Monday, October 17, 2022

Current Affairs 2022 - October 17 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                OCTOBER 17 / 2022 

I.தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக காவல் துறையில் -------- என்ற புதிய செயலி மூலம் மின்னணு ரோந்துப்பணி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ? 

அ) காவலன் துணை 

ஆ) ஸ்மார்ட் காவலன் 

இ) உங்கள் காவலன் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) ஸ்மார்ட் காவலன் 

தமிழகத்தில் காவல்துறை ரோந்துப்பணியை நவீனப்படுத்த ஸ்மார்ட் காவலர் என்ற செயலியை காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார்.

● ஸ்மார்ட் காவலர் செயலி காவல் துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது உடனடி உதவிகள் தேவைப்பட்டாலோ அது குறித்த செய்தியினை உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.
 
● இந்த புதிய செயலி காவல்துறை நிர்வாகத்திலும், பொதுமக்கள் சேவையிலும் ஒரு மைல் கல்லாக அமையும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. இந்தியாவில் பின்வரும் எந்த மாநிலம் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் தொடங்கியுள்ள முதல் மாநிலம் ஆகும் ? 

அ) உத்தர பிரதேசம் 

ஆ) மகாராஷ்டிரா 

இ) மத்திய பிரதேசம் 

ஈ) அசாம்

விடை : (இ) மத்திய பிரதேசம் 

மத்திய பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கற்பிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

● இதையொட்டி முதல்கட்டமாக மருத்துவப் படிப்பின் உயிரி வேதியியல், உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் பாடங்கள் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. 

● மாநில தலைநகா் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயா்க்கப்பட்ட பாடப் புத்தகங்களை அமைச்சா் அமித் ஷா வெளியிட்டாா்.

● குறிப்பு : நாட்டில் முதல் மாநிலமாக மருத்துவப் படிப்பை ஹிந்தியில் மத்திய பிரதேசம் தொடங்கியுள்ளது. இதுபோல இதர 8 மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

● 97 மருத்துவா்கள் குழு: பாடப் புத்தகங்களின் ஹிந்தி மொழிபெயா்ப்புப் பணிகளை 97 மருத்துவா்கள் அடங்கிய குழு மேற்கொண்டனா் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில மருத்துவக் கல்வி அமைச்சா் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தாா்.

3. நாட்டில் எத்தனை எண்ம வங்கிப் பிரிவுகளை பிரதமர் மோடி அண்மையில் தொடக்கி வைத்துள்ளார் ? 

அ) 50 

ஆ) 75 

இ) 100

ஈ) 125 

விடை : (ஆ) 75 

சாமானிய மக்கள் வாழ்க்கையை எளிமையாக்க 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

● டிஜிட்டல் வங்கிக் கிளைகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

● நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை குறிக்கும் விதமாக 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ளன. இதில், காஷ்மீர் வங்கியின் இரண்டு டிஜிட்டல் வங்கிக் கிளைகளும் அடக்கம்.

● பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இந்த டிஜிட்டல் கிளைகளை அமைத்துள்ளன. 

● இப்புதிய கிளைகள் மூலம், சேமிப்பு கணக்கை தொடங்குதல், இருப்பு நிலை அறிதல், பாஸ்புக் பிரின்டிங் செய்தல், பணப் பரிமாற்றம், ஃபிக்ஸட் முதலீடு செய்தல், கடன் விண்ணப்பம், காசோலைகளுக்கான பணத்தை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை டிஜிட்டல் வடிவில் பொதுமக்கள் பெறலாம்.

4. இந்தியாவில் முதல்முறையாக அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் எங்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடக்கி வைத்தார் ? 

அ) புவனேசுவர் 

ஆ) சென்னை 

இ) மும்பை 

ஈ) அகமதாபாத் 

விடை : (அ) புவனேசுவர்

முதல்முறையாக உள்நாட்டிலேயே அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டது.

● ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

● இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்திய ரயில்வேக்கு இலகுரக அலுமினிய ரயில் பெட்டிகள் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும். இது நாட்டுக்கும் உள்நாட்டுமயமாக்கலை நோக்கிய பயணத்திலும் பெருமையான தருணமாகும். இந்த ரயில் பெட்டிகளால் 14,500 டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்.

● இந்த ரயிலால் அதிக பாரத்தை சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காமல் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும். 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக் கூடியவை. 30 ஆண்டுகளுக்குப் பிறகும் புதுப்பொலிவுடன் காணப்படும். நாட்டின் பருவநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்த ரயில் உதவும்’ என்று தெரிவித்தாா்.

● வழக்கமான ரயில் பெட்டிகளைவிட ஒரு பயணத்தில் 180 டன் கூடுதல் சரக்கை அலுமினியம் ரயில் பெட்டிகளால் சுமந்து செல்ல முடியும். துருப்பிடிக்காத தன்மை, இந்த ரயில் பெட்டிகளின் பராமரிப்புச் செலவை குறைக்கும்’ என்று அலுமினியம் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் பங்குகொண்ட ஹிண்டால்கோ நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே துறை தெரிவித்துள்ளதாவது:

● சாதாரண ரயில் பெட்டிகளுடன் ஒப்பிடுகையில் அலுமினியம் ரயில் பெட்டிகள் 10 ஆண்டுகள் அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றின் தயாரிப்பு செலவு சாதாரண ரயில்களைவிட 35 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

5. சீனாவின் அதிபராக எத்தனையாவது முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார் ? 

அ) இரண்டாவது 

ஆ) மூன்றாவது

இ) நான்காவது 

ஈ) ஐந்தாவது

விடை : (இ) மூன்றாவது 

● சீனாவின் அதிபராக மூன்றாவது  முறையாக ஷி ஜின்பிங் பதவி தொடரவுள்ளார்.

III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. எகிப்தில் நடைபெறும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் 2022 ல் ஆடவர் அணிகளுக்கான 10மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் 

அ) வெண்கலம்

ஆ) வெள்ளி 

இ) தங்கம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (இ) தங்கம் 

● இந்திய அணி : ருதராங்ஷ் பாட்டீல், கிரண் ஜாதவ், அர்ஜூன் பபுதா. 

● இதுவரை இந்தியா 5G, 1S, 5B என 11 பதக்கங்களுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. 

7. ஃபெனெஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளவர் யார் ? 

அ) மனீஷ் சுரேஷ்குமார்

ஆ) அரவிந்த் குமார்

இ) திக்விஜய் பிராத் சிங்

ஈ) டேனியல் யாதவ் 

விடை : (அ) மனீஷ் சுரேஷ்குமார் 

● போட்டி நடைபெற்ற இடம் : தில்லி

● மகளிர் ஒற்றையர் பிரிவில் வைதேகி சௌதரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 

8. தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2022 ல் மகளிருக்கான 400மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை யார் ?

அ) அர்ச்சனா 

ஆ) காயத்திரி 

இ) ரம்யா 

ஈ) சுபா வெங்கடேசன் 

விடை : (ஈ) சுபா வெங்கடேசன் 

IV. முக்கிய நிகழ்வுகள் 

9. International Day for the Eradication of Poverty 2022 ---------

● Ans : October 17 

● Dignity for all in Practice. 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...