிகளை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பினை வழங்கியது

  • விஜயநகரஅரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது

  1. சங்கம வம்சம் (1336-1485)

  2. சாளுவ வம்சம்(1485-1505)

  3. துளுவ வம்சம் (1505-1570)

  4. ஆரவீடு வம்சம்(1570-1650) 

  • விஜயநகர அரசு உருவான நாற்பதாண்டுகளுக்கு உள்ளாகவே ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு திசைகளில் மேற்கொண்ட படையெடுப்புகளின் விளைவாகக் குறுநில அரசு என்ற நிலையிலிருந்து பெரியஅரசாக மாறியதுமுதலில்

  • கர்நாடகாவில் ஹொய்சாள அரசின் இதயமாக இருந்தபகுதிகள் விஜயநகரோடு இணைக்கப்பட்டன.

  • தொடர்ந்துகர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அவை இறுதிவரை நாட்டின் முக்கியப் பகுதியாகவே இருந்தன. பலதுறைமுகங்களைச் சென்றடையும் வாய்ப்பினை இப்பகுதிகொண்டிருந்ததால் பிரதானிகள் அல்லது ஆளுநர்கள் இப்பகுதியின் நிர்வாகத்தில் அக்கறைசெலுத்;தினர்

  • முதலாம் புக்கரின் ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது. தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டைமண்டலப் பகுதியை சம்புவராயர் ஆண்டுவந்தனர்

  • இளவரசர் கம்பணர்-ஆல் (வழக்கமாக குமார கம்பணர் என்பர்) தன் நம்பிக்கைக்குரிய தளபதி மாரையா நாயக்கரின் உதவியுடன் இப்பணியை வெற்றிகரமாக முடித்தார். மேலும் மதுரைசுல்தானை 1370இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தானிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பெருமையும் குமாரகம்பண்ணாவைச் சாரும்

  • இச்செய்தி குமாரகம்பண்ணாவின் மனைவி கங்காதேவி சமஸ்கிருத மொழியில் எழுதியமதுராவிஜயம்" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.; 

  • 1500 வாக்கில் பாண்டியநாடு விஜயநகர அரசின் ஒருபகுதியானது. அதுவரையிலும் தமிழகத்தின் வடபகுதிகளும் காவேரிவடிநிலப் பகுதிவரையிலான மத்தியப் பகுதிகளுமே சங்கம-சாளுவவம்ச அரசுகளின் நேரடி நிர்வாகத்தின் கீழிருந்தன.

சங்கம வம்சம்

இரண்டாம் ஹரிஹரர்

  • புக்கர் இயற்கை எய்;திய போது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச்சென்றார்

  • பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகியபகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்

முதலாம் தேவராயர்

ஹரிஹரருடைய மகன் முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்

இரண்டாம் தேவராயர்

  • சங்கம வம்ச அரசர்களுள் மிகச் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர் ஆவார்.

  • தன்னுடைய குதிரைப் படையின் வலிமையைப் பெருக்குவதற்காகப் பயிற்சி பெற்ற முஸ்லீம் குதிரைப்படை வீரர்களைத் தனது படைகளில் சேர்த்துக் கொண்டார்.

  • இரண்டாம் தேவராயரின் காலத்தில் இங்கு வந்த பாரசீகநாட்டின்  தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமரின் அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகைதந்தார். இரண்டாம் தேவராயர் மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்று குறிப்பிடுகின்றார். இரண்டாம் தேவராயர் இலங்கை அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்

சாளுவ வம்சம்

  • காலத்தின் நகர்வில் அரசியல் அதிகாரம் நம்பிக்ககைகுரிய தளபதி சாளுவ நரசிம்மரின் கைகளுக்குச் சென்றது.

  • அவர் கஜபதிகளிடமிருந்து நாட்டைக் காத்து, ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை மீட்டார்

  • 1485இல் அரசாட்சி கைப்பற்றி தன்னையே அரசரென அறிவித்தார்.

