Friday, June 24, 2022

Current Affairs 2022 - June 24/ 2022 - Group 2/2A & Group 4

                        GK SHANKAR 
                       June 24 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள்  

1. தமிழகத்தில் தற்போது ------------ மற்றும் --------------- வகை கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ? 

அ) பிஏ-4
ஆ) பிஏ-6
இ) பிஏ-5
ஈ) அ (ம) இ 

விடை : (ஈ) அ(ம)இ

● தற்போது கரோனா பரவல் பெரும்பாலும் பிஏ-4, பிஏ-5 என்ற வகை தாக்கம் தான் அதிகம் உள்ளது.
● எனவே பொதுமக்கள் நோய்த்தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
● அறிவிப்பு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

2. நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நடத்துநர் யார் ? 

அ) இளையராணி
ஆ) ராஜாமணி
இ) அருந்ததி தேவி
ஈ) சீதா தேவி 

விடை : (அ) இளையராணி

● நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பேருந்தில் பெண் நடத்துநர் இளையராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
● குறிப்பு : இவருக்கு தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்துள்ளது.

II. தேசியச் செய்திகள் 

3. தேசிய புலனாய்வு முகமை ( NIA ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஸ்வாகத் தாஸ்
ஆ) தினகர் குப்தா
இ) அரவிந்த் குப்தா
ஈ) அமரேந்தர் சிங் 

விடை : (ஆ) தினகர் குப்தா

● 1987 பஞ்சாப் ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த தினகர் குப்தா வரும் 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை அவர் இப்பொறுப்பில் நீடிப்பார்.
● அறிவிப்பு : மத்திய பணியாளர் அமைச்சகம்.
● மேலும் ஒரு நியமனம் : மத்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளராக ( உள்நாட்டுப் பாதுகாப்பு ) ஸ்வாகத் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

4. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது ? இந்திய தூதரகம் எங்கு உள்ளது ? 

அ) காபூல் 
ஆ) கந்தகார்
இ) கோஸ்ட்
ஈ) கண்டசு 

விடை : (அ) காபூல் 

● ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த ஆண்டு மூடப்பட்ட இந்திய தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது . 
● காரணம் : ஆப்கானுக்கு அளிக்கப்படும் மனிதாபிமான உதவிகள் திறம்பட சென்றடைவதை கண்காணிக்கவும் , ஒருங்கிணைக்கவும் இந்திய தொழில்நுட்பக்குழு காபூல் சென்றடைந்துள்ளது. 

5. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் தில்லியில் கட்டப்பட்டுள்ள வாணிஜ்ய பவன் கட்டடத்தை திறந்து வைத்தவர் யார் ? 

அ) ராம்நாத் கோவிந்த் 
ஆ) நரேந்திர மோடி
இ) அரவிந்த் கெஜ்ரவால் 
ஈ) வெங்கையா நாயுடு 

விடை : (ஆ) நரேந்திர மோடி

● மேலும் ஆண்டுதோறும் வர்த்தக சூழலை ஆராயும் நோக்கில் தேசிய இறக்குமதி - ஏற்றுமதி பதிவுக்கான நிர்யத் வலைத்தளத்தையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். 

6. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ? 

அ) மத்திய உள்துறை அமைச்சகம்
ஆ) மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
இ) மத்திய கல்வி அமைச்சகம்
ஈ) மத்திய போகுவரத்து அமைச்சகம்

விடை : (அ) மத்திய உள்துறை அமைச்சகம் 

● மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

● போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால், போதைப் பொருள் மற்றும் மனநல பொருள் சட்டம் -1985 மற்றும் போதைப் பொருள் கடத்தல் சட்டம்-1988 ஆகியவை மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இதனால், விமானநிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் கடத்தப்படும் போதைப் பொருள், தங்கம் ஆகிய வழக்குகளை மத்திய வருவாய்த் துறை கையாண்டு வருகிறது.

● இவற்றை அனைத்தும் இணைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


III. சர்வதேச செய்திகள் 

7. பின்வரும் எந்த நாடு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க முடிவுசெய்துள்ளது ? 

அ) இலங்கை

ஆ) ஜெர்மனி

இ) உக்ரைன்

ஈ) ஆப்பிரிக்கா

விடை : (ஆ) ஜெர்மனி 

● ஜொ்மனிக்கு எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்துவிட்டதால் அங்கு பெட்ரோலை ரேஷன் முறையில் வழங்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகியுள்ளது.

● உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷியா குறைத்தது. 

● இதனால், எரிபொருள் தேவைக்கு ரஷியாவை சாா்ந்துள்ள ஜொ்மனி கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க பல்வேறு கட்ட அவசர நிலைகளை அறிவித்து வந்த அந்த நாடு, ‘எச்சரிக்கை’ கட்ட அவசர நிலையை வியாழக்கிழமை அறிவித்தது.

● இது, எரிபொருளை ரேஷன் முறையில் விநியோகிப்பதற்கு முந்தைய கட்டம் என்று கூறப்படுகிறது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக: 

1) சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் , மிஹிர் ஆம்ப்ரே,  அனீஷ் கௌடா ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

2) மேலும் படேல் வெள்ளியும் , சிவா ஸ்ரீதர் வெண்கலமும் வென்றுள்ளனர்.

விடை : (இ) 1 மற்றும் 2 

● சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் 2022.

● தங்கம் : ஸ்ரீதர் நட்ராஜ் - 100மீ பேக்ஸ்ட்ரோக் ; மிஹிர் - 50 மீ பட்டர்ஃப்ளை ; அனீஷ் கௌடா - 800 மீ ஃபீரிஸ்டைல். 

● வெள்ளி : மானா படேல் - 100 மீ பேக்ஸ்ட்ரோக். 

● வெண்கலம் : சிவா ஸ்ரீதர் - 100மீ பேக்ஸ்ட்ரோக் 

9. ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் தனது 21 வது பதக்கத்தை வென்று உலக சாதனை செய்துள்ள வீராங்கனை ? 

அ) கேட்டி லெடக்கி 

ஆ) ரயான் லாக்டே

இ) கிளோ  வெய்ன்ஸ்டின் 

ஈ) பெல்லாசிம்ஸ் 

விடை : (அ) கேட்டி லெடக்கி 

● கேட்டி லெடக்கி அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார்.

● உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் 21 பதக்கங்களை வென்ற ஒரே வீனாங்கனை 

● பதக்கங்கள் : 18 G, 3 S 

V. முக்கிய தினங்கள் 

10. இராஜதந்திரத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் ( International Day of Women in Diploamcy) 2022 ? 

அ) ஜூன் 21

ஆ) ஜூன் 23

இ) ஜூன் 25

ஈ) ஜூன் 24

விடை : (ஈ) ஜூன் 24 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...