Sunday, October 16, 2022

Current Affairs 2022 - October 16 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                  OCTOBER 16 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்க திருக்குறள் உள்ளிட்ட எத்தனை தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது ? 

அ) 46 

ஆ) 50 

இ) 55

ஈ) 60 

விடை : (அ) 46 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் சிறப்பை உலகெங்கும் கொண்டு சோ்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

● செம்மொழி நிறுவனத்தின் வளா்ச்சிப் பணியில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவது பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லி நூல் பதிப்புத் திட்டமாகும். 

● செம்மொழி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப் பணிகளுள் பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தொல்காப்பியம், நன்னூல், திருக்கு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புானூறு ஆகியவை உள்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம் தற்போது நிறைவுபெறும் நிலையில் உள்ளது.

● இவற்றில் 41 நூல்கள் செவ்வியல் நூல்களாகும். இந்த நூல்கள் அனைத்திலும் எளிய உரையிலும், மூலபாடங்கள் எளிய சந்தி அமைப்பிலும் இடம்பெற்றிருக்கும். கடந்த மாா்ச் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம் வரும் டிசம்பா் மாதம் நிறைவுற்றவுடன் அச்சிடப்படும் அனைத்து நூல்களும் பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக பின்வரும் எதனை மத்திய அரசால் அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது ? 

அ) தஞ்சாவூர் வீணை 

ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

இ) தஞ்சாவூர் ஓவியம் 

ஈ) நரசிங்கம் பேட்டை நாதஸ்வரம் 

விடை : (ஆ) தஞ்சாவூர் கலைத்தட்டு 

மத்திய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்தியாவின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

● மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது.

● இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது. இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

● இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான சான்றிதழை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

● குறிப்பு : கலைநயமிக்க தஞ்சாவூர் கலைத் தட்டுக்கு 2006-ம் ஆண்டு புவிசார் குறியீடு பதிவுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2007 புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது.

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

3. பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022 என்ற இருநாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் தொடங்கி வைக்கவுள்ளவர் ? 

அ) திரௌபதி முர்மு 

ஆ) எஸ். ஜெய்சங்கர் 

இ) நரேந்திர மோடி 

ஈ) ராஜ்நாத் சிங் 

விடை : (இ) நரேந்திர மோடி 

பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ என்ற இரு நாள் நிகழ்ச்சியை தில்லி பூசா நிறுவனத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (அக்டோபா் -17) தொடங்கிவைக்கிறாா்.

● இந்த நிகழ்வில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் 12-ஆவது தவணையான ரூ. 16,000 கோடியை பிரதமா் மோடி விடுவிக்கிறாா்.

● மத்திய வேளாண்மைத் துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகமும் இணைந்து ‘பிரதமரின் விவசாய கௌரவ மாநாடு 2022‘ நிகழ்ச்சியை இரு நாட்கள் நடத்துகின்றன.

● இந்த மாநாட்டில் பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் 12-ஆவது தவணையாக, ரூ. 16,000 கோடியை நேரடி பணப் பரிவா்த்தனையின் மூலம் மின்னணு முறையில் பிரதமா் விடுவிப்பாா்.

● மத்திய வேளாண்மை துறையின் ‘பிரதமரின் விவசாய கௌரவ நிதி‘ திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000, மூன்று தவணையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு (11 தவணைகளில்) இதுவரை ரூ. 2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

● இந்த நிகழ்ச்சியில் ‘ஒரே நாடு, ஒரே உர திட்ட’த்தையும் பிரதமா் தொடங்கிவைக்கிறாா். பாரத் என்ற ஒரே பெயரில் உரங்களை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி ஆகிய உர பைகளையும் இந்த திட்டத்தின் கீழ் பிரதமா் அறிமுகப்படுத்துவாா்.

● இதே நிகழ்ச்சியில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் 600 ‘பிரதமரின் வளமை மையங்களை‘ பிரதமா் திறந்துவைப்பாா்.

● நாட்டில் தற்போதுள்ள 2.7 லட்சம் சில்லறை உர விற்பனையகங்கள் படிப்படியாக ‘பிஎம் வளமை மையங்கள்‘ என மாற்றப்படும். விவசாயிகளின் பல்வேறு தேவைகளை இந்த மையங்கள் பூா்த்தி செய்யும். விதைகள், மண், உரங்கள் பரிசோதனைக்கான வசதிகள் திட்டங்கள் குறித்த தகவல்கள் முதலியவற்றை இந்த மையங்கள் வழங்கும்.

● இந்த மாநாட்டில் வேளாண் புத்தொழில் முனைவோா் கண்காட்சியையும் பிரதமா் திறந்து வைப்பாா். சுமாா் 300 நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது என்றாா் தோமா்.

4. ஆசிய கடலோர காவல்படை முகமை தலைவர்களில் 18 ஆவது கூட்டம் பின்வரும் எங்கு நடைபெற்றது ? 

அ) உத்தரப்பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) தமிழ்நாடு 

ஈ) தில்லி 

விடை : (ஈ) தில்லி 

● ஆசிய கடலோர காவல்படை முகமையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரான்ஸ், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவுகள், பாகிஸ்தான், சிங்கப்பூா், இலங்கை உள்பட 23 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

● குறிப்பு : இந்தோ-பசிபிக் பகுதியில் வெளிப்படையான, சுதந்திரமான விதிகள் அடிப்படையில் கடல் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என்றார் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 

5. சர்வதேச பட்டினி குறியீடு 2022 அறிக்கையில் இந்தியா இடம் பிடித்துள்ளது ? 

அ) 100

ஆ) 107 

இ) 109 

ஈ) 121 

விடை : (ஆ) 107 

நடப்பாண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 

● 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. 

● சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. 

● அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

● குறிப்பு : கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் போல்வால்ட் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ? 

அ) ரோஸி மீனா 

ஆ) பவித்ரா 

இ) ரவீணா 

ஈ) வந்தனா 

விடை : (அ) ரோஸி மீனா

● போல்வால்ட் பிரிவில் ரோஸி மீனா பால்ராஜ் புதிய தேசிய சாதனையுடன் (4.21மீ) தங்கம் வென்றுள்ளார்

மகளிர் 20 கி.மீ. நடை ஓட்டத்தில் ரவீணா புதிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.

7.. ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி 2022 ல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) வங்கதேசம் 

ஆ) ஆஸ்திரேலியா

இ) இங்கிலாந்து 

ஈ) இந்தியா 

விடை : (ஈ) இந்தியா 

● குறிப்பு : இதுவரை 8 முறை நடைபெற்ற ஆசிய மகளிர் டி20 கோப்பை போட்டிகளில் இந்தியா 7 ஆவது முறையாக சாம்பியன் ஓட்டத்தை வென்றுள்ளது. 

IV. முக்கிய தினங்கள் 

8. World Food Day 2022 -------------

● Ans : October 16 

● Theme(2022) : Leave No One Behind .




No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...