  • அவருடைய தளபதியும் மாபெரும் போர்வீரருமான நரச நாயக்கர் அவருக்குத் துணை நின்றார். 1491இல் சாளுவ நரசிம்மர் மரணமடைந்தார். அதற்கு முன்பாக தனது இளம் வயது மகன்களை நரசநாயக்கரின் பாதுகாப்பில் விட்டுச் சென்றார்

  • உண்மையான ஆட்சி அதிகாரம் தனது கைகளுக்கு வரப்பெற்ற நரசநாயக்கர் தனது மரணம் வரையிலும் நாட்டைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1505இல் அவருடைய மூத்தமகன் வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின்; ஆட்சியைத் தொடங்கிவைத்தார்.

விஜயநகர்துளுவ & ஆரவீடு

துளுவ வம்சம் (1505 – 1570)

  • வீரநரசிம்மராவ் என்பவரால் 1505ல் துளுவ மரபு தோற்றுவிக்கப்பட்டது. விஜய நகரத்தின் மிகச் சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவராயர் துளுவமரபைச் சேர்ந்தவர்.

  • கிருஷ்ணதேவராயர் விஜயநகர அரசர்களில் மகத்தானவராகக் கருதப்படுகிறார். துனது தந்தையும் அண்ணனும் அமைத்துக் கொடுத்த வலுவான ராணுவ அடித்தளத்தின் மீது அவர் ஒரு பேரரசைக் கட்டினார்.

  • தனது நாட்டின் பெருமைக்குக் குறை ஏற்படாமரலிருக்கப் பல படையெடுப்புகளை மேற்கொண்டார்

  • இதனைத் தொடர்ந்து அவர் இரு முனைகளில் போரிட வேண்டியிருந்தது

  • ஒன்று பரம்பரை எதிரிகளான பாமினி சுல்தான்களுடன்,மற்றொன்று ஒரிசாவின் கஜபதி அரசர்களுடன்

  • தனது ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தார்.

  • அவருடைய கிழக்குத் திசை படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் பல கட்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.

  • ஒரு சில படையெடுப்புகளின போது, மலபார், கொங்கணக் கடற்கரைப் பகுதிகளில் தங்களுடைய அதிகாரத்தை நிறுவுவதற்கு முயன்று கொண்டிருந்த போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்தனர். மேலும் பத்கல் என்னும் இடத்தில் கோட்டை கட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றனர்.

பாமினியை விரட்டுவது

  • படையெடுத்துவரும் பாமினி படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது. அச்சமயம், பாமினி அரசு மறைந்து அங்கு தக்காண சுல்தானியங்கள் நிறுவப்பட்டிருந்தன.

  • யூசுப் ஆதில் ஷா 1509-10 இல் இறந்தார். இது தெற்கே விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு எதிராக கொள்ளையடிக்கும் பயணமாக இருக்கலாம்.

  • 1501ஆம் ஆண்டில் சுல்தான் மஹ்மூத் ஷா பஹ்மானி- II அவர்களால் இந்த பயிற்சி தொடங்கப்பட்டது. இதில் அனைத்து பஹ்மானி தலைவர்களும் பங்கேற்றனர்.

  • திவானி  என்ற  இடத்தில்  நடைபெற்ற போரில்  கிருஷ்ண தேவராயர் முஸ்லீம் படைகளை இறுதியாக முறியடித்தார்.

  • இதனால், பிஜப்பூர் சுல்தானுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது  பீஜப்பூரின் சுல்தான் இஸ்மாயில் அடில் ஷா, கிருஷ்ண தேவராயர் mtiu முறியடித்து, 1520இல்  ரெய்ச்சூர் நகரைக்  கைப்பற்றினார்.

  • பீஜப்பூர் அரசின் மீதான வெற்றி அவருக்குயவன ராஜ்ய ஸ்தபநாச்சார்யா’ (யவனா அல்லது முஸ்லிம் வம்சத்தை நிறுவுபவர்) என்ற பட்டத்தை பெற்றது. பின்னர் பீடார் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.

  • அமீர் பாரிட் ஆரம்பத்தில் பாமினி வம்சத்தைச் சேர்ந்தவர்களுடன் அரியணையில் ஆட்சி செய்தார். இருப்பினும், கடைசி பாமினி சுல்தான் பிதாரிலிருந்து தப்பி ஓடிய பிறகு, அவர் நடைமுறையில் சுதந்திரமாக இருந்தார்.

