Sunday, June 26, 2022

Current Affairs 2022 - June 25 / 2022 - TNPSC Group 2/2A & Group 4

                       GK SHANKAR 
                      JUNE 25 / 2022

I. தமிழ்நாட்டுச் செய்திகள் : 

1. தமிழகத்தில் , 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை நடத்த எத்தனை கோடி நிதியை தமிழக கல்வித்துறை விடுவித்து அரசாணை வெளியிட்டது ? 

அ) ரூ. 1 கோடி
ஆ) ரூ. 2.5 கோடி
இ) ரூ. 4 கோடி
ஈ) ரூ. 3.6 கோடி 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

● 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகளுக்கு ரூ.1 கோடி நிதியை  விடுவித்து  பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

● செஸ் போட்டியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறியும் விதமாக, அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

● அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒருநாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். செஸ் போட்டிகள், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட உள்ளன.

● இதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்கள், சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

● இதேபோல, 6 முதல் 8-ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேர்வாகும் 152 மாணவர்கள், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படும்.


2. திருப்பூர் , விழுப்புரம் மாவட்டங்களில் ரூ. 76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டியவர் யார் ? 

அ) ஆர். என் . ரவி

ஆ) மு.க. ஸ்டாலின்

இ) தங்கம் தென்னரசு

ஈ) மா. சுப்பிரமணியன்

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

திருப்பூா், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
 
● மேலும் டைடல் பூங்காவில் ரூ.212 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.33.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை முதல்வா் திறந்து வைத்தாா்.

● குறிப்பு : 295 பில்லியன் அமெரிக்க டாலா் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 

3. தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எந்த வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது ? 
அ) 10th Std
ஆ) 9th Std
இ) 12th Std
ஈ) 11th Std 

விடை : (இ) 12th std 

நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.
● இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. 

● எச்சிஎல் (HCL) நிறுவனத்திற்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2500 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பினை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது.

● மேலும், இதனைத் தொடர்ந்து “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் 29.06.2022, 30.06.2022, 1.07.2022, 2.07.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும். 

II. தேசியச் செய்திகள் 

4. நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) அமிதாப் காந்த் 

ஆ) தபன்குமார் டேகா 

இ) அரவிந்த் குமார் 

ஈ) பரமேஸ்வரன் ஐயர் 

விடை : (ஈ) பரமேஸ்வரன் ஐயர் 

● குடிநீர் துப்பரவுத் துறை முன்னாள் செயலர் பரமேஸ்வரன் ஐயர் நீதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

● இப்பொறுப்பில் முன்பு : அமிதாப் காந்த் 

● மேலும் ஒரு நியமனம்: உளவுத்துறையின் புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி தபன் குமார் டேகா நியமிக்கப்பட்டுள்ளார்.  

5. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிப் பெயர்ப்புக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தகம் எது ? 

அ) ஆதிவாசிகள் இனி நடனமாட மாட்டார்கள்

ஆ) கர்ணன் - காலத்தை வென்றவன்

இ) கதை இல்லாதவனின் கதை

ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் 

 விடை : (ஈ) ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

● தமிழ்மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு (வி.நாராயணன்) வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

● ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் நூலானது சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர் எனும் ஆங்கில நாவலை மொழிபெயர்த்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

6. இந்தியாவில் கடந்த ஆண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் எத்தனை பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது ? 

அ) ரூ.42 லட்சம்

ஆ) ரூ. 50 லட்சம்

இ) ரூ. 25 லட்சம்

ஈ) ரூ. 73 லட்சம்

விடை : (அ) ரூ.42 லட்சம்

இந்த ஆய்வில், டிசம்பர் 8, 2020ம் ஆண்டில் தடுப்பூசிகள் விநியோகம் தொடங்கியதில் இருந்து டிசம்பர் 8, 2021ம் ஆண்டு வரையிலான இறப்பு எண்ணிக்கைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தில் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் (66 சதவீதம்) ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

● இந்தியாவைப் பொறுத்த வரையில், இந்த காலகட்டத்தில் தடுப்பூசி மூலம் 42.10 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இது தடுப்பூசி ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க தாக்கத்தை காட்டுகிறது.

7. போர்க்கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை அமைப்பை இந்தியக் கடற்படை எங்கு வெற்றிகரமாக பரிசோதித்தது ? 

அ) டெல்லி

ஆ) குஜராத்

இ) ஒடிசா

ஈ) ஹைதராபாத்

விடை : (இ) ஒடிசா

போா்க்கப்பலுக்கு நெருக்கமாகச் செல்லும் எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு, ஒடிஸாவில் சண்டீபூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

● இதுகுறித்து டிஆா்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையின்போது ஏவுகணை அமைப்பின் அனைத்து கருவிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது. விண்ணில் அதிவேகத்தில் செல்லும் விமானங்களை அழிக்கவே இந்த ஏவுகணை அமைப்பு பரிசோதிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III.சர்வதேச செய்திகள் 

8. அண்மையில் எந்த நாட்டில் பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாகக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது ? 

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) சீனா

ஈ) பாகிஸ்தான்

விடை : (அ) அமெரிக்கா 

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

IV. விளையாட்டுச் செய்திகள் 

8. பிஃபா (FIFA) 17 வயது மகளிர் உலகக்கோப்பை 2022 போட்டி எங்கு நடைபெறவுள்ளது ? 

அ) அமெரிக்கா

ஆ ) பிரேசில்

இ) சீனா

ஈ) இந்தியா

விடை : (ஈ) இந்தியா

● சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA ) அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்அப்பில் இந்தியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் 11 - 30 வரை நடைபெறவுள்ளது.

● புவனேசுவரம்,  கோவை, நவிமும்பை உள்ளிட்ட 3 நகரங்களில் நடைபெறவுள்ளது.

● குறிப்பு : இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

V. முக்கிய தினங்கள்

10. சர்வதேச மாலுமிகள் தினம் ( International Day of  the Seafarer ) 2022 ? 

அ) ஜூன் 24

ஆ) ஜூன் 25

இ) ஜூன் 26

ஈ) ஜூன் 29

விடை : (ஆ) ஜூன் 25

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Theme : Your Voyage , then and now, share your Journey .




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...