Sunday, October 30, 2022

Current Affairs 2022 - October 30 / 2022 - TNPSC Group 1,2/2A & 4

                     GK SHANKAR 
                 OCTOBER 30 / 2022

I. தமிழ்நாட்டு நிகழ்வுகள் 

1. தமிழகத்தில் கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க பின்வரும் எந்த பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது ? 

அ) கிராம சபை கூட்டம் 

ஆ) நம்ம கிராம சபை 

இ) திராவிட கிராம சபை 

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை 

விடை : (ஆ) நம்ம கிராம சபை 

கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

● இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

● ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும், சிறந்த ஊழியா்களை அங்கீகரிப்பது, கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

● மேலும், சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களைக் கெளரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

● கண்காணிப்பு: கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில், ‘நம்ம கிராம சபை’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி கணினி, கைப்பேசி ஆகியவற்றின் வழியே கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கலாம். 

● உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஊரகப் பகுதி மக்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஒரே கப்பலில் எத்தனை காற்றாலைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது ? 

அ) 137

ஆ) 120

இ) 101

ஈ) 93 

விடை : (ஆ) 120 

ஒரே கப்பலில் 120 காற்றாலைகளை கையாண்டு, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

● சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றாலை இறகுகள், அந்நாட்டின் சாங்ஷு துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி உ.சி. துறைமுகத்துக்கு சஅச ஊஉசஎ ழஏஐ லஐசஎ என்ற கப்பல் மூலம் கடந்த 25ஆம் தேதி வந்தடைந்தன. இக்கப்பலில் 76.8 மீட்டா் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகள் கொண்டு வரப்பட்டன. 

● இந்த இறகுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் காற்றாலைகளின் பயன்பாட்டுக்காக வ.உ.சி. துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது.

● இதற்கு முன்பு அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை இத்துறைமுகம் இறக்குமதி செய்தது சாதனையாக இருந்த நிலையில், தற்போது மேற்கூறிய புதிய சாதனையைப் படைத்துள்ளது.

3. அண்மையில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்ற மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது ? 

அ) சேலம் 

ஆ) தேனி

இ) மதுரை

ஈ) திருநெல்வேலி 

விடை : (ஈ) திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

● இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் 36 செயற்கைகோள்களை எல்விஎம்3-எம்3 என்ற ராக்கெட் மூலம் எடுத்துச் சென்று விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த ராக்கெட்டில் சிஇ-20 என்ஜின்தான் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

● இதைத் தொடா்ந்து மேலும் 36 செயற்கைகோள்களை எடுத்து செல்லக்கூடிய ராக்கெட்டில் பொருத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் செயற்கைகோள்களை எடுத்துச் சென்று விண்ணில் நிறுத்தக் கூடிய உயா்நிலை சி-20 சோதனை காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது.

●  25 விநாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ வட்டாரத்தில் தெரிவித்தனா்.

● மேலும் அடுத்ததாக 36 செயற்கைகோள்களை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான இன்ஜின் விரைவில் தயாா் நிலைக்கு வந்துவிடும் எனவும் அந்த வட்டாரத்தில் தெரிவித்துள்ளனா்.

4. தமிழகத்தில் புதிதாக எத்தனை மாவட்டங்களில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது ? 

அ) 05

ஆ) 06

இ) 07

ஈ) 08 

விடை : (ஈ) 08 

தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு புதிய வளாகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்கள் அமைவதுடன், ராமநாதபுரம், திருப்பத்தூரில் உழவா் சந்தை வளாகங்களும் கட்டப்படவுள்ளன.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

● தமிழகத்தில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், சேலம், தருமபுரி, கோயம்புத்தூா், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,

● நாகப்பட்டினம், திருவாரூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வழியாக பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன.

● கூடுதல் வசதிகள்: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வளாகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சேலம், தென்காசி, பெரம்பலூா், வேலூா், திருப்பூா், ராணிப்பேட்டை, அரியலூா் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கான வளாகங்கள் கட்டப்படவுள்ளன. இதேபோன்று, திருப்பத்தூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உழவா் சந்தைகளுக்கான வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக கட்டப்படவுள்ள வளாகங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.6.35 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


II. தேசிய (ம) சர்வதேச நிகழ்வுகள் 

5. சர்க்கரை ஏற்றுமதிக்கான பின்வரும் எந்த ஆண்டு வரை  கட்டுப்பாட்டை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ? 

அ) 2023

ஆ) 2024

இ) 2025 

ஈ) 2026 

விடை : (அ) 2023

சா்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அடுத்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சா்க்கரை இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

● முன்னதாக, இந்தக் கட்டுப்பாடு வரும் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

● இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில், ‘சா்க்கரை (மூலப் பொருள், சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வெள்ளை சா்க்கரை) ஏற்றுமதிக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தற்போது 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது.

● இதில் விதிக்கப்பட்டிருந்த மற்ற நிபந்தனைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. இருந்தபோதிலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் வரிச் சலுகை ஒதுக்கீட்டின் கீழ் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

● சா்க்கரை உற்பத்தியில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியா, நிகழாண்டில் உலகின் இரண்டாவது பெரிய சா்க்கரை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் திகழ்கிறது. 2021-22 சந்தை பருவத்தில் (அக்டோபா்-செப்டம்பா்) இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 3.58 கோடி டன் என்ற அளவில் இருந்தது.

● சா்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலின் கீழ் வருவதால், அதனை ஏற்றுமதி செய்ய மத்திய அரசிடமிருந்து உரிமம் அல்லது அனுமதியை ஏற்றுமதியாளா்கள் பெற வேண்டியது அவசியமாகும்.

6. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் சிறப்பு மாநாடு இந்தியாவில் முதல்முறையாக எங்கு நடைபெற்றது ? 

அ) தில்லி

ஆ) குஜராத்

இ) மும்பை 

ஈ) அ & இ 

விடை : (ஈ) அ & இ 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத தடுப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா வகித்து வருகிறது. அக்குழுவின் சிறப்பு மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. மும்பையில் வெள்ளிக்கிழமையும் புது தில்லியில் சனிக்கிழமையும் மாநாட்டு அமா்வுகள் நடைபெற்றன.

● அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டனா். சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது.

● குறிப்பு : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகியவை உள்ளன. அந்த கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பதவிக் காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.


III. விளையாட்டு நிகழ்வுகள் 

7. ஜோஹோர் பாரு சுல்தான் கோப்பை 19 வயது ஹாக்கிப் போட்டியில் (2022) இந்தியா எத்தனையாவது முறையாக கோப்பை வென்றுள்ளது ? 

அ) ஐந்தாவது 

ஆ) நான்காவது

இ) மூன்றாவது

ஈ) இரண்டாவது

விடை : (இ) மூன்றாவது 

● போட்டி நடைபெற்ற இடம் : ஜோஹோர்,  மலேசியா 

● இதற்கு முன்பு : 2013,2014

● இந்திய அணி 4 முறை ரன்னர் ஆக வந்துள்ளது. 


IV. முக்கிய நிகழ்வுகள் 

8. World Psoriasis Day 2022 --------

● Ans : October 29

● Theme (2022) : Unloading Psoriasis Disease.

9. World Thrift Day 2022 ---------

● Ans : October 30

● Theme (2022) : Saving Prepares you for the future. 


No comments:

Post a Comment

Featured post

உலக முதலீட்டாளர் மாநாடு 2024 Current Affairs 2024 | GK SHANKAR

  உலக முதலீட்டாளர் மாநாடு 2024 அறிமுகம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக ...