Wednesday, June 29, 2022

Current Affairs 2022 - June 29 / 2022 - Group 2 / 2A & Group 4

                      GK SHANKAR 
                    JUNE 29 / 2022 

I.தமிழ்நாட்டுச் செய்திகள் 

1. சென்னை அகரமுதலித் திட்ட இயக்கத்தில் நடைபெற்ற 112 ஆவது கூட்டத்தில் எத்தனை கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 141 
ஆ) 131
இ) 109
ஈ) 98 

விடை : (அ) 141 

● அகரமுதலி திட்ட இயக்கத்தின் 112 ஆவது கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
● இக்கூட்டத்தில் 141 கலைச் சொற்களுக்கு வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது . 
● (எ-டு ) : Helicopter - உலங்கூர்தி,
Falooda - பனிக்கனிக் குழைவு ஆகும்.

2. தமிழகத்தில் வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் பாலாறு பெரு விழாவை தொடங்கிவைத்தவர் ? 

அ) மு.க. ஸ்டாலின்
ஆ) ஆர்.என். ரவி
இ) வெங்கையா நாயுடு
ஈ) மேற்கண்ட அனைவரும்

விடை : (ஆ) ஆர்.என் ரவி

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

●  ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி  பங்கேற்று குத்து விளக்கேற்றிக்கு ஏற்றி வைத்தனர்.

இவ்விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும் என்றார். 

3. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த நாளன்று சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது ? 

அ) மார்ச் 01
ஆ) ஜூன் 03
இ) நவம்பர் 01
ஈ) டிசம்பர் 18

விடை : (ஈ) டிசம்பர் 18 

● சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவுக்கு ரூ. 2.50 லட்சம் நிதியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
● இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்தார்.

II. தேசியச் செய்திகள் 

4. முத்திரையிடப்படாமல் பொட்டலமிட்டு , விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு எத்தனை சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) 15%
ஆ) 20%
இ) 5%
ஈ) 8%

விடை : (இ) 5%

● மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பொட்டலமிட்டு முத்திரையிடப்பட்ட நிலையில் விற்கப்படும் உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மாநில, யூனியன் பிரதேச நிதியமைச்சா்கள் குழு கேட்டுக் கொண்டது.

● இதனை பரிசீலித்த ஜிஎஸ்டி கவுன்சில், இறைச்சி (உறைந்துபோனதை தவிர), மீன், தயிா், பன்னீா், தேன், உலா் பருப்புவகை காய்கறிகள், உலா் தாமரை விதை, கோதுமை மற்றும் பிற தானிய வகைகள், பட்டாணி மாவு, வெல்லம், அரிசி பொரி, கரிம உரம், தென்னை நாா்க்கழிவு போன்ற பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவு.
 செய்யப்பட்டது.

5. மத்திய அரசால் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழி ( பிளாஸ்டிக் ) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை என்று முதல் அமலுக்கு வருகிறது ? 

அ) ஜூலை 01 
ஆ) ஜூலை 05
இ) ஆகஸ்ட் 15 
ஈ) ஆகஸ்ட் 05

விடை : (அ) ஜூலை 01 

ஒரு முறை மட்டும் பயனபடுத்தக்கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தடை செய்யப்படும் நெகிழிப் பொருள்கள்: நெகிழி குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழி கொடிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கான தொ்மோகோல், நெகிழி தட்டுகள், குவளைகள், நெகிழி கத்தி, ஸ்பூன், ஃபோா்க், உறிஞ்சுக் குழல், ட்ரே, ஸ்வீட் பாக்ஸ், அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கும் குறைவான நெகிழி அல்லது பிவிசி பேனா்கள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

6. ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ? 
அ) ஆனந்த் அம்பானி
ஆ) இஷா அம்பானி
இ) ஆகாஷ் அம்பானி
ஈ) ஆனந்த் பாராமல்

விடை : (இ) ஆகாஷ் அம்பானி 
● முன்பு : முகேஷ் அம்பானி இப்பொறுப்பில் இருந்தார். 

7. சர்வதேச அளவில் உணவு பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதற்காக எத்தனை கோடியை செலவிட ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளது ? 

அ) ரூ. 25,000 கோடி
ஆ) ரூ. 30,000 கோடி
இ) ரூ. 50,000 கோடி
ஈ) ரூ. 33,000 கோடி

விடை : (ஈ) ரூ. 33, 000 கோடி

● மேலும் மக்களின் பேச்சு சுதந்திரத்தை காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க ஜி7 மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டது.

8. அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் எத்தனையாவது முறையாக மாநாட்டில் பங்கேற்றார் ? 

அ) 5 ஆவது
ஆ) 3 ஆவது
இ) 10 ஆவது
ஈ) 2 ஆவது

விடை : (ஆ) 3 ஆவது 

உலகத் தலைவா்களுக்குப் பிரதமா் மோடி பரிசு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜொ்மனி சென்ற பிரதமா் நரேந்திர மோடி, குலாபி மீனாகாரி, காஷ்மீரி ஜமக்காளம் உள்ளிட்ட பல்ேறு இந்தியக் கலைப் பொருள்களை உலகத் தலைவா்களுக்குப் பரிசளித்தாா்.

● புவிசாா் குறியீடு பெற்ற வாராணசியைச் சோ்ந்த குலாபி மீனாகாரி கலைப் பொருளை அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுக்கு மரோதியைச் சோ்ந்த மத்கா, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு உத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதைச் சோ்ந்த கருப்புப் பானை துண்டுகள், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியமான இத்தா் ஆகியவற்றைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

● இந்தோனேசிய அதிபருக்கு ராம தா்பாா் சிலையையும், செனகல் அதிபருக்கு கைவினைப் பொருள்களான கூடைகள், கைத்தறிகளையும் பிரதமா் மோடி வழங்கினாா். கனடா அதிபா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பட்டு விரிப்புகளைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

III. விளையாட்டுச் செய்திகள் 

9. ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் சதுரங்கப் போட்டி தமிழகத்தில் எங்கு தொடங்கியுள்ளது ? 

அ) மதுரை

ஆ) சென்னை

இ) திருச்சி

ஈ) சேலம்

விடை : (அ) மதுரை 

● இப்போட்டி மதுரையில் ஜூன் 28 முதல் ஜூலை 05 வரை நடைபெறவுள்ளது .

● இப்போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 212 வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

IV. முக்கிய தினங்கள் 

10. டிராபிக்ஸின் சர்வதேச தினம் ( International Day of Tropics ) 2022 ? 

அ) ஜூன் 26

ஆ) ஜூன் 27

இ) ஜூன் 28

ஈ) ஜூன் 29

விடை : (ஈ) ஜூன் 29 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...