Tuesday, October 18, 2022

Current Affairs 2022 - October 18 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                OCTOBER 18 / 2022 

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. பின்வரும் எந்த மாநிலத்தில் அண்மையில் கருவிழி மூலமாக ரேஷன் பொருள்கள் பெறும் திட்டம் தொடங்கப்பட்டது ? 

அ) குஜராத்

ஆ) மணிப்பூர் 

இ) ஜார்க்கண்ட் 

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஈ) தமிழ்நாடு 

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் இன்று தொடங்கியது.

● சென்னையில் திருவல்லிக்கேணி நியாயவிலைக் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கியது. 

● சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

● காரணம் :  வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத இனங்களில் கண் கருவிழியைச் சரிபாா்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கவுள்ளது.

● இதுவரை : மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலங்கானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இத்திட்டம் இருகிறது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது நீதிபதியாக டி.ஓய். சந்திர சூட் பதவியேற்கவுள்ளார் ? 

அ) 49 ஆவது

ஆ) 50 ஆவது

இ) 51 ஆவது

ஈ) 52 ஆவது

விடை : (ஆ) 50 ஆவது

● நியமனம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

● பதவி ஏற்கும் நாள் : நவம்பர் 09/2022.

● தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் நவம்பர் 08 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். 

3. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் (ம) விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்தனை மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது ? 

அ) 59

ஆ) 60

இ) 61 

ஈ) 62 

விடை : (அ) 59 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

● அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

● நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

● அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,456 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 59 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

● இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

● இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

4. இந்தியாவில் கடந்த 2005 - 06 முதல் 2019 - 21 வரையிலான காலகட்டத்தில் சுமார் எத்தனை கோடி பேர் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ?

அ) 41.5 கோடி 

ஆ) 42.7 கோடி

இ) 43 கோடி 

ஈ) 44.6 கோடி 

விடை : (ஈ) 41.5 கோடி 

இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மைநிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

● பன்முக ஏழ்மை குறியீட்டை ஐ.நா. வளா்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து வெளியிட்டது. நடப்பாண்டுக்கான அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. 

● இந்தியாவில் கடந்த 2005-06 முதல் 2019-21 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 41.5 கோடி போ் ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

● குறிப்பு : உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் (22.89 கோடி) உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

5. மத்திய விவசாயம் (ம) உர அமைச்சகங்கள் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி எங்கு தொடங்கிவைத்தார் ?

அ) மத்திய பிரதேசம் 

ஆ) தில்லி 

இ) உத்தர பிரதேசம்

ஈ) தமிழ்நாடு 

விடை : (ஆ) தில்லி 

தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பில் 2 நாள்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். 

● தொடங்கப்பட்ட திட்டங்கள் : இந்நிலையில், மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ என்ற திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் ‘பாரத்’ என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதனை பிரதமா் மோடி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினாா்.

● விவசாயிகள் வள மையம் திறப்பு: இந்த நிகழ்ச்சியில் ‘பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள்’ திறக்கப்பட்டன. மொத்தம் 600 மையங்களைப் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இதுகுறித்து அவா் பேசியதாவது:

● பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் பல்வேறு சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கும். இந்த மையங்கள் விதைகள், உரங்கள் உள்ளிட்டவற்றை விநியோகிக்கும் மையமாக மட்டுமின்றி மண் வளம், விதைகள் மற்றும் உரங்களைப் பரிசோதிக்கும் மையமாகவும் இருக்கும். அத்துடன் அரசுத் திட்டங்கள் குறித்த தகவலையும் இந்த மையங்களில் பெறலாம். மேலும் நாட்டில் உள்ள சுமாா் 3.30 லட்சம் உர சில்லறை விற்பனை கடைகள் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களாக மாற்றப்படும்.

விவசாயிகள் நிதியுதவி திட்டம்: ரூ.16,000 கோடி விடுவிப்பு

● விவசாயிகள் மாநாடு நிகழ்ச்சியின்போது பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடியை பிரதமா் மோடி விடுவித்தாா். இது அந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட 12-ஆவது தவணையாகும். இதன் மூலம் அந்தத் திட்டம் வாயிலாக, சுமாா் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2.16 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.

● மத்திய அரசு சாா்பில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ரூ.2,000 வீதம் ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக மொத்தம் ரூ.6,000 வழங்கப்படுகிறது.

6. அண்மையில் மறைந்த ஓஆர்எஸ் எனப் பரவலாக அறியப்படும் பிரபல மருத்துவர் மஹாலனோபிஸ் எந்த ஆண்டு தாய்லாந்து அரசின் உயரிய விருதான பிரின்ஸ் மஹிடோல் விருதை பெற்றார் ?

அ) 1998

ஆ) 2000

இ) 2006 

ஈ) 2010

விடை : (இ) 2006 

ஓஆர்எஸ்' எனப் பரவலாக அறியப்படும் உப்பு சர்க்கரை கரைசலைக் கண்டறிந்ததில் முக்கியப் பங்கு வகித்த மருத்துவர் திலீப் மஹாலனோபிஸ் (88) உடல்நலக் குறைவால் கொல்கத்தாவில் அண்மையில் காலமானார்.

● குறிப்பு : 1971-ஆம் ஆண்டு வங்கதேச போர் காலகட்டத்தில் பலர் காலரா நோயால் பாதிக்கப்பட்டபோது உப்பு சர்க்கரை கரைசலை வழங்கி பலரின் உயிரைக் காப்பாற்றினார் திலீப் மஹாலனோபிஸ். 

● அதற்காகப் பல நாடுகளின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தன் வாழ்நாளில் ஈட்டிய ரூ.1 கோடியை சிறார் மருத்துவமனைக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம் நடத்திய 17 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 3×3 ஆசிய கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● போட்டி நடைபெற்ற இடம் : கோலாம்பூர்,  மலேசியா. 

● ஆசிய அளவிலான 6 ஆவது போட்டி . 

8. உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் ( 2022 ) மகளிர் அணிகள் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வென்றுள்ள பதக்கம் ?

அ) வெண்கலம்

ஆ) தங்கம் 

இ) வெண்கலம் 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை : (இ) வெண்கலம் 

● இந்திய அணி : ரிதம் சங்வான், பால்க, யுவிகா தோமர். 


IV. முக்கிய தினங்கள் 

9. World Menopause Day 2022 ----------

● Ans : October 18 / 2022

● Theme : Cognition & Mood 

No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...