Thursday, October 13, 2022

Current Affairs 2022 - October 13 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                         GK SHANKAR 
                   OCTOBER 13 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 
அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) உத்தர பிரதேசம்

ஈ) ராஜஸ்தான் 

விடை : (ஆ) தமிழ்நாடு 

● அறிவிப்பு : தமிழக அரசு 

● அழிந்து வரும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்கும் வகையில் கரூர் , திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டர் பரப்பிலான நிலத்தை கடவூர் தேவாங்கு சரணாலயமாக அறிவித்து அறிவிக்கை செய்துள்ளது.

● காரணம் : தேவாங்கு , இரவு நேர பாலூட்டி வகையைச் சேர்ந்தது. 
¤ இவை பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.
¤ இதனால் சுற்றுச்சூழல் (ம) நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் தேவாங்குகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

● குறிப்பு : இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச மையமானது தேவாங்கை அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் இணைநதுள்ளது.

2. தமிழகத்தில் குட்டி காவலர் எனும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடக்கி வைத்தவர் யார் ? 

அ) ஆர்.என். ரவி

ஆ) மு.க.ஸ்டாலின் 

இ) பொன்மூடி 

ஈ) மா. சுப்பிரமணியன் 

விடை : (ஆ) மு.க. ஸ்டாலின் 

குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

● முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

● நோக்கம் : இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். 

3. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான தனி இதழ்களை வெளியிட்டவர் யார் ? 

அ) மு.க.ஸ்டாலின்

ஆ) ஆர்.என்.ரவி

இ) பொன்முடி 

ஈ) அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

விடை : (அ) மு.க.ஸடாலின் 

பள்ளி மாணவர்களுக்கான ‘ஊஞ்சல்’ மற்றும் ‘தேன்சிட்டு’, ஆசிரியர்களுக்கான ‘கனவு ஆசிரியர்’ ஆகிய இதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன், பாரதி இளங்கவிஞர் விருதை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

● அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பருவஇதழ்களை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது. அதன்படி, 4 மற்றும் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘ஊஞ்சல்’ என்கிற இதழும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘தேன்சிட்டு’ என்ற இதழும் மாதமிரு முறை இதழாக வெளியிடப்படுகிறது. 

● குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இந்த இதழ்களில் வெளியிடப்படும். 

● இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே ‘கனவு ஆசிரியர்’ என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறைஅனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடு ‘கனவு ஆசிரியர்’ இதழ் வெளியாக உள்ளது. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’, ‘கனவு ஆசிரியர்’ ஆகிய 3 இதழ்களையும் முதல்வர் ஸ்டாலின்நேற்று வெளியிட்டார். பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.

● பாரதி இளங்கவிஞர் விருது: மேலும், மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப். 11-ம் தேதி அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவிநாள்’ கடைபிடிக்கப்படும் என்றும், இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்திமாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். 

● அதன்படி, மகாகவி பாரதியார் நினைவு தின கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற சேலம், அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பா.பிரவீன் மற்றும் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.சைனி ஆகியோருக்கு ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மற்றும் பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கி, வாழ்த்தினார். 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

4. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை கடந்த இரண்டு இரண்டு ஆண்டுகளாக குறைந்த விலையில் விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எத்தனை கோடியை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ? 

அ) ரூ.31,000 கோடி

ஆ) ரூ. 28,000 கோடி 

இ) ரூ. 26,000 கோடி 

ஈ) ரூ. 22,000 கோடி

விடை : (ஈ) ரூ.22,000 கோடி 

அமைச்சரவை ஒப்புதல்கள் : 2020, ஜூன் முதல் 2022, ஜூன் வரையில் சந்தை விலையைவிட குறைவான விலையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடுசெய்ய ஒருமுறை தொகையாக ரூ.22,000 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

● இந்தத் தொகை ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.

● ரயில்வே ஊழியா்களுக்கு போனஸ்: ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கியதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

● குஜராத் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம்: அரசு - தனியாா் பங்கேற்பு முறையின் கீழ், குஜராத்தில் உள்ள தீனதயாள் துறைமுகத்தில் கன்டெய்னா் முனையம் அமைக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்துக்கு ரூ.4,234.64 கோடி செலவாகும்.

● கூட்டுறவு சங்க சட்டத்தில் திருத்தம்: பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

● வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படுத்தும் வகையில் ரூ.6,600 கோடியில் புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

4. இந்தியாவில் மாநில அரசு பகல் நேர பள்ளிகளுக்கான தரவரிசையில் பின்வரும் எந்த மாநில பள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது ? 

அ) தில்லி

ஆ) தமிழ்நாடு 

இ) மணிப்பூர்

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (அ) தில்லி 

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான "உலக கல்வி' இணையதளம் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளுக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

● இதன் சமீபத்திய தரவரிசையில், தில்லி அரசு நடத்தும் துவாரகா செக்டார் 10-இல் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா பள்ளி முதலிடத்தையும், யமுனா விஹாரில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஸ் வித்யாலயா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

● குறிப்பு : தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஐந்து பள்ளிகள் தில்லியைச் சேர்ந்தவை ஆகும்.

5. இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாடுக்கு இடையே எண்ணெய் (ம) எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் அண்மையில் கையொப்பமாகியுள்ளது ? 

அ) ரஷ்யா 

அ) ஜப்பான் 

இ) அமெரிக்கா 

ஈ) ஆப்பிரிக்கா 

விடை : (இ) அமெரிக்கா 

பருவநிலை நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியாவும் அமெரிக்காவும் தனியாா் துறைகளின் பலத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும்விதமாக, இரு நாடுகளிடையே எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் 4 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையொப்பமாகின.

● இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோ்ந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. லான்ஸா ஜெட் நிறுவனம் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாக நீடித்த விமான எரிவாயு உற்பத்தி செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

● வாகனப் புகை உமிழ்வு அளவீடு மற்றும் குறைப்புக்கு தீா்வு காண்பது தொடா்பாக கெய்ல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான அவந்த்திகா எரிவாயு நிறுவனத்துக்கும் பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

● அதுபோல, என்ஜினீயா் இந்திய நிறுவனத்துக்கும் அமெரிக்காவின் யுஓபி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

● நான்காவதாக பிபிசிஎல் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்துக்கும், பக்கொ் ஹக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. கூற்று : இந்திய ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கான மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

காரணம் : கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று சரி , காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளுக்காக மின்சார வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

● இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராணுவத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் இலகுரக வாகனங்களில் 25 சதவீதமும், பேருந்துகளில் 38 சதவீதமும், மோட்டாா் சைக்கிள்களில் 48 சதவீதமும் மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 

● காா்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் எங்கெல்லாம் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தலாம் என்பதற்கான செயல்திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது.

7. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ? 

அ) ஆதர்ஷ் ஸ்வைகா 

ஆ) சிபி ஜார்ஜ் 

இ) அவ்தார் சிங் 

ஈ) கே.ஜி . பாலகிருஷ்ணன் 

● தற்போது சிபி ஜார்ஜ் இந்திய தூதராக உள்ளார், விரைவில் ஆதர்ஷ் ஸ்வைகா பொறுப்பேற்கவுள்ளார். 

● இவர் தற்போது தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சக தலைமையகத்தில் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார்.

● மேலும் கினியா குடியரசுக்கான அடுத்த இந்திய தூதராக அவ்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

8. சர்வதேச செலாவணி நிதியம் (ம) உலக வங்கியின் ஆண்டு கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்றவர் யார் ? 

அ) நரேந்திர மோடி 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) அமித் ஷா 

ஈ) நிர்மலா சீதாராமன் 

விடை : (ஈ) நிர்மலா சீதாராமன் 

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நீடித்த பொருளாதார வளா்ச்சி, உயா் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

● இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னைகளில் எரிசக்தி விலை உயா்வும் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

9. குஜராத்தில் நடைபெற்ற 36 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் 2022 ல் தமிழ்நாடு எத்தனை பதக்கங்களுடன் நிறைவு செய்தது ? 

அ) 88

ஆ) 74

இ) 116

ஈ) 66

விடை : (ஆ) 74 

நாட்டிலுள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரேதங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டி கடந்த செப்டம்பா் 20 முதல் அக்டோபா் 12 வரை 23 நாள்கள் குஜராத்தின் 6 நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வந்தது.

● இப்போட்டியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக சா்வீசஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழகம் 5-ஆம் இடம் பிடித்தது.

● போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சா்வீசஸ் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரம், ஹரியாணா முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன. போட்டி முழுவதுமாக சிறப்பாகச் செயல்பட்ட அணியாக மகாராஷ்டிரம் தோ்வானது.

சிறந்த வீரா், வீராங்கனை

¤ கேரளத்தைச் சோ்ந்த நீச்சல் வீரா் சஜன் பிரகாஷ், இப்போட்டியில் 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்கள் வென்று சிறந்த வீரராகத் தோ்வானாா். 

¤  கா்நாடக நீச்சல் வீராங்கனை ஹாஷிகா ராமச்சந்திரா 6 தங்கம், 1 வெண்கலத்துடன் போட்டியிலேயே சிறந்த வீராங்கனையாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

● மொத்தமாக பதக்கங்கள் :  1,249

● தங்கம் 382

● வெள்ளி 381

● வெண்கலம் 486

பதக்கப்பட்டியல் (டாப் 05)

¤ சா்வீசஸ் : 61G, 35S,  32B, = 128 M

¤ மகாராஷ்டிரம் : 39G, 38S, 63B = 140 M

¤ ஹரியாணா:  38G,  38S, 40B = 116M

¤ கா்நாடகம்:  27G, 23S, 38B = 88M

¤ தமிழகம்:  25G, 22S,  27B =  74M

IV. முக்கிய நிகழ்வுகள் 

10. International Day for Disaster Risk Reduction 2022 ---------

● Ans : October 13

● Theme (2022) : Substantially increase the availability and access to multi-hazard early warning systems and disaster risk information and assessment for people by 2030.

11. World Sight Day 2022 ----------- 

● Ans : October 13

● Theme (2022) : Love your eyes 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...