  • பாமினி சுல்தான் மஹ்மூத் ஷா தூக்கி எறியப்பட்டு அவரது அமைச்சரால் சிறையில் அடைக்கப்பட்டார். கிருஷ்ணதேவராயர் சுல்தானை விடுவித்து அவரை அரியணைக்கு கொண்டுவந்தார்.

  • 1526ஆம் ஆண்டு வாக்கில் பாமினி அரசு ஐந்து சுதந்திர சுல்தானியங்களாக சிதறுண்டன. அகமது நகர், பீஜப்பூர், பெரார், கோல்கொண்டா, பீடார் என்ற ஐந்தும் தக்காண சுல்தானியங்கள் என்று அழைக்கப்பட்டன.

போர்த்துகீசியம் மற்றும் ஒரிசா

  • போர்ச்சுகீசியர்களுடன் அவர் நட்புறவையே மேற்கொண்டார். கிருஷ்ண தேவராயரின்  அவைக்கு அல்புகர்க்  தனது தூதுவர்களை அனுப்பி வைத்தார்.

  • போர்த்துகீசிய ஆளுநர் அல்புகர்கி, காலிகட்டின் ஜாமோரினுக்கு எதிரான விஜயநகர் ஆதரவுக்கு ஈடாக பஹ்மானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணா தேவாவுக்கு உதவி வழங்க ஒரு முகவரை அனுப்பினார்.

  • அரபு மற்றும் பாரசீக குதிரைகளை விஜயநகருக்கு மட்டுமே வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

  • கிருஷ்ண தேவராயாவின் இரண்டாவது போர்த்துகீசிய தூதர் gj;fலில் ஒரு கோட்டையை அமைக்க வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை புதுப்பித்து, அவரது பணியில் வெற்றி பெற்றார். 1510 இல் அல்புகர்கி கோவாவைத் தாக்கி கைப்பற்றிய பின்னர் இது  நிகழ்ந்தது.

  • அவருடைய கிழக்குத் திசை படையெடுப்பின்போது கஜபதி அரசர்களின் வசமிருந்த உதயகிரி கோட்டையைப் போன்று பல கோட்டைகள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் பல கட்வெட்டுகள் தெளிவாக விளக்குகின்றன.

  • 1515 ஆம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் பொட்னூரைத் தேர்ந்தெடுத்து, தனது வெற்றிகளை விவரிக்க தூணைக் கட்டினார்.

  • கிருஷ்ணதேவராயர் கஜபதி ஆட்சியாளரான பிரதாபருத்ராவை தோற்கடித்து தெலுங்கானா முழுவதையும் கைப்பற்றினார்.

  • பிரதாபருத்ரா சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி, தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க முன்வந்தார். இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, கிருஷ்ணதேவராயர் பிரதாபருத்ராவிடம்  இருந்து கைப்பற்றிய பிரதேசத்தை திருப்பி அளித்தார்.

தலைக்கோட்டைபோர்(1565)

  • கிருஷ்ணதேவராயர் இறந்த போது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் அவருடைய சகோதரர் அச்சுததேவராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார்

  • ஆனால் விரைவிலேயே வாரிசு உரிமைப் பிரச்சனை தலை தூக்கியது. கிருஷ்ணதேவராயரின் மருமகனான ராமராயர் அச் சிறுவயது இளவரசனுக்குப் பட்டம் சூட்டுவதன் வழியாக அரசியல் மேலாதிக்கம் செலுத்தவிரும்பினார்.

  • இருந்தபோதிலும் அச்சுதராயருக்கு செல்லப்பா (சாளுவநாயக்கர் என்றும் அறியப்படுவர்) என்பாரின் ஆதரசு இருந்தது

  • அக்காலகட்டத்தில் சிறப்பிடம் வகித்த இவர் தமிழகத்தின் பெரும்பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். காலப்போக்கில் இவரே கிளர்ச்சியில் ஈடுபட அச்சுதராயர் பெரும்படையோடு தென்னகம் வந்து இவரைஅடக்கினார்

  • அச்சுததேவராயர் பாமினி சுல்தான்களோடும் சில போர்களை மேற்கொண்டார். 1542இல் அவர் மரணமடைந்தபோது அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் அரச பதவியேற்று ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆண்டார்(1542-70).

