Wednesday, June 22, 2022

Current Affairs 2022 - June 22 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

1. ஐ.நா.வுக்கான இந்திய தூதராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ருசிரா கம்போஜ் 
 ஆ) டி.எஸ். திருமூர்த்தி
இ) அல்கா மிட்டல் 
ஈ) ரவீந்திர குப்தா 

2. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக : 

i) பிரிக்ஸ் நாடுகளுக்குச் சொந்தமான புதிய வளர்ச்சி வங்கியின் இந்திய அலுவலகம்  டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.


ii) இந்திய அலுவலகத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ஜே. பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. வெளிநாடுகளில் பணிபுரிந்துவிட்டு வயது முதிர்வால் சொந்த ஊர் திரும்புவோருக்கு மாத உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வரும் இந்திய மாநிலம் ? 

அ) கேரளா
ஆ) தில்லி
இ) பஞ்சாப்
ஈ) தமிழ்நாடு

4. பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றை தேர்ந்தெடுக : 

1) 8 ஆவது சர்வதேச யோகா தினம் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்றது.

2) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி விழாவை தொடங்கிவைத்தார். 

அ) 1 மட்டும் 
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) ஏதுமில்லை 

5. 2021 ஆம் ஆண்டின் அடிப்படையில் தண்ணீரில் மூழ்கி இறக்கும் விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு பிடித்துள்ள இடம் ? 

அ) ஏழாவது
ஆ) ஐந்தாவது
இ) எட்டாவது
ஈ) பத்தாவது

6. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி எத்தனையாவது பிரிக்ஸ் ( BRICS ) மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்?
அ) 11 ஆவது
ஆ) 10 ஆவது
இ) 14 ஆவது
ஈ) 19 ஆவது

7. அமெரிக்க அரசின் பொருளாளராக பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவரை அதிபர் பைடன் முதல்முறையாக பரிந்துரைத்துள்ளவர் யார் ? 

அ) மரிலின் லின் மலேர்பா
ஆ) கேத்தரின் மன்ரோ 
இ) அனாமிகா ஜோசிலின் 
ஈ) ஈஷா வேலண்டைன் 

8. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனடைந்த 75 லட்சமாவது நபருக்கு மருந்து பெட்டகம் வழங்க நேரில் சென்றவர் கீழ்கண்டவருள் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்
ஆ) மா. சுப்பிரமணியன் 
இ) உதயநிதி ஸ்டாலின்
ஈ) தங்கம் தென்னரசு 

9. நடப்பாண்டுக்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி என்று தொடங்கப்படவுள்ளது ? 

அ) ஜூலை 05
ஆ) ஜூன் 27
இ) ஜூலை 10
ஈ) ஜூன் 30

10. ஆசிய ஓசியானியா ஓபன் பாரா பளுத்தூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 ல் இந்தியா வென்றுள்ள மொத்த பதக்கங்களை பொருத்துக :

தங்கம்               - 1) 4 பதக்கங்கள்
வெள்ளி            - 2) 12 பதக்கங்கள்
வெண்கலம்    - 3) 6 பதக்கங்கள் 

அ) 1 2 3 
ஆ) 3 2 1
இ) 3 1 2 
 ஈ) 2 1 3 

விடைகளும்  / விளக்கமும் 

1. (அ) ருசிரா கம்போஜ் 

● ஐ.நா.வுக்கான இந்திய தூதராக ருசிரா நியமிக்கப்பட்டுள்ளார்.

● முன்பு : 1987 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான இவர் , தற்போது பூடானுக்கான இந்தியத் தூதராக இருந்து வருகிறார். 

● இப்பொறுப்பில் முன்பு : எஸ். திருமூர்த்தி இருந்தார். 

2. (ஆ) ii மட்டும்

● பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளுக்குச் சொந்தமாக புதிய வளர்ச்சி வங்கி ( என்டிபி ) உள்ளது.
● பிரிக்ஸ் வங்கியின் இந்திய மண்டல அலுவலகம் குஜராத் மாநிலத்தின் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
● அந்த அலுவலகத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.ஜே. பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் : பிரேசில்,  ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா. 

3. (ஈ) தமிழ்நாடு 

● வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு வயது முதிர்வால் சொந்த ஊர் திரும்புவோருக்கு மாதம் உதவித்தொகை திட்டம் 
● வெளிநாடுகளில் விபத்திலோ,  இயற்கையாகவோ மரணமடைய நேர்ந்தால் அவர்களது குடும்பங்களுக்கு பாதுகாப்பு , குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் திட்டமும் அரசிடம் பரசீலனையில் உள்ளது.
● அறிவிப்பு : தமிழக சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

4. (அ) 1 மட்டும்

● 8 ஆவது சர்வதேச யோகா தினம் மைசூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. 
● இவ்விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 
● இவ்விழாவில் 15,000 பேருடன் சேர்ந்து பிரதமரும் யோகா பயிற்ச்சியில் ஈடுபட்டார்.
நிகழாண்டுக்கான யோகா தின விழா மனித நேயத்துக்கான யோகா என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
● குறிப்பு : பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா.சபை சார்ப்பில் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

5. ( இ ) எட்டாவது

● 2021 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தண்ணீரில் மூழ்கி இறந்தோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 10 இடங்களில் தமிழகம் 8 ஆவது இடத்தில் உள்ளது. 

6. (இ) 14 ஆவது

● 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை சீனா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடத்தவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் கூட்டத்தில் சர்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 
● பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.

●  கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. ( அ) மரிலின் லின் மலேர்பா 

● இவர் மோஹெகன் பழங்குடியின அமைப்பின் வாழ்நாள் தலைவராவார்.
● அமெரிக்க நாணயங்கள் அச்சிடுவது,  மத்திய வங்கி நடவடிக்கைகளை பதிவு செய்வது , நிதியமைச்சகத்தின் நுகர்வோர் கொள்கையை மேற்பார்வையிடுவது போன்ற பணிகளை அரசின் பொருளாளர் மேற்கொள்வார். 

8. (ஆ) மா. சுப்பிரமணியன் 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கெடமலை மலை கிராமத்திற்கு இன்று காலை நான்கு கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றனர்.

● தமிழக அரசின் மருத்துவ திட்டங்களில் ஒன்றான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப் பள்ளியில் தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து மருந்துகளை வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.


9. ( ஆ) ஜூன் 27

● டென்னிஸ் காலண்டரில் ஒரு ஆண்டில் நடைபெறும் 3 வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது.

● குறிப்பு : புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டி விம்பிள்டன் ஆகும்.


10. (இ) 3 1 2 

● ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2021

● போட்டி நடைபெற்ற இடம் : தென் கொரியா.

● மொத்த பதக்கங்கள்: 22 ( 6G, 4S , 12B ).

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...