Saturday, October 1, 2022

Current Affairs 2022 - October 01 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                  OCTOBER 01 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பின்வரும் எங்கு ரூ.1,100 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது ? 

அ) மதுரை

ஆ) கோவை

இ) தேனி

ஈ) செங்கல்ப்பட்டு 

விடை : (ஈ) செங்கல்பட்டு 

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் பெகாட்ரான் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 

● இந்த ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

முதல்வரின் உரை :  தைவான் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெகாட்ரான் நிறுவனம் தமிழகத்தில் கைப்பேசி உற்பத்தியைத் தொடங்குவதை வரவேற்கிறேன். 

● உலகப் புகழ்பெற்ற நிறுவனம் இங்கு உற்பத்தியை தொடங்கியிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை. இதுபோன்ற பல நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.

● இந்த தொழிற்சாலை மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அவா்களில் பெருமளவு பெண்கள். 

● பெண்களை சமூக, பொருளாதார வளா்ச்சி கொண்டவா்களாக மாற்றும், உயா்த்தும் ஆட்சியாக, திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. பெண்கள் அதிகமாக, நிறுவனங்களில் பணியாற்றச் செல்லும் மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.

●  புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகாட்ரான் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கி இருப்பது, தமிழகத்தில் முதலீட்டாளா்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதைக் காட்டுகிறது.

2. காந்தி ஜெயந்தி தினத்தன்று எத்தனை கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது ? 

அ) ரூ. 2 கோடி

ஆ) ரூ. 2.5 கோடி

இ) ரூ. 1 கோடி

ஈ) ரூ. 1.5 கோடி

விடை : (இ) ரூ. 1 கோடி 

ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி, கைத்தறிப் பொருள்களை விற்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

● இதற்கான புதிய திட்டமும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2-ஆம் தேதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

● அதன்படி, அமெட் பல்கலைக்கழகத்துடன், தமிழ்நாடு காதி மற்றும் கைத்தறித் துறை இணைகிறது. காந்தி ஜெயந்தி தினத்தன்று, அமெட் பல்கலைக்கழகத்தின் சுமாா் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலா்கள் இணைந்து கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக காதி, கைத்தறிப் பொருள்களை விற்பனை செய்யவுள்ளனா்.

● இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமாக கைத்தறி, கதா்த் துறையின் பொருள்களை விற்கும் திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைக்கவுள்ளாா்.

●  4 ஆயிரம் மாணவா்களைக் கொண்டு ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருள்களை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மத்திய அரசின் சிறுநகரங்களுக்கான சிறந்த தூய்மை நகரம் விருது பெற்றுள்ள தமிழகத்தின் நகரம் எது ? 

 அ) ஆத்தூர்

ஆ) சிவகங்கை

இ) தாம்பரம்

ஈ) இராமேசுவரம் 

விடை : (ஈ) இராமேசுவரம் 

நிகழாண்டின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் தொடா்பான தூய்மை உரையாடல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என மூன்று நாள் நிகழ்வு வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் செப்டம்பா் 29, 30 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது.

● குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கிவைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகா்ப்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

● மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்கள், மாநகராட்சி மேயா்கள், நகராட்சித் தலைவா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 

● மாநில உள்ளாட்சி, நகரங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 1,800 போ் இதில் கலந்து கொண்டனா். தமிழக நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை செயலா் சிவ் தாஸ் மீனா கலந்து கொண்டு பேசினாா்.

● இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை வழங்கி கௌரவிக்கிறாா்.

● சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

● இதில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுகாதரா தூய்மைக்கான விருதுகளில் சிறப்பு விருதாக ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு நகராட்சிதான் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதை ராமேசுவரம் நகராட்சித் தலைவா் கே.இ.நாசா்கான் பெற்றுக் கொண்டாா்.

காரணம் : ராமேசுவரத்திற்கு வரும் பக்தா்களுக்கும் குறிப்பாக வட இந்திய பக்தா்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வசதிகள்; அக்னி தீா்த்த கடற்கரையை சுகாதாரத்துடன் தூய்மையாக வைத்தது; ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி குப்பைகள் இல்லாதது மட்டுமல்லாது, பசுமையாக வைத்தது போன்றவற்றோடு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா், குண்டும் குழியும் இல்லாத சாலைகள் என உள்ளூா் மக்களின் தேவையையும் பூா்த்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தாக்க குறியீட்டில் (GII) இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) 81

ஆ) 73

இ) 52

ஈ) 40 

விடை : (ஈ) 40 

● அறிக்கை வெளியீடு : உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு.

● இந்த குறியீட்டில் தலைசிறந்த நாடுகள் பட்டியலுக்குள் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். 

● குறியீட்டில் முதல் மூன்று இடத்தில் உள்ள நாடுகள் : ஸ்விட்சர்லாந்து,  அமெரிக்கா, ஸ்வீடன். 

5. இந்தியாவில் அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை தொடக்கி வைத்தவர் ? 

அ) நரேந்திர மோடி

ஆ) திரௌபதி முர்மு

இ) யு.யு. லலித் 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (அ) நரேந்திர மோடி 

● தில்லியில் நடைபெறும் 6 ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். 

● 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. 

6. இந்திய வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ( ரெப்போ ரேட் ) இந்திய ரிசர்வ் வங்கி எத்தனை சதவீதம் உயர்த்தியுள்ளது ? 

அ) 0.2%

ஆ) 0.3%

இ) 0.4%

ஈ) 0.5%

விடை : (ஈ) 0.5%

நாட்டில் பணவீக்கம் தொடா்ந்து அதிகமாகவே உள்ள நிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

● அதன் காரணமாக, வீட்டுக் கடன், வாகனக் கடன், மாதாந்திர தவணைத் தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயா்த்தவுள்ளன.