  • ஆனால் உண்மையான அதிகாரம் ராமராயரின் கைகளில் இருந்தது. பல நெருங்கிய உறவினர்களின்(ஆரவீடு வம்சாவளியினர்) ஆதரவு அவருக்கு இருந்தது, அரசின் பல முக்கியப் பொறுப்புகளில் அவர் தன் உறவினர்களை அமர்த்தினார்.

  • போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார்

  • சிலகாலம் கழித்து கோல்கொண்டா,அகமது நகர் சுல்தான்களுக்கு எதிராக பீஜப்பூரோடு கைகோர்த்தார். இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி விஜயநகருக்கு எதிராகப் பெரும் பகையை வளர்த்தது.

  • இதன் விளைவாக, தக்காண சுல்தான்கள் தங்களது பரஸ்பர பகையை மறந்து ஒன்றுபட்டு, பொது எதிரிக்கு எதிராக இறுதிப்போர் புரிய கைகோத்தனர்

  • ஜனவரி 23,1565 இல் தலைக்கோட்டை அல்லது ராக்சஷி - தங்கடி போர் நடைபெற்றது. தனது வயது முதிர்வையும் பொருட்படுத்தாது ராமராயரே படைப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்று தனது சகோதரர்கள், ஏனைய உறவினர்களோடு போர்க்களம் புகுந்தார்

  • போரின் இறுதிக் கட்டத்தில் விஜயநகரம் தோல்வியடைந்தது. ராமராயர் கைது செய்யப்பட்டு உடனடியாகக் கொல்லப்பட்டார்.

  • பொதுவாக இப்போர் விஜயநகர் அரசின் முடிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது

  • ராமராயரின் சகோதரர் திருமலை 1570இல்; தன்னை அரசராக அறிவித்து நான்காவது அரச மரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.

மத்திய நிர்வாகம்

  • அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராவார்.

  • அவரே படைத் தளபதியும் ஆவார்

  • அவருக்கு  ஒரு பிரதமர்  தலைமையிலான  பல உயர்மட்ட அதிகாரிகள்  கொண்ட அமைச்சர்கள் சபை  உதவியது

  • முதலமைச்சர் மகாபிரதானி என்றழைக்கப்பட்டார்.

  • மிக முக்கியமான விடயங்கள் குறித்து விவாதிக்க வெங்கடவிலாசா மண்டபத்தில் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன

  • ராஜாவின் வாய்வழி ஒழுங்கை ராயசானி பதிவு செய்தார்.

மாகாண நிர்வாகம்

  • பேரரசு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை

  • மண்டலம்

  • நாடு

  • ஸ்தலம்

  • கிராமம்

  • மண்டலத்தின் ஆளுநர் மண்டலேஸ்வரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார்

  • தளவாய் (தளபதி), வாசல் (அரண்மனைப் பாதுகாவலர்), ராயசம் (செயலர் () கணக்கர்), அடைப்பம் (தனி உதவியாளர்), காரியகர்த்தா(செயல் முகவர்) போன்ற கீழ்நிலை அதிகாரிகளுக்கு இவரே தலைமையாவார்.

  • விஜயநகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.

  • கிராமத்தின் நிர்வாகம் கவுடா என்ற கிராமத் தலைவரால் கவனிக்கப்பட்டது.

  • நில வருவாய் பிரதான வருமான ஆதாரமாகக் கருதப்பட்டது.

  • கடமாய், மாகமாய், கண்ணிகாய், கட்டயம், கனம், வரம், போதம், வாரி, பட்டம், ஈராய், கட்டணம் போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டன.

நில வருவாய்

  • நிலங்கள் கவனமாக கணக்கெடுக்கப்பட்டன.

  • உற்பத்தியின் அடிப்படையில் வரி வசூலிக்கப்பட்டது.

