Monday, October 31, 2022

Current Affairs 2022 - October 31 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                      GK SHANKAR 
                    October 31/2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழக அரசால் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் ? 

அ) 87 லட்சம் 

ஆ) 90 லட்சம்

இ) 94 லட்சம் 

ஈ) 99 லட்சம் 

விடை : (இ) 94 லட்சம் 

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 94 லட்சத்து 40 ஆயிரத்து 726 மக்கள் பயன்பெற்றுள்ளனர். 

● விரைவில் 1 கோடி என்ற மகத்தான சாதனையை புரியவுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மலை கிராமங்களில் காணொளி வாயிலாக நோய் கண்டறிந்து அதற்கான மருந்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

2. அண்மையில் விபத்துக்குள்ளான குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்ச நதி மீது எத்தனை மீட்டர் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது ? 

அ) 137

ஆ) 193 

இ) 233

ஈ) 259

விடை : (இ) 233 

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலம் மோா்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

● கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து கடந்த அக். 26-ஆம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

● அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். 

● அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். 

● இந்த விபத்தில் இதுவரை சுமாா் 60 போ் உயிரிழந்தனா் என்று மாநில ஊராட்சித் துறை இணையமைச்சரும், மோா்பி தொகுதி எம்எல்ஏவுமான பிரஜேஷ் மொ்ஜா தெரிவித்தாா்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமா் அலுவலகம் அறிவித்தது.

3. பின்வரும் எந்த நாள் அன்று முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது ? 

அ) நவம்பர் 05

ஆ) நவம்பர் 06

இ) நவம்பர் 07

ஈ) நவம்பர் 08

விடை : (ஈ) நவம்பர் 08 

நவம்பர் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.48 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

● முழு சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. முழு சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழலின் இருண்ட பகுதி அல்லது குடைக்குள் முழு சந்திரனும் விழும் ஒரு நிகழ்வாகும். உலகின் பல பகுதிகளில் கடந்த 25 ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழந்தது. 

● ஒரு கிரகண காலம் என்பது தோராயமாக 35 நாள்கள் ஆகும், இதில் குறைந்தது இரண்டு கிரகணங்கள் நிகழும். சில நேரங்களில், ஒரு கிரகண காலத்தில் மூன்று கிரகணங்களும் நிகழக் கூடும்.

● இந்நிலையில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திர கிரகணம் இந்த ஆண்டின் கடைசி கிரகணம் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதத்தின் இரண்டாவது கிரகணம். 

● சந்திர கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பலான பகுதிகள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களின் சில பகுதிகளிலும் காண முடியும்.

● அடுத்த முழு சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி காண முடியும். 

4. கூற்று : இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) தனது வீரர்களுக்கு ஆயுதமற்ற தாக்குதல் பயிற்சியை அளித்து வருகிறது ? 

காரணம் : கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்றது போன்ற மோதல்களை திறம்பட கையாளும் நோக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது .

அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை 

இ) கூற்று சரி, காரணம் தவறு 

ஈ) கூற்று தவறு , காரணம் சரி 

விடை : (அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

சீனா உடனான எல்லையை பாதுகாக்கும் இந்தோ -  திபெத் எல்லைப் படையினருக்கு புதிதாக ஆயுதமின்றி தாக்கும் போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

● சீனாவுடன் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையில் உள்ள 3,488 கிமீ தூர எல்லையை 98 ஆயிரம்  வீரர்களை கொண்ட இந்திய - திபெத் எல்லைப் படையினர் (ஐடிபிபி) பாதுகாத்து வருகின்றனர். 

● லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீனா ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இப்படையை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

● இந்த மோதலின் போது சீன வீரர்கள் கற்கள், ஆணி அடித்த கம்புகள், இரும்பு கம்பிகளை பயன்படுத்தி இந்திய வீரர்களை தாக்கினர்.

● இந்நிலையில், சீனாவின் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொள்ள இந்தோ - திபெத் எல்லைப் படையினருக்கு ஆயுதமின்றி சண்டை போடுவதற்கான தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகிறது. ஜூடோ, காரத்தே, இஸ்ரேல் ராணுவத்தினர் பயன்படுத்திய கிராவ் மாகா உள்பட 20 தற்காப்பு கலைகளைக் கொண்டு ஆயுதமின்றி புதிய, நவீன போர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

● இந்தோ - திபெத் படையில் புதிதாக சேரும் வீரர்களுக்கு 3 மாத பயிற்சியில் அனைத்து தற்காப்பு கலைகளிலும் உள்ள குத்துதல், உதைத்தல், தூக்கி வீசுதல், அசைய விடாமல் போடும் கிடுக்கிப்பிடி, எதிரியை வீழ்த்துதல் உள்ளிட்ட ஆயுதமற்ற போர் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

5. சரக்கு விமான உற்பத்தி ஆலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது ? 

அ) தமிழ்நாடு 

ஆ) குஜராத் 

இ) அசாம் 

ஈ) ஜார்க்கண்ட் 

விடை : (ஆ) குஜராத் 

இந்திய விமானப் படைக்கு சி295 ரக சரக்கு விமானங்களை வாங்குவதற்கு ஐரோப்பிய நிறுவனமான ஏா்பஸ் பாதுகாப்பு-விண்வெளி நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

● அந்த ஒப்பந்தத்தின்படி சி295 ரகத்தைச் சோ்ந்த 16 சரக்கு விமானங்களை ஸ்பெயினில் தயாரித்து 4 ஆண்டுகளுக்குள் ஏா்பஸ் நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கவுள்ளது. கூடுதலாக 40 சரக்கு விமானங்களை டாடா நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே ஏா்பஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

● சரக்கு விமான உற்பத்தி ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமா் மோடி கூறியதாவது:

● ராணுவப் பயன்பாட்டுக்கான விமானமானது தனியாா் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும். சி295 சரக்கு விமானமானது ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே தயாரிக்கப்படவுள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்தியாவுக்கான 56 சரக்கு விமானங்களை வழங்கிய பிறகு வதோதரா ஆலையில் தயாரிக்கப்படும் சரக்கு விமானங்கள் இந்திய அரசின் அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

6. இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் (2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ள அணி ? 

அ) கொலம்பியா 

ஆ) ஸ்பெயின் 

இ) நைஜீரியா 

ஈ) ஸ்காட்லாந்து 

விடை : (ஆ) ஸ்பெயின் 

● ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

7. ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (2022) ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி வென்றுள்ள பதக்கம் ? 

அ) தங்கம் 

ஆ) வெள்ளி 

இ) வெண்கலம்

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) வெள்ளி 

● சங்கர் முத்துசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்

● இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற 9 ஆவது இந்தியர் (ம) வெள்ளி வென்ற 3 ஆவது இந்தியர் ஆவார்.


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...