● கடந்த மே மாதத்தில் இருந்து தொடா்ந்து 4-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி விகிதமானது 1.90 சதவீதம் அதிகரிக்கப்பட்டு தற்போது 5.90 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

● நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமென ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 1.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

● இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. கூட்டம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

● பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயா்த்தப்பட்டு 5.9 சதவீதமாக நிா்ணயிக்கப்படுவதாக அவா் தெரிவித்தாா். சா்வதேச நிலையற்ற சூழல், சா்வதேச நிதி சந்தை சூழல் ஆகியவற்றின் காரணமாகப் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

சிறப்பான நிலையில் பொருளாதாரம்: கூட்டம் தொடா்பாக ஆளுநா் சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், ‘‘நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காக வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது. நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களில் 5 போ் வட்டி விகிதத்தை உயா்த்துவதற்கு ஆதரவு தெரிவித்தனா்.

● சா்வதேச அசாதாரண சூழல் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையிலேயே உள்ளது.

புதிய நடைமுறை: அதீத பருவமழை, தாமதமான பருவமழை விலகல் உள்ளிட்டவை நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொருள்கள் உற்பத்தியை பாதித்துள்ளன. அதனால், அவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, பணவீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆா்பிஐ தள்ளப்பட்டுள்ளது.

● வங்கிகளின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காகப் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடா்பாக ஆா்பிஐ ஆராய்ந்து வருகிறது. அந்நடைமுறை சா்வதேசத் தரத்தில் இருக்கும்’’ என்றாா்.

பணவீக்கம்: பணவீக்கமானது நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் ஆா்பிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளா்ச்சி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ஆா்பிஐ முன்பு கணித்திருந்த நிலையில், அந்த கணிப்பை 7 சதவீதம் எனத் தற்போது குறைத்துள்ளது.

7. குஜராத்தின் காந்திநகரையும் - மகாராஷ்டிராவின் மும்பையும் இணைக்கும் வகையில் நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார் ?

அ) ஏழாவது

ஆ) ஐந்தாவது

இ) மூன்றாவது

ஈ) முதலாவது

விடை : (இ) மூன்றாவது 

குஜராத் தலைநகா் காந்திநகரையும் மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கிவைத்தாா்.

● நவீன வசதிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐசிஎஃப்-இல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

● நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இரு வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

● நாட்டின் 75 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

● இந்நிலையில், 3-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.

8. 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் 2022 வழங்கும் விழா எங்கு நடைபெற்றது ? 

அ) மும்பை

ஆ) டெல்லி

இ) பெங்களூரு

ஈ) கோவா 

விடை : (ஆ) டெல்லி 

● விருதுகள் வழங்கியவர் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. 

● கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன.

● அந்த வகையில் செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று விருதுகள் வழங்கப்பட்டது.  

தமிழ்நாட்டுக்கான விருதுகள்

  • சிறந்த படம் : சூரரைப்போற்று
  • சிறந்த நடிகர்: நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
  • சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி
  • சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் குமார்
  • சிறந்த திரைக்கதை: சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
  • சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த படத்தொகுப்பு: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
  • சிறந்த வசனம்: மண்டேலா படத்திற்காக மடோன்னே அஷ்வின்
  • சிறந்த அறிமுக இயக்குநர்: இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா).
● குறிப்பு : தாதா சாகேப் பால்கே விருது நடிகை ஆஷா பரேக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. இந்தியாவில் முதல்முறையாக பின்வரும் எந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் பந்தயமான மோட்டோ ஜிபி ரேஸ் நடத்த உறுதி செய்யப்பட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025

ஈ) 2026 

விடை : (அ) 2023 

● அடுத்த ஆண்டு செப்டம்பர் 22-24 காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

● தற்போது மோட்டோ ஜிபி பந்தயத்தை நடத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 31 ஆவது களமாக இணைகிறது.

10. குஜராத்தில் நடைபெறும் 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 ல் மகளிர் தனிநபர் சப்ரே பிரிவில் தமிழகத்தின் பவானி தேவி வென்றுள்ள பதக்கம் ?

அ) வெண்கலம் 

ஆ) வெள்ளி 

இ) தங்கம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) தங்கம் 

● மேலும் : ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் பிரவீண் சித்ரவேல் தங்கம் வென்றார்.

● மகளிருக்கான உயரம் தாண்டுதலில் கிரேஸ்னா மெர்லி வெண்கலம் வென்றார்.

● இதுவரை தமிழகம் : 2G, 1S, 4B என 7 பதக்கங்களுடன் 7 ஆவது இடத்தில் உள்ளது . 

IV. முக்கிய தினங்கள் 

11. தேசிய தன்னார்வ ரத்த தான தினம் ( National Voluntary Blood Donation Day 2022 ) என்று அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 28 

ஆ) செப்டம்பர் 29

இ) செப்டம்பர் 30

ஈ) அக்டோபர் 01

விடை : (ஈ) அக்டோபர் 01

● கருப்பொருள் ( 2022 ) : ஒற்றுமையுடன் ரத்த தானம் செய்வோம். 

● தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு : ரத்த கொடையாளர்களின் விவரங்களை பதிவிட ரூ.10 லட்சத்தில் தனிகைப்பேசி செயலியும்,  கணினி மயமாக்கப்பட்ட பதிவேடும் உருவாக்கப்பட்டுள்ளது. 

● குறிப்பு : தமிழகத்தில் ரத்த மையங்களில் செயல் பாடுகளை கண்காணிக்க e - Raktkosh என்ற இணையதளம் செயல்பாட்டில் உள்ளது. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...