Wednesday, June 22, 2022

Current Affairs - June 21, 2022 - TNPSC Group 2/2A & Group 4

1. தமிழக அளவில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வில் ------------- சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் (ம) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் -------------- சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும் பிடித்துள்ள மாநிலங்கள் ? 

அ) பெரம்பலூர், கன்னியாகுமரி
ஆ) சேலம், கோயம்புத்தூர்
இ) திருச்சி, மதுரை
ஈ) வேலூர் , கன்னியாகுமரி

2. அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கீழ்கண்ட எந்த இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது ? 

அ) www.Joinindianarmy.nic.in
ஆ) www.armyjoinindian.in
இ) www.joinindianarmy.in
ஈ) www.indianarmyjoin.nic.in

3. காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நாட்களில் எங்கு நடைபெறவுள்ளது?

அ) ஆப்ரக்கா
ஆ) ஜப்பான்
இ) கனடா
ஈ) ருவாண்டா

4. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக :-

i) இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ரோந்து பணியில் அண்மையில் இணைக்கப்பட்டது.

ii) இந்த கிழக்கு பிராந்தியப் பிரிவு ஆந்திர பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. 

iii) இந்த கிழக்கு பிராந்தியத்தின் தளபதி ஏ.பி. படோலா. 

5. அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட நாடு எது ? 

அ) அமெரிக்கா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) ரஷ்யா

6. கூற்று : இருளர் (ம) நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களைக் கொண்டு செயற்கைக்கோளை ISRO விண்ணில் ஏவவுள்ளது.  
காரணம் : நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவர்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் சரி , காரணம் தவறு
இ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று தவறு , காரணம் சரி .

7. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ------------- சதுர அடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது ?

அ) 75,000
ஆ) 50,000
இ) 65,000
 ஈ) 52,000

8. தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? 

அ) 2021 டிசம்பர் 18
ஆ) 2020 டிசம்பர் 18 
இ) 2021 ஜனவரி 01
ஈ) 2020 ஜனவரி 01 

9. சர்வதேச யோகா தினம் ( International Day of Yoga ) 2021 ? 

அ) ஜூன் 16
ஆ) ஜூன் 18
இ) ஜூன் 19
ஈ) ஜூன் 21

விடைகளும் / விளக்கமும் 
1. (அ) பெரம்பலூர், கன்னியாகுமரி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

● பத்தாம் வகுப்பில் தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

● தேர்ச்சி சதவீதத்தில் முதல் (ம) கடைசி மாவட்டங்கள் . 
+2- முதலிடம் : பெரம்பலூர் (97.95%)
10th - முதலிடம் : கன்னியாகுமரி (97.22%) .
கடைசி இடம் : வேலூர்
( +2 - 86.69%  &  10th - 79.87% )
குறிப்பு : +2 வில் தமிழில் 100 மதிப்பெண் பெற்று கீர்த்தனா,திருவள்ளூர் சாதனை 
10th தமிழில் 100 மதிப்பெண் பெற்று துர்கா , தூத்துக்குடி சாதனை படைத்தார்.

2. (அ) www.joinindianarmy.nic.in

அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் ஜூலை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என ராணுவம் தெரிவித்துள்ளது.

3. (ஈ) ருவாண்டா
ருவாண்டா தலைநகா் கிகாலியில் காமன்வெல்த் நாடுகளின் தலைவா்கள் கூட்டம் ஜூன் 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவா்களின் உயா்நிலைக் கூட்டம் ஜூன் 24, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரிட்டனில் வெளியாகும் ‘தி டெய்லி டெலிகிராஃப்’ நாளிதழில் அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:

● காமன்வெல்த் அமைப்பால் கிடைத்துள்ள சாதகங்கள், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 54 நாடுகளுக்கு அளப்பரிய மதிப்பை சோ்த்துள்ளது.

● பசிபிக் தீவு கூட்டங்களில் ஒன்றான டுவாலு நாட்டின் மக்கள்தொகை 11,000 மட்டும்தான். அதேவேளையில், இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி ஆகும். எனினும் இவ்விரண்டு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. எனினும் வரலாறு, விழுமியங்கள், அமைப்புகள், ஆங்கில மொழி ஆகியவற்றால் காமன்வெல்த் நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

● காமன்வெல்த் அமைப்பு மட்டும்தான் வேகமாக வளா்ந்து வரும் சந்தைகளை வா்த்தகத்தின் உண்மையான சாதகத்துடன் இணைக்கிறது. அதனால்தான் காமன்வெல்த் நாடுகளுடன் முடிந்த அளவு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அல்லது பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தங்களை மேற்கொள்ள தனது இறையாண்மையை பிரிட்டன் பயன்படுத்துகிறது.

● இதுவரை காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் மேற்கொண்டுள்ளது. அவை எல்லாவற்றையும்விட இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பெரிது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் தீபாவளி பண்டிகைக்குள் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரிட்டன் முயற்சித்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

4. (இ) i மற்றும் iii

 ● இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது.

● இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்தியப் பிரிவு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபட்டனம் வரை கடலோர பகுதி இப்பிராந்தியத்தின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. ரோந்துக் கப்பல்கள், இடைமறிக்கும் படகுகள், டோா்னியா் ரோந்து விமானங்கள், நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் ஹோவா்கிராப்ட், சேடக் ஹெலிகாப்டா்கள் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

● அதிநவீன வசதிகள் கொண்ட ஹெலிகாப்டா்:

● இதில் தற்போது மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டா் திங்கள்கிழமை முதல் இணைக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமானதளத்தில் கிழக்குப் பிராந்திய தளபதி ஏ.பி.படோலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரம்பரிய நடைமுறைகளில் ஒன்றான தண்ணீா் பீய்ச்சி அடித்து புதிய ஹெலிகாப்டருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்புதிய ஹெலிகாப்டா் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

● நீண்ட தூரம் கண்காணிக்கும் வகையில் இப்புதிய ஹெலிகாப்டரில் பன்மடங்கு திறன் பெற்றது. அதிநவீன ரேடாா், எலெக்ட்ரோ ஆப்டிகம் போட், தானியங்கி கண்டறியும் அமைப்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

● இப்புதிய ஹெலிகாப்டா் மூலம் இந்திய பொருளாதாரக் கடல் எல்லைக்குள் பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கடத்தல்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட இயலும். இதே மாதிரியான மேலும் 3 ஹெலிகாப்டா்கள் விரைவில் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட உள்ளன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5. (ஆ) சீனா

பாலிஸ்டிக் ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்ப சோதனை ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். இது தற்காப்பு சோதனைதானே தவிர எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்த வகையில் இது 6-ஆவது சோதனையாகும் எனத் தெரிவித்தனா்.

● இதுபோன்ற சோதனைகளின் மூலம் சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிா்ப்புத் திறன் வலுவடைந்து வருகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கும் இச்சோதனைகள், நாட்டுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலுக்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது’ என சீன பாதுகாப்பு நிபுணா் ஒருவா் தெரிவித்ததாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

6. (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.


இருளா் மற்றும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்களுக்குப் பயிற்சியளித்து அவா்கள் மூலமாக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை  தெரிவித்தாா்.

● நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 செயற்கை கோள்கள் மாணவா்கள் மூலமே விண்ணில் செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ஒரு செயற்கைக்கோள் நரிக்குறவா், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த பழங்குடியின மாணவா்கள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. ஒரு செயற்கைக் கோளை தயாரிக்க ரூ.1 கோடி வரை செலவாகும். இத்தகைய செயற்கைகோளை விண்ணில் ஏவுவது எப்படி என முதலில் இணையம் வாயிலாக மாணவா்களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.

● பின்னா், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ராக்கெட் ஏவுதளத்தில் இறுதிக்கட்ட பயிற்சி தோ்ந்தெடுக்கப்பட்ட ஆா்வமுள்ள மாணவா்களுக்கு அளிக்கப்படும்.

● இணையம் மூலம் வழங்கப்படும் பயிற்சி அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும். இது இந்திய அளவில் மட்டுமில்லாது உலக அளவிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இளைஞா்களிடையே நம்பிக்கையை விதைத்து பெரும் மாற்றத்தையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை என்றாா்.

● இதையடுத்து காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப்பள்ளி மாணவா்களுடன் அவா் கலந்துரையாடினாா். இந்நிகழ்வின் போதும் ஏவுகணை அறிவியல் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினாா். தலைமை ஆசிரியை பிரமீளாகுமாரி நன்றி தெரிவித்தாா்.

7. (ஈ) 52,000 

● மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 52,000 சதுரஅடி பரப்பில் நவீன அரங்கம் அமைக்கப்பட்டு வருவதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

8. (அ) 2021 டிசம்பர் 18

தமிழகத்தில் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 80,251 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

● சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் 80 ஆயிரமாவது பயனாளியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். தொடா்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

● இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 2021 டிசம்பா் 18-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் அதிகமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள் என 500 இடங்களைக் கண்டறிந்து, 669 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

● இதற்கு முன்னா் விபத்து நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சோ்க்க வேண்டுமென்றால் அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. தற்போது பாதிக்கப்பட்டவரை மருத்துவனையில் சோ்ப்பவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வரை வழங்கப்படுகிறது.

● இன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களாக 80,251 போ் பயனடைந்திருக்கிறாா்கள். இத்திட்டத்துக்காக ரூ.72 கோடியே 89 லட்சம் செலவிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உலக அளவிலேகூட மிகச் சிறப்பான வகையில் இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும் என்றாா் அவா்.

9. (ஈ) ஜூன் 21 

● இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஐ.நா. சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

● Theme : Yoga for Humanity 



No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...