Thursday, June 23, 2022

Current Affairs June - June 23 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                     GK SHANKAR CURRENT AFFAIRS
                    JUNE 23 / 2022 

       I. தமிழ்நாட்டுச் செய்திகள்

1. தமிழகத்தில் எங்கு மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் ஏற்படுத்தப்படவுள்ளது ? 

அ) புதுக்கோட்டை
ஆ) மதுரை 
இ) திருநெல்வேலி 
ஈ) சேலம் 

விடை : (அ) புதுக்கோட்டை 

● தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9 ஆவது மன்னர் ராஜகோபால தொண்டைமான் ஆவார். 
● அவரது நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு சார்பில் புதுக்கோட்டை நகரில் அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  
● காரணம்  : அவர் தனது ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து , விவசாயம் , நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார் 
● குறிப்பு : இவர் தான் புதுக்கோட்டையை மாவட்டமாக அறிவித்தவர் .

2. தமிழ்நாட்டில் எத்தனை புதிய உழவர் சந்தைகளை விரைந்து திறக்க வேண்டும் என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் ? 

அ) 31
ஆ)13
இ) 14
ஈ) 16

விடை : (இ) 14 

● முக்கிய உத்தரவுகள் : புதிதாக 14 உழவர் சந்தைகள் தொடங்கப்பட வேண்டும்.
● 27 உழவர் சந்தைகளில் உள்ள 2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறைகளை விவசாயிகள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
● தமிழக வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.  
● குறிப்பு : தமிழ்நாட்டில் 172 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. 

3. தமிழகத்தில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது ? 

அ) சேலம்
ஆ) கிருஷ்ணகிரி
இ) தருமபுரி
ஈ) நாமக்கல்

விடை : (ஆ) கிருஷ்ணகிரி

● கிருஷ்ணகிரியில் 28 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியுள்ளது. 
● இந்த கண்காட்சி 25 நாட்கள் நடைபெறவுள்ளது. 
● இக்கண்காட்சி மாம்பழ விவசாயிகளுக்கான போட்டி ஆகும்.

4. ரூ.25 செலுத்தி புதிய குடும்ப அட்டையை தபாலில் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள மாநிலம் எது ? 

அ) கேரளா
ஆ) ஆந்திர பிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா

விடை : (இ) தமிழ்நாடு 

● புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் ரூ.25 கட்டணம் செலுத்தி தபால் மூலமாய் பெறும் திட்டம் விரைவில் தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. 
● இத்திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசின் கூட்டுறவு , உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

             II. தேசியச் செய்திகள் 

5. இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கியுள்ள சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பின் பெயர் என்ன ? 

அ) சூர்யா நுடன்
ஆ) சூர்யா தீ
இ) சூர்யா அடுப்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (அ) சூர்யா நுடன்

● இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய அடுப்பை உருவாக்கியுள்ளது.
● அந்த அடுப்பின் பெயர் : சூர்யா நுடன். 
● அடுப்பின் விலை - ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என்றும் , 3 லட்சம் அடுப்புகளை உருவாக்கினால் இதன் விலை ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை குறையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

6. இஸ்ரோ ( ISRO ) பின்வரும் எந்த நாளன்று மூன்று செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட்டை விண்ணில் ஏவப்படவுள்ளது ? 

அ) ஜூன் 29
ஆ) ஜூன் 30
இ) ஜூலை 03 
ஈ) ஜூலை 10

விடை : (ஆ) ஜூன் 30 

● PSLV C - 53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ் - இஓ செயற்க்கோள் பூமியிலிருந்து 570 கி.மீ. உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 
● டிஎஸ் - இஓ செயற்கைக் கோள் : 
பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள் , சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு ,வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது . 
● இச்செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.
● இதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் ஏவப்படவுள்ளது.

7. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்தெடுக : 

1) ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் .

2) இப்போது ஜி7 அமைப்புக்கு பிரான்ஸ் தலைமை வகிக்கிறது.

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும் 
இ) 1 மற்றும் 2
ஈ) ஏதுமில்லை 

விடை : (அ) 1 மட்டும் 

● ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி ஜூன் 26 அன்று கலந்துக்கொள்ளவுள்ளார்.
● இப்போது ஜி7 அமைப்புக்கு தலைமை வகிக்கும் நாடு ஜெர்மனி.
● ஜி7 அமைப்பில் உள்ள நாடுகள் : 
ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான்.

8. 2021 ஆம் ஆண்டின் படி சர்வதேச அளவில் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் நாடுகளில் இந்தியா பிடித்துள்ள இடம் ? 