  • மக்களின் மீது வரி விதிப்பின் மூலமே அரசு வருமானத்தைப் பெற்றது.

  • விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நில வரியாக வசூலிக்கப்பட்டது

  • அரசின் செலவுகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன.

அவை

  • ராஜாவின் தனிப்பட்ட செலவு

  • குதிரைகளைப் பராமரித்தல்

  • இராணுவ வெற்றிகள்

  • பேரரசின் பாதுகாப்பு

  • ஆகியவை அமுக்தமால்யாதா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • வருவாய் துறை அதவனம் என்று அழைக்கப்பட்டது.

உள்ளூர் மற்றும் நீதி நிர்வாகம்

  • கிராம விவகாரங்கள் அயகர்கள் எனப்படும் 12 உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டன.

  • வரி இல்லாத நிலங்கள் மன்யாம்ஸ் என்று அழைக்கப்பட்டன.

  • சாதி விதிகளை  மற்றும் வர்த்தக விதிகளை மீறுதல் போன்ற சிறிய குற்றங்களை கிராம நீதிமன்றங்கள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் விசாரித்தன.

  • தர்மசாஸ்திரம் பின்பற்றப்பட்ட உள்ளூர் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளது.

  • நீதித் துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இராணுவம்

  • விஜய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது.

  • குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய படைகளை கொண்டிருந்தது.

  • அயல்நாட்டு வணிகரிடமிருந்து உயர்ரக குதிரைகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டன.

  • ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டனர்.

  • இராணுவத் துறையை காந்தாச்சார்யா பராமரித்தார்.

  • படைவீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது.

இலக்கியம்

  • கிருஷ்ண தேவராயர் கலை, இலக்கிய புரவலாராக திகழ்ந்தார்.

  • எனவே ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.

  • அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர்.

  • ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.

  • அல்லசானி பெத்தண்ணா, ஆந்திரகவிதா பிதாமகர் என்று  புகழப்ட்டார்.

  • அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும்  ஹரிகதாசாரதம் என்பதாகும்.

முக்கியமான புத்தகங்கள் மற்றும் அதன்  ஆசிரியர்கள்

  • நந்தி திம்மனா - பாரிஜாத பஹாரணம்

  • மாதைய்யா - ராஜசேகரசரிதம்

  • துராஜதி - கலாஹஸ்தி மகாதியம்

  • அய்யலராஜு ராமபத்ரா - சாரமதசர சங்கிரஹம்

  • பிங்காலி சூரனா - பிரபாவரி பிரதியும்மா

  • தெனாலி ராமகிருஷ்ணன் - பாண்டுரங்க மகாதியம்

  • ராம்ராஜ பூசன் - காவ்யலங்கரா

சமூக வாழ்க்கை

  • பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு ஜாதிப் பிரிவுகள் விஜயநகர சமூகத்தில் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தமது மனுசரித்தில் குறிப்பிட்டுள்ளார்

  • விஜயநகரின் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர சமூக வாழ்க்கை பற்றியும் அயல்நாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

  • பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை மக்கள் அணிந்தனர்.

  • வாசனைப் பொருட்கள், மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர்.

  • செல்வந்தர்களின் அழகான வீடுகள் அவற்றில் பணிபுரிந்த ஏராளமான பணியாளர்கள் பற்றிய விவரங்களை பயஸ் குறிப்பிட்டுள்ளார்.

  • அடிமைகள் பற்றி நிக்கோலோ டி கோண்டி தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.

  • நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும்.

  • சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். விருப்பாட்ஷா அவர்களின் குலதெய்வம்.

  • மற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள், ராமானுஜரின் ஸ்ரீவைணவம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கியது.

  • ஆனால், எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர்.

  • மக்கள் அனைவரும் சமய சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்றுத்திகழ்ந்தனர் என போர்போசா குறிப்பிட்டுள்ளார்.

