Friday, October 14, 2022

Current Affairs 2022 - October 14 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                       GK SHANKAR 
                   OCTOBER 14 / 2022

I. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் : 

1. சர்வதேச நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் ? 

அ) அபராஜிதா சாராங்கி 

ஆ) வினி மஹாஜன் 

இ) சிவ்தாஸ் மீனா 

ஈ) அஜிஷா சிங் 

விடை : (அ) அபராஜிதா சாரங்கி 

மக்களவை பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி, சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின் செயற்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். ருவாண்டாவில் நடைபெற்று வரும் இந்த யூனியன் கூட்டத்தில் இந்தத் தோ்தல் நடைபெற்றதாக மாநிலங்களவை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

● சுமாா் 178 நாடுகள் உறுப்பினா்களாக கொண்டு கடந்த 133 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சா்வதேச நாடாளுமன்றங்களுக்கிடையேயான யூனியனின்(ஐபியூ) 145 -ஆவது பேரவைக் கூட்டம் ருவாண்டா தலைநகா் கிகாலியில் நடைபெற்று வருகிறது. 

● இதில் இந்திய நாடாளுமன்றம் சாா்பில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இந்த கூட்டத்திற்கிடையே ஐபியூ-இன் செயற்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் கிகாலி கூட்டத்தில் நடைபெற்றது.

● இதில் பல்வேறு குழு நாடுகளின் உறுப்பினா் தோ்வு செய்யப்படுவதில் ’ஆசிய பசிபிக் குழும’ நாடுகளில் இருந்து ஐபியூ செயற்குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த நாடுகளைச் சோ்ந்த உறுப்பினா்களிடம் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. 

● இதில் போட்டியிட்ட இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையின் பாஜக உறுப்பினரான அபராஜிதா சாரங்கி(படம்) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று செயற்குழுவிற்கு தோ்வாகியிருப்பதாக மாநிலங்களவை அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் எத்தனை கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ? 

அ) ரூ. 4,200 கோடி 

ஆ) ரூ. 3,800 கோடி 

இ) ரூ. 2,700 கோடி

ஈ) ரூ. 1,300 கோடி 

விடை : (ஆ) ரூ. 3,800 கோடி 

தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் மேலும் ரூ.3,800 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

● இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சாா்பில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

●தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.1,500  கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்கள் 24 ஆண்டுகளில் முதிா்ச்சியடையும். இவை தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்கள் முதலீடு செய்யவும் வா்த்தகம் செய்யவும் முடியும்.

● தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு நிதியம் மூலம் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இதுவரை ரூ.8,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.3,800 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

● உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியம் என்பது பரஸ்பர நிதி போல உருவாக்கப்படும். இதன்மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து பணத்தைப் பெற்று முதலீடு செய்து, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பணத்தை மீண்டும் ஈட்டி திரும்ப அளிக்க முடியும்.

● உலக அளவில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் இந்த வளா்ச்சியில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை சாலைகள் மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் வலுவாக இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

● இது தவிர அனைத்துவிதமான காலநிலைகளிலும் முக்கிய ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரும் வகையில் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் மக்களின் போக்குவரத்துக்கான செலவைக் குறைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

3. நாட்டின் எத்தனையாவது வந்தே பாரத் ரயில் சேவையை உனா - தில்லி இடையே பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் ? 

அ) 3 ஆவது

ஆ) 4 ஆவது 

இ) 5 ஆவது 

ஈ) 6 ஆவது 

விடை : (ஆ) 4 ஆவது

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

● நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

● வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

● இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

4. இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் எங்கு நிறுவப்பட்டுள்ளது ? 

அ) சென்னை 

ஆ) கன்னியாகுமரி 

இ) தேனி 

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி 

● திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளையில் இந்தியாவின் முதல் 4.20 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

● இது மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட ஒற்றை அலகைக் கொண்டது.

● இதுவரை, ஆரல்வாய்மொழிக் கணவாயில் நிறுவப்பட்டுள்ள 3,000 தனிக் காற்றாலை அமைப்புகள் 2 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஆகும். 

II. விளையாட்டு நிகழ்வுகள் 

5. இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் பின்வரும் எந்த ஆண்டு நடைபெறவுள்ளது ? 

அ) 2026

ஆ) 2025 

இ) 2024 

ஈ) 2023 

விடை : (ஈ) 2023 

● இந்திய லீக் கிரிக்கெட்டின் மகளிர் ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசன் அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ளது. 

6. எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 25 மீ பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம்

ஆ) வெள்ளி

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) வெண்கலம்

● இந்திய அணி : ஈஷா சிங், நாம்யா கபூர், விபூகி பாட்டியா. 

III. முக்கிய தினங்கள் 

7. பின்வரும் எந்த மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது ? 

அ) செப்டம்பர் 

ஆ) அக்டோபர் 

இ) நவம்பர் 

ஈ) டிசம்பர் 

விடை : (ஆ) அக்டோபர் 

● இது அமெரிக்கப் புற்றுநோய் சங்கத்தால் 1985 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 

● இது மார்பகப் புற்றுநோயைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு வருடாந்திரப் பிரச்சாரமாகும்.

8. World Egg Day 2022 ----------

● Ans : October 14

● Theme (2022) : Egg for a Better life. 

9. World Standards Day 2022 ---------

● Ans : October 14 

● Theme (2022) : Shared Vision for a Better World.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...