அ) முதலாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) நான்காவது 

விடை : (ஈ) நான்காவது 

● முதல் மூன்று இடங்களில் : சீனா, இத்தாலி, அமெரிக்கா ஆகும்.

          III. சர்வதேச செய்திகள்

9. அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி யார் ? 

அ) அனிதா குப்தா
ஆ) ஆர்த்தி பிரபாகர்
இ) ஈஷா வேலண்டைன்
ஈ) பூஜா சிங் 

விடை : (ஆ) ஆர்த்தி பிரபாகர் 

● இந்திய வம்சாவளியான பிரபல விஞ்ஞானி ஆர்த்தி பிரபாகர் அமெரிக்க அதிபரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  
● செனட் சபையின் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அறிவியல் (ம) தொழில் நுட்பக்கொள்கை அலுவலகத்தின் தலைமை பொறுப்பை ஏற்கும் புலம்பெயர்ந்து வந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுவார் . 

10. பின்வரும் எந்த நாட்டில் அண்மையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ? 

அ) இந்தியா 
ஆ) அமெரிக்கா
இ) ஆப்கானிஸ்தான்
ஈ) கனடா

விடை : (இ) ஆப்கானிஸ்தான் 

ஆப்கானிஸ்தானின் கிழக்கே, பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.24 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3.24 மணி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 ● இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக நிபுணர்கள் கூறினர்.
● இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் அந்தப் பகுதி கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
● நிலநடுக்கத்தின் அதிர்வுகள் 500 கி.மீ. தொலைவு வரை உணரப்பட்டதாகவும், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பலர் அதிர்வுகளை உணர்ந்ததாகவும் ஐரோப்பிய நிலநடுக்கவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

11. கூற்று : அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

காரணம் : தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்டது.

அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி .

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி , காரணம் கூற்றை விளக்குகிறது.

● அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா்.

● இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

      IV. விளையாட்டுச் செய்திகள்


12. அண்மையில் தனது அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யார் ? 

அ) மிதாலி ராஜ்
ஆ) ருமேலி தார் 
இ) தீபிகா குப்தா 
ஈ) ஸ்மிரிதி மந்தானா 

விடை : (ஆ) ருமேலி தார். 
● ருமேலி தார் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆவார். 
● கிரிக்கெட் பயணம் : 2003 - 2018 ( 23 ஆண்டுகள் ) . 

13. ஆசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2022 ல் 200 மீ ஃப்ளையிங் பிரிவில் வெள்ளி வென்றுள்ள முதல் இந்தியர் யார் ? 

அ ) ரொனால்டோ சிங்
ஆ) கென்டோ யமாசாகி
இ) ஆண்ட்ரே சுகே
ஈ) பிர்ஜித் யும்நாம்

விடை : (அ) ரொனால்டோ சிங்

● இப்போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் .

             V. முக்கிய தினங்கள்

14. சர்வதேச ஒலிம்பிக் தினம் ( International Olympic Day ) 2022 ? 

அ) ஜூன் 19
ஆ) ஜூன் 20
இ) ஜூன் 23
ஈ) ஜூன் 22 

விடை : (இ) ஜூன் 23 

சர்வதேச ஒலிம்பிக் தினம் 2022 இன்று, 23-6-2022 அன்று கொண்டாடப்படுகிறது. விளையாட்டு, நல்ல ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் மகிழ்ச்சியைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 23, விளையாட்டின் மூலம் உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற மக்களை அழைக்கிறது. 

● இந்த ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் தின கரு என்னவெனில் 'உலக அமைதிக்காக ஒன்றுபடுவொம்.' ( Together for a Peaceful World ) சமூக ஊடகங்களில், உலக ஒலிம்பிக் தினம் 2022 #MoveForPeace மற்றும் #OlympicDay என்ற ஹேஷ்டேக்குகளுடன் குறிக்கப்படுகிறது.

15. சர்வதேச விதவைகள் தினம் ( International Widow's day ) 2022 ? 

அ) ஜூன் 20
ஆ) ஜூன் 21
இ) ஜூன் 22
ஈ) ஜூன் 23 

விடை : (ஈ) ஜூன் 23

உலக முழுவதும் கணவன்மார்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் பெண்களின் நிலை  குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும், அவர்களின் துயரை துடைக்கும்  வகையிலும் சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் ஐ.நா  பொது சபைக்கு  கோரிக்கை விடுத்துவந்தனர்.

● ஜூன் 23 ம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக (International Widows'  Day)அறிவித்து, 2010-ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம்  நிறைவேற்றியுள்ளது.

● Theme :  Sustainable Solutions for widows Financial Independence . 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...