  • நிர்வாகத்தில் முஸ்லீம்களும் இடம்பெற்றிருந்தனர். மசூதிகள் கட்டிக்கொண்டு தொழுகை நடத்தவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  • ஏராளமான பெண்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாகவும் நாட்டிய மகளிராகவும், பல்லக்கு சுமப்பவர்களாகவும் இருந்தனர் என நூனிஸ் கூறுகிறார்

  • ஆலயங்களுக்கு சேவை செய்த நாட்டிய மகளிரும் இருந்தனர்.

  • அரச குடும்பங்களில் பல தாரமணம் வழக்கத்திலிருந்தது.

  • 'சதி" வழக்கம் பெருமையாக கருதப்பட்டது. நூனிஸ் அதுபற்றி விவரமாகக் கூறியுள்ளார்.

  • குமார காம்பணரின் மனைவி கங்காதேவி மதுராவிஜயம் என்ற நூலை எழுதினார்.

  • ஹன்னம்மா, திருமலம்மா இருவரும் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்புலவர்கள்.

  • தேவதாசி முறை வழக்கத்திலிருந்ததாக பயஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலை

  • அக்கால உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு விளங்கியது என்ற செய்தியை அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

  • மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை.

  • நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்து விஜயநகர ஆட்சியாளர்கள் வேளாண்மை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தனர்.

  • புதிய ஏரிகள் வெட்டப்பட்டன.

  • துங்கபத்திரா போன்ற நதிகள் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டப்பட்டன.

  • கால்வாய்கள் அமைக்கப்பட்டதைப் பற்றி நூனிஸ் கூறியுள்ளார்.

  • பல்வேறு தொழில்களும் சிறந்து விளங்கின. அவை ஒவ்வொன்றுக்கும் கழகங்கள் இருந்தன.

  • உலோகத்தொழில் செய்வோரும் பிற கைவினைஞர்களும் அக்காலத்தில் தழைத்தோங்கினர்.

  • கர்நூல் அனந்தபூர் மாவட்டங்களில் வைரச்சுரங்கங்கள் இருந்தன.

  • விஜயநகரம் ஒரு புகழ்மிக்க வர்த்தக மையமாகவும் விளங்கியது.

  • முக்கிய தங்க நாணயம்  வராகன் என்பதாகும். ஆனால் எடைகளும் அளவைகளும் இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்தன.

  • உள்நாட்டு, அயல்நாட்டு வர்த்தகம் பெருகியதால் நாட்டில் பொதுவாக செல்வ செழிப்பு காணப்பட்டது.

  • மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன.

  • அவற்றில் குறிப்பிடத்தக்கது கண்ணனூர் துறைமுகமாகும்.

  • அராபியா, பாரசீகம், தென் ஆப்பிரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது.

பண்பாட்டுப் பங்களிப்பு

  • விஜய நகர ஆட்சியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தது.

  • ராயகோபுரங்கள் எனப்படும் நுழைவாயில் கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகங்களில் சிற்பத்தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்கள் ஆகியன விஜயநகர கட்டிடக் கலையின் சிறப்பு அம்சங்களாகும்.

  • மண்டபத்தூண்களில் வடிக்கப் பட்டுள்ள சிற்பங்கள் கலைநயமிக்கவை. இந்த தூண் சிற்பங்களில் பெரும்பாலும் குதிரை உருவங்கள் இடம்பெற்றிருந்தன.

  • பெரிய ஆலயங்களில் நூற்றுக்கால் மண்டபங்களும், ஆயிரங்கால் மண்டபங்களும் எழுப்பப்பட்டன.

  • விஜய நகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாகக் காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் விஜய நகரப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

  • விட்டலசுவாமி மற்றும் ஹசர ராமசுவாமி ஆலயங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவை.

  • திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள ராய கோபுரங்கள் விஜயநகர காலத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன.

  • பின்னர், நாயக்கர் காலத்திலும் இத்தகைய கலைப்பணி தொடர்ந்தது. திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப் படிமங்கள் சிறந்த  எடுத்துக்காட்டாகும்.

  • விஜய நகர அரசர்களால் இசையும் நடனமும் ஆதரிக்கப்பட்டது.

  • வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் அந்தந்தப் பகுதிகளில் புகழ்பெற்றிருந்தன.



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...